ஸ்ரீமத் பகவத் கீதை-பொருளுடன்





ஸ்ரீபகவத் கீதை-பாரதியார் உரையைத் தழுவியது
1. ஸாங்கிய யோகம்
2. கர்ம யோகம்
3. ஞான கர்ம சந்யாச யோகம்
4. சந்யாச யோகம்
5. தியான யோகம்
6. ஞான விஞ்ஞான யோகம்
7. அக்ஷர பிரம்ம யோகம்
8. ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
9. விபூதி யோகம்
10. விசுவரூப தரிசன யோகம்
11. பக்தி யோகம்
12. க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
13. குணத்ரய விபாக யோகம்
14. புருஷோத்தம யோகம்
15. தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
16. சிரத்தாத்ரய விபாக யோகம்
17. மோஷ சந்நியாச யோகம்
பகவத் கீதை பற்றி குறிப்புகள்
(இத்தளத்தில் வெளியாகி உள்ள கீதை உரையில், மூல ஸ்லோகங்களுக்கு அடுத்த படியாக பதவுரை எழுத கீதாபிரஸ் வெளியிட்டுள்ள புகழ் பெற்ற “தத்வ விவேசனி” நூல் உதவியாக இருந்தது. தெளிவுரையாக பாரதியாரின் உரையை அப்படியே இடம் பெற்றுள்ளது. இதற்கு ஏதுவாக பாரதியாரின் உரையை வலையேற்றி கிடைக்கச் செய்த தமிழ் ஹிந்து தளத்திற்கும் நன்றிகள் பல.)
கீதை – முதல் அத்தியாயம்
அர்ஜுன விஷாத யோகம்
குருக்ஷேத்திரப் போர் நடக்கையிலே, கண்ணில்லாத திருதராஷ்டிர ராஜன், தான் அங்கு செல்லக் கூடாமையால் அஸ்தினாபுரத்தில் தனதரண்மனையில் இருந்துகொண்டே போர்க்களத்தில் நடக்கும் செய்திகளைத் தனக்குச் சொல்லும்படி சஞ்ஜயன் என்ற மந்திரியை நியமிக்கிறான்.
வேதவியாசரருளால் ஞானதிருஷ்டி பெற்றவனாய் சஞ்ஜயன் போர்க்களத்துச் செய்திகளைத் திருதராஷ்டிரனுக்குச் சொல்கிறான். கண்ணனுக்கும் பார்த்தனுக்கும் போர்த் தொடக்கத்தில் நிகழ்ந்த சம்பாஷணையை சஞ்ஜயன் கூறுவதாகச் சமைக்கப்பட்ட பகவத்கீதைக்கு இந்த முதலத்தியாயம் பாயிரமாகக் கருதத்தகும்.
________________________________________
த்⁴ருதராஷ்ட்ர உவாச
த⁴ர்மக்ஷேத்ரே குருக்ஷேத்ரே ஸமவேதா யுயுத்ஸவ:|
மாமகா: பாண்ட³வாஸ்²சைவ கிமகுர்வத ஸஞ்ஜய ||1-1||
திருதராஷ்டிரன் சொல்லுகிறான்: சஞ்ஜயா, அற நிலமாகிய குரு நிலத்தில் போர்செய்ய விரும்பித் திரண்ட நம்மவர்களும் பாண்டவரும் என்ன செய்தனர்?
________________________________________
ஸஞ்ஜய உவாச
த்³ருஷ்ட்வா து பாண்ட³வாநீகம் வ்யூட⁴ம் து³ர்யோத⁴நஸ்ததா³|
ஆசார்யமுபஸங்க³ம்ய ராஜா வசநமப்³ரவீத் ||1-2||
சஞ்ஜயன் சொல்லுகிறான்: அப்போது துரியோதன ராஜன் அணிவகுத்து நின்ற பாண்டவர் படையைப் பார்த்துவிட்டு, ஆசாரிய (துரோண)னிடம் போய்(ப் பின்வரும்) வார்த்தை சொல்லலாயினன்:
________________________________________
பஸ்²யைதாம் பாண்டு³புத்ராணாமாசார்ய மஹதீம் சமூம்|
வ்யூடா⁴ம் த்³ருபத³புத்ரேண தவ ஸி²ஷ்யேண தீ⁴மதா ||1-3||
குருவே, துருபதன் மகனும் நின் சீடனுமாகிய நிபுணனால் வகுப்புற்ற இப்பெரிய பாண்டவப் படையப் பார்!
________________________________________
அத்ர ஸூ²ரா மஹேஷ்வாஸா பீ⁴மார்ஜுநஸமா யுதி⁴|
யுயுதா⁴நோ விராடஸ்²ச த்³ருபத³ஸ்²ச மஹாரத²: ||1-4||
இங்கு சூரரும் பெரிய வில்லாளிகளும் போரில் வீமனையும் பார்த்தனையும் நிகர்த்தவருமாகிய பலர் இருக்கிறார்கள் யுயுதானன்; விராடன்; மகாரதனாகிய துருபதன்;
________________________________________
த்⁴ருஷ்டகேதுஸ்²சேகிதாந: காஸி²ராஜஸ்²ச வீர்யவாந்|
புருஜித்குந்திபோ⁴ஜஸ்²ச ஸை²ப்³யஸ்²ச நரபுங்க³வ: ||1-5||
________________________________________
யுதா⁴மந்யுஸ்²ச விக்ராந்த: உத்தமௌஜாஸ்²ச வீர்யவாந்|
ஸௌப⁴த்³ரோ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வ ஏவ மஹாரதா²: ||1-6||
வலிமை மிக்க யுதாமந்யு; உத்தமௌஜா என்ற வீரன்; சுபத்திரை மகன்; திரௌபதி மக்கள்; எல்லோருமே மகாரதர்.
________________________________________
அஸ்மாகம் து விஸி²ஷ்டா யே தாந்நிபோ³த⁴ த்³விஜோத்தம|
நாயகா மம ஸைந்யஸ்ய ஸஞ்ஜ்ஞார்த²ம் தாந்ப்³ரவீமி தே ||1-7||
இனி, எனது படைக்கு நாயகராய், நம்முள்ளே சிறந்தோரையுந் தெரிந்து கொள். இருபிறப்பாளரில் மேம்பட்டவனே, குறிப்பின் பொருட்டாக அவர்களை உனக்குச் சொல்லுகிறேன்.
________________________________________
ப⁴வாந்பீ⁴ஷ்மஸ்²ச கர்ணஸ்²ச க்ருபஸ்²ச ஸமிதிஞ்ஜய:|
அஸ்²வத்தா²மா விகர்ணஸ்²ச ஸௌமத³த்திஸ்ததை²வ ச ||1-8||
நீ; பீஷ்மன்; கர்ணன்; பொருநர் கூட்டத்தை வெல்வோனாகிய கிருபன்; அசுவத்தாமன்; விகர்ணன்; சோமதத்தன் மகன்;
________________________________________
அந்யே ச ப³ஹவ: ஸூ²ரா: மத³ர்தே² த்யக்தஜீவிதா:|
நாநாஸ²ஸ்த்ரப்ரஹரணா: ஸர்வே யுத்³த⁴விஸா²ரதா³: ||1-9||
இன்னும் வேறு பல சூரர்; என் பொருட்டு வாழ்க்கையைத் துறந்தோர்; பலவிதமான ஆயுதங்களும் அம்புகளுமுடையோர்; எல்லோருமே போரில் நிபுணர்.
________________________________________
அபர்யாப்தம் தத³ஸ்மாகம் ப³லம் பீ⁴ஷ்மாபி⁴ரக்ஷிதம்|
பர்யாப்தம் த்வித³மேதேஷாம் ப³லம் பீ⁴மாபி⁴ரக்ஷிதம்||10||
(எனினும்) பீஷ்மனால் காக்கப்படும் நமது படை (கண்ணுக்கு) நிறைந்திருக்கவில்லை. வீமனால் காக்கப்படும் இவர்களுடையை படையோ நிறைந்திருக்கிறது.
________________________________________
நீங்களனைவரும் வகுப்புகளின்படி எல்லா இடங்களிலும் நின்றுகொண்டு பீஷ்மனையே காக்கக் கடவீர்.
________________________________________
தஸ்ய ஸஞ்ஜநயந்ஹர்ஷம் குருவ்ருத்³த⁴: பிதாமஹ:|
ஸிம்ஹநாத³ம் விநத்³யோச்சை: ஸ²ங்க²ம் த³த்⁴மௌ ப்ரதாபவாந் ||1-12||
(அப்போது) துரியோதனனுக்கு மகிழ்ச்சி விளைவிக்குமாறு கீர்த்திமிக்க கௌரவர் கிழவனாகிய பாட்டன் உயர்ந்த குரலில் சிங்கநாதம் புரிந்து சங்கை யூதினான்.
________________________________________
தத: ஸ²ங்கா²ஸ்²ச பே⁴ர்யஸ்²ச பணவாநககோ³முகா²:|
ஸஹஸைவாப்⁴யஹந்யந்த ஸ ஸ²ப்³த³ஸ்துமுலோऽப⁴வத் ||1-13||
அப்பால், சங்குகளும், பேரிகைகளும், தம்பட்டங்களும், பறைகளும், கொம்புகளும், திடீரென ஒலித்தன. அஃது பேரோசையாயிற்று.
________________________________________
தத: ஸ்²வேதைர்ஹயைர்யுக்தே மஹதி ஸ்யந்த³நே ஸ்தி²தௌ|
மாத⁴வ: பாண்ட³வஸ்²சைவ தி³வ்யௌ ஸ²ங்கௌ² ப்ரத³த்⁴மது: ||1-14||
பின்பு வெள்ளைக் குதிரைகள் பூட்டிய பெருந் தேரில் நின்ற மாதவனும் பார்த்தனும் (தம்முடையை) தேவச் சங்குகளை யூதினர்.
________________________________________
பாஞ்சஜந்யம் ஹ்ருஷீகேஸோ² தே³வத³த்தம் த⁴நஞ்ஜய:|
பௌண்ட்³ரம் த³த்⁴மௌ மஹாஸ²ங்க²ம் பீ⁴மகர்மா வ்ருகோத³ர: ||1-15||
கண்ணன் பாஞ்சஜன்யத்தை யூதினான்; தேவ தத்தம் என்ற சங்கை தனஞ்ஜெயன் ஒலித்தான்; அஞ்சுதற்குரிய செயல்களையுடைய ஓநாய் வயிற்று வீமன் பௌண்ட்ரம் என்ற பெருஞ்சங்கை ஊதினான்.
________________________________________
அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர:|
நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ ||1-16||
அநந்தவிஜயம் ராஜா குந்தீபுத்ரோ யுதி⁴ஷ்டி²ர: = அநந்த விஜயம் என்ற சங்கை குந்தியின் மகனான ராஜா யுதிஷ்டிரன்;
நகுல: ஸஹதே³வஸ்²ச ஸுகோ⁴ஷமணிபுஷ்பகௌ = சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளை நகுலனும் சகாதேவனும்
குந்தி மகனாகிய யுதிஷ்டிரன் அநந்த விஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகதேவனும் (முறையே) சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும் ஊதினர்.
________________________________________
காஸ்²யஸ்²ச பரமேஷ்வாஸ: ஸி²க²ண்டீ³ ச மஹாரத²:|
த்⁴ருஷ்டத்³யும்நோ விராடஸ்²ச ஸாத்யகிஸ்²சாபராஜித: ||1-17||
வில்லாளிகளில் மிகச் சிறந்த காசிராஜனும், மகாரதனாகிய சிகண்டியும், திருஷ்டத்யும்நனும், விராடனும், வெல்லப்படாத ஸாத்தியகியும்,
________________________________________
த்³ருபதோ³ த்³ரௌபதே³யாஸ்²ச ஸர்வஸ²: ப்ருதி²வீபதே|
ஸௌப⁴த்³ரஸ்²ச மஹாபா³ஹு: ஸ²ங்கா²ந்த³த்⁴மு: ப்ருத²க்ப்ருத²க் ||1-18||
துருபதனும், துரோபதை மக்களும், பெருந்தோளுடையவனாகிய சுபத்திரை மகனும் தனித்தனியே தத்தம் சங்குகளை ஒலித்தனர். ‘பூமிக்குத் தலைவனே!’
________________________________________
ஸ கோ⁴ஷோ தா⁴ர்தராஷ்ட்ராணாம் ஹ்ருத³யாநி வ்யதா³ரயத்|
நப⁴ஸ்²ச ப்ருதி²வீம் சைவ துமுலோ வ்யநுநாத³யந் ||1-19||
அந்தப் பெருமுழக்கம் வானையும் மண்ணையும் உடனொலிக்கச் செய்வதாய், திருதராஷ்டிரக் கூட்டத்தாரின் நெஞ்சுகளைப் பிளந்தது.
________________________________________

________________________________________
அத² வ்யவஸ்தி²தாந்த்³ருஷ்ட்வா தா⁴ர்தராஷ்ட்ராந்கபித்⁴வஜ:|
ப்ரவ்ருத்தே ஸ²ஸ்த்ரஸம்பாதே த⁴நுருத்³யம்ய பாண்ட³வ: ||1-20||
அப்பால், (இரு திறத்தும்) அம்புகள் பறக்கத் தலைப்பட்டன. அப்போது குரங்குக் கொடியுயர்த்த பார்த்தன் திருதராஷ்டிரக் கூட்டத்தாரை நோக்கி வில்லை யேந்திக் கொண்டு, கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.
________________________________________
ஹ்ருஷீகேஸ²ம் ததா³ வாக்யமித³மாஹ மஹீபதே|
அர்ஜுன உவாச
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ரத²ம் ஸ்தா²பய மேऽச்யுத ||1-21||
அர்ஜுனன் சொல்லுகிறான்: “அச்சுதா, படைகளிரண்டுக்கும் நடுவே என் தேரைக் கொண்டு நிறுத்துக” என்று. (கேளாய், திருதராஷ்டிர ராஜனே!)
________________________________________
யாவதே³தாந்நிரீக்ஷேऽஹம் யோத்³து⁴காமாநவஸ்தி²தாந்|
கைர்மயா ஸஹ யோத்³த⁴வ்யமஸ்மிந்ரணஸமுத்³யமே ||1-22||
“சமரை விரும்பி நிற்கும் இவர்களை நான் பார்க்க வேண்டும். இந்தப் போர்த் தொடக்கத்தில் என்னோடு போர் செய்யக் கடவோர் யார்?”
________________________________________
யோத்ஸ்யமாநாநவேக்ஷேऽஹம் ய ஏதே’த்ர ஸமாக³தா:|
தா⁴ர்தராஷ்ட்ரஸ்ய து³ர்பு³த்³தே⁴ர்யுத்³தே⁴ ப்ரியசிகீர்ஷவ: ||1-23||
“கெட்ட மதிகொண்ட துரியோதனனுக்குப் பிரீதி செய்யும் வண்ணம், இங்கு போர் செய்யத் திரண்டு நிற்போரை நான் காண வேண்டும்” என்றான்.
________________________________________
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்தோ ஹ்ருஷீகேஸோ² கு³டா³கேஸே²ந பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே ஸ்தா²பயித்வா ரதோ²த்தமம் ||1-24||
சஞ்ஜயன் சொல்லிக்கொண்டு வருகிறான்: (கேளாய்) பரத நாட்டரசே, இங்ஙனம் பார்த்தனுரைத்துக் கேட்ட கண்ணன் மிகவும் மேன்மை கொண்ட அத்தேரை இரண்டு படைகளுக்குமிடையே கொண்டு நிறுத்தினான்.
________________________________________
பீ⁴ஷ்மத்³ரோணப்ரமுக²த: ஸர்வேஷாம் ச மஹீக்ஷிதாம்|
உவாச பார்த² பஸ்²யைதாந்ஸமவேதாந்குரூநிதி ||1-25||
பீஷ்மனுக்கும் துரோணனுக்கும் மற்றெல்லா வேந்தருக்குமெதிரே தேரை நிறுத்திக்கொண்டு, “பார்த்தா! இங்குக் கூடி நிற்கும் கௌரவரைப் பார்!” என்றான்.
________________________________________
தத்ராபஸ்²யத்ஸ்தி²தாந்பார்த²: பித்ரூநத² பிதாமஹாந்|
ஆசார்யாந்மாதுலாந்ப்⁴ராத்ரூந்புத்ராந்பௌத்ராந்ஸகீ²ம்ஸ்ததா² ||1-26||
அங்குப் பார்த்தன் தன்னுடைய தந்தையாரும், பாட்டன்மாரும், குருக்களும், மாதுலரும், அண்ணன் தம்பிகளும், மக்களும், பேரரும், தோழர்களும் நிற்பது கண்டான்.
________________________________________
ஸ்²வஸு²ராந்ஸுஹ்ருத³ஸ்²சைவ ஸேநயோருப⁴யோரபி|
தாந்ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: ஸர்வாந்ப³ந்தூ⁴நவஸ்தி²தாந் ||1-27||
அங்ஙனமே மாமன்மாரும், நண்பர்களும், உறவினரெல்லாரும் இரண்டு படைகளிலும் நிற்கக் கண்டு, குந்தி மகனாகிய அப்பார்த்தன் மிகவும் இரக்கமுற்றவனாய்த் துயருடன் சொல்லுகிறான்:
________________________________________
க்ருபயா பரயாऽவிஷ்டோ விஷீத³ந்நித³மப்³ரவீத்|
அர்ஜுன உவாச
த்³ருஷ்ட்வேமம் ஸ்வஜநம் க்ருஷ்ண யுயுத்ஸும் ஸமுபஸ்தி²தம் ||1-28||
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, போர் செய்ய வேண்டு இங்கு திரண்டு நிற்கும் சுற்றத்தார்களைக் கண்டு,
________________________________________
ஸீத³ந்தி மம கா³த்ராணி முக²ம் ச பரிஸு²ஷ்யதி|
வேபது²ஸ்²ச ஸ²ரீரே மே ரோமஹர்ஷஸ்²ச ஜாயதே ||1-29||
என் அவயங்கள் சோர்கின்றன. என் வாய் உலர்கிறது. என்னுடம்பு நடுங்குகிறது. மயிர் சிலிர்க்கிறது.
________________________________________
கா³ண்டீ³வம் ஸ்ரம்ஸதே ஹஸ்தாத்த்வக்சைவ பரித³ஹ்யதே|
ந ச ஸ²க்நோம்யவஸ்தா²தும் ப்⁴ரமதீவ ச மே மந: ||1-30||
காண்டீவம் கையிலிருந்து நழுவுகிறது. உடம்பில் எரிச்சலுண்டாகிறது. என்னால் நிற்க முடியவில்லை. என் மனம் சுழலுகிறது.
________________________________________
நிமித்தாநி ச பஸ்²யாமி விபரீதாநி கேஸ²வ|
ந ச ஸ்²ரேயோऽநுபஸ்²யாமி ஹத்வா ஸ்வஜநமாஹவே ||1-31||
;
கேசவா, விபரீதமான சகுனங்கள் பல காண்கிறேன். போரிலே சுற்றத்தார்களை மடிப்பதில் எனக்கு நன்மை தோன்றவில்லை.
________________________________________
ந காங்க்ஷே விஜயம் க்ருஷ்ண ந ச ராஜ்யம் ஸுகா²நி ச|
கிம் நோ ராஜ்யேந கோ³விந்த³ கிம் போ⁴கை³ர்ஜீவிதேந வா ||1-32||
கண்ணா, நான் வெற்றியை விரும்புகிலேன்; ராஜ்யத்தையும் இன்பங்களையும் வேண்டுகிலேன். கோவிந்தா. நமக்கு ராஜ்யத்தால் ஆவதென்? இன்பங்களால் ஆவதென்? உயிர் வாழ்க்கையாலேனுமாவதென்னே?
________________________________________
யேஷாமர்தே² காங்க்ஷிதம் நோ ராஜ்யம் போ⁴கா³: ஸுகா²நி ச|
த இமேऽவஸ்தி²தா யுத்³தே⁴ ப்ராணாம்ஸ்த்யக்த்வா த⁴நாநி ச ||1-33||
யாவர் பொருட்டு நாம் ராஜ்யத்தையும், போகங்களையும், இன்பங்களையும் விரும்புகிறோமோ, அவர்கள் உயிரையும் செல்வங்களையும் துறந்தோராய் இங்கு வந்து நிற்கிறார்கள்.
________________________________________
ஆசார்யா: பிதர: புத்ராஸ்ததை²வ ச பிதாமஹா:|
மாதுலா: ஸ்²வஸு²ரா: பௌத்ரா: ஸ்²யாலா: ஸம்ப³ந்தி⁴நஸ்ததா² ||1-34||
குருக்களும், தந்தையரும், மக்களும், பாட்டன்மாரும், மாதுலரும், மாமன்மாரும், பேரரும், மைத்துனரும், சம்பந்திகளும் (இங்குளர்). 34
________________________________________
ஏதாந்ந ஹந்துமிச்சா²மி க்⁴நதோऽபி மது⁴ஸூத³ந|
அபி த்ரைலோக்யராஜ்யஸ்ய ஹேதோ: கிம் நு மஹீக்ருதே ||1-35||
மதுசூதனா, யான் கொல்லப்படினும் இவர்களைக் கொல்ல விரும்புகிலேன். மூவுலகின் ஆட்சி பெறுதற்கெனினும் (இது செய்யேன் செய்யேன்!) பூமியின் பொருட்டு செய்வனோ?
________________________________________
நிஹத்ய தா⁴ர்தராஷ்ட்ராந்ந: கா ப்ரீதி: ஸ்யாஜ்ஜநார்த³ந|
பாபமேவாஸ்²ரயேத³ஸ்மாந்ஹத்வைதாநாததாயிந: ||1-36||
ஜநார்த்தன! திருதராஷ்டிரக் கூட்டத்தாரைக் கொன்று நாம் என்ன இன்பத்தையடையப் போகிறோம்? இந்தப் பாதகரைக் கொல்வதனால் நம்மைப் பாவமே சாரும்.
________________________________________
தஸ்மாந்நார்ஹா வயம் ஹந்தும் தா⁴ர்தராஷ்ட்ராந்ஸ்வபா³ந்த⁴வாந்|
ஸ்வஜநம் ஹி கத²ம் ஹத்வா ஸுகி²ந: ஸ்யாம மாத⁴வ ||1-37||
ஆதலால், சுற்றத்தாராகிய திருதராஷ்டிர வர்க்கத்தாரைக் கொல்வது நமக்குத் தகாது. மாதவா, பந்துக்களைக் கொன்றபின் நாம் இன்புற்றிருப்பதெப்படி?
________________________________________
யத்³யப்யேதே ந பஸ்²யந்தி லோபோ⁴பஹதசேதஸ:|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் மித்ரத்³ரோஹே ச பாதகம் ||1-38||
அவாவின் மிகுதியால் அறிவிழந்த இவர்கள் குலத்தையழிப்பதில் விளையும் தீங்கையும் நண்பருக்குச் சதி செய்வதிலுள்ள பாதகத்தையும் காண்கிலராயினும்,
________________________________________
கத²ம் ந ஜ்ஞேயமஸ்மாபி⁴: பாபாத³ஸ்மாந்நிவர்திதும்|
குலக்ஷயக்ருதம் தோ³ஷம் ப்ரபஸ்²யத்³பி⁴ர்ஜநார்த³ந ||1-39||
ஜநார்த்தன! குலநாசத்தால் ஏற்படுங் குற்றத்தையுணர்ந்த நாம் இப்பாவத்தினின்று விலகும் வழியறியாதிருப்பதென்ன?
________________________________________
குலக்ஷயே ப்ரணஸ்²யந்தி குலத⁴ர்மா: ஸநாதநா:|
த⁴ர்மே நஷ்டே குலம் க்ருத்ஸ்நமத⁴ர்மோऽபி⁴ப⁴வத்யுத ||1-40||
குலநாசத்தால் என்றுமுள்ள குலதர்மங்கள் அழிகின்றன. தர்மம் அழிவதனால் குலமுழுவதையும் அதர்மம் சூழ்கிறதன்றே?
________________________________________
அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய:|
ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர: ||1-41||
கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.
________________________________________
ஸங்கரோ நரகாயைவ குலக்⁴நாநாம் குலஸ்ய ச|
பதந்தி பிதரோ ஹ்யேஷாம் லுப்தபிண்டோ³த³கக்ரியா: ||1-42||
அக்குழப்பத்தால் குலத்தார்க்கும் அதனை அழித்தார்க்கும் நரகமேற்படுகிறது. இவர்களுடைய பிதிர்க்கள் பிண்டமும் நீருமின்றி வீழ்ச்சி பெறுகிறார்கள்.
________________________________________
தோ³ஷைரேதை: குலக்⁴நாநாம் வர்ணஸங்கரகாரகை:|
உத்ஸாத்³யந்தே ஜாதித⁴ர்மா: குலத⁴ர்மாஸ்²ச ஸா²ஸ்²வதா: ||1-43||
வர்ணக் குழப்பமுண்டாகும்படி குலக் கேடர் செய்யும் இக்குற்றங்களால் ஜாதி தர்மங்களும் தொன்று தொட்டுள்ள குலதர்மங்களும் எடுபட்டுப் போகின்றன.
________________________________________
உத்ஸந்நகுலத⁴ர்மாணாம் மநுஷ்யாணாம் ஜநார்த³ந|
நரகே நியதம் வாஸோ ப⁴வதித்யநுஸு²ஸ்²ரும ||1-44||
ஜநார்த்தனா! குலதர்மங்கள் எடுபட்டுப் போன மனிதருக்கு எக்காலும் நரகத்தில் வாசமென்று கேள்விப்படுகிறோம்.
________________________________________
அஹோ ப³த மஹத்பாபம் கர்தும் வ்யவஸிதா வயம்|
யத்³ராஜ்யஸுக²லோபே⁴ந ஹந்தும் ஸ்வஜநமுத்³யதா: ||1-45||
அந்தோ! அரசவின்பத்தை விழைந்து சுற்றத்தாரைக் கொல்ல முற்படும் நாம் பெரிய பாவஞ் செய்யத் தலைப்பட்டோம்!
________________________________________
யதி³ மாமப்ரதீகாரமஸ²ஸ்த்ரம் ஸ²ஸ்த்ரபாணய:|
தா⁴ர்தராஷ்ட்ரா ரணே ஹந்யுஸ்தந்மே க்ஷேமதரம் ப⁴வேத் ||1-46||
கையிலாயுதமில்லாமல், எதிர்க்காமல் நிற்குமென்னை இந்தத் திருதராஷ்டிரக் கூட்டத்தார் ஆயுதபாணிகளாய்ப் போரில் மடித்துவிடினும் அது எனக்குப் பெரிய நன்மையேயாம்.”
________________________________________
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வார்ஜுந: ஸங்க்²யே ரதோ²பஸ்த² உபாவிஸ²த்|
விஸ்ருஜ்ய ஸஸ²ரம் சாபம் ஸோ²கஸம்விக்³நமாநஸ: ||1-47||
சஞ்ஜயன் சொல்லுகிறான்: செருக்களத்தில் இவ்வாறு சொல்லிவிட்டுப் பார்த்தன் அம்புகளையும் வில்லையும் எறிந்து போட்டுத் துயரில் மூழ்கிய மனத்தனாய்த் தேர்ப்பீடத்தின் மேலுட்கார்ந்து கொண்டான்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘அர்ஜுன விஷாத யோகம்’ எனப் பெயர் படைத்த
முதல் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – இரண்டாவது அத்தியாயம்
ஸாங்கிய யோகம்
போர் புரிய மனம் வராமல் திகைத்துத் தன்னைச் சரணடைந்த அர்ஜுனனை நோக்கிக் கண்ணன் உரைக்கின்றான்:- “அர்ஜுனா, நீ வருந்துவது முற்றிலும் தவறு. எதிரிகளின் ஆன்மாவைப் பற்றி வருந்துகின்றாயா? அல்லது அவர்களின் உடலைப் பற்றி வருந்துகின்றாயா? இரண்டும் சரியல்ல.

ஆன்மா என்றும் அழிவற்றது. அதைக் கத்தியால் வெட்டவும், தீயினால் எரிக்கவும் முடியாது. உடலோ அழியும் இயல்பு வாய்ந்தது. நீ அழிக்காவிடினும் அது தானே அழிய வேண்டியதுதான். ஆன்மாவுக்கு ஓருடல் அழிந்ததும், மற்றோருடல் தானே வந்து சேரும். ஆன்மாவின் இயற்கையை எண்ணி உனக்கு ஏற்படுத்தப்பட்ட செயல்களை நீ செய்தே தீரவேண்டும். அச்செயல்களைச் செய்யுங்கால், நாம் செய்ய வேண்டியதைச் செய்கிறோம். அதுவும் ஈசுவரப் பிரீதிக்காகவே என்று எண்ணிச் செய். இதனால் ஆத்மஞானம் பெருகி, அதில் நிலைபெற்று நற்கதியடைவாய். ஈசுவர பிரீதியைத் தவிர மற்ற பலனைக் கோரினால் சம்சாரக்கட்டிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது.” சஞ்ஜயன் சொல்லுகிறான்:
________________________________________
ஸஞ்ஜய உவாச 
தம் ததா² க்ரிபயாவிஷ்டமஸ்²ருபூர்ணாகுலேக்ஷணம்| 
விஷீத³ந்தமித³ம் வாக்யமுவாச மது⁴ஸூத³ந: ||2-1||
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
குதஸ்த்வா கஸ்²மலமித³ம் விஷமே ஸமுபஸ்தி²தம்| 
அநார்யஜுஷ்டமஸ்வர்க்³யமகீர்திகரமர்ஜுந ||2-2||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த முட்டுதலில் இவ்வுள்ளச் சோர்வை நீ எங்கிருந்து பெற்றாய்? இஃது ஆரியருக்குத் தகாது. வானுலகைத் தடுப்பது; அபகீர்த்தி தருவது அர்ஜுனா!
________________________________________
க்லைப்³யம் மா ஸ்ம க³ம: பார்த² நைதத்த்வய்யுபபத்³யதே|
க்ஷுத்³ரம் ஹ்ருத³ய தௌ³ர்ப³ல்யம் த்யக்த்வோத்திஷ்ட² பரந்தப ||2-3||
________________________________________
அர்ஜுந உவாச
கத²ம் பீ⁴ஷ்மமஹம் ஸங்க்²யே த்³ரோணம் ச மது⁴ஸூத³ந| 
இஷுபி⁴: ப்ரதியோத்ஸ்யாமி பூஜார்ஹாவரிஸூத³ந ||2-4||
அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, பீஷ்மனையும் துரோணரையும் போரில் அம்புகளால் எப்படி எதிர்ப்பேன்? இவர்கள் தொழுதற்குரியவர்; பகைவரை யழிப்போய்!
________________________________________
கு³ரூநஹத்வா ஹி மஹாநுபா⁴வாஞ்ச்²ரேயோ போ⁴க்தும் பை⁴க்ஷ்யமபீஹ லோகே|
ஹத்வார்த²காமாம்ஸ்து கு³ரூநிஹைவ பு⁴ஞ்ஜீய போ⁴கா³ந்ருதி⁴ரப்ரதி³க்³தா⁴ந் ||2-5||
பெரியோராகிய குருக்களைக் கொல்லாமல், உலகத்தில் பிச்சையெடுத்துண்பதும் நன்று. பொருளை விரும்பும் குருக்களைக் கொன்று நாம் துய்க்கும் இன்பங்கள் உதிரத்திற் (ரத்தத்தில்) கலந்தனவாம்.
________________________________________
ந சைதத்³வித்³ம: கதரந்நோ க³ரீயோ யத்³வா ஜயேம யதி³ வா நோ ஜயேயு:|
யாநேவ ஹத்வா ந ஜிஜீவிஷாமஸ்தேऽவஸ்தி²தா: ப்ரமுகே² தா⁴ர்தராஷ்ட்ரா: ||2-6||
மேலும், நாம் இவர்களை வெல்லுதல், இவர்கள் நம்மை வெல்லுதல் -இவற்றுள் எது நமக்கு மேன்மையென்பது விளங்கவில்லை. எவரைக் கொன்றபின் நாம் உயிர்கொண்டு வாழ விரும்போமோ, அத்தகைய திருதராஷ்டிரக் கூட்டத்தார் போர் முனையில் வந்து நிற்கிறார்கள்.
________________________________________
கார்பண்யதோ³ஷோபஹதஸ்வபா⁴வ: ப்ருச்சா²மி த்வாம் த⁴ர்மஸம்மூட⁴சேதா:|
யச்ச்²ரேய: ஸ்யாந்நிஸ்²சிதம் ப்³ரூஹி தந்மே ஸி²ஷ்யஸ்தேऽஹம் ஸா²தி⁴ மாம் த்வாம் ப்ரபந்நம் ||2-7||
சிறுமையாகிய குறையால் இயல்பு அழிந்தவனாய், அறம் இன்னது என்றுணராமல் மயங்கிய அறிவுடன், யான் உன்னைக் கேட்கிறேன். எது நன்றென்பதை எனக்கு நிச்சயப்படுத்திக் சொல்லுக. நான் உன் சீடன். உன்னையே சரணமெனப் புகுந்தேன். கட்டளை தருக.
________________________________________
ந ஹி ப்ரபஸ்²யாமி மமாபநுத்³யாத்³யச்சோ²கமுச்சோ²ஷணமிந்த்³ரியாணாம்|
அவாப்ய பூ⁴மாவஸபத்நம்ருத்³த⁴ம் ராஜ்யம் ஸுராணாமபி சாதி⁴பத்யம் ||2-8||
பூமியின் மேல் நிகரில்லாத செல்வமுடைய ராஜ்யம் பெறினும், அன்றி வானோர்மிசை ஆட்சி பெறினும் புலன்களை அடக்கும் இயல்புடைய இந்தத் துயர் எம்மை விட்டு நீங்குமென்று தோன்றவில்லை.
________________________________________
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ஹ்ருஷீகேஸ²ம் கு³டா³கேஸ²: பரந்தப:|
ந யோத்ஸ்ய இதி கோ³விந்த³முக்த்வா தூஷ்ணீம் ப³பூ⁴வ ஹ ||2-9||
________________________________________
தமுவாச ஹ்ருஷீகேஸ²: ப்ரஹஸந்நிவ பா⁴ரத|
ஸேநயோருப⁴யோர்மத்⁴யே விஷீத³ந்தமித³ம் வச: ||2-10||
பாரதா, அப்போது கண்ணன் புன்னகை பூத்து, இரண்டு படைகளுக்கும் நடுவே துயருற்று நின்ற பார்த்தனை நோக்கி இவ்வசனமுரைக்கிறான்:
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச அஸோ²ச்யாநந்வஸோ²சஸ்த்வம் ப்ரஜ்ஞாவாதா³ம்ஸ்²ச பா⁴ஷஸே|
க³தாஸூநக³தாஸூம்ஸ்²ச நாநுஸோ²சந்தி பண்டி³தா: ||2-11||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: “துயர்ப் படத் தகாதார் பொருட்டுத் துயர்ப்படுகின்றாய். ஞான வுரைகளு முரைக்கின்றாய்! இறந்தார்க் கேனும் இருந்தார்க் கேனுந் துயர் கொளார் அறிஞர்.”
________________________________________
நத்வேவாஹம் ஜாது நாஸம் ந த்வம் நேமே ஜநாதி⁴பா:|
ந சைவ ந ப⁴விஷ்யாம: ஸர்வே வயமத: பரம் ||2-12||
இதன் முன் எக்காலத்திலும் நான் இல்லாதிருந்திலேன். நீயும் இங்குள்ள வேந்தர் யாவரும் அப்படியே. இனி நாம் என்றைக்கும் இல்லாமற் போகவும் மாட்டோம்.
________________________________________
ஆத்மாவுக்கு இவ்வுடலில் எங்ஙனம் பிள்ளைப் பிராயமும் இளமையும், மூப்பும் தோன்றுகின்றனவோ அங்ஙனமே மற்றொரு சரீரப் பிறப்புந் தோன்றுகிறது. தீரன் அதில் கலங்கமாட்டான்.
________________________________________
மாத்ராஸ்பர்ஸா²ஸ்து கௌந்தேய ஸீ²தோஷ்ணஸுக²து³:க²தா³:|
ஆக³மாபாயிநோऽநித்யாஸ்தாம்ஸ்திதிக்ஷஸ்வ பா⁴ரத ||2-14||
குந்தியின் மகனே, குளிரையும் வெப்பத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் தரும் இயற்கையின் தீண்டுதல்கள் தோன்றி மறையும் இயல்புடையன. என்றுமிருப்பனவல்ல. பாரதா, அவற்றைப் பொறுத்துக் கொள்.
________________________________________
யம் ஹி ந வ்யத²யந்த்யேதே புருஷம் புருஷர்ஷப⁴|
ஸமது³:க²ஸுக²ம் தீ⁴ரம் ஸோऽம்ருதத்வாய கல்பதே ||2-15||
யாவன் இவற்றால் துயர்ப்படான், இன்பமுந்துன்பமும் நிகரெனக் கொள்வான், அந்த தீரன், சாகாதிருக்கத் தகுவான்.
________________________________________
நாஸதோ வித்³யதே பா⁴வோ நாபா⁴வோ வித்³யதே ஸத:|
உப⁴யோரபி த்³ருஷ்டோऽந்தஸ்த்வநயோஸ்தத்த்வத³ர்ஸி²பி⁴: ||2-16||
இல்லாதது உண்மையாகாது. உள்ளது இல்லாததாகாது. உண்மையறிவார் இவ்விரண்டுக்குமுள்ள வேற்றுமை யுணர்வார்.
________________________________________
அவிநாஸி² து தத்³வித்³தி⁴ யேந ஸர்வமித³ம் ததம்|
விநாஸ²மவ்யயஸ்யாஸ்ய ந கஸ்²சித்கர்துமர்ஹதி ||2-17||
இவ்வுலக முழுவதிலும் பரந்து நிற்கும் பொருள் அழிவற்ற தென்றறி; இது கேடற்றது; இதனை யழித்தல் யார்க்கும் இயலாது.
________________________________________
அந்தவந்த இமே தே³ஹா நித்யஸ்யோக்தா: ஸ²ரீரிண:|
அநாஸி²நோऽப்ரமேயஸ்ய தஸ்மாத்³யுத்⁴யஸ்வ பா⁴ரத ||2-18||
ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய்.
________________________________________
ய ஏநம் வேத்தி ஹந்தாரம் யஸ்²சைநம் மந்யதே ஹதம்|
உபௌ⁴ தௌ ந விஜாநீதோ நாயம் ஹந்தி ந ஹந்யதே ||2-19||
இவன் கொல்வானென்று நினைப்போனும் கொல்லப்படுவானென்று நினைப்போனும் -இருவரும் அறியாதார். இவன் கொல்லுவதுமில்லை, கொலையுண்பதுமில்லை. இவன் பிறப்பதுமில்லை;
________________________________________
ந ஜாயதே ம்ரியதே வா கதா³சிந்நாயம் பூ⁴த்வா ப⁴விதா வா ந பூ⁴ய:|
அஜோ நித்ய: ஸா²ஸ்²வதோऽயம் புராணோ ந ஹந்யதே ஹந்யமாநே ஸ²ரீரே ||2-20||
எக்காலத்திலும் இறப்பதுமில்லை. இவன் ஒரு முறையிருந்து பின்னர் இல்லாது போவதுமில்லை. இவன் பிறப்பற்றான்; அனவரதன். இவன் சாசுவதன்; பழையோன்; உடம்பு கொல்லப்படுகையில் இவன் கொல்லப்படான்.
________________________________________
வேதா³விநாஸி²நம் நித்யம் ய ஏநமஜமவ்யயம்|
கத²ம் ஸ புருஷ: பார்த² கம் கா⁴தயதி ஹந்தி கம் ||2-21||
இப்பொருள் அழிவற்றது, பிறப்பற்றது, என்றுமுளது இங்ஙனமுணர்வான் கொல்வதெவனை? அவன் கொல்விப்பதெவனை?
________________________________________
वासांसि जीर्णानि यथा विहाय नवानि गृह्णाति नरोऽपराणि।
तथा शरीराणि विहाय जीर्णान्यन्यानि संयाति नवानि देही॥२२॥
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா² விஹாய நவாநி க்³ருஹ்ணாதி நரோऽபராணி|
ததா² ஸ²ரீராணி விஹாய ஜீர்ணாந்யந்யாநி ஸம்யாதி நவாநி தே³ஹீ ||2-22||
நைந்த துணிகளைக் கழற்றி யெறிந்துவிட்டு மனிதன் புதிய துணிகள் கொள்ளுமாறு போல, ஆத்மா நைந்த உடல்களைக் களைந்து புதியனவற்றை எய்துகிறான். போரில் இறக்கும் க்ஷத்ரியனுக்கு இதை விட மேலான சரீரமே கெடைக்கும். அவர்கள் சரீரம் இஅபோது அழிவதைப் பற்றி நீ வருந்த வேண்டாம்.
________________________________________
நைநம் சி²ந்த³ந்தி ஸ²ஸ்த்ராணி நைநம் த³ஹதி பாவக:|
ந சைநம் க்லேத³யந்த்யாபோ ந ஸோ²ஷயதி மாருத: ||2-23||
இவனை ஆயுதங்கள் வெட்ட மாட்டா; தீ எரிக்காது; நீர் இவனை நனைக்காது; காற்று உலர்த்தாது.
________________________________________
அச்சே²த்³யோऽயமதா³ஹ்யோऽயமக்லேத்³யோऽஸோ²ஷ்ய ஏவ ச|
நித்ய: ஸர்வக³த: ஸ்தா²ணுரசலோऽயம் ஸநாதந: ||2-24||
பிளத்தற் கரியவன்; எரித்தற்கும், நனைத்தற்கும், உலர்த்துதற்கும் அரியவன்; நித்தியன்; எங்கும் நிறைந்தவன்; உறுதியுடையான்; அசையாதான்; என்றும் இருப்பான்.
________________________________________
அவ்யக்தோऽயமசிந்த்யோऽயமவிகார்யோऽயமுச்யதே|
தஸ்மாதே³வம் விதி³த்வைநம் நாநுஸோ²சிதுமர்ஹஸி ||2-25||
“தெளிதற் கரியான் சிந்தனைக் கரியான் மாறுத லில்லாதா னென்ப! ஆதலால் இவனை இங்ஙனம் அறிந்து நீ துயர்ப் படாதிருக்கக் கடவாய்.”
________________________________________
அத² சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹாபா³ஹோ நைநம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-26||
அன்றி, நீ இவனை நித்தமும் பிறந்து நித்தமும் மடிவானென்று கருதினால், அப்போதும், பெருந்தோளுடையாய், நீ இவன் பொருட்டுத் துயருறல் தகாது.
________________________________________
ஜாதஸ்ய ஹி த்⁴ருவோ ம்ருத்யுர்த்⁴ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச|
தஸ்மாத³பரிஹார்யேऽர்தே² ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-27||
பிறந்தவன் சாவது உறுதியெனில், செத்தவன் பிறப்பது உறுதியெனில், இந்த விலக்கொணாச் செய்திக்கு நீ அழுங்குதல் தகுதியன்று.
________________________________________
அவ்யக்தாதீ³நி பூ⁴தாநி வ்யக்தமத்⁴யாநி பா⁴ரத|
அவ்யக்தநித⁴நாந்யேவ தத்ர கா பரிதே³வநா ||2-28||
பாரதா, உயிர்களின் ஆரம்பம் தெளிவில்லை; நடுநிலைமை தெளிவுடையது; இவற்றின் இறுதியுந் தெளிவில்லை. இதில் துயர்ப்படுவதென்ன?
________________________________________
ஆஸ்²சர்யவத்பஸ்²யதி கஸ்²சிதே³நமாஸ்²சர்யவத்³வத³தி ததை²வ சாந்ய:|
ஆஸ்²சர்யவச்சைநமந்ய: ஸ்²ருணோதி ஸ்²ருத்வாऽப்யேநம் வேத³ ந சைவ கஸ்²சித் ||2-29||
இந்த ஆத்மாவை, “வியப்பென ஒருவன் காண்கிறான், வியப்பென ஒருவன் சொல்லுகிறான், வியப்பென ஒருவன் கேட்கிறான், கேட்கினும், இதனை அறிவான் எவனுமிலன்.”
________________________________________
தே³ஹீ நித்யமவத்⁴யோऽயம் தே³ஹே ஸர்வஸ்ய பா⁴ரத|
தஸ்மாத்ஸர்வாணி பூ⁴தாநி ந த்வம் ஸோ²சிதுமர்ஹஸி ||2-30||
பாரதா, எல்லாருடம்பிலுமுள்ள இந்த ஆத்மா கொல்ல முடியாதவன். ஆதலால் நீ எந்த உயிரின் பொருட்டும் வருந்துதல் வேண்டா!
________________________________________
ஸ்வத⁴ர்மமபி சாவேக்ஷ்ய ந விகம்பிதுமர்ஹஸி|
த⁴ர்ம்யாத்³தி⁴ யுத்³தா⁴ச்ச்²ரேயோऽந்யத்க்ஷத்ரியஸ்ய ந வித்³யதே ||2-31||
ஸ்வதர்மத்தைக் கருதியும் நீ நடுங்குதல் இசையாது. அறப்போரைக் காட்டிலும் உயர்ந்ததொரு நன்மை மன்னர்க்கில்லை.
________________________________________
யத்³ருச்ச²யா சோபபந்நம் ஸ்வர்க³த்³வாரமபாவ்ருதம்|
ஸுகி²ந: க்ஷத்ரியா: பார்த² லப⁴ந்தே யுத்³த⁴மீத்³ருஸ²ம் ||2-32||
தானே வந்தெய்துவது, திறந்து கிடக்கும் பொன்னுலக வாயில் போன்றது. இத்தகைய போர் கிடைக்கப் பெறும் மன்னர் இன்பமுடையார்!
________________________________________
அத² சேத்த்வமிமம் த⁴ர்ம்யம் ஸங்க்³ராமம் ந கரிஷ்யஸி|
தத: ஸ்வத⁴ர்மம் கீர்திம் ச ஹித்வா பாபமவாப்ஸ்யஸி ||2-33||
அன்றி நீ இந்தத் தர்மயுத்தத்தை நடத்தாமல் விடுவாயானால், அதனால் ஸ்வதர்மத்தையும், கீர்த்தியையும் கொன்று பாவத்தையடைவாய்.
________________________________________
அகீர்திம் சாபி பூ⁴தாநி கத²யிஷ்யந்தி தேऽவ்யயாம்|
ஸம்பா⁴விதஸ்ய சாகீர்திர்மரணாத³திரிச்யதே ||2-34||
________________________________________
ப⁴யாத்³ரணாது³பரதம் மம்ஸ்யந்தே த்வாம் மஹாரதா²:|
யேஷாம் ச த்வம் ப³ஹுமதோ பூ⁴த்வா யாஸ்யஸி லாக⁴வம் ||2-35||
நீ அச்சத்தால் போரை விட்டு விலகியதாக மகாரதர் கருதுவார்கள். அவர்களுடைய நன்மதிப்பைப் பெற்ற நீ இதனால் சிறுமையடைவாய்.
________________________________________
அவாச்யவாதா³ம்ஸ்²ச ப³ஹூந்வதி³ஷ்யந்தி தவாஹிதா:|
நிந்த³ந்தஸ்தவ ஸாமர்த்²யம் ததோ து³:க²தரம் நு கிம் ||2-36||
உனக்கு வேண்டாதார் சொல்லத் தகாத வார்த்தைகள் பல சொல்லுவார்கள். உன் திறமையைப் பழிப்பார்கள். இதைக் காட்டிலும் அதிகமான துன்பமெது?
________________________________________
ஹதோ வா ப்ராப்ஸ்யஸி ஸ்வர்க³ம் ஜித்வா வா போ⁴க்ஷ்யஸே மஹீம்|
தஸ்மாது³த்திஷ்ட² கௌந்தேய யுத்³தா⁴ய க்ருதநிஸ்²சய: ||2-37||
கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.
________________________________________
ஸுக²து³:கே² ஸமே க்ருத்வா லாபா⁴லாபௌ⁴ ஜயாஜயௌ|
ததோ யுத்³தா⁴ய யுஜ்யஸ்வ நைவம் பாபமவாப்ஸ்யஸி ||2-38||
இன்பம், துன்பம், இழவு, பேறு, வெற்றி, தோல்வி இவற்றை நிகரெனக் கொண்டு, நீ போர்க்கொருப்படுக. இவ்வணம் புரிந்தால் பாவமெய்தாய்.
________________________________________
ஏஷா தேऽபி⁴ஹிதா ஸாங்க்²யே பு³த்³தி⁴ர்யோகே³ த்விமாம் ஸ்²ருணு|
பு³த்³த்⁴யா யுக்தோ யயா பார்த² கர்மப³ந்த⁴ம் ப்ரஹாஸ்யஸி ||2-39||
இங்ஙனம் உனக்கு ஸாங்கிய வழிப்படி புத்தி சொன்னேன். இனி யோக வழியால் சொல்லுகிறேன்; கேள். இந்தப் புத்தி கொண்டவன் கர்மத் தளைகளைச் சிதறிவிடுவான்.
________________________________________
நேஹாபி⁴க்ரமநாஸோ²ऽஸ்தி ப்ரத்யவாயோ ந வித்³யதே|
ஸ்வல்பமப்யஸ்ய த⁴ர்மஸ்ய த்ராயதே மஹதோ ப⁴யாத் ||2-40||
இதில் முயற்சிக்கு அழிவில்லை. இது வரம்பு மீறிய செய்கையுமன்று. இந்தத் தர்மத்தில் சிறிதிருப்பினும், அஃதொருவனைப் பேரச்சத்தினின்று காப்பாற்றும்.
________________________________________
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴ரேகேஹ குருநந்த³ந |
ப³ஹுஸா²கா² ஹ்யநந்தாஸ்²ச பு³த்³த⁴யோऽவ்யவஸாயிநாம் ||2-41||
குருகுலத் தோன்றலே! உறுதியுடைய புத்தி இவ்வுலகத்தில் ஒருமையுடையது. உறுதியில்லாதோரின் மதி பல கிளைப்பட்டது, முடிவற்றது.
________________________________________
யாமிமாம் புஷ்பிதாம் வாசம் ப்ரவத³ந்த்யவிபஸ்²சித:|
வேத³வாத³ரதா: பார்த² நாந்யத³ஸ்தீதி வாதி³ந: ||2-42||
வேதங்களின் வெளியுரையில் மகிழ்வார் சிலர், பூக்களைப் போன்ற (அலங்காரச்) சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழையென்கிறார்கள்.
________________________________________
காமாத்மாந: ஸ்வர்க³பரா ஜந்மகர்மப²லப்ரதா³ம்|
க்ரியாவிஸே²ஷப³ஹுலாம் போ⁴கை³ஸ்²வர்யக³திம் ப்ரதி ||2-43||
இவர்கள் காமிகள்; சொர்க்கத்தைப் பரமாகக் கொண்டோர். பிறப்புக்கும் தொழிலுக்கும் பயன் வேண்டுவோர்; போகத்தையும் ஆட்சியையும் வேண்டுவோர்; பலவகையான கிரியைகளைக் காட்டிப் பேசுகிறார்கள்.
________________________________________
போ⁴கை³ஸ்²வர்யப்ரஸக்தாநாம் தயாபஹ்ருதசேதஸாம்|
வ்யவஸாயாத்மிகா பு³த்³தி⁴: ஸமாதௌ⁴ ந விதீ⁴யதே ||2-44||
இவர்கள் சொல்லுவதைக் கேட்டு மதிமயங்கி போகத்திலும் ஆட்சியுலும் பற்றுறுவோருடைய நிச்சய புத்தி சமாதியில் நிலைபெறாது.
________________________________________
த்ரைகு³ண்யவிஷயா வேதா³ நிஸ்த்ரைகு³ண்யோ ப⁴வார்ஜுந|
நிர்த்³வந்த்³வோ நித்யஸத்த்வஸ்தோ² நிர்யோக³க்ஷேம ஆத்மவாந் ||2-45||
மூன்று குணங்களுக்குட்பட்டனவற்றைக் குறித்து வேதங்கள் பேசுகின்றன. அர்ஜுனா, நீ மூன்று குணங்களையும் கடந்தோனாகுக. இருமைகளற்று, எப்போதும் உண்மையில் நின்று, யோக க்ஷேமங்களைக் கருதாமல், ஆத்மாவை வசப்படுத்தியவனாகுக. வேதம் , ஸத்வ, ரஜஸ், தமோ குணமுள்ள மூவருக்கும் பொதுவான சாஸ்திரம். உனக்குத்தகுதியானதை நீ எடுத்துக்கொள்ள வேண்டும், உனக்கு ஸத்வ குணம் மேலிட்டிருக்கிறது. உனக்கேற்ப, காம்ய கர்மாக்களை விட்டு, கர்ம யோகத்தையே செய்வாயாக .
________________________________________
யாவாநர்த² உத³பாநே ஸர்வத: ஸம்ப்லுதோத³கே|
தாவாந்ஸர்வேஷு வேதே³ஷு ப்³ராஹ்மணஸ்ய விஜாநத: ||2-46||
எங்கும் நீர் நிரம்பிய இடத்தில் ஒரு சிறு குட்டம் என்ன பொருளுடையது; அன்னபொருளே ஞானமுடையை பிராமணனுக்கு வேதங்களுமுடையன.
________________________________________
கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||
கர்மா (கர்மாவை) செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு. அதன் பயன்களில் எப்போதுமே உனக்கதிகாரமில்லை. செய்கையின் பயனைக் கருதாதே; கர்மா செய்யாமலுமிராதே. (கர்மா என்றால் நித்ய, நைமித்ய, காம்ய கர்மாக்கள். கடைசி மூச்சுவரை கர்மானுஷ்டானம் விடாமல் செய்ய வேண்டுமென்பது  ஸ்ரீ ராமானுஜரின் சித்தாந்தம்)
________________________________________
யோக³ஸ்த²: குரு கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா த⁴நஞ்ஜய|
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோ: ஸமோ பூ⁴த்வா ஸமத்வம் யோக³ உச்யதே ||2-48||
தனஞ்ஜயா, யோகத்தில் நின்று, பற்றை நீக்கி, வெற்றி தோல்விகளை நிகரெனக் கொண்டு கர்மாகளைச் செய்க. நடுநிலையே யோகமெனப்படும்.
________________________________________
தூ³ரேண ஹ்யவரம் கர்ம பு³த்³தி⁴யோகா³த்³த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந்விச்ச² க்ருபணா: ப²லஹேதவ: ||2-49||
தனஞ்ஜயா, புத்தி யோகத்தைக் காட்டிலும் கர்மம் நெடுந்தொலை தாழ்ந்தது. புத்தியைச் சரணடை. பயனைக் கருதுவோர் லோபிகள்.  (ஓருவன் தன் இச்சைக்காக தன் மனைவியைத் தழுவுகிறான்,  தான் பெற்று வளர்த்த  கன்னிகையை பாசத்தால் தழுவுகிறான். தழுவுதல் எங்கிற செயல் ஒன்றாக இருந்தாலும் ஒன்று “துஷ்டம்”, மற்றொன்று “உத்க்ருஷ்டம்”. ஏனினில் நினைவு வேறு பட்டிருக்கும். பலனை விரும்பாமல் செய்யும் கர்ம யோகம் தன் புத்திரியைத் தழுவுதல் போல் “உத்க்ருஷ்டம்.”
________________________________________
பு³த்³தி⁴யுக்தோ ஜஹாதீஹ உபே⁴ ஸுக்ருதது³ஷ்க்ருதே|
தஸ்மாத்³யோகா³ய யுஜ்யஸ்வ யோக³: கர்மஸு கௌஸ²லம் ||2-50||
புத்தியுடையவன் இங்கு நற்செய்கை தீச்செய்கை இரண்டையுந் துறக்கிறான். ஆதலால் நீ யோகத்திலே பொருந்தி விடு. யோகம் செயல்களில் திறமையாம்.
________________________________________
கர்மஜம் பு³த்³தி⁴யுக்தா ஹி ப²லம் த்யக்த்வா மநீஷிண:|
ஜந்மப³ந்த⁴விநிர்முக்தா: பத³ம் க³ச்ச²ந்த்யநாமயம் ||2-51||
புத்தியுடைய மேதாவிகள் செய்கையில் விளையும் பயனைத் துறந்து, பிறவித் தளை நீக்கி, ஆனந்தப் பதவி (பரமபதம்) அடைகிறார்கள்.
________________________________________
யதா³ தே மோஹகலிலம் பு³த்³தி⁴ர்வ்யதிதரிஷ்யதி|
ததா³ க³ந்தாஸி நிர்வேத³ம் ஸ்²ரோதவ்யஸ்ய ஸ்²ருதஸ்ய ச ||2-52||
உனது புத்தி மோகக் குழப்பத்தைக் கடந்து செல்லுமாயின், அப்போது கேட்கப் போவது, கேட்கப்பட்டது என்ற இரண்டிலும் உனக்கு வேதனையேற்படாது.
________________________________________
ஸ்²ருதிவிப்ரதிபந்நா தே யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
ஸமாதா⁴வசலா பு³த்³தி⁴ஸ்ததா³ யோக³மவாப்ஸ்யஸி ||2-53||
உனது புத்தி, கேள்வியிலே கலக்கமுறாததாய், உறுதிகொண்டு, சமாதி நிலையில் அசையாது நிற்குமாயின், அப்போது யோகத்தை அடைவாய்.
________________________________________
அர்ஜுந உவாச
ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ய கா பா⁴ஷா ஸமாதி⁴ஸ்த²ஸ்ய கேஸ²வ|
ஸ்தி²ததீ⁴: கிம் ப்ரபா⁴ஷேத கிமாஸீத வ்ரஜேத கிம் ||2-54||
அர்ஜுனன் சொல்லுகிறான்: கேசவா, உறுதிகொண்ட அறிவுடன் சமாதியில் நிற்போன் எவ்வாறு பேசுவான்? ஸ்திர புத்தியுடையவன் என்ன சொல்வான்? எப்படியிருப்பான்? எதனையடைவான்?
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ப்ரஜஹாதி யதா³ காமாந்ஸர்வாந்பார்த² மநோக³தாந்|
ஆத்மந்யேவாத்மநா துஷ்ட: ஸ்தி²தப்ரஜ்ஞஸ்ததோ³ச்யதே ||2-55||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒருவன் தன் மனதில் எழும் விருப்பங்களனைத்தையும் துறந்து தன்னிலே தான் மகிழ்ச்சி பெறுவானாயின், அப்போது ஸ்திர புத்தியுடையவனென்று சொல்லப்படுகிறான்.
________________________________________
து³:கே²ஷ்வநுத்³விக்³நமநா: ஸுகே²ஷு விக³தஸ்ப்ருஹ:|
வீதராக³ப⁴யக்ரோத⁴: ஸ்தி²ததீ⁴ர்முநிருச்யதே ||2-56||
“துன்பங்களிலே மனங்கொடாதவனாய், இன்பங் களிலே ஆவலற்ற வனாய், அச்சமும் சினமுந் தவித்தவ னாயின், அம்முனி, மதியிலே யுறுதி வாய்ந்தவ னென்ப.”
________________________________________
ய: ஸர்வத்ராநபி⁴ஸ்நேஹஸ்தத்தத்ப்ராப்ய ஸு²பா⁴ஸு²ப⁴ம்|
நாபி⁴நந்த³தி ந த்³வேஷ்டி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-57||
எவன் நல்லதும் கெட்டதும் வருமிடத்தே எதனிலும் வீழ்ச்சியற்றவனாய், ஆவலுறுவதும் பகைப்பதுமின்றியிருப்பானோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
________________________________________
யதா³ ஸம்ஹரதே சாயம் கூர்மோऽங்கா³நீவ ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-58||
ஆமை தன் அவயங்களை இழுத்துக்கொள்ளுவது போல், எப்புறத்தும் விஷயப் பதார்த்தங்களினின்று புலன்களை ஓருவன் மீட்க வல்லானாயின், அவனறிவே நிலைகொண்டது.
________________________________________
விஷயா விநிவர்தந்தே நிராஹாரஸ்ய தே³ஹிந:|
ரஸவர்ஜம் ரஸோऽப்யஸ்ய பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே ||2-59||
தம்மைக் கவராத ஜீவனிடமிருந்து விஷயங்கள் தாமே விலகிக் கொள்ளுகின்றன. எனினும் அவற்றிடமுள்ள சுவையை இவன் மறப்பதில்லை. பரம்பொருளைக் காண்பானாயின் அச்சுவையுந் தீர்ந்துவிடும்.
________________________________________
யததோ ஹ்யபி கௌந்தேய புருஷஸ்ய விபஸ்²சித:|
இந்த்³ரியாணி ப்ரமாதீ²நி ஹரந்தி ப்ரஸப⁴ம் மந: ||2-60||
குந்தியின் மகனே, (தவ) முயற்சியுடைய புருஷனிடத்திலே கூட, இந்திரியங்கள் வரம்பு கடந்து செல்லும்போது தம்முடன் மனத்தையும் வலிய வாரிச் செல்கின்றன.
________________________________________
தாநி ஸர்வாணி ஸம்யம்ய யுக்த ஆஸீத மத்பர:|
வஸே² ஹி யஸ்யேந்த்³ரியாணி தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-61||
அவற்றையெல்லாம் நன்றாக அடக்கி, யோகத்தில் அமர்ந்தவனாய், என்னைப் பரமாகக் கொண்டு, புலன்களை வசப்படுத்தி வைத்திருப்பவன் எவனோ, அவனுடைய அறிவே நிலைகொண்டது.
________________________________________
த்⁴யாயதோ விஷயாந்பும்ஸ: ஸங்க³ஸ்தேஷூபஜாயதே|
ஸங்கா³த்ஸஞ்ஜாயதே காம: காமாத்க்ரோதோ⁴ऽபி⁴ஜாயதே ||2-62||
மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது. பற்றுதலால் விருப்பமுண்டாகிறது. விருப்பத்தால் சினம் பிறக்கிறது.
________________________________________
க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதிவிப்⁴ரம:|
ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த்³பு³த்³தி⁴நாஸோ² பு³த்³தி⁴நாஸா²த்ப்ரணஸ்²யதி ||2-63||
சினத்தால் மயக்கம்; மயக்கத்தால் நினைவு தவறுதல்; நினைவு தவறுதலால் புத்தி நாசம்; புத்தி நாசத்தால் அழிகிறான்.
________________________________________
ராக³த்³வேஷவியுக்தைஸ்து விஷயாநிந்த்³ரியைஸ்²சரந்|
ஆத்மவஸ்²யைர்விதே⁴யாத்மா ப்ரஸாத³மதி⁴க³ச்ச²தி ||2-64||
விழைதலும் பகைத்தலுமின்றி தனக்கு வசப்பட்ட புலன்களுடன் விஷயங்களிலே ஊடாடுவோனாய் தன் விதிக்குத்தான் உட்பட்ட மனிதன் ஆறுதலடைகிறான்.
________________________________________
ப்ரஸாதே³ ஸர்வது³:கா²நாம் ஹாநிரஸ்யோபஜாயதே|
ப்ரஸந்நசேதஸோ ஹ்யாஸு² பு³த்³தி⁴: பர்யவதிஷ்ட²தே ||2-65||
சாந்தி நிலையில் மனிதனுக்கு எல்லாத் துன்பங்களும் அழிகின்றன. சித்தம் சாந்தி பெற்ற பின் ஒருவனுடைய புத்தி விரைவிலே நிலைப்படுகிறது.
________________________________________
நாஸ்தி பு³த்³தி⁴ரயுக்தஸ்ய ந சாயுக்தஸ்ய பா⁴வநா|
ந சாபா⁴வயத: ஸா²ந்திரஸா²ந்தஸ்ய குத: ஸுக²ம் ||2-66||
யோகமில்லாதவனுக்குப் புத்தியில்லை. யோகமில்லாதவனுக்கு மனோபாவனை இல்லை. மனோபாவனையில்லாதவனுக்குச் சாந்தி இல்லை. சாந்தியில்லாதவனுக்கு இன்பமேது?
________________________________________
இந்த்³ரியாணாம் ஹி சரதாம் யந்மநோऽநுவிதீ⁴யதே|
தத³ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம் வாயுர்நாவமிவாம்ப⁴ஸி ||2-67||
இந்திரியங்கள் சலிக்கையில் ஒருவனுடைய மனமும் அவற்றைப் பின்பற்றிச் செல்லுமாயின், அம்மனம் கடலில் தோணியைக் காற்று மோதுவதுபோல் அறிவை மோதுகிறது.
________________________________________
தஸ்மாத்³யஸ்ய மஹாபா³ஹோ நிக்³ருஹீதாநி ஸர்வஸ²:|
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ப்⁴யஸ்தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டி²தா ||2-68||
ஆதலால், பெருந்தோளாய், யாங்கணும் விஷயங்களினின்றும் இந்திரியங்களைக் கட்டவல்லான் எவனோ, அவனறிவே நிலைகொண்டது.
________________________________________
யா நிஸா² ஸர்வபூ⁴தாநாம் தஸ்யாம் ஜாக³ர்தி ஸம்யமீ |
யஸ்யாம் ஜாக்³ரதி பூ⁴தாநி ஸா நிஸா² பஸ்²யதோ முநே: ||2-69||
எல்லா உயிர்களுக்கும் இரவாகிய நேரத்தில், (தன்னைக் கட்டிய) முனி விழித்திருக்கிறான். மற்ற உயிர்கள் விழித்திருக்கும் நேரமெதுவோ அதுவே முனிக்கிரவு.
________________________________________
ஆபூர்யமாணமசலப்ரதிஷ்ட²ம் ஸமுத்³ரமாப: ப்ரவிஸ²ந்தி யத்³வத்|
தத்³வத்காமா யம் ப்ரவிஸ²ந்தி ஸர்வே ஸ ஸா²ந்திமாப்நோதி ந காமகாமீ ||2-70||
கடலில் நீர்த் தொகுதிகள் வந்து விழுகையில் அது மேன்மேலும் நிரப்புதற்குரியதாய் அசையா நிலைகொண்டிருப்பது போலே விருப்பங்கள் தன்னுள்ளே புகும்போது இயல்வான் எவனோ அவன் சாந்தியடைகிறான். விருப்பங்களை விரும்புவோன் அதனை அடையான்.  (பல நதிகள் வந்து விழுந்தாலும் கடல் எப்படிக் கலங்குவதில்லையோ, அது போல ஞானியின் மனம் விஷயங்களால் சிறிதும் கலக்கம் அடைவதில்லை.)
________________________________________
விஹாய காமாந்ய: ஸர்வாந்புமாம்ஸ்²சரதி நி:ஸ்ப்ருஹ:|
நிர்மமோ நிரஹங்கார: ஸ ஸா²ந்திமதி⁴க³ச்ச²தி ||2-71||
இச்சையற்றான், எல்லா இன்பங்களையும் துறந்தான், எனதென்பதற்றான், யானென்பதற்றான், அவனே சாந்தி நிலை அடைகிறான்.
________________________________________
ஏஷா ப்³ராஹ்மீ ஸ்தி²தி: பார்த² நைநாம் ப்ராப்ய விமுஹ்யதி|
ஸ்தி²த்வாஸ்யாமந்தகாலேऽபி ப்³ரஹ்மநிர்வாணம்ருச்ச²தி ||2-72||
.பார்த்தா, இது பிரம்ம ஸ்திதி. இதையடைந்தோன் பிறகு மயங்குவதில்லை. இறுதிக் காலத்திலேனும் இதில் நிலை கொள்வோன், பிரம்ம நிர்வாண மெய்துகிறான்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஸாங்க்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
இரண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது
கீதை – மூன்றாவது அத்தியாயம்
கர்ம யோகம்
கர்ம யோக ஞான யோகங்களுள் ஞான யோகமே கடுகப் பலனை அளிக்குமென்றாலும் கர்ம யோகமே செய்யத் தக்கது. ஆக்கையிருக்கும் வரையில் மனிதனுக்கு ஏதாவதொரு கர்மாவைச் செய்வதே இயற்கையாயிருக்கும். அவன் துணிந்து வேறு துறைகளிலிருந்த போதிலும் புலன்கள் அவனை இழுத்துச் செய்கையிலேயே கொண்டுவந்து நிறுத்தும். இந்திரியங்களை அடக்கி ஞான நிலையில் நிற்கும் திறமை வாய்ந்தவனும் கர்மங்களையே செய்யக் கடவன். ஏனெனில், இவனது உண்மை நிலையறியாத பாமரர்களும், இவனைக் கண்டு தாங்களும் கர்மங்களைவிட்டு ஞானத்துறையில் துணிவுறுகிறார்கள்.

அதனால் அவர்கள் கர்ம யோகத்தை யிழந்ததுமன்றி ஞான யோகத்தையுமிழந்து முன்னிலும் தாழ்ந்த நிலைமைக்கு வந்து விடுவார்கள். அவர்கள் கெடுவதற்கு இவனே காரணமாவான். ஆகையால் ஞானயோகத்தில் திறமையுள்ளவனுக்கும், திறமையில்லாதவனுக்கும் கர்ம யோகமே மேலானது. கர்மங்களைச் செய்யும்போது, ‘இந்நிலைமை எனக்கு பிரகிருதி சம்பந்தத்தால் வந்தேறியதென்றும், ஈசுவரனுடைய கட்டளையினால் அவனுதவியைக் கொண்டு அவனுடையை பிரீதிக்காகவே செய்கிறோம்,’ என்றும் எண்ணிச் செய்ய வேண்டும்.
________________________________________
அர்ஜுந உவாச
ஜ்யாயஸீ சேத்கர்மணஸ்தே மதா பு³த்³தி⁴ர்ஜநார்த³ந|
தத்கிம் கர்மணி கோ⁴ரே மாம் நியோஜயஸி கேஸ²வ ||3-1||
அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜநார்த்தன, செய்கையைக் காட்டிலும் புத்தியே சிறந்ததென்பது நின் கொள்கையாயின் இந்தக் கொடிய செய்கையில் என்னைப் புகுத்துவதென்னே, கேசவா?
________________________________________
வ்யாமிஸ்²ரேணேவ வாக்யேந பு³த்³தி⁴ம் மோஹயஸீவ மே|
ததே³கம் வத³ நிஸ்²சித்ய யேந ஸ்²ரேயோऽஹமாப்நுயாம் ||3-2||
குழப்பமான பேச்சினால் என் புத்தியை மயங்கச் செய்கிறாய். ஆதலால் எது எனக்கு நன்மை தருமென்பதை உறுதிப்படுத்தி ஒரே வார்த்தையாகச் சொல்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
லோகேऽஸ்மிந் த்³விவிதா⁴ நிஷ்டா² புரா ப்ரோக்தா மயாநக⁴|
ஜ்ஞாநயோகே³ந ஸாங்க்²யாநாம் கர்மயோகே³ந யோகி³நாம் ||3-3||
ஸ்ரீபகவான் சொல்லுகிறான்: பாபமொன்று மில்லாத அர்ஜுனா, இவ்வுலகில் இரண்டுவித நிஷ்டை முன்னர் என்னால் கூறப்பட்டது. ஸாங்கியர்களின் ஞான யோகத்தால் எய்துவது, யோகிகளின் கர்ம யோகத்தால் எய்துவது என.
________________________________________
ந கர்மணாமநாரம்பா⁴ந்நைஷ்கர்ம்யம் புருஷோऽஸ்²நுதே|
ந ச ஸந்ந்யஸநாதே³வ ஸித்³தி⁴ம் ஸமதி⁴க³ச்ச²தி ||3-4||
கர்மாகளைத் தொடாமலே யிருப்பதனால் மனிதன் செயலற்ற நிலை அடைவதில்லை. துறவினாலேயே மனிதன் ஈடேற்றம் பெற்றுவிட மாட்டான்.  (கர்ம யோகம் செய்து, பாபங்களைப் போக்கி இந்த்ரிய ஜயம் பெற்றபின்னரே ஞானயோகம் செய்ய முடியும்)
________________________________________
ந ஹி கஸ்²சித்க்ஷணமபி ஜாது திஷ்ட²த்யகர்மக்ருத்|
கார்யதே ஹ்யவஸ²: கர்ம ஸர்வ: ப்ரக்ருதிஜைர்கு³ணை: ||3-5||
எவனும் ஒரு கணப்பொழுதேனும் செய்கையின்றிருப்பதில்லை. இயற்கையில் விளையும் குணங்களே எல்லா உயிர்களையும் அவசரமாகத் கர்மா புரிவிக்கின்றன.
________________________________________
கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்³ரியார்தா²ந்விமூடா⁴த்மா மித்²யாசார: ஸ உச்யதே ||3-6||
கர்மேந்திரியங்களை அடக்கிக்கொண்டு, ஆனால் இந்திரிய விஷயங்களை மனத்தால் ஸ்மரித்துக் கொண்டிருப்போனாகிய மூடாத்மா பொய்யழுக்கமுடையவனென்று சொல்லப்படுகிறான்.
________________________________________
யஸ்த்விந்த்³ரியாணி மநஸா நியம்யாரப⁴தேऽர்ஜுந|
கர்மேந்த்³ரியை: கர்மயோக³மஸக்த: ஸ விஸி²ஷ்யதே ||3-7||
அர்ஜுனா, எவன் இந்திரியங்களை மனத்தால் கட்டுப்படுத்திக்கொண்டு, கர்மேந்திரியங்களால் கர்ம யோகம் பண்ணுகிறானோ, அவன் சிறந்தவன்.
________________________________________
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:|
ஸ²ரீரயாத்ராபி ச தே ந ப்ரஸித்³த்⁴யேத³கர்மண: ||3-8||
விதிக்கப்பட்ட கர்மாவை நீ செய். கர்மா கர்மாவின்மையைக் காட்டிலும் சிறந்ததன்றோ? கர்மாவின்றி இருப்பதால் உடம்பைக் கொண்டுசெலுத்துதல்கூட உனக்கில்லாமல் போய்விடும்.
________________________________________
யஜ்ஞார்தா²த்கர்மணோऽந்யத்ர லோகோऽயம் கர்மப³ந்த⁴ந:|
தத³ர்த²ம் கர்ம கௌந்தேய முக்தஸங்க³: ஸமாசர ||3-9||
வேள்வியின் பொருட்டென்று செய்யப்படுவது தவிர மற்றைத் கர்மா மனிதருக்குத் தளையாகிறது. ஆதலால், குந்தி மகனே, பற்றைக் களைந்து கர்மா செய்து கொண்டிரு.
________________________________________
ஸஹயஜ்ஞா: ப்ரஜா: ஸ்ருஷ்ட்வா புரோவாச ப்ரஜாபதி:|
அநேந ப்ரஸவிஷ்யத்⁴வமேஷ வோऽஸ்த்விஷ்டகாமது⁴க் ||3-10||
முன்பு பிரம்மதேவன் வேள்வியுடனே உயிர்க்குலத்தை ஒருமிக்கப் படைத்துச் சொல்லினான்: “இதனால் பல்குவீர்கள், நீங்கள் விரும்பும் விருப்பங்களையெல்லாம் உங்களுக்கிது கறந்து தரும்.
________________________________________
தே³வாந்பா⁴வயதாநேந தே தே³வா பா⁴வயந்து வ:|
பரஸ்பரம் பா⁴வயந்த: ஸ்²ரேய: பரமவாப்ஸ்யத² ||3-11||
இதனால் தேவர்களைக் கருதக் கடவீர்; அந்த தேவர் உங்களைக் கருதக் கடவர். (இங்ஙனம்) பரஸ்பரமான பாவனை செய்வதனால் உயர்ந்த நலத்தை எய்துவீர்கள்.
________________________________________
இஷ்டாந்போ⁴கா³ந்ஹி வோ தே³வா தா³ஸ்யந்தே யஜ்ஞபா⁴விதா:|
தைர்த³த்தாநப்ரதா³யைப்⁴யோ யோ பு⁴ங்க்தே ஸ்தேந ஏவ ஸ: ||3-12||
.
வேள்வியில் பாவனை செய்யப்பட்ட தேவர் உங்களுக்கு விரும்பிய போகங்களையெல்லாந் தருவர். அவர்களுக்குக் கைம்மாறு செலுத்தாமல் அவர்கள் கொடுப்பதை உண்போன் கள்வனே யாவன்.”
________________________________________
யஜ்ஞஸி²ஷ்டாஸி²ந: ஸந்தோ முச்யந்தே ஸர்வகில்பி³ஷை:|
பு⁴ஞ்ஜதே தே த்வக⁴ம் பாபா யே பசந்த்யாத்மகாரணாத் ||3-13||
வேள்வியின் மிச்சத்தை யுண்ணும் நல்லோர் எல்லா பாபங்களினின்றும் விடுபடுகிறார்கள். தம்பொருட்டென்று மாத்திரமே உணவு சமைக்கும் பாவிகள் பாவத்தை உண்ணுகிறார்கள். (நாம் செய்வதெல்லாம் , பகவத் பிரீத்யர்த்தம்; அவன் கட்டளையை நாம் நடத்துகிறோம் என்று உண்மையாக மனதில் எண்ணிச்செய்தால், கர்ம பந்தம் நம்மைக் கட்டாது. ஆத்ம நன்மையே கெட்டும்.)
________________________________________
அந்நாத்³ப⁴வந்தி பூ⁴தாநி பர்ஜந்யாத³ந்நஸம்ப⁴வ:|
யஜ்ஞாத்³ப⁴வதி பர்ஜந்யோ யஜ்ஞ: கர்மஸமுத்³ப⁴வ: ||3-14||
அன்னத்தால் உயிர்கள் சமைகின்றன. மழையால் உணவு தோன்றுகிறது. மழை வேள்வியால் ஆகிறது. வேள்வி செய்கையினின்று பிறப்பது.
________________________________________
கர்ம ப்³ரஹ்மோத்³ப⁴வம் வித்³தி⁴ ப்³ரஹ்மாக்ஷரஸமுத்³ப⁴வம்|
தஸ்மாத்ஸர்வக³தம் ப்³ரஹ்ம நித்யம் யஜ்ஞே ப்ரதிஷ்டி²தம் ||3-15||
செய்கை பிரம்மத்தினின்றும் பிறப்பதென்றுணர். பிரம்மம் அமிர்தத்தில் தோன்றுவது. ஆதலால் எங்கும் நிறைந்த பிரம்மம் எப்போதும் வேள்வியில் நிலைபெற்றது.
________________________________________
ஏவம் ப்ரவர்திதம் சக்ரம் நாநுவர்தயதீஹ ய:|
அகா⁴யுரிந்த்³ரியாராமோ மோக⁴ம் பார்த² ஸ ஜீவதி ||3-16||
இங்ஙனம் சுழலும் வட்டத்தை இவ்வுலகில் பின்பற்றி ஒழுகாதோன் பாப வாழ்க்கையுடையான்; புலன்களிலே களித்தான்; பார்த்தா, அவன் வாழ்க்கை விழலேயாம்.  (ஸரீரம் தரிக்க அன்னம் வேண்டும். அன்னமுண்டாக மழை வேண்டும். மழை பகவதாராதனத்தினால் உண்டாகிறது. பகவதாராதனம் செய்ய சரீயம் வேண்டும். பகவதாராதனமான யஜ்ஞம், யாகம், பூஜை-இதில் மிச்சமான அன்னத்தையே புசிக்க வேண்டும். இவன் ஆத்மாவுக்கு நன்மை செய்யாமல் சரீரத்திற்கே உழைப்பவன்.)
________________________________________
யஸ்த்வாத்மரதிரேவ ஸ்யாதா³த்மத்ருப்தஸ்²ச மாநவ:|
ஆத்மந்யேவ ச ஸந்துஷ்டஸ்தஸ்ய கார்யம் ந வித்³யதே ||3-17||
தன்னிலேதான் இன்புறுவான்; தன்னிலேதான் திருப்தியடைவான்; தன்னிலேதான் மகிழ்ந்திருப்பான், அவனுக்குத் தொழிலில்லை. (ஏவன் ஆத்மாவிலேயே இன்புற்று, ஆத்ம தரிசனத்திலேயே திருப்தி அடைந்து, ஆத்மாவிலேயே எல்லா ஆனந்தத்தையும் அனுபவிக்கிறானோ அவனுக்கு செய்ய வேண்டிய கர்மா ஒன்றும் இல்லை.)
________________________________________
நைவ தஸ்ய க்ருதேநார்தோ² நாக்ருதேநேஹ கஸ்²சந|
ந சாஸ்ய ஸர்வபூ⁴தேஷு கஸ்²சித³ர்த²வ்யபாஸ்²ரய: ||3-18||
அவனுக்குச் செய்கையில் யாதொரு பயனுமில்லை; செயலின்றி இருப்பதிலும் அவனுக்குப் பயனில்லை; எவ்விதப் பயனையுங் கருதி அவன் எந்த உயிரையுஞ் சார்ந்து நிற்பதில்லை.
________________________________________
தஸ்மாத³ஸக்த: ஸததம் கார்யம் கர்ம ஸமாசர|
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம பரமாப்நோதி பூருஷ: ||3-19||
ஆதலால், எப்போதும் பற்று நீக்கிச் செய்யத்தக்க கர்மாவைச் செய்து கொண்டிரு. பற்றில்லாமல் கர்மா செய்துகொண்டிருக்கும் மனிதன் பரம்பொருளை எய்துகிறான்.
________________________________________
கர்மணைவ ஹி ஸம்ஸித்³தி⁴மாஸ்தி²தா ஜநகாத³ய:|
லோகஸங்க்³ரஹமேவாபி ஸம்பஸ்²யந்கர்துமர்ஹஸி ||3-20||
ஜனகன் முதலியோர் செய்கையாலேயே சித்தி பெற்றார்கள். உலக நன்மையைக் கருதியும் நீ கர்மா புரிதல் தகும்.
________________________________________
யத்³யதா³சரதி ஸ்²ரேஷ்ட²ஸ்தத்ததே³வேதரோ ஜந:|
ஸ யத்ப்ரமாணம் குருதே லோகஸ்தத³நுவர்ததே ||3-21||
எதனை யெதனை உயர்ந்தோன் செய்கிறானோ அதையே மற்ற மனிதர் பின்பற்றுகிறார்கள். அவன் எதை பிரமாணமாக்குகிறானோ, அதையே உலகத்தார் தொடருகிறார்கள்.
________________________________________
ந மே பார்தா²ஸ்தி கர்தவ்யம் த்ரிஷு லோகேஷு கிஞ்சந|
நாநவாப்தமவாப்தவ்யம் வர்த ஏவ ச கர்மணி ||3-22||
பார்த்தா, மூன்றுலகத்திலும் எனக்கு யாதொரு கடமையுமில்லை. நான் பெற்றிராத பேறுமில்லை. எனினும் நான் தொழிலிலேதான் ( கர்மா செய்துகொண்டு) இயங்குகிறேன்.
________________________________________
யதி³ ஹ்யஹம் ந வர்தேயம் ஜாது கர்மண்யதந்த்³ரித:|
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||3-23||
நான் சோம்பலில்லாமல் எப்போதும் கர்மா கொண்டிராவிடின், பார்த்தா, எல்லாப் பக்கங்களிலும் மனிதர் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
________________________________________
உத்ஸீதே³யுரிமே லோகா ந குர்யாம் கர்ம சேத³ஹம்|
ஸங்கரஸ்ய ச கர்தா ஸ்யாமுபஹந்யாமிமா: ப்ரஜா: ||3-24||
நான் கர்மா செய்யாவிட்டால், இந்த ஜனங்களெல்லோரும் அழிந்து போவார்கள்; குழப்பத்தை நான் ஆக்கியோன் ஆவேன்; இந்த மக்களை யெல்லாங் கொல்வோனாவேன்.
________________________________________
ஸக்தா: கர்மண்யவித்³வாம்ஸோ யதா² குர்வந்தி பா⁴ரத|
குர்யாத்³வித்³வாம்ஸ்ததா²ஸக்தஸ்²சிகீர்ஷுர் லோகஸங்க்³ரஹம் ||3-25||
பாரதா, அறிவில்லாதோர் செய்கையில் பற்றுடையோராய் எப்படித் கர்மா செய்கிறார்களோ அப்படியே அறிவுடையோன் பற்றை நீக்கி உலக நன்மையை நாடித் கர்மா செய்ய வேண்டும்.
________________________________________
ந பு³த்³தி⁴பே⁴த³ம் ஜநயேத³ஜ்ஞாநாம் கர்மஸங்கி³நாம்|
ஜோஷயேத்ஸர்வகர்மாணி வித்³வாந்யுக்த: ஸமாசரந் ||3-26||
அறிவுடையோன் தொழிலில் பற்றுதல் கொண்ட அஞ்ஞானிகளுக்கு புத்தி பேதம் விளைவிக்கக் கூடாது. அவன் யோகத்தில் நின்று கர்மா செய்து எல்லாத் கர்மாகளையும் கவர்ச்சியுடையவனாக்க வேண்டும்.
________________________________________
ப்ரக்ருதே: க்ரியமாணாநி கு³ணை: கர்மாணி ஸர்வஸ²:|
அஹங்காரவிமூடா⁴த்மா கர்தாஹமிதி மந்யதே ||3-27||
எங்கும் கர்மாகள் இயற்கையின் குணங்களால் செய்யப்படுகின்றன. அகங்காரத்தால் மயங்கியவன், “நான் செய்கிறேன்” என்று நினைக்கிறான்.
________________________________________
தத்த்வவித்து மஹாபா³ஹோ கு³ணகர்மவிபா⁴க³யோ:|
கு³ணா கு³ணேஷு வர்தந்த இதி மத்வா ந ஸஜ்ஜதே ||3-28||
குணம், செய்கை இவற்றினுடைய பிரிவுகளின் உண்மையறிந்தோன், ‘குணங்கள் குணங்களில் இயலுகின்றன’ என்று கருதி பற்றற்றிருப்பான்.
________________________________________
ப்ரக்ருதேர்கு³ணஸம்மூடா⁴: ஸஜ்ஜந்தே கு³ணகர்மஸு|
தாநக்ருத்ஸ்நவிதோ³ மந்தா³ந்க்ருத்ஸ்நவிந்ந விசாலயேத் ||3-29||
இயற்கையில் குணங்களால் மயங்கியவர்கள் குணங்களிலும் கர்மாகளிலும் பற்றுதலடைகிறார்கள். சிற்றறிவுடைய அந்த மாந்தர்களை முழுதுணர்ந்த ஞானி உழல்விக்கக் கூடாது.
________________________________________
மயி ஸர்வாணி கர்மாணி ஸந்ந்யஸ்யாத்⁴யாத்மசேதஸா|
நிராஸீ²ர்நிர்மமோ பூ⁴த்வா யுத்⁴யஸ்வ விக³தஜ்வர: ||3-30||
எல்லாச் செய்கைகளையும் உள்ளறிவினால் எனக்கு அர்ப்பணமாகத் துறந்துவிட்டு, ஆசை நீங்கி, எனது என்பது அற்று, மனக் காய்ச்சல் தீர்ந்தவனாய்ப் போர் செய்யக் கடவாய்.
________________________________________
யே மே மதமித³ம் நித்யமநுதிஷ்ட²ந்தி மாநவா:|
ஸ்²ரத்³தா⁴வந்தோऽநஸூயந்தோ முச்யந்தே தேऽபி கர்மபி⁴: ||3-31||
என்னுடைய இந்த நித்தியமான கொள்கையை எந்த மனிதர் சிரத்தையுடையோராய்ப் பொறாமையின்றிப் பின்பற்றுகிறார்களோ, அவர்களும் கர்மாகளிலிருந்து விடுபடுகிறார்கள்.  ( எவன் நான் சொன்னபடி கர்மயோகம் செய்கிறார்களோ, செய்யாவிடினும் அதைச் செய்யவேணுமன்ற சிரத்தை இருக்கிறதோ, அது இல்லாவிடினும் நான் சொன்ன வார்த்தைகளில் அசூயை இல்லாமலிருக்கிறார்களோ, அவர்கள் எல்லாரும் சம்சார பந்த்தத்துக்கு காரணமான பூண்ணிய பாபங்களிலிருந்து விடுபடுகிறார்கள்.)
________________________________________
யே த்வேதத³ப்⁴யஸூயந்தோ நாநுதிஷ்ட²ந்தி மே மதம்|
ஸர்வஜ்ஞாநவிமூடா⁴ம்ஸ்தாந்வித்³தி⁴ நஷ்டாநசேதஸ: ||3-32||
என்னுடைய இக்கொள்கையை யாவர் பொறாமையால் பின்பற்றாது விடுகிறார்களோ, எவ்வித ஞானமுமில்லாத அம்மூடர்களை நாசமடைந்தோராகவே தெரிந்துகொள்.
________________________________________
ஸத்³ருஸ²ம் சேஷ்டதே ஸ்வஸ்யா: ப்ரக்ருதேர்ஜ்ஞாநவாநபி|
ப்ரக்ருதிம் யாந்தி பூ⁴தாநி நிக்³ரஹ: கிம் கரிஷ்யதி ||3-33||
ஞானமுடையவன்கூடத் தன் இயற்கைக்குத் தக்கபடியே நடக்கிறான். உயிர்கள் இயற்கைப்படி நடக்கின்றன. அடக்குதல் பயன்படாது.
________________________________________
இந்த்³ரியஸ்யேந்த்³ரியஸ்யார்தே² ராக³த்³வேஷௌ வ்யவஸ்தி²தௌ|
தயோர்ந வஸ²மாக³ச்சே²த்தௌ ஹ்யஸ்ய பரிபந்தி²நௌ ||3-34||
இந்திரியத்துக்கு இந்திரிய விஷயத்தில் விருப்பு வெறுப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இவ்விரண்டுக்கும் ஒருவன் வசப்படலாகாது. இவை இவனுக்கு வழித்தடைகளாம்.
________________________________________
ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத்|
ஸ்வத⁴ர்மே நித⁴நம் ஸ்²ரேய: பரத⁴ர்மோ ப⁴யாவஹ: ||3-35||
நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.
________________________________________
அர்ஜுந உவாச|
அத² கேந ப்ரயுக்தோऽயம் பாபம் சரதி பூருஷ:|
அநிச்ச²ந்நபி வார்ஷ்ணேய ப³லாதி³வ நியோஜித: ||3-36||
அர்ஜுனன் சொல்லுகிறான்: விருஷ்ணி குலத் தோன்றலே, மனிதனுக்கு இச்சையில்லாத போதும் அவனை வலியக் கொண்டு புகுத்துவதுபோல் தூண்டிப் பாவம் செய்விப்பது யாது?
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
காம ஏஷ க்ரோத⁴ ஏஷ ரஜோகு³ணஸமுத்³ப⁴வ:|
மஹாஸ²நோ மஹாபாப்மா வித்³த்⁴யேநமிஹ வைரிணம் ||3-37||
பகவான் சொல்லுகிறான்: இஃது விருப்பமும் சினமும்; ரஜோ குணத்திற்பிறப்பது; பேரழிவு செய்வது; பெரும்பாவம். இதனை இங்கு சத்துருவாகத் தெரிந்து கொள்.
________________________________________
தூ⁴மேநாவ்ரியதே வஹ்நிர்யதா²த³ர்ஸோ² மலேந ச|
யதோ²ல்பே³நாவ்ருதோ க³ர்ப⁴ஸ்ததா² தேநேத³மாவ்ருதம் ||3-38||
புகையினால் தீ சூழப்பட்டிருப்பது போலவும், கண்ணாடி அழுக்கால் மாசுபடுவது போலவும் இது இவ்வுலகைச் சூழ்ந்திருக்கிறது.
________________________________________
ஆவ்ருதம் ஜ்ஞாநமேதேந ஜ்ஞாநிநோ நித்யவைரிணா|
காமரூபேண கௌந்தேய து³ஷ்பூரேணாநலேந ச ||3-39||
குந்தியின் மகனே, விருப்பமெனப்படும் இந் நிரப்பொணாத் தீ, ஞானிக்கு நித்தியப் பகையாய் ஞானத்தைச் சூழ்ந்து நிற்கிறது.
________________________________________
இந்த்³ரியாணி மநோ பு³த்³தி⁴ரஸ்யாதி⁴ஷ்டா²நமுச்யதே|
ஏதைர்விமோஹயத்யேஷ ஜ்ஞாநமாவ்ருத்ய தே³ஹிநம் ||3-40||
இந்திரியங்களும், மனமும், புத்தியும் இதற்கு நிலைக்களன் என்பர். இவற்றால் இது ஞானத்தைச் சூழ்ந்து மனிதனை மயங்குவிக்கிறது.
________________________________________
தஸ்மாத்த்வமிந்த்³ரியாண்யாதௌ³ நியம்ய ப⁴ரதர்ஷப⁴|
பாப்மாநம் ப்ரஜஹி ஹ்யேநம் ஜ்ஞாநவிஜ்ஞாநநாஸ²நம் ||3-41||
ஆதலால் பாரத ரேறே, நீ தொடக்கத்தில் இந்திரியங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் அழிப்பதாகிய இந்தப் பாவத்தைக் கொன்றுவிடு.
________________________________________
இந்த்³ரியாணி பராண்யாஹுரிந்த்³ரியேப்⁴ய: பரம் மந:|
மநஸஸ்து பரா பு³த்³தி⁴ர்யோ பு³த்³தே⁴: பரதஸ்து ஸ: ||3-42||
இந்திரியங்களை உயர்வுடையன வென்பர். அவற்றிலும் மனம் மேல்; மனத்தைக் காட்டிலும் புத்தி மேல்; புத்திக்கு மேலே அவன் (ஆத்மா).
________________________________________
ஏவம் பு³த்³தே⁴: பரம் பு³த்³த்⁴வா ஸம்ஸ்தப்⁴யாத்மாநமாத்மநா|
ஜஹி ஸ²த்ரும் மஹாபா³ஹோ காமரூபம் து³ராஸத³ம் ||3-43||
இங்ஙனம் புத்திக்கு மேலான பொருளை (ஆத்மாவை) உணர்ந்து, தன்னைத்தான் உறுதிபடுத்திக் கொண்டு, வெல்லற்கரிய விருப்பமாம் பகையைக் கொல்லக் கடவாய், பெருந்தோளுடையாய்!
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘கர்ம யோகம்’ எனப் பெயர் படைத்த
மூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – நான்காவது அத்தியாயம்
ஞான கர்ம சந்யாச யோகம்
‘அர்ஜுனா, உன்னை ஏமாற்றிச் சண்டையில் உற்சாகமூட்டுவதற்காக உன்னைக் கர்மயோகத்தில் தூண்டுகிறேன் என்று எண்ணாதே. உலகத்தைப் படைக்கும்போதே இக் கர்மயோகத்தை நான் மனுவுக்கு உபதேசித்தேன்.
பிறகு மனுவின் வழியாக உலகில் அது பரவிற்று’ என்று சொல்லிக் கண்ணன் தனது அவதார ரகசியத்தைக் கூறுகிறான். பிறகு கர்மயோகத்தின் பிரிவுகளையும் அவற்றுள் அடங்கிய ஆத்ம ஞானத்தின் பெருமையையும் விளக்குகிறான். கர்மயோகம் ஞானபாகத்தை உள்ளடக்கிக் கொண்டிருப்பதால் அதுவே ஞானயோகத்தின் பலனையும் அளிக்கும் என்று கூறுகிறான்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
இமம் விவஸ்வதே யோக³ம் ப்ரோக்தவாநஹமவ்யயம்|
விவஸ்வாந்மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவேऽப்³ரவீத் ||4-1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: இந்த அழிவற்ற யோகத்தை நான் முன்னர் விவஸ்வானுக்குச் சொன்னேன். விவஸ்வான் மனுவுக்குச் சொன்னான். மனு இஷ்வாகு ராஜனுக்குக் கூறினான்.
________________________________________
ஏவம் பரம்பராப்ராப்தமிமம் ராஜர்ஷயோ விது³:|
ஸ காலேநேஹ மஹதா யோகோ³ நஷ்ட: பரந்தப ||4-2||
இவ்வாறு பரம்பரையாகக் கிடைத்த இதனை ராஜரிஷிகள் உணர்ந்திருந்தனர். பரந்தபா, அந்த யோகம் காலமிகுதியால் இவ்வுலகத்தில் இழக்கப்பட்டது.
________________________________________
ஸ ஏவாயம் மயா தேऽத்³ய யோக³: ப்ரோக்த: புராதந:|
ப⁴க்தோऽஸி மே ஸகா² சேதி ரஹஸ்யம் ஹ்யேதது³த்தமம் ||4-3||
அந்தப் பழைய யோகத்தையே இன்று நான் உனக்குச் சொன்னேன், நீ என் பக்தனும் தோழனுமென்பது கருதி. இது மிகவும் உயர்ந்த ரகசியம்.
________________________________________
அர்ஜுந உவாச
அபரம் ப⁴வதோ ஜந்ம பரம் ஜந்ம விவஸ்வத:|
கத²மேதத்³விஜாநீயாம் த்வமாதௌ³ ப்ரோக்தவாநிதி ||4-4||
அர்ஜுனன் சொல்லுகிறான்: உன் பிறப்பு பிந்தியது; விவஸ்வானுடைய பிறப்பு முந்தியது. நீ இதை ஆதியில் சொன்னவனென்று நான் தெரிந்துகொள்வதெப்படி?
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ப³ஹூநி மே வ்யதீதாநி ஜந்மாநி தவ சார்ஜுந|
தாந்யஹம் வேத³ ஸர்வாணி ந த்வம் வேத்த² பரந்தப ||4-5||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, எனக்குப் பல ஜன்மங்கள் கழிந்திருக்கின்றன. உனக்கும் அப்படியே. பரந்தபா, நான் அவற்றை எல்லாம் அறிவேன். நீ அவற்றை அறிகிலை.
________________________________________
அஜோऽபி ஸந்நவ்யயாத்மா பூ⁴தாநாமீஸ்²வரோऽபி ஸந்|
ப்ரக்ருதிம் ஸ்வாமதி⁴ஷ்டா²ய ஸம்ப⁴வாம்யாத்மமாயயா ||4-6||
ஸ்ரீ பகவான் பிறப்பற்றே னெனினும், அழிவற்றே னெனினும், உயிர்களுக்கெல்லாம் ஈசனே யெனினும், யான் எனது பிரகிருதியில் நிலைபெற்று ஆத்ம மாயையால் பிறப்பெய்துகிறேன்.
________________________________________
யதா³ யதா³ ஹி த⁴ர்மஸ்ய க்³லாநிர்ப⁴வதி பா⁴ரத|
அப்⁴யுத்தா²நமத⁴ர்மஸ்ய ததா³த்மாநம் ஸ்ருஜாம்யஹம் ||4-7||
பாரதா, எப்போதெப்போது தர்மம் அழிந்துபோய் அதர்மம் எழுச்சி பெறுமோ, அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன். (“கிலானி” என்றால் குறைவு என்றே பொருள். ஆழிவு என்பதில்லை)
________________________________________
பரித்ராணாய ஸாதூ⁴நாம் விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்|
த⁴ர்மஸம்ஸ்தா²பநார்தா²ய ஸம்ப⁴வாமி யுகே³ யுகே³ ||4-8||
நல்லோரைக் காக்கவும், தீயன செய்வோரை அழிக்கவும், அறத்தை நிலை நிறுத்தவும் நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.( பரித்ராணாய ஸாதூ⁴நாம்=ஸாதுக்களை ரக்ஷித்து அவர்கள் வேண்டியதைத் தருவது; தன்னை அனுபவிக்கக் கொடுப்பது. விநாஸா²ய ச து³ஷ்க்ருதாம்= பரமபதத்திலிருந்தே தன் ஸ்ங்கல்பத்தினாலேயே துஷ்டர்களை அழிக்க முடிந்தாலும்;  ஸாதுக்களின் திருப்திக்காகவே அவதரிக்கிறான்.  தர்மஸ்ம்ஸ்தாபனம்=தர்மங்களை ஆசார்யர்கள், ஆழ்வார்கள் மஹாங்களை அவதரிக்கச்செய்து, விசேஷ தர்மமான பக்தி, பிரபத்தி களை ஸ்தாபிக்க தானே தோன்றுவது பகவத் அவதாரப் பிரயோஜனம். “ஓருநாள் காண வாராயே” “காணவாராயென்று கண்ணும் வாயும் துவர்ந்து” என்று கதறும் நம்மாழ்வார், “ஒரு பகலாயிரம் ஊழியாலோ” எனக்கதறும் கோபியர்கள், “காலாழும், நெஞ்சழிவும் கண் சுழலும”" என்று அவனைக் காணத்தவிக்கும் பக்தர்கள்-இவைகளின் திருப்திக்காகவே அவதரிக்கிறான்.)_
________________________________________
ஜந்ம கர்ம ச மே தி³வ்யமேவம் யோ வேத்தி தத்த்வத:|
த்யக்த்வா தே³ஹம் புநர்ஜந்ம நைதி மாமேதி ஸோऽர்ஜுந ||4-9||
எனது தெய்வத்தன்மை கொண்ட பிறப்பும் செய்கையும் இங்ஙனமென்பதை உள்ளபடி யுணர்வோன் உடலைத் துறந்த பின்னர் மறுபிறப்பு எய்துவதில்லை. அர்ஜுனா! அவன் என்னை எய்துகிறான்.
________________________________________
வீதராக³ப⁴யக்ரோதா⁴ மந்மயா மாமுபாஸ்²ரிதா:|
ப³ஹவோ ஜ்ஞாநதபஸா பூதா மத்³பா⁴வமாக³தா: ||4-10||
விருப்பத்தையும், அச்சத்தையும், சினத்தையும் துறந்தோராய், என் மயமாய், என்னை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று என்னியல்பு எய்தினோர் பலர். ( என் இயல்பு என்றால் என்னைப்போல எனப்பொருள்.ஒன்றாகிவிடுவதாகக் கொள்ளக்கூடாது)
________________________________________
யே யதா² மாம் ப்ரபத்³யந்தே தாம்ஸ்ததை²வ ப⁴ஜாம்யஹம்|
மம வர்த்மாநுவர்தந்தே மநுஷ்யா: பார்த² ஸர்வஸ²: ||4-11||
யாவர் என்னை எங்ஙனம் வேண்டுகிறார்களோ அவர்களை நான் அங்ஙனமே சார்கிறேன். பார்த்தா, மனிதர் யாங்கணும் என் வழியையே பின்பற்றுகிறார்கள்.
________________________________________
காங்க்ஷந்த: கர்மணாம் ஸித்³தி⁴ம் யஜந்த இஹ தே³வதா:|
க்ஷிப்ரம் ஹி மாநுஷே லோகே ஸித்³தி⁴ர்ப⁴வதி கர்மஜா ||4-12||
கர்மாகளில் வெற்றியை விரும்புவோர் இங்கு தேவதைகளைப் பூஜை செய்கிறார்கள். மனிதவுலகத்தில் தொழிலினின்றும் வெற்றி விரைவில் விளைவதன்றோ!
________________________________________
சாதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் கு³ணகர்மவிபா⁴க³ஸ²:|
தஸ்ய கர்தாரமபி மாம் வித்³த்⁴யகர்தாரமவ்யயம் ||4-13||
குணத்துக்கும் செய்கைக்கும் தக்கபடி நான் நான்கு வர்ணங்களைச் சமைத்தேன். செயற்கையற்றவனும் அழிவற்றவனுமாகிய யானே அவற்றைச் செய்தோனென்றுணர்.
________________________________________
ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மப²லே ஸ்ப்ருஹா|
இதி மாம் யோऽபி⁴ஜாநாதி கர்மபி⁴ர்ந ஸ ப³த்⁴யதே ||4-14||
என்னைக் கர்மங்கள் ஒட்டுவதில்லை. எனக்குக் கர்மப் பயனில் விருப்பமில்லை. இங்ஙனம் என்னை யறிவோன் கர்மங்களால் கட்டப்பட மாட்டான்.
________________________________________
ஏவம் ஜ்ஞாத்வா க்ருதம் கர்ம பூர்வைரபி முமுக்ஷுபி⁴:|
குரு கர்மைவ தஸ்மாத்த்வம் பூர்வை: பூர்வதரம் க்ருதம் ||4-15||
முற்காலத்தில் முக்தியை வேண்டினோரும் இதையுணர்ந்து தொழிலே செய்தனர். ஆதலால், முன்னோர்கள் முன்பு செய்தபடி, நீயும் கர்மாவையே செய்யக் கடவாய்.
________________________________________
கிம் கர்ம கிமகர்மேதி கவயோऽப்யத்ர மோஹிதா:|
தத்தே கர்ம ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் ||4-16||
‘எது கர்மா; எது தொழிலல்லாதது’ என்ற விஷயத்தில் ஞானிகளும் மயக்கமெய்துகிறார்கள். ஆதலால் உனக்குத் தொழிலினியல்பை உணர்த்துகிறேன். இதை அறிவதனால் தீங்கினின்றும் விடுபடுவாய்.
________________________________________
கர்மணோ ஹ்யபி போ³த்³த⁴வ்யம் போ³த்³த⁴வ்யம் ச விகர்மண:|
அகர்மணஸ்²ச போ³த்³த⁴வ்யம் க³ஹநா கர்மணோ க³தி: ||4-17||
கர்மாவின் இயல்புந் தெரிய வேண்டும்; தொழிற் கேட்டின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மாவின்மையின் இயல்புந் தெரிய வேண்டும்; கர்மத்தின் நடை மிகவும் சூழ்ந்தது.
________________________________________
கர்மண்யகர்ம ய: பஸ்²யேத³கர்மணி ச கர்ம ய:|
ஸ பு³த்³தி⁴மாந்மநுஷ்யேஷு ஸ யுக்த: க்ருத்ஸ்நகர்மக்ருத் ||4-18||
செய்கையில் செயலின்மையும், செயலின்மையில் செய்கையும் எவன் காணுகிறானோ, அவனே மனிதரில் அறிவுடையோன்; அவன் எத்கர்மா செய்கையிலும் யோகத்திலிருப்பான்.
________________________________________
யஸ்ய ஸர்வே ஸமாரம்பா⁴: காமஸங்கல்பவர்ஜிதா:|
ஜ்ஞாநாக்³நித³க்³த⁴கர்மாணம் தமாஹு: பண்டி³தம் பு³தா⁴: ||4-19||
எவனுடைய செய்கைத் தொடக்கங்களெல்லாம் விருப்ப நினைவு தவிர்ந்தனவோ, அவனுடைய செயல்கள் ஞானத் தீயால் எரிக்கப்பட்டனவாம்; அவனை ஞானிகள் அறிவுடையோனென்கிறார்கள்.
________________________________________
த்யக்த்வா கர்மப²லாஸங்க³ம் நித்யத்ருப்தோ நிராஸ்²ரய:|
கர்மண்யபி⁴ப்ரவ்ருத்தோऽபி நைவ கிஞ்சித்கரோதி ஸ: ||4-20||
கர்மப் பயனிலே பற்றுக் களைந்தவனாய் எப்போதும் திருப்தியுடையோனாய் எதனிலும் சார்பற்று நிற்போன் செய்கை செய்து கொண்டிருக்கையிலும் செயலற்றவனாவான்.
________________________________________
நிராஸீ²ர்யதசித்தாத்மா த்யக்தஸர்வபரிக்³ரஹ:|
ஸா²ரீரம் கேவலம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் ||4-21||
ஆசையற்றவனாய், சித்தத்தை ஆத்மாவால் கட்டுப்படுத்தி, எவ்வித தானங்களும் வாங்குவதைத் துறந்து, வெறுமே சரீர கர்மா மாத்திரம் செய்து கொண்டிருப்போன் பாவத்தையடைய மாட்டான்.
________________________________________
யத்³ருச்சா²லாப⁴ஸந்துஷ்டோ த்³வந்த்³வாதீதோ விமத்ஸர:|
ஸம: ஸித்³தா⁴வஸித்³தௌ⁴ ச க்ருத்வாபி ந நிப³த்⁴யதே ||4-22||
தானாக வந்தெய்தும் லாபத்தில் சந்தோஷமுறுவோனாகி, இருமைகளைக் கடந்து, பொறாமையற்றவனாய் – வெற்றியிலும் தோல்வியிலும் சமநிலை பெற்றான் கர்மா செய்தாலும் அதனால் கட்டுப்படுவதில்லை.
________________________________________
க³தஸங்க³ஸ்ய முக்தஸ்ய ஜ்ஞாநாவஸ்தி²தசேதஸ:|
யஜ்ஞாயாசரத: கர்ம ஸமக்³ரம் ப்ரவிலீயதே ||4-23||
பற்றுதலகன்றான், விடுதலை கொண்டான், ஞானத்தில் மதி நிலைக்கப் பெற்றான், வேள்வியெனக் கருதித் கர்மாபுரிவான் -அவனுடைய கர்மமெல்லாம் தானே நழுவிப் போய்விடுகிறது.
________________________________________
ப்³ரஹ்மார்பணம் ப்³ரஹ்ம ஹவி: ப்³ரஹ்மாக்³நௌ ப்³ரஹ்மணா ஹுதம்|
ப்³ரஹ்மைவ தேந க³ந்தவ்யம் ப்³ரஹ்ம கர்ம ஸமாதி⁴நா ||4-24||
பிரம்மத்துக்கு அர்ப்பணமாக பிரம்ம அவியை பிரம்மத் தீயில் பிரம்மத்தால் ஓமம் பண்ணுவோன், பிரம்மத்தின் செய்கையில் சமாதானமெய்தினோன், அவன் பிரம்மத்தை அடைவான்.
________________________________________
தை³வமேவாபரே யஜ்ஞம் யோகி³ந: பர்யுபாஸதே|
ப்³ரஹ்மாக்³நாவபரே யஜ்ஞம் யஜ்ஞேநைவோபஜுஹ்வதி ||4-25||
சில யோகிகள் தேவருக்குச் செய்யப்படும் வேள்வியை வழிபடுகிறார்கள். வேறு சிலர் பிரம்மத் தீயில் வேள்வியையே ஆகுதி செய்து வேட்கின்றனர்.
________________________________________
ஸ்²ரோத்ராதீ³நீந்த்³ரியாண்யந்யே ஸம்யமாக்³நிஷு ஜுஹ்வதி|
ஸ²ப்³தா³தீ³ந்விஷயாநந்ய இந்த்³ரியாக்³நிஷு ஜுஹ்வதி ||4-26||
வேறு சிலர் உட்கரணத்தை யடக்குதலாகிய சம்யமம் என்ற தீயில் செவி முதலிய இந்திரியங்களை ஆகுதி செய்கிறார்கள். வேறு சிலர் இந்திரியங்களாகிய தழல்களில் ஒலி முதலிய விஷயங்களைச் சொரிகிறார்கள்.
________________________________________
ஸர்வாணீந்த்³ரியகர்மாணி ப்ராணகர்மாணி சாபரே|
ஆத்மஸம்யமயோகா³க்³நௌ ஜுஹ்வதி ஜ்ஞாநதீ³பிதே ||4-27||
வேறு சிலர் ஞானத்தால் கொளுத்துண்ட தன்னாட்சியென்ற யோகத் தீயில் எல்லா இந்திரியச் செயல்களையும் உயிர்ச்செயல்களையும் ஓமம் பண்ணுகிறார்கள்.
________________________________________
த்³ரவ்யயஜ்ஞாஸ்தபோயஜ்ஞா யோக³யஜ்ஞாஸ்ததா²பரே|
ஸ்வாத்⁴யாயஜ்ஞாநயஜ்ஞாஸ்²ச யதய: ஸம்ஸி²தவ்ரதா: ||4-28||
விரதங்களை நன்கு பாதுகாக்கும் முனிகளில் வேறு சிலர் திரவியத்தால் வேள்வி செய்வோர்; சிலர் தவத்தால் வேட்போர்; சிலர் கல்வியால் வேட்போர்; சிலர் ஞானத்தால் வேட்போர்.
________________________________________
அபாநே ஜுஹ்வதி ப்ராணம் ப்ராணேऽபாநம் ததா²பரே|
ப்ராணாபாநக³தீ ருத்³த்⁴வா ப்ராணாயாமபராயணா: ||4-29||
இனி வேறு சிலர் பிரணாயாமத்தில் ஈடுபட்டவர்களாய், பிராணன், அபானன் என்ற வாயுக்களின் நடையைக் கட்டுப்படுத்தி அபானவாயுவில் பிராணவாயுவையும், பிராண வாயுவில் அபானத்தையும் ஆகுதி பண்ணுகிறார்கள்.
________________________________________
அபரே நியதாஹாரா: ப்ராணாந்ப்ராணேஷு ஜுஹ்வதி|
ஸர்வேऽப்யேதே யஜ்ஞவிதோ³ யஜ்ஞக்ஷபிதகல்மஷா: ||4-30||
வேறு சிலர் உணவை ஒழுங்குபடுத்தி உயிரை உயிரில் ஆகுதி செய்கிறார்கள். இவ்வனைவரும் வேள்வி நெறியுணர்ந்து வேள்வியால் பாவமற்றுப் போயினோர்.
________________________________________
யஜ்ஞஸி²ஷ்டாம்ருதபு⁴ஜோ யாந்தி ப்³ரஹ்ம ஸநாதநம்|
நாயம் லோகோऽஸ்த்யயஜ்ஞஸ்ய குதோऽந்ய: குருஸத்தம ||4-31||
வேள்வியில் மிஞ்சிய அமுதை யுண்போர் என்றுமுளதாகிய பிரம்மத்தை எய்துகிறார்கள். வேள்வி செய்யாதோருக்கிவ்வுலகமில்லை. அவர்களுக்குப் பரலோகமேது, குரு குலத்தாரில் சிறந்தோய்?
________________________________________
ஏவம் ப³ஹுவிதா⁴ யஜ்ஞா விததா ப்³ரஹ்மணோ முகே²|
கர்மஜாந்வித்³தி⁴ தாந்ஸர்வாநேவம் ஜ்ஞாத்வா விமோக்ஷ்யஸே ||4-32||
பிரம்மத்தின் முகத்தில் இங்ஙனம் பலவித வேள்விகள் விரித்துக் காட்டப்பட்டிருக்கின்றன. அவையெல்லாம் கர்மாவிலே பிறப்பனவென்றுணர். இவ்வாறுணர்ந்தால் விடுதலை பெறுவாய்.
________________________________________
ஸ்²ரேயாந்த்³ரவ்யமயாத்³யஜ்ஞாஜ்ஜ்ஞாநயஜ்ஞ: பரந்தப|
ஸர்வம் கர்மாகி²லம் பார்த² ஜ்ஞாநே பரிஸமாப்யதே ||4-33||
பரந்தபா, திரவியத்தைக் கொண்டு செய்யப்படும் வேள்வியைக் காட்டிலும் ஞானவேள்வி சிறந்தது. பார்த்தா, கர்மமெல்லாம், முற்றிலும், ஞானத்தில் முடிவு பெறுகிறது.
________________________________________
தத்³வித்³தி⁴ ப்ரணிபாதேந பரிப்ரஸ்²நேந ஸேவயா|
உபதே³க்ஷ்யந்தி தே ஜ்ஞாநம் ஜ்ஞாநிநஸ்தத்த்வத³ர்ஸி²ந: ||4-34||
அதனை வணக்கத்தாலும், சூழ்ந்த கேள்வியாலும் தொண்டு புரிவதாலும் அறிந்துகொள். உண்மை காணும் ஞானிகள் உனக்கு ஞானத்தை உபதேசிப்பார்கள்.
________________________________________
யஜ்ஜ்ஞாத்வா ந புநர்மோஹமேவம் யாஸ்யஸி பாண்ட³வ|
யேந பூ⁴தாந்யஸே²ஷேண த்³ரக்ஷ்யஸ்யாத்மந்யதோ² மயி ||4-35||
அந்த ஞானம் பெறுவதனால், பாண்டவா, நீ அப்பால் இவ்வித மயக்கமெய்த மாட்டாய். இதனால் நீ எல்லா உயிர்களையும், மிச்சமின்றி நின்னுள்ளே காண்பாய். அப்பால் அவற்றை என்னுள்ளே காண்பாய்.
________________________________________
அபி சேத³ஸி பாபேப்⁴ய: ஸர்வேப்⁴ய: பாபக்ருத்தம:|
ஸர்வம் ஜ்ஞாநப்லவேநைவ வ்ருஜிநம் ஸந்தரிஷ்யஸி ||4-36||
பாவிகளெல்லாரைக் காட்டிலும் நீ அதிகப் பாவியாக இருந்தாலும், அப்பாவத்தையெல்லாம் ஞானத்தோணியால் கடந்து செல்வாய்.
________________________________________
யதை²தா⁴ம்ஸி ஸமித்³தோ⁴ऽக்³நிர்ப⁴ஸ்மஸாத்குருதேऽர்ஜுந|
ஜ்ஞாநாக்³நி: ஸர்வகர்மாணி ப⁴ஸ்மஸாத்குருதே ததா² ||4-37||
நன்கு கொளுத்துண்ட தீ, விறகுகளைச் சாம்பராக்கி விடுதல் போலவே, அர்ஜுனா, ஞானத் தீ எல்லா வினைகளையும் சாம்பராக்கி விடும்.
________________________________________
ந ஹி ஜ்ஞாநேந ஸத்³ருஸ²ம் பவித்ரமிஹ வித்³யதே|
தத்ஸ்வயம் யோக³ஸம்ஸித்³த⁴: காலேநாத்மநி விந்த³தி ||4-38||
ஞானத்தைப் போல் தூய்மை தரும் பொருள் இவ்வுலகத்தில் வேறெதுவுமில்லை. யோகத்தில் நல்ல சித்தியடைந்தவன் தானாகவே தக்க பருவத்தில் அதைத் தனக்குள் கிடைக்கப் பெறுகிறான்.
________________________________________
ஸ்²ரத்³தா⁴வாம்¿ல்லப⁴தே ஜ்ஞாநம் தத்பர: ஸம்யதேந்த்³ரிய:|
ஜ்ஞாநம் லப்³த்⁴வா பராம் ஸா²ந்திமசிரேணாதி⁴க³ச்ச²தி ||4-39||
பிரம்மத்தைப் பரமாகக் கொண்டு, இந்திரியங்களைக் கட்டுப்படுத்தியவனாய், சிரத்தையுடையோன் ஞானத்தையடைகிறான். ஞானத்தையடைந்த பின் விரைவிலே பர சாந்தி பெறுகிறான்.
________________________________________
அஜ்ஞஸ்²சாஸ்²ரத்³த³தா⁴நஸ்²ச ஸம்ஸ²யாத்மா விநஸ்²யதி|
நாயம் லோகோऽஸ்தி ந பரோ ந ஸுக²ம் ஸம்ஸ²யாத்மந: ||4-40||
அறிவும் சிரத்தையுமின்றி ஐயத்தை இயல்பாகக் கொண்டோன் அழிந்து போகிறான். ஐயமுடையோனுக்கு இவ்வுலகமில்லை; மேலுலகமில்லை; இன்பமுமில்லை.
________________________________________
யோக³ஸந்ந்யஸ்தகர்மாணம் ஜ்ஞாநஸஞ்சி²ந்நஸம்ஸ²யம்|
ஆத்மவந்தம் ந கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய ||4-41||
யோகத்தால் செய்கைகளைத் துறந்து, ஞானத்தால் ஐயத்தை அறுத்துத் தன்னைத் தான் ஆள்வோனை, தனஞ்ஜயா! கர்மங்கள் கட்டுப்படுத்த மாட்டா.
________________________________________
தஸ்மாத³ஜ்ஞாநஸம்பூ⁴தம் ஹ்ருத்ஸ்த²ம் ஜ்ஞாநாஸிநாத்மந:|
சி²த்த்வைநம் ஸம்ஸ²யம் யோக³மாதிஷ்டோ²த்திஷ்ட² பா⁴ரத ||4-42||
அஞ்ஞானத்தால் தோன்றி நெஞ்சில் நிலைகொண்டிருக்கும் இந்த ஐயத்தை உன் ஞானவாளால் அறுத்து யோக நிலைகொள். பாரதா, எழுந்து நில்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஞான கர்ம ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
நான்காம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – ஐந்தாவது அத்தியாயம்
சந்யாச யோகம்
கர்ம யோகத்தில் ஞான பாகமடங்கி இருப்பதாலும் ஞான யோகத்தில் கர்ம பாகமடங்கியிருப்பதாலும் இரண்டும் ஒன்றே. அவை இரண்டும் ஒரே விதமான பலனைக் கொடுக்கக் கூடியவை. அவை வெவ்வேறு பலனை அளிக்கும் என்று கூறுபவர் பலர். அவர்கள் அறிவில் தேர்ச்சி பெறாதவர்கள்.

ஆனால், கர்ம யோகமின்றி ஞான யோகத்தைப் பெற இயலாது. சுக துக்கங்களைப் பொருட்படுத்தாமல் கர்ம யோகத்தையே தழுவியிருந்தால் பலனைக் கடுகப் பெறலாம். எல்லா ஆத்மாக்களும் ஒரே மாதிரியானவை. தோற்றும் வேறுபாடுகளெல்லாம் தேக சம்பந்தத்தால் வந்தவை என்ற உணர்வு வேண்டும்.
________________________________________
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸம் கர்மணாம் க்ருஷ்ண புநர்யோக³ம் ச ஸ²ம்ஸஸி|
யச்ச்²ரேய ஏதயோரேகம் தந்மே ப்³ரூஹி ஸுநிஸ்²சிதம் ||5-1||
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, செய்கைகளின் துறவைப் புகழ்ந்து பேசுகிறாய்; பின்னர் அவற்றுடன் கலப்பதைப் புகழ்கிறாய். இவ்விரண்டில் எதுவொன்று சிறந்ததென்பதை நன்று நிச்சயப்படுத்தி என்னிடஞ் சொல்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ஸந்ந்யாஸ: கர்மயோக³ஸ்²ச நி:ஸ்²ரேயஸகராவுபௌ⁴|
தயோஸ்து கர்மஸந்ந்யாஸாத்கர்மயோகோ³ விஸி²ஷ்யதே ||5-2||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: துறவு, கர்ம யோகம் இவ்விரண்டும் உயர்ந்த நலத்தைத் தருவன. இவற்றின் கர்மதுறவைக் காட்டிலும் கர்ம யோகம் மேம்பட்டது.
________________________________________
ஜ்ஞேய: ஸ நித்யஸந்ந்யாஸீ யோ ந த்³வேஷ்டி ந காங்க்ஷதி|
நிர்த்³வந்த்³வோ ஹி மஹாபா³ஹோ ஸுக²ம் ப³ந்தா⁴த்ப்ரமுச்யதே ||5-3||
பகைத்தலும் விரும்புதலுமில்லாதவனை நித்திய சந்யாசி ( ஞானயோகி) என்றுரைக்கக் கடவாய். பெருந்தோளுடையாய், இருமை நீங்கி அவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான். (ஆவன் எளிதில் கர்மயோகத்தைச் செய்து, சுகமாய் ஸம்ஸார பந்தத்திலிருந்து விடுபடுகிறான்)
________________________________________
ஸாங்க்²யயோகௌ³ ப்ருத²க்³பா³லா: ப்ரவத³ந்தி ந பண்டி³தா:|
ஏகமப்யாஸ்தி²த: ஸம்யகு³ப⁴யோர்விந்த³தே ப²லம் ||5-4||
சாங்கியத்தையும் யோகத்தையும் வெவ்வேறென்று சொல்வோர் குழந்தைகள்; பண்டிதர்கள் அங்ஙனம் கூறார். இவற்றுள் யாதேனுமொன்றில் நன்கு நிலை பெற்றோன் இரண்டின் பயனையும் எய்துகிறான். (ஆவ்விரண்டும், ஒரே பயனான ஆத்ம தரிஸனத்தையே தருவதினால், எதை ஒன்றைச் செய்தாலும் ஆத்ம தரிசனத்தைப் பெறலாம்.)
________________________________________
யத்ஸாங்க்²யை: ப்ராப்யதே ஸ்தா²நம் தத்³யோகை³ரபி க³ம்யதே|
ஏகம் ஸாங்க்²யம் ச யோக³ம் ச ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி ||5-5||
சாங்கியர் பெறும் நிலையையே யோகிகளும் பெறுகிறார்கள். சாங்கியத்தையும் யோகத்தையும் எவன் ஒன்றாகக் காண்பானோ, அவனே காட்சியுடையோன்.(கஷ்டப்பட்டு புலங்களை அடக்கி நீண்ட காலம் கழித்து ஆத்ம தரிசனத்தைத் தரும் ஞானயோகத்தைக்காட்டிலும், சுலபமாய் செய்து அதே பலனைப் பெறுவிக்கும் கர்ம யோகமே சிறந்தது.)
________________________________________
ஸந்ந்யாஸஸ்து மஹாபா³ஹோ து³:க²மாப்துமயோக³த:|
யோக³யுக்தோ முநிர்ப்³ரஹ்ம ந சிரேணாதி⁴க³ச்ச²தி ||5-6||
பெருந் தோளாய், யோகமில்லாதவன் சந்நியாசம் பெறுதல் கஷ்டம். யோகத்தில் பொருந்திய முனி விரைவில்( பறிசுத்த ஆத்மாவின் தரிசனத்தைப் பெறுகிறான்) பிரம்மத்தை அடைகிறான்.
________________________________________
யோக³யுக்தோ விஸு²த்³தா⁴த்மா விஜிதாத்மா ஜிதேந்த்³ரிய:|
ஸர்வபூ⁴தாத்மபூ⁴தாத்மா குர்வந்நபி ந லிப்யதே ||5-7||
யோகத்திலே மருவித் தூய்மையுற்றோன், தன்னைத் தான் வென்றோன், இந்திரியங்களின் மீது வெற்றி கொண்டோன், எல்லா உயிர்களுந் தானே யானவன் -அவன் கர்மா செய்து கொண்டிருப்பினும், அதில் ஒட்டுவதில்லை. (ஜிதேந்த்³ரிய = எல்லா  இந்திரியங்களின் செயல்களுக்கும் காரணம் மனம். மனம் ஜயிக்கப்பட்டால், ஞானேந்திரியங்களான மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் புலங்களையும் கர்மேந்திரியங்களான, கை, கால் முதலான ஐந்து பொறிகளையும் வென்றவனாகிறான்.)
________________________________________
நைவ கிஞ்சித்கரோமீதி யுக்தோ மந்யேத தத்த்வவித்|
பஸ்²யஞ்ச்²ருண்வந்ஸ்ப்ருஸ²ஞ்ஜிக்⁴ரந்நஸ்²நங்க³ச்ச²ந்ஸ்வபந்ஸ்²வஸந் ||5-8||
உண்மை அறிந்த யோகி, “நான் எதனையுஞ் செய்வதில்லை” என்றெண்ணக் கடவான். காண்கினும், கேட்கினும், தீண்டினும், மோப்பினும், உண்பினும், நடப்பினும், உயிர்ப்பினும், உறங்கினும்,
________________________________________
ப்ரலபந்விஸ்ருஜந்க்³ருஹ்ணந்நுந்மிஷந்நிமிஷந்நபி|
இந்த்³ரியாணீந்த்³ரியார்தே²ஷு வர்தந்த இதி தா⁴ரயந் ||5-9||
புலம்பினும், விடினும், வாங்கினும், இமைகளைத் திறப்பினும், மூடினும், எதிலும், “இந்திரியங்கள் தம்முடைய விஷயங்களில் ( முற்பிறவிகளின் வினைப்பயங்கள், இப்பொழுது புலங்களுடன் கூடி, எல்லாச்செயல்களும் நடை பெற்கின்றனவே ஒழிய, ஜீவன் தானாகச் செய்வதிலை )சலிக்கின்றன” என்று கருதியிருக்கக் கடவான்.
________________________________________
ப்³ரஹ்மண்யாதா⁴ய கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா கரோதி ய:|
லிப்யதே ந ஸ பாபேந பத்³மபத்ரமிவாம்ப⁴ஸா ||5-10||
செய்கைகளையெல்லாம் பிரம்மத்தில் சார்த்தி விட்டுப் பற்றுதலை நீக்கி எவன் கர்மா செய்கிறானோ, அவன், நீரில் தாமரையிலை போல், பாவத்தால் தீண்டல் பெறுவதில்லை.
________________________________________
காயேந மநஸா பு³த்³த்⁴யா கேவலைரிந்த்³ரியைரபி|
யோகி³ந: கர்ம குர்வந்தி ஸங்க³ம் த்யக்த்வாத்மஸு²த்³த⁴யே ||5-11||
யோகிகள் பற்றுதலைக் களைந்து, ஆத்ம சுத்தியின் பொருட்டாக உடம்பாலும், மனத்தாலும், புத்தியாலும் அன்றி வெறுமே இந்திரியங்களாலும் கர்மாக்களை செய்வார்.
________________________________________
யுக்த: கர்மப²லம் த்யக்த்வா ஸா²ந்திமாப்நோதி நைஷ்டி²கீம்|
அயுக்த: காமகாரேண ப²லே ஸக்தோ நிப³த்⁴யதே ||5-12||
யோகத்தில் பொருந்தியவன் கர்மப் பயனைத் துறந்து நிஷ்டைக்குரிய சாந்தியை அடைகிறான். யோகத்தில் இணங்காதோன் விருப்பத்துக்கு வசமாய்ப் பயனிலே பற்றுதல் கொண்டு தளைப்படுகிறான்.( பயங்களை இச்சித்து கர்மயோகம் செய்பவர்கள் அக்கர்ம பலங்களினால் கட்டுண்டு நித்ய சம்சாரிகளாகவே இருப்பர்.)
________________________________________
ஸர்வகர்மாணி மநஸா ஸந்ந்யஸ்யாஸ்தே ஸுக²ம் வஸீ²|
நவத்³வாரே புரே தே³ஹீ நைவ குர்வந்ந காரயந் ||5-13||
தன்னை வசங்கொண்ட ஆத்மா எல்லா கர்மங்களையும் மனதால் துறந்து, எதனையும் செய்வதுமின்றிச் செய்விப்பதுமின்றி, ஒன்பது வாயில் கொண்ட உடற்கோட்டையில் இன்புற்றிருக்கிறான்.
________________________________________
ந கர்த்ருத்வம் ந கர்மாணி லோகஸ்ய ஸ்ருஜதி ப்ரபு⁴:|
ந கர்மப²லஸம்யோக³ம் ஸ்வபா⁴வஸ்து ப்ரவர்ததே ||5-14||
செய்கைத் தலைமை, செய்கை, செய்கைப் பயன் பெறுதல் இவற்றுளெதனையும் கடவுள் மனிதனுக்குத் தரவில்லை. இயற்கையே இயல்பெறுகிறது.
________________________________________
நாத³த்தே கஸ்யசித்பாபம் ந சைவ ஸுக்ருதம் விபு⁴:|
அஜ்ஞாநேநாவ்ருதம் ஜ்ஞாநம் தேந முஹ்யந்தி ஜந்தவ: ||5-15||
எவனையும் பாவி அல்லது நற்செய்கையுடையோனென்று கடவுள் ஏற்பதில்லை. அஞ்ஞானத்தால் ஞானம் சூழப்பட்டிருக்கிறது. அதனால் ஜந்துக்கள் மயக்கமெய்துகின்றன. (ஜீவன் எடுக்கும் பல பிறவிகளில், ஒவொரு பிறவியிலும், மனைவி, மக்கள், உறவினர்-வெவ்வேறு. ஆகயால், தன் எந்த உறவினருக்கும், அவர்கள் பாவத்தையோ புண்ணியத்தையோ தன்னால் போக்க முடியாது.) (ஒரு ஜீவன், சரீரத்தை விட்டுப் போகும்போது, அவன் புலங்களும், அதன் வாஸனைகளும்-பழக்க வழக்கங்களும், நுண் உணர்வும்- அவன் கூடவே போகின்றன. மறு பிறவி எடுக்கும்போது அவைகளுடனேயே அவன் பிறக்கிறான்,)
________________________________________
ஜ்ஞாநேந து தத³ஜ்ஞாநம் யேஷாம் நாஸி²தமாத்மந:|br />
தேஷாமாதி³த்யவஜ்ஜ்ஞாநம் ப்ரகாஸ²யதி தத்பரம் ||5-16||
அந்த அஞ்ஞானத்தை ஆத்ம ஞானத்தால் அழித்தவர்களுடைய ஞானம் சூரியனைப் போன்றதாய்ப் பரம்பொருளை ஒளியுறக் காட்டுகிறது.
________________________________________
தத்³பு³த்³த⁴யஸ்ததா³த்மாநஸ்தந்நிஷ்டா²ஸ்தத்பராயணா:|
க³ச்ச²ந்த்யபுநராவ்ருத்திம் ஜ்ஞாநநிர்தூ⁴தகல்மஷா: ||5-17||
பிரம்மத்தால் புத்தியை நாட்டி, அதுவே தாமாய், அதில் நிஷ்டையெய்தி, அதில் ஈடுபட்டோர், தம்முடைய பாவங்களெல்லாம் நன்கு கழுவப் பெற்றோராய், மீளாப் பதமடைகிறார்கள்.
________________________________________
வித்³யாவிநயஸம்பந்நே ப்³ராஹ்மணே க³வி ஹஸ்திநி|
ஸு²நி சைவ ஸ்²வபாகே ச பண்டி³தா: ஸமத³ர்ஸி²ந: ||5-18||
கல்வியும் விநயமும் நன்கு கற்ற பிராமணனிடத்திலும், பசுவினிடத்திலும், யானையினிடத்தும், நாயினிடத்தும், நாயைத் தின்னும் புலையனிடத்தும், பண்டிதர் சமப் பார்வையுடையோர். (ஏல்லா ஆத்மாக்களும் அணுஸ்வரூபமானவை)
________________________________________
இஹைவ தைர்ஜித: ஸர்கோ³ யேஷாம் ஸாம்யே ஸ்தி²தம் மந:|
நிர்தோ³ஷம் ஹி ஸமம் ப்³ரஹ்ம தஸ்மாத்³ ப்³ரஹ்மணி தே ஸ்தி²தா: ||5-19||
மனம் சமநிலையில் நிற்கப் பெற்றோர் இவ்வுலகத்திலேயே இயற்கையை வென்றோராவர். பிரம்மம் மாசற்றது. சமநிலையுற்றது. ஆதலால் அவர்கள் பிரம்மத்தில் நிலைபெறுகிறார்கள்.
________________________________________
ந ப்ரஹ்ருஷ்யேத்ப்ரியம் ப்ராப்ய நோத்³விஜேத்ப்ராப்ய சாப்ரியம்|
ஸ்தி²ரபு³த்³தி⁴ரஸம்மூடோ⁴ ப்³ரஹ்மவித்³ப்³ரஹ்மணி ஸ்தி²த: ||5-20||
விரும்பிய பொருளைப் பெறும்போது களிகொள்ளான்; பிரியமற்றதைப் பெறும்போது துயர்ப்பட மாட்டான்; பிரம்மஞானி ஸ்திர புத்தி யுடையோனாய், மயக்கம் நீங்கி, பிரம்மத்தில் நிலைபெறுகிறான். (இரண்டையும் சமமாகவே கொள்வான்)
________________________________________
பா³ஹ்யஸ்பர்ஸே²ஷ்வஸக்தாத்மா விந்த³த்யாத்மநி யத்ஸுக²ம்|
ஸ ப்³ரஹ்மயோக³யுக்தாத்மா ஸுக²மக்ஷயமஸ்²நுதே ||5-21||
புறத் தீண்டுதல்களில் பற்றுதல் கொள்ளாமல் தனக்குள்ளே இன்பத்தைக் காண்போன் பிரம்ம யோகத்தில் பொருந்தி அழியாத இன்பத்தை எய்துகிறான்.
________________________________________
யே ஹி ஸம்ஸ்பர்ஸ²ஜா போ⁴கா³ து³:க²யோநய ஏவ தே|
ஆத்³யந்தவந்த: கௌந்தேய ந தேஷு ரமதே பு³த⁴: ||5-22||
புறத் தீண்டுதல்களில் (உலக விஷயங்களில்) தோன்றும் இன்பங்கள் துன்பத்துக்குக் காரணங்களாகும். அவை தொடக்கமும் இறுதியுமுடையன. குந்தி மகனே, அறிவுடையோன் அவற்றில் களியுறுவதில்லை.
________________________________________
ஸ²க்நோதீஹைவ ய: ஸோடு⁴ம் ப்ராக்ஸ²ரீரவிமோக்ஷணாத்|
காமக்ரோதோ⁴த்³ப⁴வம் வேக³ம் ஸ யுக்த: ஸ ஸுகீ² நர: ||5-23||
சரீரம் நீங்குமுன்னர் இவ்வுலகத்திலேயே விருப்பத்தாலும் சினத்தாலும் விளையும் வேகத்தை எவன் பொறுக்க வல்லானோ அந்த மனிதன் யோகி. அவன் இன்பமுடையோன்.
________________________________________
யோऽந்த:ஸுகோ²’ந்தராராமஸ்ததா²ந்தர்ஜ்யோதிரேவ ய:|
ஸ யோகீ³ ப்³ரஹ்மநிர்வாணம் ப்³ரஹ்மபூ⁴தோऽதி⁴க³ச்ச²தி ||5-24||
தனக்குள்ளே இன்பமுடையவனாய், உள்ளே மகிழ்ச்சி காண்பவனாய், உள்ளே ஒளி பெற்றவனாகிய யோகி, தானே பிரம்மமாய், பிரம்ம நிர்வாணமடைகிறான். (ஸரீரம் அழிந்த பின்னரும், தன் ஆத்மானுபவத்திலேயே சுகித்திருப்பான்)
________________________________________
லப⁴ந்தே ப்³ரஹ்மநிர்வாணம்ருஷய: க்ஷீணகல்மஷா:|
சி²ந்நத்³வைதா⁴ யதாத்மாந: ஸர்வபூ⁴தஹிதே ரதா: ||5-25||
இருமைகளை வெட்டிவிட்டுத் தம்மைத் தாம் கட்டுப்படுத்தி, எல்லா உயிர்களுக்கும் இனியது செய்வதில் மகிழ்ச்சி யெய்தும் ரிஷிகள் பாவங்களழிந்து பிரம்ம நிர்வாணம் (பிரும்மானந்தத்தை )அடைகிறார்கள்.
________________________________________
காமக்ரோத⁴வியுக்தாநாம் யதீநாம் யதசேதஸாம்|
அபி⁴தோ ப்³ரஹ்மநிர்வாணம் வர்ததே விதி³தாத்மநாம் ||5-26||
விருப்பமும் சினமும் தவிர்த்து சித்தத்தைக் கட்டுப்படுத்திய ஆத்ம ஞானிகளாகிய முனிகளுக்கு பிரம்ம நிர்வாணம் அருகிலுள்ளது.
________________________________________
ஸ்பர்ஸா²ந்க்ருத்வா ப³ஹிர்பா³ஹ்யாம்ஸ்²சக்ஷுஸ்²சைவாந்தரே ப்⁴ருவோ:|
ப்ராணாபாநௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்⁴யந்தரசாரிணௌ ||5-27||
புறத் தீண்டுதல்களை அகற்றிப் புருவங்களுக்கிடையே விழிகளை நிறுத்தி மூக்கினுள்ளே இயங்கும் பிராண வாயுவையும் அபான வாயுவையும் சமமாகச் செய்துகொண்டு;
________________________________________
யதேந்த்³ரியமநோபு³த்³தி⁴ர்முநிர்மோக்ஷபராயண:|
விக³தேச்சா²ப⁴யக்ரோதோ⁴ ய: ஸதா³ முக்த ஏவ ஸ: ||5-28||
புலன்களை, மனத்தை, மதியையும் கட்டி விடுதலை யிலக் கெனக் கொண்டு
விருப்பமும் அச்சமும் சினமும் தவிர்ந்தான் முக்தனே யாவான் முனி.
________________________________________
போ⁴க்தாரம் யஜ்ஞதபஸாம் ஸர்வலோகமஹேஸ்²வரம்|
ஸுஹ்ருத³ம் ஸர்வபூ⁴தாநாம் ஜ்ஞாத்வா மாம் ஸா²ந்திம்ருச்ச²தி ||5-29||
வேள்வியுந் தவமும் மிசைவோன் யானே; உலகுகட்கெல்லாம் ஒரு பேரரசன்;
எல்லா உயிர்கட்கு நண்பன் யான்” என்றறிவான் அமைதி (ஆத்ம சாந்தி) யறிவான்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஸந்யாஸ யோகம்’ எனப் பெயர் படைத்த
ஐந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – ஆறாவது அத்தியாயம்
தியான யோகம்
கர்ம யோக ஞான யோகங்களில் சித்திபெற்றவனுக்குண்டாகும் ஆத்மானுபவம் இந்த அத்தியாயத்தில் கூறப்படுகிறது. இவ்வாத்மானுபவத்தில் ஈடுபட்டு ஆதியிலேயே திருப்தியடைந்தவன் வேறு விஷயங்களில் மனதைச் செலுத்த மாட்டான். அவனுக்குத் தோழன், பகைவன், பந்து, நல்லவன், கெட்டவன் என்று வேறுபாடின்றி எல்லோரிடமும் ஒரேவிதமான மனப்பான்மை ஏற்படும்.
அவன் ஜனங்களுடைய சேர்க்கையை வெறுத்துத் தனிமையிலே விருப்பமுற்றுத் திடமான ஆசனத்திலமர்ந்து தனது ஆத்ம சொரூபத்தை எண்ணி எண்ணி மகிழ்வான். இவ்வாத்மானுபவமே பேரானந்தமென்று எண்ணியிருப்பான். எல்லா ஆத்மாக்களும் தேக சம்பந்தத்தை நீக்கிப் பார்த்தால் ஒருவகைப்பட்டவை என்று எண்ணி, முடிவில் கடவுளும் அவ்வாத்மாக்களும் ஒருவகைப்பட்டவர்களென்று உணர்வான். இந்நிலை பெற்றவனே யோகிகளில் சிறந்தவன்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
அநாஸ்²ரித: கர்மப²லம் கார்யம் கர்ம கரோதி ய:|
ஸ ஸந்ந்யாஸீ ச யோகீ³ ச ந நிரக்³நிர்ந சாக்ரிய: ||6-1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: செய்கையின் பயனில் சார்பின்றிச் (விருப்பமின்றி) செய்யத்தக்கது செய்வோன் துறவி; அவனே யோகி. தீ வளர்க்காதவனும் கிரியை செய்யாதவனும் அவன் ஆகார். ((வைதிக கர்மாக்களையோ, நித்ய நைமித்ய கர்மாகளையோ இவன் விடமாட்டான்)
________________________________________
யம் ஸந்ந்யாஸமிதி ப்ராஹுர்யோக³ம் தம் வித்³தி⁴ பாண்ட³வ|
ந ஹ்யஸந்ந்யஸ்தஸங்கல்போ யோகீ³ ப⁴வதி கஸ்²சந ||6-2||
பாண்டவா, எதனை சந்நியாச மென்கிறார்களோ, அதுவே யோகமென்றறி. தன் கோட்பாடுகளைத் துறக்காத (உடல் வேறு, ஆத்மா வேறு என்றறியாத) எவனும் யோகியாக மாட்டான்.
________________________________________
ஆருருக்ஷோர்முநேர்யோக³ம் கர்ம காரணமுச்யதே|
யோகா³ரூட⁴ஸ்ய தஸ்யைவ ஸ²ம: காரணமுச்யதே ||6-3||
யோக நிலையில் ஏற விரும்பும் யோகிக்குத் கர்மயோகமே கருவியாகக் கூறப்படுகிறது. அந்நிலையில் ஏறியபின் அவனுக்கு சாந்தம் கருவியாகிறது.
________________________________________
யதா³ ஹி நேந்த்³ரியார்தே²ஷு ந கர்மஸ்வநுஷஜ்ஜதே|
ஸர்வஸங்கல்பஸந்ந்யாஸீ யோகா³ரூட⁴ஸ்ததோ³ச்யதே ||6-4||
ஒருவன் எல்லாக் கோட்பாடுகளையும் துறந்து விட்டுப் புலன்களிலேனும் செயல்களிலேனும் பற்றுதலின்றி யிருப்பானாயின், அப்போதவன் ‘யோக நிலையில் ஏறியவன்’ என்று சொல்லப்படுகிறான்.
________________________________________
உத்³த⁴ரேதா³த்மநாத்மாநம் நாத்மாநமவஸாத³யேத்|
ஆத்மைவ ஹ்யாத்மநோ ப³ந்து⁴ராத்மைவ ரிபுராத்மந: ||6-5||
தன்னைத் தான் உயர்த்திக் கொள்க; தன்னைத் தன்னால் இழிவுறுத்த வேண்டா; தனக்குத்தானே நண்பன்; தனக்குத்தானே பகைவன்.(ஓருவனுக்கு மனமே உற்ற நண்பனாகும்.அதுவே அவனுக்குக் கொடிய சத்ருவும் ஆகும்)
________________________________________
ப³ந்து⁴ராத்மாத்மநஸ்தஸ்ய யேநாத்மைவாத்மநா ஜித:|
அநாத்மநஸ்து ஸ²த்ருத்வே வர்தேதாத்மைவ ஸ²த்ருவத் ||6-6||
தன்னைத்தான் வென்றவனே தனக்குத்தான் நண்பன்; தன்னைத்தான் வெல்லாதவன் தனக்குத் தான் பகைவன் போற் கேடு சூழ்கிறான்.
________________________________________
ஜிதாத்மந: ப்ரஸா²ந்தஸ்ய பரமாத்மா ஸமாஹித:|
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ததா² மாநாபமாநயோ: ||6-7||
தன்னை வென்று ஆறுதலெய்தவனிடத்தே சீதோஷ்ணங்களிலும், சுக துக்கங்களிலும், மானாபிமானங்களிலும் சமநிலைப்பட்ட பரமாத்மா விளங்குகிறது.
________________________________________
ஜ்ஞாநவிஜ்ஞாநத்ருப்தாத்மா கூடஸ்தோ² விஜிதேந்த்³ரிய:|
யுக்த இத்யுச்யதே யோகீ³ ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: ||6-8||
ஞானத்திலும் விஞ்ஞானத்திலும் திருப்தி கொண்டவனாய், மலை முடிவில் நிற்பான் போன்று, புலன்களை வென்று, ஓட்டையும் கல்லையும் பொன்னையும் ஒன்றுபோலே காணும் யோகியே யோக நிலையுற்றானெனப் படுவான்.
________________________________________
ஸுஹ்ருந்மித்ரார்யுதா³ஸீநமத்⁴யஸ்த²த்³வேஷ்யப³ந்து⁴ஷு|
ஸாது⁴ஷ்வபி ச பாபேஷு ஸமபு³த்³தி⁴ர்விஸி²ஷ்யதே ||6-9||
ஞானமென்பது கடவுளியலைப் பற்றிய அறிவு. விஞ்ஞானமென்பது உலகவியலைப் பற்றியது. அன்பர், நட்பார், பகைவர், ஏதிலர், நடுவர், எதிரிகள், சுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லோரிடத்தும் சம புத்தியுடையோன் மேலோனாவான்.
________________________________________
யோகீ³ யுஞ்ஜீத ஸததமாத்மாநம் ரஹஸி ஸ்தி²த:|
ஏகாகீ யதசித்தாத்மா நிராஸீ²ரபரிக்³ரஹ: ||6-10||
மறைவிடத்தில் இருந்துகொண்டு, தனியனாய் உள்ளத்தைக் கட்டி, ஆசையைத் துறந்து, ஏற்பது நீக்கி எப்போதும் ஆன்மாவில் யோகமுறக் கடவான்.
________________________________________
ஸு²சௌ தே³ஸே² ப்ரதிஷ்டா²ப்ய ஸ்தி²ரமாஸநமாத்மந:|
நாத்யுச்ச்²ரிதம் நாதிநீசம் சைலாஜிநகுஸோ²த்தரம் ||6-11||
சுத்தமான இடத்தில் அதிக உயரமில்லாமலும், அதிகத் தாழ்வில்லாமலும், துணி, மான் தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக்கோர் உறுதியான, ஆசனம் சமைத்துக்கொண்டு,
________________________________________
தத்ரைகாக்³ரம் மந: க்ருத்வா யதசித்தேந்த்³ரியக்ரியா:|
உபவிஸ்²யாஸநே யுஞ்ஜ்யாத்³யோக³மாத்மவிஸு²த்³த⁴யே ||6-12||
அங்கு மனதை ஒருமுகமாக்கி, உள்ளத்தையும் புலச் செயல்களையும் நன்கு கட்டுப்படுத்தி, ஆசனத்தமர்ந்து ஆத்மா நன்கு தூய்மையடையும்படி யோகத்திலே பொருந்தக் கடவான்.
________________________________________
ஸமம் காயஸி²ரோக்³ரீவம் தா⁴ரயந்நசலம் ஸ்தி²ர:|
ஸம்ப்ரேக்ஷ்ய நாஸிகாக்³ரம் ஸ்வம் தி³ஸ²ஸ்²சாநவலோகயந் ||6-13||
உடம்பையும், தலையையும் கழுத்தையும் சமமாக அசைவின்றி வைத்துக்கொண்டு, உறுதி சான்றவனாய், மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு, திசைகளை நோக்காமல்,
________________________________________
ப்ரஸா²ந்தாத்மா விக³தபீ⁴ர்ப்³ரஹ்மசாரிவ்ரதே ஸ்தி²த:|
மந: ஸம்யம்ய மச்சித்தோ யுக்த ஆஸீத மத்பர: ||6-14||
நன்கு சாந்த மெய்தியவனாய், அச்சத்தைப் போக்கி, பிரம்மச்சாரி விரதத்தில் நிலைகொண்டு, மனதை வசப்படுத்தி, என்னிடத்தே சித்தத்தை இசைத்து, எனக்கு ஈடுபட்டு யோகத்திலிருக்கக் கடவான்.
________________________________________
யுஞ்ஜந்நேவம் ஸதா³த்மாநம் யோகீ³ நியதமாநஸ:|
ஸா²ந்திம் நிர்வாணபரமாம் மத்ஸம்ஸ்தா²மதி⁴க³ச்ச²தி ||6-15||
இங்ஙனம் எப்போதும் மனதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவில் யோகமுற்றிருக்கும் யோகி, (௳னத்தை என் திவ்ய மங்கள திருமேனியில் லயித்து) என்பால் நிலை பெற்றதாகிய மிகச்சிறந்த விடுதலையிலுள்ள ஆறுதலையறிவான்.
________________________________________
நாத்யஸ்²நதஸ்து யோகோ³ऽஸ்தி ந சைகாந்தமநஸ்²நத:|
ந சாதிஸ்வப்நஸீ²லஸ்ய ஜாக்³ரதோ நைவ சார்ஜுந ||6-16||
மிகைபட உண்போனுக்கு யோகமில்லை; உணவற்றோனுக்கும் ஏகாந்த நிலை எய்தாது. மிகுதியாக உறங்குவோனுக்குமில்லை; அர்ஜுனா, மிகுதியாக விழிப்போனுக்கும் அஃதில்லை.
________________________________________
யுக்தாஹாரவிஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு|
யுக்தஸ்வப்நாவபோ³த⁴ஸ்ய யோகோ³ ப⁴வதி து³:க²ஹா ||6-17||
ஒழுங்குக்கு உட்பட்ட உணவும், விளையாட்டும் உடையோனாய், வினைகளில் ஒழுங்குக்குட்பட்ட நடைகளுடையவனாய், உறக்கத்திலும் விழிப்பிலும் ஒழுங்குக்குட்பட்டானாயின், அவனுடைய யோகம் துயரை அழிக்கிறது. 17
________________________________________
யதா³ விநியதம் சித்தமாத்மந்யேவாவதிஷ்ட²தே|
நி:ஸ்ப்ருஹ: ஸர்வகாமேப்⁴யோ யுக்த இத்யுச்யதே ததா³ ||6-18||
உள்ளம் கட்டுக்கடங்கித் தனதுள்ளேயே நிலைபெற, ஒருவன் எந்த விருப்பத்திலும் வீழ்ச்சியற்றானாயின், யோக முற்றானெனப் படுவான்.
________________________________________
யதா² தீ³போ நிவாதஸ்தோ² நேங்க³தே ஸோபமா ஸ்ம்ருதா|
யோகி³நோ யதசித்தஸ்ய யுஞ்ஜதோ யோக³மாத்மந: ||6-19||
சித்தத்தைக் கட்டி ஆத்ம யோகத்தில் கலந்து நிற்கும் யோகிக்குக் காற்றில்லாத இடத்தில் அசைவின்றி நிற்கும் விளக்கை முன்னோர் உவமையாகக் காட்டினர்.
________________________________________
யத்ரோபரமதே சித்தம் நிருத்³த⁴ம் யோக³ஸேவயா|
யத்ர சைவாத்மநாத்மாநம் பஸ்²யந்நாத்மநி துஷ்யதி ||6-20||
எங்கு சித்தம் யோக ஒழுக்கத்தில் பிடிப்புற்று ஆறுதலெய்துமோ, எங்கு ஆத்மாவினால் ஆத்மாவையறிந்து ஒருவன் ஆத்மாவில் மகிழ்ச்சியடைகிறானோ
________________________________________
ஸுக²மாத்யந்திகம் யத்தத்³பு³த்³தி⁴க்³ராஹ்யமதீந்த்³ரியம்|
வேத்தி யத்ர ந சைவாயம் ஸ்தி²தஸ்²சலதி தத்த்வத: ||6-21||
புத்தியால் தீண்டத்தக்கதும், புலன்களைக் கடந்து நிற்பதுமாகிய பேரின்பத்தை எங்குக் காண்பானோ, எங்கு நிலைபெறுவதால் இவன் உண்மையினின்றும் வழுவுவதில்லையோ,
________________________________________
யம் லப்³த்⁴வா சாபரம் லாப⁴ம் மந்யதே நாதி⁴கம் தத:|
யஸ்மிந்ஸ்தி²தோ ந து³:கே²ந கு³ருணாபி விசால்யதே ||6-22||
எதனை யெய்தியபின் அதைக் காட்டிலும் பெரிய லாபம் வேறிருப்பதாகக் கருத மாட்டானோ, எங்கு நிலை பெறுவதாய் பெரிய துக்கத்தாலும் சலிப்பெய்த மாட்டானோ,
________________________________________
தம் வித்³யாத்³து³:க²ஸம்யோக³வியோக³ம் யோக³ஸம்ஜ்ஞிதம்|
ஸ நிஸ்²சயேந யோக்தவ்யோ யோகோ³ऽநிர்விண்ணசேதஸா ||6-23||
அந்நிலையே துன்பத்துடன் கலத்தலை விடுதலாகிய யோக நிலையென்று உணர். உள்ளத்தில் ஏக்கமின்றி உறுதியுடன் அந்த யோகத்தை ஒருவன் பற்றி நிற்கக் கடவான்.
________________________________________
ஸங்கல்பப்ரப⁴வாந்காமாம்ஸ்த்யக்த்வா ஸர்வாநஸே²ஷத:|
மநஸைவேந்த்³ரியக்³ராமம் விநியம்ய ஸமந்தத: ||6-24||
சங்கல்பத்தினின்றும் எழும் எல்லா விருப்பங்களையும் மிச்சமறத் துறந்துவிட்டு, எல்லாப் பக்கங்களிலும் மனத்தால் இந்திரியக் குழாத்தைக் கட்டுப்படுத்தி,
________________________________________
ஸ²நை: ஸ²நைருபரமேத்³பு³த்³த்⁴யா த்⁴ருதிக்³ருஹீதயா|
ஆத்மஸம்ஸ்த²ம் மந: க்ருத்வா ந கிஞ்சித³பி சிந்தயேத் ||6-25||
துணிந்த மதியுடன் மனதை ஆத்மாவில் நிறுத்தி மெல்ல மெல்ல ஆறுதல் பெறக் கடவான்; எதற்கும் கவலையுறாதிருக்கக் கடவான்.
________________________________________
யதோ யதோ நிஸ்²சரதி மநஸ்²சஞ்சலமஸ்தி²ரம்|
ததஸ்ததோ நியம்யைததா³த்மந்யேவ வஸ²ம் நயேத் ||6-26||
எங்கெங்கே மனம் சஞ்சலமாய் உறுதியின்றி உழலுகிறதோ, அங்கங்கே அதைக் கட்டுப்படுத்தி ஆத்மாவுக்கு வசமாக்கிக் கொள்க.
________________________________________
ப்ரஸா²ந்தமநஸம் ஹ்யேநம் யோகி³நம் ஸுக²முத்தமம்|
உபைதி ஸா²ந்தரஜஸம் ப்³ரஹ்மபூ⁴தமகல்மஷம் ||6-27||
மனம் சாந்தமாய், ரஜோ குணம் ஆறி, மாசு நீங்கி, பிரம்மமேயாகிய இந்த யோகிக்கு மிகச் சிறந்த இன்பம் கிடைக்கிறது.
________________________________________
யுஞ்ஜந்நேவம் ஸதா³த்மாநம் யோகீ³ விக³தகல்மஷ:|
ஸுகே²ந ப்³ரஹ்மஸம்ஸ்பர்ஸ²மத்யந்தம் ஸுக²மஸ்²நுதே ||6-28||
குற்றங்களைப் போக்கி இங்ஙனம் எப்போதும் ஆத்மாவில் கலப்புற்றிருப்பானாயின், அந்த யோகி பிரம்மத்தைத் தொடுவதாகிய மிக உயர்ந்த இன்பத்தை எளிதில் துய்க்கிறான்.
________________________________________
ஸர்வபூ⁴தஸ்த²மாத்மாநம் ஸர்வபூ⁴தாநி சாத்மநி|
ஈக்ஷதே யோக³யுக்தாத்மா ஸர்வத்ர ஸமத³ர்ஸ²ந: ||6-29||
யோகத்தில் கலந்தவன் எங்கும் சமப் பார்வையுடையவனாய், எல்லா உயிர்களிடத்தும் தானிருப்பதையும், தன்னுள் எல்லா உயிர்களுமிருப்பதையும் காணுகிறான்.
________________________________________
யோ மாம் பஸ்²யதி ஸர்வத்ர ஸர்வம் ச மயி பஸ்²யதி|
தஸ்யாஹம் ந ப்ரணஸ்²யாமி ஸ ச மே ந ப்ரணஸ்²யதி ||6-30||
எவன் எங்கும் என்னைக் காண்கிறானோ, எல்லாப் பொருள்களையும் என்னிடத்தே காண்கிறானோ, அவனுக்கு நான் அழியமாட்டேன்(காட்சியளிக்கிறேன்); எனக்கவன் அழியமாட்டான் (அவனைக்காண்கிறேன்)
________________________________________
ஸர்வபூ⁴தஸ்தி²தம் யோ மாம் ப⁴ஜத்யேகத்வமாஸ்தி²த:|
ஸர்வதா² வர்தமாநோऽபி ஸ யோகீ³ மயி வர்ததே ||6-31||
.ஒருமையில் நிலைகொண்டவனாய் எல்லா உயிர்களிடத்திலுமுள்ள என்னைத் தொழுவோன், யாங்கணும் சென்றபோதிலும், அந்த யோகி என்னுள்ளேயே இயலுகிறான்.
________________________________________
ஆத்மௌபம்யேந ஸர்வத்ர ஸமம் பஸ்²யதி யோऽர்ஜுந|
ஸுக²ம் வா யதி³ வா து³:க²ம் ஸ யோகீ³ பரமோ மத: ||6-32||
இன்பமாயினும், துன்பமாயினும் எதிலும் ஆத்ம சமத்துவம் பற்றி சமப் பார்வை செலுத்துவானாயின், அவன் பரமயோகியாகக் கருதப்படுவான்.
________________________________________
அர்ஜுந உவாச
யோऽயம் யோக³ஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மது⁴ஸூத³ந|
ஏதஸ்யாஹம் ந பஸ்²யாமி சஞ்சலத்வாத்ஸ்தி²திம் ஸ்தி²ராம் ||6-33||
அர்ஜுனன் சொல்லுகிறான்: மதுசூதனா, இங்ஙனம் நீ சமத்துவத்தால் ஏற்படுவதாகச் சொல்லிய யோகம், ஸ்திரமான நிலையுடையதாக எனக்குத் தோன்றவில்லை, எனது சஞ்சலத் தன்மையால்.
________________________________________
சஞ்சலம் ஹி மந: க்ருஷ்ண ப்ரமாதி² ப³லவத்³த்³ருட⁴ம்|
தஸ்யாஹம் நிக்³ரஹம் மந்யே வாயோரிவ ஸுது³ஷ்கரம் ||6-34||
கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உரனுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
அஸம்ஸ²யம் மஹாபா³ஹோ மநோ து³ர்நிக்³ரஹம் சலம்|
அப்⁴யாஸேந து கௌந்தேய வைராக்³யேண ச க்³ருஹ்யதே ||6-35||
.ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளாய், மனம் கட்டுதற்கரியதுதான். சலனமுடையதுதான்; ஐயமில்லை. ஆனால் குந்தியின் மகனே, அதைப் பழக்கத்தாலும், விருப்பமின்மையாலும் கட்டி விடலாம்.
________________________________________
அஸம்யதாத்மநா யோகோ³ து³ஷ்ப்ராப இதி மே மதி:|
வஸ்²யாத்மநா து யததா ஸ²க்யோऽவாப்துமுபாயத: ||6-36||
தன்னைக் கட்டாதவன் யோக மெய்துதல் அரிதென்று நான் கருதுகிறேன். தன்னைக் கட்டியவன் முயற்சியாலும் உபாயத்தாலும் அதை எய்த வல்லான்.
________________________________________
அர்ஜுந உவாச
அயதி: ஸ்²ரத்³த⁴யோபேதோ யோகா³ச்சலிதமாநஸ:|
அப்ராப்ய யோக³ஸம்ஸித்³தி⁴ம் காம் க³திம் க்ருஷ்ண க³ச்ச²தி ||6-37||
அர்ஜுனன் சொல்லுகிறான்: நம்பிக்கையுடையோ னெனினும், தன்னைக் கட்டாமையால் யோகத்தினின்றும் மனம் வழுவியவன், யோகத்தில் தோற்றுப் போய், அப்பால் என்ன கதியடைகிறான், கண்ணா?
________________________________________
கச்சிந்நோப⁴யவிப்⁴ரஷ்டஸ்²சி²ந்நாப்⁴ரமிவ நஸ்²யதி|
அப்ரதிஷ்டோ² மஹாபா³ஹோ விமூடோ⁴ ப்³ரஹ்மண: பதி² ||6-38||
ஒருவேளை அவன் இரண்டுங் கெட்டவனாய், உடைந்த மேகம்போல் அழிகிறானோ? பெருந்தோளாய், உறுதியற்றவனாய், பிரம்ம நெறியிலே குழப்பமெய்திய மூடன் யாதாகிறான்?
________________________________________
ஏதந்மே ஸம்ஸ²யம் க்ருஷ்ண சே²த்துமர்ஹஸ்யஸே²ஷத:|
த்வத³ந்ய: ஸம்ஸ²யஸ்யாஸ்ய சே²த்தா ந ஹ்யுபபத்³யதே ||6-39||
கண்ணா, எனக்குள்ளே இந்த ஐயத்தை நீ அறுத்து விடுக. நின்னையன்றி இந்த ஐயத்தை யறுப்போர் வேறெவருமிலர்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
பார்த² நைவேஹ நாமுத்ர விநாஸ²ஸ்தஸ்ய வித்³யதே|
ந ஹி கல்யாணக்ருத்கஸ்²சித்³து³ர்க³திம் தாத க³ச்ச²தி ||6-40||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, அவனுக்கு இவ்வுலகிலும், மேலுலகத்திலும் அழிவில்லை; மகனே, நன்மை செய்வோன் எவனும் கெட்ட கதியடைய மாட்டான்.
________________________________________
ப்ராப்ய புண்யக்ருதாம் லோகாநுஷித்வா ஸா²ஸ்²வதீ: ஸமா:|
ஸு²சீநாம் ஸ்ரீமதாம் கே³ஹே யோக³ப்⁴ரஷ்டோऽபி⁴ஜாயதே ||6-41||
யோகத்தில் தவறியவன், புண்ணியம் செய்வோரின் உலகங்களை யெய்தி, அங்கு கணக்கில்லாத வருஷங்கள் வாழ்ந்து, தூய்மையுடைய செல்வர்களின் வீட்டில் பிறக்கிறான்.
________________________________________
அத²வா யோகி³நாமேவ குலே ப⁴வதி தீ⁴மதாம்|
ஏதத்³தி⁴ து³ர்லப⁴தரம் லோகே ஜந்ம யதீ³த்³ருஸ²ம் ||6-42||
அல்லது, புத்திமான்களாகிய யோகிகளின் குலத்திலேயே பிறக்கிறான். இவ்வுலகில் இதுபோன்ற பிறவியெய்துதல் மிகவும் அரிது. 42
________________________________________
தத்ர தம் பு³த்³தி⁴ஸம்யோக³ம் லப⁴தே பௌர்வதே³ஹிகம்|
யததே ச ததோ பூ⁴ய: ஸம்ஸித்³தௌ⁴ குருநந்த³ந ||6-43||
அங்கே அவன் பூர்வ சரீரத்துக்குரிய புத்தியைப் பெறுகிறான். குருநந்தனா, அப்பால் அவன் மறுபடியும் வெற்றிக்கு முயற்சி செய்கிறான்.
________________________________________
பூர்வாப்⁴யாஸேந தேநைவ ஹ்ரியதே ஹ்யவஸோ²ऽபி ஸ:|
ஜிஜ்ஞாஸுரபி யோக³ஸ்ய ஸ²ப்³த³ப்³ரஹ்மாதிவர்ததே ||6-44||
பண்டைப் பழக்கத்தால் அவன் தன் வசமின்றியும் இழுக்கப்படுகிறான். யோகத்தை அறிய வேண்டுமென்ற விருப்பத்தாலேயே ஒருவன் ஒலியுலகத்தைக் கடந்து செல்லுகிறான்.
________________________________________
ப்ரயத்நாத்³யதமாநஸ்து யோகீ³ ஸம்ஸு²த்³த⁴கில்பி³ஷ:|
அநேகஜந்மஸம்ஸித்³த⁴ஸ்ததோ யாதி பராம் க³திம் ||6-45||
பாவம் நீங்கியவனாய், ஊன்றி முயல்வானேயாயின், யோகி பல பிறவிகளின் வெற்றிப் பயனாகிய பரகதியை அப்போதடைகிறான்.
________________________________________
தபஸ்விப்⁴யோऽதி⁴கோ யோகீ³ ஜ்ஞாநிப்⁴யோऽபி மதோऽதி⁴க:|
கர்மிப்⁴யஸ்²சாதி⁴கோ யோகீ³ தஸ்மாத்³யோகீ³ ப⁴வார்ஜுந ||6-46||
தவஞ் செய்வோரைக் காட்டிலும் யோகி சிறந்தோன்; ஞானிகளிலும் அவன் சிறந்தோனாகக் கருதப்படுகிறான்; கர்மிகளிலும் அவன் சிறந்தோன்; ஆதலால், அர்ஜுனா, யோகியாகுக.
________________________________________
யோகி³நாமபி ஸர்வேஷாம் மத்³க³தேநாந்தராத்மநா|
ஸ்²ரத்³தா⁴வாந்ப⁴ஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: ||6-47||
மற்றெந்த யோகிகளெல்லாரிலும், எவனொருவன் அந்தராத்மாவில் என்னைப் புகுத்தி என்னை நம்பிக்கையுடன் போற்றுகிறானோ அவன், மிக மேலான யோகியென்பது என்னுடைய கொள்கை.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘தியான யோகம்’ எனப் பெயர் படைத்த
ஆறாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – ஏழாவது அத்தியாயம்
ஞான விஞ்ஞான யோகம்
பக்தி யோகத்திற்கு இலக்கான இறைவனுடைய சொரூபம், சுபாவம், மேன்மை முதலியன இந்த அத்தியாயத்தில் விளக்கிக் கூறப்படுகின்றன. மனிதன், இவைகளை அறிய வொட்டாமல் பிரகிருதி சம்பந்தம் தடுத்துக் கொண்டிருப்பதால் இதை நீக்க வேண்டியது அவசியம்.
ஆனால், இறைவனைச் சரண் புகுந்தாலன்றி இத்தடையை நீக்க இயலாது. பக்தர்களில், துன்புற்றார், செல்வத்தை விரும்புவோர், ஞான சொரூப நிலையை விரும்புவோர், ஈசுவர தத்துவத்தையுணர்ந்தவர் என நான்கு வகையுண்டு, அவர்களில் நான்காம் வகுப்பினரே மேலானவர்.
அந்த நிலையைப் பெறுவதற்கு வெகு பிறப்புகள் எடுத்தாக வேண்டும். இறைவனைத் தவிர்த்து மற்ற தெய்வங்களைத் தொழுபவர்களும் உண்மையில் இறைவனளிக்கும் பயனையேதான் பெறுகின்றனர். ஆனால், அவ்விதமான பயன்கள் அழிவுற்றிருக்கும். இறைவனையே வணங்குபவர்கள் இறைவனையே யடைந்து அழிவிலா ஆனந்தத்தைப் பெறுகின்றனர்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
மய்யாஸக்தமநா: பார்த² யோக³ம் யுஞ்ஜந்மதா³ஸ்²ரய:|
அஸம்ஸ²யம் ஸமக்³ரம் மாம் யதா² ஜ்ஞாஸ்யஸி தச்ச்²ருணு ||7-1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: பார்த்தா, என்பால் இசைந்த மனத்தினனாய், என்னைச் சார்ந்து, யோகத்திலே அமர்ந்தவனாய் என்னை முழுதும் உணருமாறு சொல்லக் கேளாய்.
________________________________________
ஜ்ஞாநம் தேऽஹம் ஸவிஜ்ஞாநமித³ம் வக்ஷ்யாம்யஸே²ஷத:|
யஜ்ஜ்ஞாத்வா நேஹ பூ⁴யோऽந்யஜ்ஜ்ஞாதவ்யமவஸி²ஷ்யதே ||7-2||
ஞானத்தையும் விஞ்ஞானத்தையும் சம்பூரணமாக உனக்குச் சொல்லுகிறேன். இதை அறிந்தால் பிறகு நீ அறிய வேண்டியது மிச்சமொன்றுமில்லை. (ஞானம்=பகவத் ஞானம்;       விஞ்ஞானம்=பகவானுடைய ஞான,சக்தி,பல,ஐஸ்வர்ய,வீர்ய, தேஜஸ் போன்ற கல்யாண குணங்கள் – ஒரு தூணைப்பார்த்து, “இது தூண்” என்று அறிவது ஞானம். அது எதனால் செய்யப்பட்டது, அதன் பரிமாணம்,சக்தி இவைகளை அறிவது விஞாநம் . அதேபோல, பகவானுடைய  ஸ்வரூப கணங்களை அறிவதே விஜ்ஞானம்”)
________________________________________
மநுஷ்யாணாம் ஸஹஸ்ரேஷு கஸ்²சித்³யததி ஸித்³த⁴யே|
யததாமபி ஸித்³தா⁴நாம் கஸ்²சிந்மாம் வேத்தி தத்த்வத: ||7-3||
பல்லாயிர மனிதரில் ஒருவன் சித்திபெற முயல்கிறான். முயற்சியுடைய சித்தர் பலரில் ஒருவன் என்னை உள்ளபடி அறிகிறான்.
________________________________________
பூ⁴மிராபோऽநலோ வாயு: க²ம் மநோ பு³த்³தி⁴ரேவ ச|
அஹங்கார இதீயம் மே பி⁴ந்நா ப்ரக்ருதிரஷ்டதா⁴ ||7-4||
மண், நீர், தீ, காற்று, வான், மனம், மதி, அகங்காரம், இவ்வெட்டு வகையாக ( ஊலகப் படைப்புக்குக் காரணமான )  பொருள்கள் என்னுடையது.
________________________________________
अपरेयमितस्त्वन्यां प्रकृतिं विद्धि मे पराम्।
जीवभूतां महाबाहो ययेदं धार्यते जगत्॥५॥
அபரேயமிதஸ்த்வந்யாம் ப்ரக்ருதிம் வித்³தி⁴ மே பராம்|
ஜீவபூ⁴தாம் மஹாபா³ஹோ யயேத³ம் தா⁴ர்யதே ஜக³த் ||7-5||
மேற்சொன்ன  8 அறிவற்ற பொருள்கள் என்னுடயது. அதற்கு மேம்பட்ட ஜீவாத்மாக்களும் என்னுடையவையே. அதனால் இவ்வுலகு தரிக்கப்படுகிறது.
________________________________________
ஏதத்³யோநீநி பூ⁴தாநி ஸர்வாணீத்யுபதா⁴ரய|
அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜக³த: ப்ரப⁴வ: ப்ரலயஸ்ததா² ||7-6||
( உலகிலுள்ள எல்லா உயிர்களும், சேதன, அசேதன பிரக்ருதிகளைக் காரணமாக உடையவை.) )எல்லா உயிர்களுக்கும் அது காரண மென்றுணர். அதனால், நான் உலக முழுமைக்கும் ஆக்கமும் அழிவுமாவேன்.
________________________________________
மத்த: பரதரம் நாந்யத்கிஞ்சித³ஸ்தி த⁴நஞ்ஜய|
மயி ஸர்வமித³ம் ப்ரோதம் ஸூத்ரே மணிக³ணா இவ ||7-7||
தனஞ்ஜயா, என்னைக் காட்டிலும் உயர்ந்த பொருள் வேறெதுவுமில்லை. நூலில் மணிகளைப் போல் இவ்வையகமெல்லாம் என் மீது கோக்கப்பட்டது.
________________________________________
ரஸோऽஹமப்ஸு கௌந்தேய ப்ரபா⁴ஸ்மி ஸ²ஸி²ஸூர்யயோ:|
ப்ரணவ: ஸர்வவேதே³ஷு ஸ²ப்³த³: கே² பௌருஷம் ந்ருஷு ||7-8||
நான் நீரில் சுவை; குந்தி மகனே, நான் ஞாயிறிலும் திங்களிலும் ஒளி; எல்லா வேதங்களிலும் நான் பிரணவம். வானில் ஒலி நான்; ஆண்களிடத்து நான் ஆண்மை.
________________________________________
புண்யோ க³ந்த⁴: ப்ருதி²வ்யாம் ச தேஜஸ்²சாஸ்மி விபா⁴வஸௌ|
ஜீவநம் ஸர்வபூ⁴தேஷு தபஸ்²சாஸ்மி தபஸ்விஷு ||7-9||
மண்ணில் தூய நாற்றமும், தீயில் சுடரும், யான். எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவஞ் செய்வோரின் தவம் யான்.
________________________________________
பீ³ஜம் மாம் ஸர்வபூ⁴தாநாம் வித்³தி⁴ பார்த² ஸநாதநம்|
பு³த்³தி⁴ர்பு³த்³தி⁴மதாமஸ்மி தேஜஸ்தேஜஸ்விநாமஹம் ||7-10||
எல்லா உயிர்களுக்கும் நான் சநாதனமாகிய விதையென்றுணர். பார்த்தா, புத்தியுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.
________________________________________
ப³லம் ப³லவதாம் சாஹம் காமராக³விவர்ஜிதம்|
த⁴ர்மாவிருத்³தோ⁴ பூ⁴தேஷு காமோऽஸ்மி ப⁴ரதர்ஷப⁴ ||7-11||
வல்லோரிடத்தே விருப்பமும் விழைவுந் தீர்ந்த வலிமை நான். பரதரேறே, உயிர்களிடத்து நான் கடமை தவறாத விருப்பமாவேன்.
________________________________________
யே சைவ ஸாத்த்விகா பா⁴வா ராஜஸாஸ்தாமஸாஸ்²ச யே|
மத்த ஏவேதி தாந்வித்³தி⁴ ந த்வஹம் தேஷு தே மயி ||7-12||
சத்வ ரஜஸ் தமோ குணங்களைச் சார்ந்த மன நிலைகளெல்லாம் என்னிடத்தே பிறந்தன. அவை என்னுள் இருக்கின்றன. நான் அவற்றுள் இல்லை.
________________________________________
த்ரிபி⁴ர்கு³ணமயைர்பா⁴வைரேபி⁴: ஸர்வமித³ம் ஜக³த்|
மோஹிதம் நாபி⁴ஜாநாதி மாமேப்⁴ய: பரமவ்யயம் ||7-13||
இந்த மூன்று குணங்களாகிய வண்ணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது.
________________________________________
தை³வீ ஹ்யேஷா கு³ணமயீ மம மாயா து³ரத்யயா|
மாமேவ யே ப்ரபத்³யந்தே மாயாமேதாம் தரந்தி தே ||7-14||
இந்த குணமாகிய எனது தேவமாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்.
________________________________________
ந மாம் து³ஷ்க்ருதிநோ மூடா⁴: ப்ரபத்³யந்தே நராத⁴மா:|
மாயயாபஹ்ருதஜ்ஞாநா ஆஸுரம் பா⁴வமாஸ்²ரிதா: ||7-15||
தீமை செய்யும் மூடர், மனிதரில் கடைப்பட்டார், மாயையால் ஞான மழிந்தோர், அசுரத் தன்மையைப் பற்றி நிற்போர், (இனையோர்) என்னைச் சரண் புகார்.
________________________________________
சதுர்விதா⁴ ப⁴ஜந்தே மாம் ஜநா: ஸுக்ருதிநோऽர்ஜுந|
ஆர்தோ ஜிஜ்ஞாஸுரர்தா²ர்தீ² ஜ்ஞாநீ ச ப⁴ரதர்ஷப⁴ ||7-16||
நற்செய்கையுடைய மக்களில் நான்கு வகையார் என்னை வழிபடுகின்றனர். பரதரேறே, துன்புற்றார், அறிவை விரும்புவோர், பயனை வேண்டுவோர், ஞானிகள் என.
________________________________________
தேஷாம் ஜ்ஞாநீ நித்யயுக்த ஏகப⁴க்திர்விஸி²ஷ்யதே|
ப்ரியோ ஹி ஜ்ஞாநிநோऽத்யர்த²மஹம் ஸ ச மம ப்ரிய: ||7-17||
அவர்களில் நித்திய யோகம் பூண்டு ஒரே பக்தி செலுத்தும் ஞானி சிறந்தவன். ஞானிக்கு நான் மிகவும் இனியவன்; அவன் எனக்கு மிகவும் இனியன்.
________________________________________
உதா³ரா: ஸர்வ ஏவைதே ஜ்ஞாநீ த்வாத்மைவ மே மதம்|
ஆஸ்தி²த: ஸ ஹி யுக்தாத்மா மாமேவாநுத்தமாம் க³திம் ||7-18||
மேற்சொல்லிய யாவரும் நல்லாரே. எனினும், ஞானியை நான் யானாகவே கொண்டுளேன். அவன், யோகத்தில் இசைந்து, உத்தம கதியாகிய என்னைக் கடைப்பிடித்து நிற்கிறான்.
________________________________________
ப³ஹூநாம் ஜந்மநாமந்தே ஜ்ஞாநவாந்மாம் ப்ரபத்³யதே|
வாஸுதே³வ: ஸர்வமிதி ஸ மஹாத்மா ஸுது³ர்லப⁴: ||7-19||
பல பிறவிகளின் இறுதியில் ஞானவான், ‘எல்லாம் வாசுதேவனே’ என்று கருதி என்னை அடைக்கலமாகப் பற்றுகிறான். அவ்வித மகாத்மா கிடைத்தற்கரியவன்.
________________________________________
காமைஸ்தைஸ்தைர்ஹ்ருதஜ்ஞாநா: ப்ரபத்³யந்தேऽந்யதே³வதா:|
தம் தம் நியமமாஸ்தா²ய ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா ||7-20||
வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் அன்னிய தேவதைகளை வழிபடுகின்றனர்.
________________________________________
யோ யோ யாம் யாம் தநும் ப⁴க்த: ஸ்²ரத்³த⁴யார்சிதுமிச்ச²தி|
தஸ்ய தஸ்யாசலாம் ஸ்²ரத்³தா⁴ம் தாமேவ வித³தா⁴ம்யஹம் ||7-21||
எந்த எந்த பக்தன், நம்பிக்கையுடன் எந்த எந்த வடிவத்தை அர்ச்சிக்க விரும்புகிறானோ, அவனுடைய அசையாத நம்பிக்கைக்குத் தக்க வடிவத்தை நான் மேற்கொள்ளுகிறேன். (ஏவனொருவன், தான் விரும்பும் விஷயங்களைப்பெற எனக்கு சரீரமான தேவதைகள வழிபட விரும்புகிறார்களோ, அவ்வழிபாட்டில் மன உறுதியும் ருசியும் நம்பிகையும் அவனுக்கு இருக்கும்படி நானே செய்கிறேன்,)
________________________________________
ஸ தயா ஸ்²ரத்³த⁴யா யுக்தஸ்தஸ்யாராத⁴நமீஹதே|
லப⁴தே ச தத: காமாந்மயைவ விஹிதாந்ஹிதாந் ||7-22||
அவன் அந்த நம்பிக்கையுடன் கலந்து அவ்வடிவத்தை ஆராதித்து வேண்டுகிறான். அதனின்றும் தான் விரும்பியனவற்றை எய்துகிறான்; எனினும் அவற்றை வகுத்துக் கொடுப்போன் யானே.
________________________________________
அந்தவத்து ப²லம் தேஷாம் தத்³ப⁴வத்யல்பமேத⁴ஸாம்|
தே³வாந்தே³வயஜோ யாந்தி மத்³ப⁴க்தா யாந்தி மாமபி ||7-23||
எனினும், அற்ப மதியுடைய அன்னோர் எய்தும் பயன் இறுதியுடைத்தாம். தேவர்களைத் தொழுவோர் தேவர்களை எய்துகின்றனர். என்னடியார் என்னையே எய்துகிறார்கள்.
________________________________________
அவ்யக்தம் வ்யக்திமாபந்நம் மந்யந்தே மாமபு³த்³த⁴ய:|
பரம் பா⁴வமஜாநந்தோ மமாவ்யயமநுத்தமம் ||7-24||
மறைவும் வெளிப்பாடும் உடையோனாக என்னை மதியற்றார் கருதுகின்றனர். என் அழிவற்ற உத்தம மாகிய பரநிலையை அன்னார் அறிகிலர்.(மூட மனிதர்களுக்கு, என் தெய்வத்தன்மை விளங்குவதில்லை. நானும் அவர்களைப்போல் ஒருவன் என்று நினைக்கிறார்கள்.)
________________________________________

நாஹம் ப்ரகாச: ஸ்ர்வஸ்ய யோகமாயா ஸமாவ்ருத:                                                                       மூடோயம்நாபி ஜானாதி லோகோமாம் அஜம் அவ்யயம் -25
எல்லாவற்றுக்கும் ஒளியாகிய என்னை, யோக மாயை சூழ்வதில்லை. பிறப்பும், கேடுமற்ற என்னை மூடவுலகம் அறியவில்லை.
________________________________________
வேதா³ஹம் ஸமதீதாநி வர்தமாநாநி சார்ஜுந|
ப⁴விஷ்யாணி ச பூ⁴தாநி மாம் து வேத³ ந கஸ்²சந ||7-26||
சென்ற, நிகழ்வன, வருவன ஆகிய உயிர்களையெல்லாம் நானறிவேன். என்னை அறிந்தோர் எவருமிலர்.
________________________________________
இச்சா²த்³வேஷஸமுத்தே²ந த்³வந்த்³வமோஹேந பா⁴ரத|
ஸர்வபூ⁴தாநி ஸம்மோஹம் ஸர்கே³ யாந்தி பரந்தப ||7-27||
விருப்பத்தாலும் பகைமையாலும் எழுந்த இருமைகளின் மயக்கத்தால், பாரதா, எல்லா உயிர்களும் மயங்கி விடுகின்றன, பகைவரைச் சுடுவோய்.
________________________________________
யேஷாம் த்வந்தக³தம் பாபம் ஜநாநாம் புண்யகர்மணாம்|
தே த்³வந்த்³வமோஹநிர்முக்தா ப⁴ஜந்தே மாம் த்³ருட⁴வ்ரதா: ||7-28||
எந்த ஜனங்கள் பாவந் தீர்ந்து புண்ணிய செயல்கள் செய்கின்றனரோ, அவர்கள் இருமைகளின் மயக்கந் தீர்ந்து திடவிரதமுடையோராய் என்னை வழிபடுகின்றனர்.
________________________________________
ஜராமரணமோக்ஷாய மாமாஸ்²ரித்ய யதந்தி யே|
தே ப்³ரஹ்ம தத்³விது³: க்ருத்ஸ்நமத்⁴யாத்மம் கர்ம சாகி²லம் ||7-29||
மூப்பினின்றும் மரணத்தினின்றும் விடுபடுமாறு என்னை வழிபட்டு முயற்சி செய்வோர் ‘அது’ என்ற பிரம்மத்தை யுணர்வார்; ஆத்மஞான முழுதையும் உணர்வார்; செய்கையனைத்தையு முணர்வார்.
________________________________________
ஸாதி⁴பூ⁴தாதி⁴தை³வம் மாம் ஸாதி⁴யஜ்ஞம் ச யே விது³:|
ப்ரயாணகாலேऽபி ச மாம் தே விது³ர்யுக்தசேதஸ: ||7-30||
பூத ஞானம், தேவ ஞானம், யாக ஞானம் இவற்றுடன் என்னை யாவர் இறுதிக் காலத்திலேனும் அறிவாரோ, யோகத்திற் பொருந்திய சித்தமுடைய அன்னாரே அறிஞர்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ஞான விஞ்ஞான யோகம்’ எனப் பெயர் படைத்த
ஏழாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – எட்டாவது அத்தியாயம்
அக்ஷர பிரம்ம யோகம்
முற்கூறிய நான்குவித பக்தர்களும் தனித்தனியே கைப்பற்ற வேண்டிய பக்தி வழிகளும் அவைகளுக்குள் வித்தியாசமும் கூறப்படுகின்றன. ஆக்ஞையினின்றும் ஆவி கிளம்புங்கால் எத்தகைய எண்ணம் மனிதனின் மனத்துக்குள் இருக்கின்றதோ அத்தகைய பலனையே மறுபிறவியில் பெறுவானாதலால் பக்தர்கள் இறக்கும் தருணத்தில் கடவுளைத் தியானித்திருப்பது அவசியம்.
வாழ்நாட்களில் மனதுக்குக் கடவுளிடம் நிலைத்திருக்கும் பழக்கத்தை உண்டுபண்ணினால்தான் அம்மனம் மரண காலத்தில் கடவுளிடம் நிலைபெறும். ஆகையால் பக்தர் அனைவரும் தங்கள் வாழ்நாட்களில் மனதால் கடவுளைத் தியானம் செய்துகொண்டே தங்கள் கர்மங்களைச் செய்ய வேண்டும்.

நான்காவது வகையான பக்தர்கள் பெறும் பரமபதம்தான் அழிவற்றது. மற்ற பலனெல்லாம் அழிவுற்றது. பக்தர்கள் இறந்தபிறகு ஆத்மா செல்லும் வழி இருவகைப்பட்டிருக்கும். ஒன்றில் சென்றால் என்றைக்கும் திரும்பி வராத வீட்டைப் பெறலாம். மற்றொன்றில் சென்றால், காலக் கிரமத்தில் திரும்பி வரவேண்டிய இடத்தை அடையலாம்.
________________________________________
அர்ஜுந உவாச
கிம் தத்³ப்³ரஹ்ம கிமத்⁴யாத்மம் கிம் கர்ம புருஷோத்தம |
அதி⁴பூ⁴தம் ச கிம் ப்ரோக்தமதி⁴தை³வம் கிமுச்யதே || 8- 1||
அர்ஜுனன் செல்லுகிறான்: அந்த பிரம்மம் எது? ஆத்ம ஞானம் யாது? புருஷோத்தம, கர்மமென்பது யாது? பூத ஞானம் யாது? தேவஞானம் என்பது எதனை?
________________________________________
அதி⁴யஜ்ஞ: கத²ம் கோऽத்ர தே³ஹேऽஸ்மிந்மது⁴ஸூத³ந |
ப்ரயாணகாலே ச கத²ம் ஜ்ஞேயோऽஸி நியதாத்மபி⁴: || 8- 2||
யாகஞானம் என்பதென்ன? தம்மைத் தாம் கட்டியவர்களால் (நல்லவர்களால்)இறுதிக் காலத்திலேனும் இவ்வுலகத்தில் நீ அறியப்படுவதெங்ஙனே?
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
அக்ஷரம் ப்³ரஹ்ம பரமம் ஸ்வபா⁴வோऽத்⁴யாத்மமுச்யதே |
பூ⁴தபா⁴வோத்³ப⁴வகரோ விஸர்க³: கர்மஸம்ஜ்ஞித: || 8- 3||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அழிவற்ற பரம்பொருளே பிரம்மம். அதனியல்பை அறிதல் ஆத்ம ஞானமெனப்படும். உயிர்த் தன்மையை விளைவிக்கும் இயற்கை கர்மமெனப்படுகிறது.
________________________________________
அதி⁴பூ⁴தம் க்ஷரோ பா⁴வ: புருஷஸ்²சாதி⁴தை³வதம் |
அதி⁴யஜ்ஞோऽஹமேவாத்ர தே³ஹே தே³ஹப்⁴ருதாம் வர: || 8- 4||
அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பூத ஞானம். புருஷனைப் பற்றியது தேவ ஞானம். உடம்பெடுத்தோரில் உயர்ந்தவனே! உடம்புக்குள் என்னையறிதல் யாக ஞானம்.
________________________________________
அந்தகாலே ச மாமேவ ஸ்மரந்முக்த்வா கலேவரம் |
ய: ப்ரயாதி ஸ மத்³பா⁴வம் யாதி நாஸ்த்யத்ர ஸம்ஸ²ய: || 8- 5||
இறுதிக் காலத்தில் உடம்பைத் துறந்து எனது நினைவுடன் இறப்போன் எனதியல்பை எய்துவான். இதில் ஐயமில்லை.
________________________________________
யம் யம் வாபி ஸ்மரந்பா⁴வம் த்யஜத்யந்தே கலேவரம் |
தம் தமேவைதி கௌந்தேய ஸதா³ தத்³பா⁴வபா⁴வித: || 8- 6||
ஒருவன் முடிவில் எவ்வெத் தன்மையை நினைப்பானாய் உடலைத் துறக்கின்றானோ, அவன் எப்போதும் அத்தன்மையிலே கருத்துடையவனாய் அதனையே எய்துவான்.
________________________________________
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு மாமநுஸ்மர யுத்⁴ய ச |
மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்மாமேவைஷ்யஸ்யஸம்ஸ²யம் || 8- 7||
ஆதலால், எல்லாக் காலங்களிலும் என்னை நினை, போர் செய். என்னிடத்தே மனத்தையும், புத்தியையும் அர்ப்பணம் செய்வதனால் என்னையே பெறுவாய்.
________________________________________
அப்⁴யாஸயோக³யுக்தேந சேதஸா நாந்யகா³மிநா |
பரமம் புருஷம் தி³வ்யம் யாதி பார்தா²நுசிந்தயந் || 8- 8||
வேறிடஞ் செல்லாமலே யோகம் பயிலும் சித்தத்துடன் சிந்தனை செய்து கொண்டிருப்போன் தேவனாகிய பரம புருஷனை அடைகிறான்.
________________________________________
கவிம் புராணமநுஸா²ஸிதாரமணோரணீயாம்ஸமநுஸ்மரேத்³ய: |
ஸர்வஸ்ய தா⁴தாரமசிந்த்யரூபமாதி³த்யவர்ணம் தமஸ: பரஸ்தாத் || 8- 9||
கவியை, பழையோனை, ஆள்வோனை, அணுவைக் காட்டிலும் அணுவை, எல்லாவற்றையும் தரிப்பவனை எண்ணுதற்கரிய வடிவுடையோனை, இருளுக்கப்பால் கதிரோனது நிறங்கொண்டிருப்பானை, எவன் நினைக்கின்றானோ,
________________________________________
ப்ரயாணகாலே மநஸாசலேந ப⁴க்த்யா யுக்தோ யோக³ப³லேந சைவ |
ப்⁴ருவோர்மத்⁴யே ப்ராணமாவேஸ்²ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி தி³வ்யம் || 8- 10||
இறுதிக் காலத்தில் அசைவற்ற மனத்துடன், புருவங்களிடையே உயிரை நன்கேற்றி, பக்தியுடனும், யோக பலத்துடனும், எவன் நினைக்கிறானோ அவன் அந்தக் கடவுளாகிய பரம புருஷனை அடைகிறான்.
________________________________________
யத³க்ஷரம் வேத³விதோ³ வத³ந்தி விஸ²ந்தி யத்³யதயோ வீதராகா³: |
யதி³ச்ச²ந்தோ ப்³ரஹ்மசர்யம் சரந்தி தத்தே பத³ம் ஸங்க்³ரஹேண ப்ரவக்ஷ்யே || 8- 11||
எந்த நிலையை வேதமுணர்ந்தோர் அழிவற்ற தென்பர், விருப்பமற்ற முனிகள் எதனுட் புகுவர். எதை விரும்பி பிரம்மச்சரிய விரதம் காக்கப்படும், அந்த நிலையை உனக்குச் சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
________________________________________
ஸர்வத்³வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி³ நிருத்⁴ய ச |
மூர்த்⁴ந்யாதா⁴யாத்மந: ப்ராணமாஸ்தி²தோ யோக³தா⁴ரணாம் || 8- 12||
எல்லா வாயில்களையும் நன்கு கட்டி, மனத்தை உள்ளத்தில் நிறுத்தி, உயிரைத் தலையின் உச்சியில் நிலையுறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று,
________________________________________
ஓமித்யேகாக்ஷரம் ப்³ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |
ய: ப்ரயாதி த்யஜந்தே³ஹம் ஸ யாதி பரமாம் க³திம் || 8- 13||
ஓம் என்ற பிரம்ம எழுத்து ஒன்றையே ஜபித்துக்கொண்டு என்னை ஸ்மரிப்பவனாய் உடம்பைத் துறப்போன் பரமகதி பெறுகிறான்.
________________________________________
அநந்யசேதா: ஸததம் யோ மாம் ஸ்மரதி நித்யஸ²: |
தஸ்யாஹம் ஸுலப⁴: பார்த² நித்யயுக்தஸ்ய யோகி³ந: || 8- 14||
நித்திய யோகத் திசைந்து, பிரிது நினைப்பின்றி என்னை எப்பொழுதும் எண்ணும் யோகிக்கு நான் எளிதில் அகப்படுவேன், பார்த்தா.
________________________________________
மாமுபேத்ய புநர்ஜந்ம து³:கா²லயமஸா²ஸ்²வதம் |
நாப்நுவந்தி மஹாத்மாந: ஸம்ஸித்³தி⁴ம் பரமாம் க³தா: || 8- 15||
என்னையடைந்து பரம சித்தி பெற்ற மகாத்மாக்கள், மறுபடி நிலையற்றதும் துன்பத்தின் ஆலயமும் ஆகிய மறு பிறப்பை யடைய மாட்டார்.
________________________________________
ஆப்³ரஹ்மபு⁴வநால்லோகா: புநராவர்திநோऽர்ஜுந |
மாமுபேத்ய து கௌந்தேய புநர்ஜந்ம ந வித்³யதே || 8- 16||
அர்ஜுனா, பிரம்மலோகம் வரை எல்லா உலகங்களும் மறுபிறப்பு உடையன. குந்தி மகனே! என்னை அடைந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை.
________________________________________
ஸஹஸ்ரயுக³பர்யந்தமஹர்யத்³ப்³ரஹ்மணோ விது³: |
ராத்ரிம் யுக³ஸஹஸ்ராந்தாம் தேऽஹோராத்ரவிதோ³ ஜநா: || 8- 17||
பிரம்மத்துக்கு ஆயிரம் யுகம் ஒரு பகல் ஆயிரம் யுகம் ஓரிரவு. இதையறிந்தோரே இராப் பகலின் இயல்பறிவார்.
________________________________________
அவ்யக்தாத்³வ்யக்தய: ஸர்வா: ப்ரப⁴வந்த்யஹராக³மே |
ராத்ர்யாக³மே ப்ரலீயந்தே தத்ரைவாவ்யக்தஸம்ஜ்ஞகே || 8- 18||
‘அவ்யக்தம்,அதாவது, மறைவுபட்ட உலகத்தினின்றும் தோற்றப் பொருள்கள் வெளிப்படுகின்றன. இரவு வந்தவுடன் அந்த மறைவுலகத்துக்கே மீண்டும் கழிந்துவிடுகின்றன.
________________________________________
பூ⁴தக்³ராம: ஸ ஏவாயம் பூ⁴த்வா பூ⁴த்வா ப்ரலீயதே |
ராத்ர்யாக³மேऽவஸ²: பார்த² ப்ரப⁴வத்யஹராக³மே || 8- 19||
இந்த பூதத் தொகுதி ஆதியாகித் தன் வசமின்றியே இரவு வந்தவுடன் அழிகிறது. பார்த்தா, பகல் வந்தவுடன் இது மீண்டும் பிறக்கிறது.
________________________________________
பரஸ்தஸ்மாத்து பா⁴வோऽந்யோऽவ்யக்தோऽவ்யக்தாத்ஸநாதந: |
ய: ஸ ஸர்வேஷு பூ⁴தேஷு நஸ்²யத்ஸு ந விநஸ்²யதி || 8- 20||
அவ்யக்ததினும் அவ்யக்தமாய் அதற்கப்பால் சநாதன பதமொன்றிருக்கிறது. எல்லா உயிர்களும் அழிகையில் அப்பதம் அழியாது
________________________________________
அவ்யக்தோऽக்ஷர இத்யுக்தஸ்தமாஹு: பரமாம் க³திம் |
யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 8- 21||
அவ்யக்தம் அழிவற்றதெனப்படும். அதனையே பரமகதி யென்பர். எதை எய்தபின் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
________________________________________
புருஷ: ஸ பர: பார்த² ப⁴க்த்யா லப்⁴யஸ்த்வநந்யயா |
யஸ்யாந்த:ஸ்தா²நி பூ⁴தாநி யேந ஸர்வமித³ம் ததம் || 8- 22||
வேறிடஞ் செல்லாத பக்தியால், பார்த்தா, அந்தப் பரம புருஷன் எய்தப்படுவான். அவனுள்ளே எல்லாப் பொருள்களும் நிலைகொண்டன. அவன் இவ்வுலகமெங்கும் உள்ளூரப் பரந்திருக்கிறான்.
________________________________________
யத்ர காலே த்வநாவ்ருத்திமாவ்ருத்திம் சைவ யோகி³ந: |
ப்ரயாதா யாந்தி தம் காலம் வக்ஷ்யாமி ப⁴ரதர்ஷப⁴ || 8- 23||
யோகிகள் இறப்பதால் எக்காலத்தில் மீளா நிலையும் மீளும் நிலையும் பெறுவாரோ, அக்காலத்தைச் சொல்லுகிறேன்.
________________________________________
அக்³நிர்ஜ்யோதிரஹ: ஸு²க்ல: ஷண்மாஸா உத்தராயணம் |
தத்ர ப்ரயாதா க³ச்ச²ந்தி ப்³ரஹ்ம ப்³ரஹ்மவிதோ³ ஜநா: || 8- 24||
தீ, ஒளி, பகல், சுக்கில பக்ஷம், உத்தராயாணத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் பிரம்ம ஞானிகள் பிரம்மத்தை யடைகிறார்கள்.
________________________________________
தூ⁴மோ ராத்ரிஸ்ததா² க்ருஷ்ண: ஷண்மாஸா த³க்ஷிணாயநம் |
தத்ர சாந்த்³ரமஸம் ஜ்யோதிர்யோகீ³ ப்ராப்ய நிவர்ததே || 8- 25||
புகை, இரவு, கிருஷ்ண பக்ஷம், தக்ஷிணாயனத்தின் ஆறு மாதங்கள்; இவற்றில் இறக்கும் யோகி சந்திரனொளியைப் பெற்றிருந்து மீளுகிறான். ( புண்ணியம் செய்தவர்கள் தூமம் (புகை), இரவு, கிருஷ்ணபக்ஷம்,தக்ஷிணாயனம், பித்ருலோகம், ஆகாயம் இவ்வழியாக சுவர்க்க லோகம் போய் திரும்பி வருகிறார்கள். சுவர்க்கம் அடைந்து.புண்ணிய பலங்களை அங்கே அனுபவித்து, திரும்பி பூலோகக்தில் பிறக்கிறார்கள். )
________________________________________
ஸு²க்லக்ருஷ்ணே க³தீ ஹ்யேதே ஜக³த: ஸா²ஸ்²வதே மதே |
ஏகயா யாத்யநாவ்ருத்திமந்யயாவர்ததே புந: || 8- 26||
உலகத்தில் எந்த ஒளி வழியும், இருள் வழியும் சாசுவதமாகக் கருதப்பட்டன. இவற்றுள் ஒன்றினால் மனிதன் மீளாப் பதம் பெறுவான். மற்றொன்று மீளும் பதந் தருவது.( ஆர்ச்சிராதி மார்க்கத்தில் செல்பவனுக்கு, மறு பிறவி இல்லை.தூமாதி மார்க்கத்தில் செல்பவனுக்கு மறு பிறவி உண்டு. )
________________________________________
நைதே ஸ்ருதீ பார்த² ஜாநந்யோகீ³ முஹ்யதி கஸ்²சந |
தஸ்மாத்ஸர்வேஷு காலேஷு யோக³யுக்தோ ப⁴வார்ஜுந || 8- 27||
இவ் வழிகளிரண்டையும் உணர்ந்தால் அப்பால் யோகி மயக்கமுறுவதில்லை. ஆதலால், அர்ஜுன, எப்போதும் யோகத்தில் கலந்திரு.
________________________________________
வேதே³ஷு யஜ்ஞேஷு தப:ஸு சைவ தா³நேஷு யத் புண்யப²லம் ப்ரதி³ஷ்டம் |
அத்யேதி தத்ஸர்வமித³ம் விதி³த்வா யோகீ³ பரம் ஸ்தா²நமுபைதி சாத்³யம் || 8- 28||
இதனை யறிவதால் யோகி வேதங்களிலும், தவங்களிலும், தானங்களிலும் காட்டிய தூய்மைப் பயனைக் கடந்து, ஆதி நிலையாகிய பரநிலையை எய்துகிறான்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘அக்ஷர பிரம்ம யோகம்’ எனப் பெயர் படைத்த
எட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – ஒன்பதாவது அத்தியாயம்
ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்
இங்கு வித்தைகளுள் சிறந்ததும், ரகசியங்களுள் மேலானதுமான பக்தி யோகத்தின் சொரூபமும் மேன்மையும், பலன் முதலானவையும் கூறப்படுகின்றன. பக்தி யோகத்தில் இறங்குவோன், அதில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும். பின்வரும் கடவுள் பெருமைகளையும் நன்குணர வேண்டும்:- கடவுள் எங்கும் நிறைந்த பரம்பொருள். உலகமனைத்தும் அவரிடத்திலேயே நிலைபெற்று நிற்கிறது.
பிரளய காலத்தில் உலகங்கள் அனைத்தும் அவற்றின் முதற் கிழங்காகிய பிரகிருதியில் மறைகின்றன. சிருஷ்டி காலத்தில் கடவுள் அவைகளைப் பிரகிருதியினின்றும் வெளிப்படுத்துகிறார். உலகத்திற்கு இறைவனும், இருப்பிடமும், சரணும், தோழனும் கடவுளே. பக்தர்கள் தங்கள் செயல்களனைத்தும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும்.

மற்ற விஷயங்களைத் துறந்து கடவுளையே தியானம் செய்பவன் எத்தகைய கொடிய பாவியாயினும் நல்லோன் என்றே கருதப்பட வேண்டும். கடவுளிடத்திலேயே மனத்தைச் செலுத்த வேண்டும். கடவுளையே நேசிக்க வேண்டும். கடவுளையே வணங்க வேண்டும். இப்படி இருப்பவன் கடவுளையே அடைவான்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் து தே கு³ஹ்யதமம் ப்ரவக்ஷ்யாம்யநஸூயவே |
ஜ்ஞாநம் விஜ்ஞாநஸஹிதம் யஜ்ஜ்ஞாத்வா மோக்ஷ்யஸேऽஸு²பா⁴த் || 9- 1||
கடவுள் சொல்லுகிறான்: அசூயை யற்றவனாகிய உனக்கு இந்த அதி ரகசியமான ஞானத்தை விஞ்ஞானத்துடன் சொல்லுகிறேன். இதையறிவதால் தீமையிலிருந்து (பாபங்களிலிருந்து ) விடுபடுவாய்.
________________________________________
ராஜவித்³யா ராஜகு³ஹ்யம் பவித்ரமித³முத்தமம் |
ப்ரத்யக்ஷாவக³மம் த⁴ர்ம்யம் ஸுஸுக²ம் கர்துமவ்யயம் || 9- 2||
ராஜவித்தை, ராஜ ரகசியம், தூய்மை தருவதில் மிக மாண்புடையது. கண்ணெதிரே காண்டற்குரியது. அறத்துக் கிசைந்தது. செய்தற்கு மிக எளிது. அழிவற்றது.
________________________________________
அஸ்²ரத்³த³தா⁴நா: புருஷா த⁴ர்மஸ்யாஸ்ய பரந்தப |
அப்ராப்ய மாம் நிவர்தந்தே ம்ருத்யுஸம்ஸாரவர்த்மநி || 9- 3||
பகையைச் சுடுவோய், இல்லறத்தில் நம்பிக்கையற்ற (இத்தர்மத்தில் சிரத்தை இல்லாத) மனிதர் என்னை எய்தாமே மீட்டும் நரக சம்சாரப் பாதைகளில் உழல்கின்ற்னர்.
________________________________________
மயா ததமித³ம் ஸர்வம் ஜக³த³வ்யக்தமூர்திநா |
மத்ஸ்தா²நி ஸர்வபூ⁴தாநி ந சாஹம் தேஷ்வவஸ்தி²த: || 9- 4||
அவ்யக்த (இந்திரியங்க்களுக்கு புலப்படாத) வடிவாய் நான் இவ்வுலக முழுமையும் சூழ்ந்திருக்கிறேன். என்னிடத்தே பூதங்களெல்லாம் நிலைபெற்றன. அவற்றுட்பட்டதன்று என்நிலை. 4
________________________________________
ந ச மத்ஸ்தா²நி பூ⁴தாநி பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் |
பூ⁴தப்⁴ருந்ந ச பூ⁴தஸ்தோ² மமாத்மா பூ⁴தபா⁴வந: || 9- 5||
(மற்றொரு வகையால் நோக்குமிடத்தே) பூதங்கள் என்றும் நிற்பனவுமல்ல, என் ஈசுவர யோகத்தின் பெருமையை இங்குப் பார், பூதங்களைத் ( எல்லாப்பிராணிகளையும்) தரிக்கிறேன். அவற்றுட்பட்டேனல்லேன். என் ஆத்மாவில் பூத சிந்தனை இயல்கிறது.
________________________________________
யதா²காஸ²ஸ்தி²தோ நித்யம் வாயு: ஸர்வத்ரகோ³ மஹாந் |
ததா² ஸர்வாணி பூ⁴தாநி மத்ஸ்தா²நீத்யுபதா⁴ரய || 9- 6||
எங்கும் இயல்வானும் பெரியானுமாகிய காற்று, எப்படி எப்போதும் வானில் (ஓரு பிடிப்பில்லாமல்) நிலை பெற்றிருக்கிறானோ, அப்படியே பொருள்களெல்லாம் என்னுள் நிலைபெற்றனவென்று தெரிந்துகொள். 6
________________________________________
ஸர்வபூ⁴தாநி கௌந்தேய ப்ரக்ருதிம் யாந்தி மாமிகாம் |
கல்பக்ஷயே புநஸ்தாநி கல்பாதௌ³ விஸ்ருஜாம்யஹம் || 9- 7||
.குந்தி மகனே, கல்ப  முடிவில் எல்லா உயிர்களும் என் மூல பிரக்ருதியை எய்துகின்றன. மறுபடி கல்பத் தொடக்கத்தில் நான் அவற்றைப் படைக்கிறேன்.
________________________________________
ப்ரக்ருதிம் ஸ்வாமவஷ்டப்⁴ய விஸ்ருஜாமி புந: புந: |
பூ⁴தக்³ராமமிமம் க்ருத்ஸ்நமவஸ²ம் ப்ரக்ருதேர்வஸா²த் || 9- 8||
என் சக்தியில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் பூதத் தொகுதி முழுவதையும் என் வசமின்றி, சக்தி, அதாவது இயற்கையின் வசத்தால் நான் படைக்கிறேன்.
________________________________________
ந ச மாம் தாநி கர்மாணி நிப³த்⁴நந்தி த⁴நஞ்ஜய |
உதா³ஸீநவதா³ஸீநமஸக்தம் தேஷு கர்மஸு || 9- 9||
தனஞ்ஜயா, அந்தப் படைப்புச் செயலில் நான் எதையும் பொருட்படுத்தாமல் பற்றுதல் அற்று இருப்பதனால் என்னை ஒரு தோஷமும் சார்வதில்லை.
________________________________________
மயாத்⁴யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸசராசரம் |
ஹேதுநாநேந கௌந்தேய ஜக³த்³விபரிவர்ததே || 9- 10||
என் மேற்பார்வையில் ப்ரக்ருதியானது சராசர உலகங்களைப் படைக்கிறது. குந்தி மகனே, இப்படி உலகம் மாறி மாறி உண்டாகிறது..
________________________________________
அவஜாநந்தி மாம் மூடா⁴ மாநுஷீம் தநுமாஸ்²ரிதம் |
பரம் பா⁴வமஜாநந்தோ மம பூ⁴தமஹேஸ்²வரம் || 9- 11||
மனித சரீரந் தரித்த என்னை மூடர் புறக்கணிக்கிறார்கள். உயிர்களுக்கெல்லாம் உயர் தலைவன் நான் என்ற என் பரமநிலையை அவர்கள் அறிகிலர்.
________________________________________
மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 9- 12||
வீணாசையுடையோர், வீண் செயலாளர், வீணறிவாளர், மதியற்றோர், மயக்கத்துக்கு இடமான ராக்ஷத அசுர மோகினி சக்திகளைச் சார்ந்து நிற்கின்றனர். (ராக்ஷத, அசுர, மோகினி சக்திகளாவன – அவா, குரூரம், மயக்கம் என்ற சித்த இயல்புகள்) . (என் ஈஸ்வரத்தன்மையை அறிவதில்லை)
________________________________________
மஹாத்மாநஸ்து மாம் பார்த² தை³வீம் ப்ரக்ருதிமாஸ்²ரிதா: |
ப⁴ஜந்த்யநந்யமநஸோ ஜ்ஞாத்வா பூ⁴தாதி³மவ்யயம் || 9- 13||
பார்த்தா, மகாத்மாக்கள் தெய்விக இயல்பைக் கைகொண்டு (உள்ளபடி அறிந்து)  பூத முதலும் கேடற்றவனுமாகிய என்னை வேறு மனம் இன்றி வழிபடுகிறார்கள்.
________________________________________
ஸததம் கீர்தயந்தோ மாம் யதந்தஸ்²ச த்³ருட⁴வ்ரதா: |
நமஸ்யந்தஸ்²ச மாம் ப⁴க்த்யா நித்யயுக்தா உபாஸதே || 9- 14||
திடவிரதத்துடன் முயற்சி புரிவோராய், எப்போதும் என்னைப் புகழ்வோராய், என்னைப் பக்தியால் வணங்குவோராய் நித்திய யோகிகள் உபாசிக்கிறார்கள்.
________________________________________
ஜ்ஞாநயஜ்ஞேந சாப்யந்யே யஜந்தோ மாமுபாஸதே |
ஏகத்வேந ப்ருத²க்த்வேந ப³ஹுதா⁴ விஸ்²வதோமுக²ம் || 9- 15||
வேறு சிலர் ஞான வேள்வியால் வேட்போராய் என்னை ஒருமையாகவும் பன்மையாகவும் பலவாறாக எல்லாவிடத்தும் வழிபடுகிறார்கள். 15
________________________________________
அஹம் க்ரதுரஹம் யஜ்ஞ: ஸ்வதா⁴ஹமஹமௌஷத⁴ம் |
மந்த்ரோऽஹமஹமேவாஜ்யமஹமக்³நிரஹம் ஹுதம் || 9- 16||
நான் ஓமம்; நான் யாகம்; நான் ‘ஸ்வதா’ என்ற வாழ்த்துரை; நான் மருந்து; மந்திரம்; நான் நெய்; நான் தீ; நான் அவி (ஹோமம்).
________________________________________
பிதாஹமஸ்ய ஜக³தோ மாதா தா⁴தா பிதாமஹ: |
வேத்³யம் பவித்ரமோங்கார ருக்ஸாம யஜுரேவ ச || 9- 17||
இந்த உலகத்தின் தந்தை நான்; இதன் தாய் நான்; இதைத் தரிப்போன் நான்; இதன் பாட்டன் நான்; இதன் அறியப்படு பொருள் நான்; தூய்மை செய்வது நான்; பிணவமான ஓங்காரம் நான்; நான் ரிக்; நான் ஸாமம்; நான் யஜுர்.
________________________________________
க³திர்ப⁴ர்தா ப்ரபு⁴: ஸாக்ஷீ நிவாஸ: ஸ²ரணம் ஸுஹ்ருத் |
ப்ரப⁴வ: ப்ரலய: ஸ்தா²நம் நிதா⁴நம் பீ³ஜமவ்யயம் || 9- 18||
இவ்வுலகத்தின் புகல், இதனிறைவன், இதன் கதி, இதன் போஷகன், சரணமடையத்தக்கவன், இதன் தோழன், இதன் தொடக்கம், இதன் அழிவு, இதன் இடம், இதன் நிலை, இதன் அழியாத விதை.
________________________________________
தபாம்யஹமஹம் வர்ஷம் நிக்³ருஹ்ணாம்யுத்ஸ்ருஜாமி ச |
அம்ருதம் சைவ ம்ருத்யுஸ்²ச ஸத³ஸச்சாஹமர்ஜுந || 9- 19||
நான் வெப்பந் தருகிறேன்; மழையை நான் பெய்விக்கிறேன். உயிரின் வாழ்வுக்கும், மரணத்துக்கும் காரணன் நான். நானே அமிர்தம்; நானே மரணம். அர்ஜுனா, உள்ளதும் யான்; இல்லதும் யான்.
________________________________________
த்ரைவித்³யா மாம் ஸோமபா: பூதபாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர்க³திம் ப்ரார்த²யந்தே |
தே புண்யமாஸாத்³ய ஸுரேந்த்³ரலோகமஸ்²நந்தி தி³வ்யாந்தி³வி தே³வபோ⁴கா³ந் || 9- 20||
ருக்,யஜுஸ், சாம மூன்று வேதமறிந்தார், என்னை வேள்விகளால்  வானுலகு தர வேண்டுகின்றனர். அவர்கள் புண்ணிய ஸ்தானமாகிய தேவேந்திர லோகத்தை யெய்தி வானுலகில் திவ்யமான தேவ போகங்களைத் துய்க்கிறார்கள்.
________________________________________
தே தம் பு⁴க்த்வா ஸ்வர்க³லோகம் விஸா²லம் க்ஷீணே புண்யே மர்த்யலோகம் விஸ²ந்தி |
ஏவம் த்ரயீத⁴ர்மமநுப்ரபந்நா க³தாக³தம் காமகாமா லப⁴ந்தே || 9- 21||
விரிவாகிய வானுலகத்திலே இன்புற்றுப் புண்ணியந் தீர்ந்தவுடன் மறுபடி அழிவுடைய மனித உலகத்துக்குத் திரும்புகிறார்கள். மீண்டும் புண்ணியங்கள் செய்து  தேவருலகு செல்கிறார்கள். இப்படி மூன்று வேத முறைகளைத் தொழுவார் விருப்பங்களில் வீழ்ந்து உழல்வார்.
________________________________________
அநந்யாஸ்²சிந்தயந்தோ மாம் யே ஜநா: பர்யுபாஸதே |
தேஷாம் நித்யாபி⁴யுக்தாநாம் யோக³க்ஷேமம் வஹாம்யஹம் || 9- 22||
வேறு நினைப்பின்றி என்னை வழிபடுவோர் யாவரோ, அந்த நித்திய யோகிகளின் நன்மை தீமையை நான் பொறுப்பேன். அவர்களுக்கு மறுபிறவி இல்லாத க்ஷேமத்தைத் தருகிறேன்,
________________________________________
யேऽப்யந்யதே³வதாப⁴க்தா யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேऽபி மாமேவ கௌந்தேய யஜந்த்யவிதி⁴பூர்வகம் || 9- 23||
அந்நிய தேவதைகளை நம்பிக்கையுடன் தொழும் அன்பரும், குந்தியின் மகனே, விதி வழுவி முறையற்ற வழியில் அவர்கள் செய்த போதிலும், என்னையே தொழுகின்றனர்.
________________________________________
அஹம் ஹி ஸர்வயஜ்ஞாநாம் போ⁴க்தா ச ப்ரபு⁴ரேவ ச |
ந து மாமபி⁴ஜாநந்தி தத்த்வேநாதஸ்²ச்யவந்தி தே || 9- 24||
நானே வேள்விகளில் எல்லாம் உணவு உண்பவன்; நானே தலைவன்; என்னை மனிதர் உள்ளபடி அறியார்; ஆதலால் அவர்கள் என்னை அடைவதில்லை.
________________________________________
யாந்தி தே³வவ்ரதா தே³வாந்பித்ரூந்யாந்தி பித்ருவ்ரதா: |
பூ⁴தாநி யாந்தி பூ⁴தேஜ்யா யாந்தி மத்³யாஜிநோऽபி மாம் || 9- 25||
தேவதைகளை ஆராதிப்போர் தேவரை எய்துவார்;;பிதிர்க்களை நோற்பார் பிதிர்க்களை யடைவார்; மற்ற பூதங்களைத் தொழுவார் பூதங்களை யடைவார்;என்னை ஆராதிப்போர்  என்னை எய்துவார்.
________________________________________
பத்ரம் புஷ்பம் ப²லம் தோயம் யோ மே ப⁴க்த்யா ப்ரயச்ச²தி |
தத³ஹம் ப⁴க்த்யுபஹ்ருதமஸ்²நாமி ப்ரயதாத்மந: || 9- 26||
இலையேனும், பூவேனும், கனியேனும், நீரேனும் அன்புடனே எனக்கு அளிப்பவன் ஆயின், முயற்சியுடைய அன்னவன் அன்புடன் அளித்ததை உண்பேன் யான்.
________________________________________
யத்கரோஷி யத³ஸ்²நாஸி யஜ்ஜுஹோஷி த³தா³ஸி யத் |
யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மத³ர்பணம் || 9- 27||
நீ எது செய்யினும், எதனை நீ உண்பினும், எதை நீ ஹோமம் பண்ணினும், எதனைக் கொடுத்தாலும், எத்தவத்தைச் செய்தாலும், குந்தி மகனே, அதை எனக்கு அர்ப்பணமென்று செய்.
________________________________________
ஸு²பா⁴ஸு²ப⁴ப²லைரேவம் மோக்ஷ்யஸே கர்மப³ந்த⁴நை: |
ஸம்ந்யாஸயோக³யுக்தாத்மா விமுக்தோ மாமுபைஷ்யஸி || 9- 28||
இங்ஙனம் மங்களம் அமங்களமாகிய பயன்களைத் தருவனவாகிய கர்மத் தளைகளினின்றும் விடுபடுவாய். துறவெனும் யோகத்திசைந்து விடுதலை பெறுவாய். என்னையும் பெறுவாய்.
________________________________________
ஸமோऽஹம் ஸர்வபூ⁴தேஷு ந மே த்³வேஷ்யோऽஸ்தி ந ப்ரிய: |
யே ப⁴ஜந்தி து மாம் ப⁴க்த்யா மயி தே தேஷு சாப்யஹம் || 9- 29||
நான் எல்லா உயிர்களிடத்தும் சமமானவன். எனக்குப் பகைவனுமில்லை, நண்பனுமில்லை. ஆனால் என்னை அன்புடன் தொழுவோர் – அன்னவர் என்னிடத்தில் இருக்கிறார்கள்; அவரகத்து நான் உளேன்.
________________________________________
அபி சேத்ஸுது³ராசாரோ ப⁴ஜதே மாமநந்யபா⁴க் |
ஸாது⁴ரேவ ஸ மந்தவ்ய: ஸம்யக்³வ்யவஸிதோ ஹி ஸ: || 9- 30||
மிகவும் கொடிய நடையோனாயினும் பிறிது வழிபடாதே என்னை வழிபடுவோன் நல்லோனென்றே கருதுக. ஏனெனில், நன்கு முயல்கின்றான் ஆதலின்,
________________________________________
க்ஷிப்ரம் ப⁴வதி த⁴ர்மாத்மா ஸ²ஸ்²வச்சா²ந்திம் நிக³ச்ச²தி |
கௌந்தேய ப்ரதி ஜாநீஹி ந மே ப⁴க்த: ப்ரணஸ்²யதி || 9- 31||
அன்னவன் விரைவிலே அறவானாவான், நித்திய சாந்தியு மெய்துவான்.
குந்தி மகனே; குறிக்கொள்! என தன்பன் நாசமடைவதில்லை.
________________________________________
மாம் ஹி பார்த² வ்யபாஸ்²ரித்ய யேऽபி ஸ்யு: பாபயோநய: |
ஸ்த்ரியோ வைஸ்²யாஸ்ததா² ஸூ²த்³ராஸ்தேऽபி யாந்தி பராம் க³திம் || 9- 32||
பாவிகளென்னைப் பணிவாராயினும்,
மாதரேனும், வைசியரேனும், சூத்திரரும் பரகதி பெறுவார்.
________________________________________
கிம் புநர்ப்³ராஹ்மணா: புண்யா ப⁴க்தா ராஜர்ஷயஸ்ததா² |
அநித்யமஸுக²ம் லோகமிமம் ப்ராப்ய ப⁴ஜஸ்வ மாம் || 9- 33||
அப்படியிருக்கத் தூய்மை யார்ந்த  அந்தணரும் ராஜரிஷிகளும்
எனக் கன்பராயின், என்னே! அவர்களைப்பற்றிக்கூறவும் வேண்டுமோ? ஆதலால்;  நிலையற்றதும் இன்ப மற்றதுமாகிய
இவ்வுலகப் பிறவி யெய்திய நீ  என்னை வழிபடக் கடவாய்.
________________________________________
மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி யுக்த்வைவமாத்மாநம் மத்பராயண: || 9- 34||
மனத்தை எனக்காக்கி விடு; பக்தியை எனக்காக்கு; என்னைத் தொழு. என்னைப் பரமாகக் கொள். இங்ஙனமியற்றும் தற்கலப்பு யோகத்தால் என்னையே எய்துவாய்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘ராஜ வித்யா ராஜ குஹ்ய யோகம்’ எனப் பெயர் படைத்த
ஒன்பதாம் அத்தியாயம் நிறைவுற்றது
கீதை – பத்தாவது அத்தியாயம்
விபூதி யோகம்
பக்தியுடன் தியானம் செய்வதற்காகக் கடவுளின் பெருமை இதில் விரித்துக் கூறப்படுகின்றது. கடவுளே எல்லாவற்றிற்கும் பிறப்பிடம். அவரிடமிருந்தே எல்லாம் வெளிவரும். அவரே அழியா வீடு. அவரே அமரர்க்கும் முன்னோர். அவரே பிறப்பிலர். அவரே இறைவன்.

அவரே உயிர்களனைத்தின் உள்ளத்தில் நிறைந்திருக்கும் ஆத்மா. அவரே வேதங்களுள் சிறந்த சாம வேதம். தேவரில் இந்திரன், ருத்திரர்களில் சங்கரன். மலைகளில் மேருமலை, சப்தங்களுள் பிரணவம். ஸ்தாவரங்களுள் இமயமலை. மரங்களுள் அரச மரம். மனிதர்களுள் அரசன்.
பசுக்களில் காமதேனு. அசுரருள் பிரகலாதன். பறவைகளுள் கருடன். வீரர்களுள் ராமன். எழுத்துகளுள் ‘அ’ என்னும் முதலெழுத்து, மாதங்களுள் மார்கழி. மேற்கூறியவையெல்லாம் உதாரணமாக ஒவ்வொன்றிலும் சிறந்தவையாக எடுத்துக் கூறப் பட்டிருக்கின்றன. அவரின் பெருமையைத் தனித்தனியே முற்றிலும் கூறுவது இயலாத காரியம். எந்த அசைபொருளும் அசையாப் பொருளும் அவரை விட்டுத் தனித்து நிற்க முடியாது.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
பூ⁴ய ஏவ மஹாபா³ஹோ ஸ்²ருணு மே பரமம் வச: |
யத்தேऽஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹிதகாம்யயா || 10- 1||
பகவான் சொல்லுகிறான்: பெருந்தோளுடையாய், பின்னுமோர் முறை நான் சொல்லப் புகும் மிகவுயர் சொல்லினைக் கேளாய்; நீ எனக்கு உகந்தவன்; ஆதலால், நினது நலம் வேண்டி இங்கதனை விளம்புவேன் நினக்கே.
________________________________________
ந மே விது³: ஸுரக³ணா: ப்ரப⁴வம் ந மஹர்ஷய: |
அஹமாதி³ர்ஹி தே³வாநாம் மஹர்ஷீணாம் ச ஸர்வஸ²: || 10- 2||
வானவர் கணங்கள் என் மகிமையை உணரார்; பெருந்தகை முனிவருமுணரார்; யாங்கணும், வானோர்கட்கும் மகரிஷிகட்கும் அறிவு, ஆற்றல் நானே, அவர்களும் என்னை உள்ளபடி அறிய முடியாது.
________________________________________
யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || 10- 3||
எவன் என்னை பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகுக்கெலாம் சுவாமி என்று எனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கந் தீர்ந்தான், பாவமனைத்தினும் விடுபடுவான்..
________________________________________
பு³த்³தி⁴ர்ஜ்ஞாநமஸம்மோஹ: க்ஷமா ஸத்யம் த³ம: ஸ²ம: |
ஸுக²ம் து³:க²ம் ப⁴வோऽபா⁴வோ ப⁴யம் சாப⁴யமேவ ச || 10- 4||
புத்தியும், ஞானமும், மயக்கமின்மையும், பொறுத்தலும், வாய்மையும், அடக்கமும், அமைதியும், இன்பமும், துன்பமும், உண்மையும், இன்மையும், அச்சமும், அஞ்சாமையும்,
________________________________________
அஹிம்ஸா ஸமதா துஷ்டிஸ்தபோ தா³நம் யஸோ²ऽயஸ²: |
ப⁴வந்தி பா⁴வா பூ⁴தாநாம் மத்த ஏவ ப்ருத²க்³விதா⁴: || 10- 5||
துன்புறுத்தாமையும், நடுமையும், மகிழ்ச்சியும், ஈகையும், தவமும், இகழும், புகழும், இங்ஙனம் பலவிதமான குணங்கள் என்னிடம் பெறுவன உயிர்கள்.
________________________________________
மஹர்ஷய: ஸப்த பூர்வே சத்வாரோ மநவஸ்ததா² |
மத்³பா⁴வா மாநஸா ஜாதா யேஷாம் லோக இமா: ப்ரஜா: || 10- 6||
முன்னை மகரிஷிகள் எழுவரும் நான்கு மனுக்களும் பிரஹ்மாவின் மனத்திலிருந்து உண்டானார்கள்.என் ஆணைக்கு உட்பட்டவர்கள். உலகிலுள்ள எல்லா மனிதர்களும், இவர்கள் வம்சத்தில் உண்டானவர்களே.
________________________________________
ஏதாம் விபூ⁴திம் யோக³ம் ச மம யோ வேத்தி தத்த்வத: |
ஸோऽவிகம்பேந யோகே³ந யுஜ்யதே நாத்ர ஸம்ஸ²ய: || 10- 7||
இத்தகைத்தாகும் எனது பெருமையும் யோகந்தனையும் உள்ளவாறுணர்வோன் திடமான பக்தி யோகத்தைப் பெறுகிறான்; இதிலோர் ஐயமில்லை.
________________________________________
அஹம் ஸர்வஸ்ய ப்ரப⁴வோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே |
இதி மத்வா ப⁴ஜந்தே மாம் பு³தா⁴ பா⁴வஸமந்விதா: || 10- 8||
நான் அனைத்திற்கும் தொடக்கம். என்னிடமிருந்தே எல்லாம் இயலும். இங்ஙன முணர்ந்த         ஞானிகள் என்னை அன்புடன் தொழுவார்.
________________________________________
மச்சித்தா மத்³க³தப்ராணா போ³த⁴யந்த: பரஸ்பரம் |
கத²யந்தஸ்²ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச || 10- 9||
அகத்தினை என்பால் வைத்து, உயிரை என்மேல் வைத்திருப்பர், ஒருவருக்கொருவர் என் குணங்களையே கூறி, கேட்டு மகிழ்ச்சியும் இன்பமும் அடைவார்.
________________________________________
தேஷாம் ஸததயுக்தாநாம் ப⁴ஜதாம் ப்ரீதிபூர்வகம் |
த³தா³மி பு³த்³தி⁴யோக³ம் தம் யேந மாமுபயாந்தி தே || 10- 10||
எப்போதும் என்னையே  யோகித் திருப்பாராகில் அன்புடன் என்னை வழிபடும் அன்னோர்க்கு யான் புத்தியோகம் அளிப்பேன். இதனால் என்னை யவர் எய்துவார்.
________________________________________
தேஷாமேவாநுகம்பார்த²மஹமஜ்ஞாநஜம் தம: |
நாஸ²யாம்யாத்மபா⁴வஸ்தோ² ஜ்ஞாநதீ³பேந பா⁴ஸ்வதா || 10- 11||
அன்னவர்க்கிரங்கி யான் அன்னவர் ஆத்ம இயல்புயானாகி ஒளியுடை ஞானவிளக்கால் அவரிடை அஞ்ஞானத்தால் தோன்றுமிருளைத் தொலைப்பேன்.
________________________________________
அர்ஜுந உவாச
பரம் ப்³ரஹ்ம பரம் தா⁴ம பவித்ரம் பரமம் ப⁴வாந் |
புருஷம் ஸா²ஸ்²வதம் தி³வ்யமாதி³தே³வமஜம் விபு⁴ம் || 10- 12||
அர்ஜுனன் சொல்லுகிறான்: நீயே பரப்பிரம்மம், நீயே பரஞ்சோதி, தூய்மை யனைத்தினுஞ் சிறப்புடைய தூய்மை நீ. நின்னையே ‘நித்திய புருஷ’னென்றும், ஆதிதேவனென்றும், பிறப்பிலானென்றும், இறைமைக் கடவுளென்றும்,
________________________________________
ஆஹுஸ்த்வாம்ருஷய: ஸர்வே தே³வர்ஷிர்நாரத³ஸ்ததா² |
அஸிதோ தே³வலோ வ்யாஸ: ஸ்வயம் சைவ ப்³ரவீஷி மே || 10- 13||
முனிவரெல்லாரும் மொழிகிறார்; தேவரிஷி நாரதருமங்ஙனே நவில்கிறார். அசிதரும் தேவலரும் வியாசரும் அங்ஙனமே செப்புகிறார். இங்கு நீ நேரே எனக்கு அதை உரைக்கின்றாய்.
________________________________________
ஸர்வமேதத்³ருதம் மந்யே யந்மாம் வத³ஸி கேஸ²வ |
ந ஹி தே ப⁴க³வந்வ்யக்திம் விது³ர்தே³வா ந தா³நவா: || 10- 14||
கேசவா, நினது  சொன்னதனைத்தையும் மெய் யெனக் கொண்டேன். பகவனே, விண்ணவரும் அசுரரும் நின் விளக்கத்தை யறியமுடியுமோ?
________________________________________
ஸ்வயமேவாத்மநாத்மாநம் வேத்த² த்வம் புருஷோத்தம |
பூ⁴தபா⁴வந பூ⁴தேஸ² தே³வதே³வ ஜக³த்பதே || 10- 15||
புருஷோத்தமா, உன்னை நீயே அறிவாய். பூதங்களானாய்! பூதத் தலைவனே! தேவ தேவ! வையத் திறைவா!
________________________________________
வக்துமர்ஹஸ்யஸே²ஷேண தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
யாபி⁴ர்விபூ⁴திபி⁴ர்லோகாநிமாம்ஸ்த்வம் வ்யாப்ய திஷ்ட²ஸி || 10- 16||
எந்த மகிமைகளால் நீ இவ்வுலகங்களைச் சூழ்ந்து நிற்கிறாயோ, அந்த நின் மகிமைகள் தேவத்தன்மையுடையன. அவற்றை எனக்கு மிச்சமின்றி உணர்த்த வேண்டுகிறேன்.
________________________________________
கத²ம் வித்³யாமஹம் யோகி³ம்ஸ்த்வாம் ஸதா³ பரிசிந்தயந் |
கேஷு கேஷு ச பா⁴வேஷு சிந்த்யோऽஸி ப⁴க³வந்மயா || 10- 17||
யோகி! எப்போதும் உன்னையே சிந்தித்து நின்னை யுணருமாறெங்ஙனே? பகவனே! எந்தெந்த கல்யாண குணங்கள் நிறைந்தவனாய் நின்னை யான் கருதல் வேண்டும்?  இதை நீ விரிவாக உபதேசிக்க வேண்டும்.
________________________________________
விஸ்தரேணாத்மநோ யோக³ம் விபூ⁴திம் ச ஜநார்த³ந |
பூ⁴ய: கத²ய த்ருப்திர்ஹி ஸ்²ருண்வதோ நாஸ்தி மேऽம்ருதம் || 10- 18||
ஜனார்த்தனா, நின் யோகத்தையும் பெருமையையும் விரித்து மற்றொரு முறை சொல்க. அமிர்தம் போன்ற நின் சொற்கள் எனக்குத் தெவிட்டவில்லை.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ஹந்த தே கத²யிஷ்யாமி தி³வ்யா ஹ்யாத்மவிபூ⁴தய: |
ப்ராதா⁴ந்யத: குருஸ்²ரேஷ்ட² நாஸ்த்யந்தோ விஸ்தரஸ்ய மே || 10- 19||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குருகுலத்தோன்றலே! என் ஆத்மப் பெருமைகள் தேவத்தன்மை உடையனவே. அவற்றுள் பிரதானமானவற்றை நினக்குச் சொல்லுகிறேன். எனது விஸ்தாரத்துக்கு முடிவில்லை.
________________________________________
அஹமாத்மா கு³டா³கேஸ² ஸர்வபூ⁴தாஸ²யஸ்தி²த: |
அஹமாதி³ஸ்²ச மத்⁴யம் ச பூ⁴தாநாமந்த ஏவ ச || 10- 20||
அர்ஜுனா, உயிர்களனைத்தின் உள்ளே நிற்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடையும் அவற்றின் இறுதியும் யானே.
________________________________________
ஆதி³த்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸு²மாந் |
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸ²ஸீ² || 10- 21||
பன்னிரண்டு ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் அதிகமாக ஒளிரும் சூரியன் நான். காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.
________________________________________
வேதா³நாம் ஸாமவேதோ³ऽஸ்மி தே³வாநாமஸ்மி வாஸவ: |
இந்த்³ரியாணாம் மநஸ்²சாஸ்மி பூ⁴தாநாமஸ்மி சேதநா || 10- 22||
வேதங்களில் யான் சாமவேதம்; தேவரில் இந்திரன்; புலன்களில் மனம் யான்; உயிர்களிடத்தே உணர்வு நான்.
________________________________________
ருத்³ராணாம் ஸ²ங்கரஸ்²சாஸ்மி வித்தேஸோ² யக்ஷரக்ஷஸாம் |
வஸூநாம் பாவகஸ்²சாஸ்மி மேரு: ஸி²க²ரிணாமஹம் || 10- 23||
ருத்திரர்களில் நான் சங்கரன்; இயக்கர் அரக்கருள் யான் குபேரன். வசுக்களில் நான் தீ; மலைகளில் மேரு.
________________________________________
புரோத⁴ஸாம் ச முக்²யம் மாம் வித்³தி⁴ பார்த² ப்³ருஹஸ்பதிம் |
ஸேநாநீநாமஹம் ஸ்கந்த³: ஸரஸாமஸ்மி ஸாக³ர: || 10- 24||
பார்த்தா, புரோகிதர்களில் தலைவனாகிய பிரகஸ்பதி நான் என்றுணர். படைத்தலைவரில் நான் கந்தன். நீர் நிலைகளில் நான் கடல்.
________________________________________
மஹர்ஷீணாம் ப்⁴ருகு³ரஹம் கி³ராமஸ்ம்யேகமக்ஷரம் |
யஜ்ஞாநாம் ஜபயஜ்ஞோऽஸ்மி ஸ்தா²வராணாம் ஹிமாலய: || 10- 25||
.மகரிஷிகளில் நான் பிருகு; வாக்குகளில் நான் ‘ஓம்’ என்ற ஓரெழுத்து; யக்ஞங்களில் நான் ஜபயக்ஞம்; மலைகளில் நான் இமாலயம்.
________________________________________
அஸ்²வத்த²: ஸர்வவ்ருக்ஷாணாம் தே³வர்ஷீணாம் ச நாரத³: |
க³ந்த⁴ர்வாணாம் சித்ரரத²: ஸித்³தா⁴நாம் கபிலோ முநி: || 10- 26||
மரங்களனைத்திலும் நான் அரசமரம். தேவரிஷிகளில் நான் நாரதன்; கந்தர்வருள்ளே நான் சித்ரரதன்; சித்தர்களில் கபில முனி.
________________________________________
உச்சை:ஸ்²ரவஸமஸ்²வாநாம் வித்³தி⁴ மாமம்ருதோத்³ப⁴வம் |
ஐராவதம் க³ஜேந்த்³ராணாம் நராணாம் ச நராதி⁴பம் || 10- 27||
குதிரைகளிடையே நான் அமிர்தத்தில் பிறந்த உச்சை சிரவமென்றுணர். யானைகளில் என்னை ஐராவதமென்றும், மனிதரில் அரசனென்றும் அறி. 27
________________________________________
ஆயுதா⁴நாமஹம் வஜ்ரம் தே⁴நூநாமஸ்மி காமது⁴க் |
ப்ரஜநஸ்²சாஸ்மி கந்த³ர்ப: ஸர்பாணாமஸ்மி வாஸுகி: || 10- 28||
ஆயுதங்களில் நான் வஜ்ரம்; பசுக்களில் நான் காமதேனு; பிறப்பிப்போரில் நான் மன்மதன்; பாம்புகளில் வாசுகி.
________________________________________
அநந்தஸ்²சாஸ்மி நாகா³நாம் வருணோ யாத³ஸாமஹம் |
பித்ரூணாமர்யமா சாஸ்மி யம: ஸம்யமதாமஹம் || 10- 29||
நாகர்களினிடை நான் அநந்தன்; நீர் வாழ்வோரில் வருணன்; பிதிர்க்களில் நான் அரியமான்; தண்டிப்பதில் நான் யமன்.
________________________________________
ப்ரஹ்லாத³ஸ்²சாஸ்மி தை³த்யாநாம் கால: கலயதாமஹம் |
ம்ருகா³ணாம் ச ம்ருகே³ந்த்³ரோऽஹம் வைநதேயஸ்²ச பக்ஷிணாம் || 10- 30||
அசுரரில் பிரகலாதன் யான்; ஆயுளைக்கணகிடுவதில்  காலம் யான்; விலங்குகளில் சிங்கம்; பறவைகளில் கருடன்.
________________________________________
பவந: பவதாமஸ்மி ராம: ஸ²ஸ்த்ரப்⁴ருதாமஹம் |
ஜ²ஷாணாம் மகரஸ்²சாஸ்மி ஸ்ரோதஸாமஸ்மி ஜாஹ்நவீ || 10- 31||
தூய்மை செய்வனவற்றுள்ளே காற்று நான்; வில்லாளிகளில் நான் ராமன்; மீன்களில் நான் மகரம்; ஆறுகளில் கங்கை.
________________________________________
ஸர்கா³ணாமாதி³ரந்தஸ்²ச மத்⁴யம் சைவாஹமர்ஜுந |
அத்⁴யாத்மவித்³யா வித்³யாநாம் வாத³: ப்ரவத³தாமஹம் || 10- 32||
படைப்புகளின் ஆதியும் அந்தமும் (படைத்தல் , காத்தல், அழித்தல் ),நான். அர்ஜுனா, வித்தைகளில் நான் அத்யாத்ம வித்தை; பேசுவோரிடையே நான் பேச்சு.
________________________________________
அக்ஷராணாமகாரோऽஸ்மி த்³வந்த்³வ: ஸாமாஸிகஸ்ய ச |
அஹமேவாக்ஷய: காலோ தா⁴தாஹம் விஸ்²வதோமுக²: || 10- 33||
எழுத்துகளில் நான் அகரம்; புணர்ப்புகளில் இரட்டைப் புணர்ப்பு; நான் அழிவற்ற காலம்; எப்பாரிசத்தும் சுமப்போன் யானே.
________________________________________
ம்ருத்யு: ஸர்வஹரஸ்²சாஹமுத்³ப⁴வஸ்²ச ப⁴விஷ்யதாம் |
கீர்தி: ஸ்ரீர்வாக்ச நாரீணாம் ஸ்ம்ருதிர்மேதா⁴ த்⁴ருதி: க்ஷமா || 10- 34||
எல்லாவற்றையும் அழிக்கும் மரணம் நான். எதிர்காலப் பொருள்களின் பிறப்பு நான். பெண்களிடத்து நான் கீர்த்தி, வாக்கு, நினைவு, மேதை ஸ்திதி, பொறை
________________________________________
ப்³ருஹத்ஸாம ததா² ஸாம்நாம் கா³யத்ரீ ச²ந்த³ஸாமஹம் |
மாஸாநாம் மார்க³ஸீ²ர்ஷோऽஹம்ருதூநாம் குஸுமாகர: || 10- 35||
அங்ஙனமே, சாமங்களில் நான் ‘பிருகத்சாமம்’ என்ற பெரிய சாமம்; சந்தஸ்களில் நான் காயத்ரி; மாதங்களில் நான் மார்கழி; பருவங்களில் மலர் சான்ற இளவேனில்.
________________________________________
द्यूतं छलयतामस्मि तेजस्तेजस्विनामहम् ।
जयोऽस्मि व्यवसायोऽस्मि सत्त्वं सत्त्ववतामहम् ॥१०- ३६॥
வஞ்சகரின் சூது நான். ஒளியுடையோரின் ஒளி நான். நான் வெற்றி; நான் நிச்சயம். உண்மையுடையோரின் உண்மை நான்.
________________________________________
வ்ருஷ்ணீநாம் வாஸுதே³வோऽஸ்மி பாண்ட³வாநாம் த⁴நஞ்ஜய: |
முநீநாமப்யஹம் வ்யாஸ: கவீநாமுஸ²நா கவி: || 10- 37||
விருஷ்ணி குலத்தாரில் நான் வாசுதேவன்; பாண்டவர்களில் தனஞ்ஜயன்; முனிகளில் வியாசன்; கவிகளில் சுக்கிர கவி.
________________________________________
த³ண்டோ³ த³மயதாமஸ்மி நீதிரஸ்மி ஜிகீ³ஷதாம் |
மௌநம் சைவாஸ்மி கு³ஹ்யாநாம் ஜ்ஞாநம் ஜ்ஞாநவதாமஹம் || 10- 38||
ஆள்வோரிடத்தே கோல் நான்; வெற்றியை விரும்புவோரிடத்தே நீதி நான். ரகசியங்களில் நான் மௌனம்! ஞானமுடையோரிடத்தே நான் ஞானம்.
________________________________________
யச்சாபி ஸர்வபூ⁴தாநாம் பீ³ஜம் தத³ஹமர்ஜுந |
ந தத³ஸ்தி விநா யத்ஸ்யாந்மயா பூ⁴தம் சராசரம் || 10- 39||
எல்லா உயிர்களிலும் விதை எதுவோ அது நான். அர்ஜுனா, சராசரங்களில் என்னையின்றியுள்ள பூதமொன்றுமில்லை.
________________________________________
நாந்தோऽஸ்தி மம தி³வ்யாநாம் விபூ⁴தீநாம் பரந்தப |
ஏஷ தூத்³தே³ஸ²த: ப்ரோக்தோ விபூ⁴தேர்விஸ்தரோ மயா || 10- 40||
பார்த்தா, என் திவ்ய மகிமைகளுக்கு முடிவில்லை. விஸ்தாரமான என் மகிமைகளில் கொஞ்சம் மாத்திரமே உனக்குரைத்தேன்.
________________________________________
யத்³யத்³விபூ⁴திமத்ஸத்த்வம் ஸ்ரீமதூ³ர்ஜிதமேவ வா |
தத்ததே³வாவக³ச்ச² த்வம் மம தேஜோம்ऽஸ²ஸம்ப⁴வம் || 10- 41||
எதெது பெருமையுடைத்து, உண்மையுடைத்து, அழகுடைத்து, வலிமையுடைத்து -அதுவெல்லாம் எனது ஒளியின் அம்சத்தில் பிறந்ததென்றுணர்.
________________________________________
அத²வா ப³ஹுநைதேந கிம் ஜ்ஞாதேந தவார்ஜுந |
விஷ்டப்⁴யாஹமித³ம் க்ருத்ஸ்நமேகாம்ஸே²ந ஸ்தி²தோ ஜக³த் || 10- 42||
அன்றி, இதைப் பலவாறாகத் தெரிவதில் உனக்குப் பயன் யாது? எனது கலையன்றால் இவ்வையகத்தை நிலை நிறுத்தியுள்ளேன்.( என் சக்தியின் ஒரு பகுதியினாலேயே இவ் உலகனைத்தும் படைத்து, அவைகளுல் பரந்திருந்து, அவைகளைத்தரித்து  நியமித்து ஆள்கிறேன்)________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘விபூதி யோகம்’ எனப் பெயர் படைத்த
பத்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பதினொன்றாவது அத்தியாயம்
விசுவரூப தரிசன யோகம்
இங்ஙனம் கண்ணனுடைய பெருமைகளைக் கேட்ட அர்ஜுனன் அவற்றை நேரில் காண வேண்டுமென்ற விருப்பமுற்றுக் கண்ணனை வேண்ட, அவர் அவற்றைக் காண்பதற்குரிய திவ்ய நேத்திரங்களை அளிக்கிறார். அர்ஜுனன் அவற்றால் கண்ணனுடைய விசுவரூபத்தைக் கண்டு மகிழ்கிறான்.
விசுவரூபத்தின் சொரூபம் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. அநேக வாய்களும், பல கண்களும், பல ஆயுதங்களும், சிறந்த ஆடை ஆபரணங்களும், சிறந்த வாசனைகளும் பொருந்திய அந்த விசுவரூபத்தில் வையக முழுவதும் ஒருங்கே அடங்கியிருப்பதைக் கண்ட அர்ஜுனன் வியப்புற்றுக் கண்ணனைத் துதிக்கிறான்.
பிறகு அர்ச்சுனனது வேண்டுகோளின் பேரில், கண்ணன் தமது விசுவரூபத்தைச் சுருக்கிக்கொண்டு, முன்போல் கைகளில் சாட்டையும் சங்கு, சக்கரங்களையுமேந்தி நின்று, தமது உண்மையான சொரூபத்தைக் காணவும், தம்மைப் பெறவும் பக்தி ஒன்றே சிறந்த மார்க்கமாதலால் தம்மையே நேசித்திருக்கும்படி அர்ச்சுனனுக்கு உபதேசிக்கிறான்.
________________________________________
மதுநுக்ரஹாய பரமம் குஹ்யம் அத்யாத்ம சம்ஜிதம்                                                                                           யத் த்வயோக்தம் வசஸ்தேன மோஹோயம் விசுதோ மம            11-1
அர்ஜுனன் சொல்லுகிறான்: என்மீதருள் பூண்டு, எனக்கிரங்கி, ஆத்ம ஞானமென்ற பரம ரகசியத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்து போயிற்று.
________________________________________
ப⁴வாப்யயௌ ஹி பூ⁴தாநாம் ஸ்²ருதௌ விஸ்தரஸோ² மயா |
த்வத்த: கமலபத்ராக்ஷ மாஹாத்ம்யமபி சாவ்யயம் || 11- 2||
உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் பற்றி விரிவுறக் கேட்டேன். தாமரையிதழ் போன்ற விழிகளையுடையோய், நின் கேடற்ற பெருமையையும் கேட்டேன்.
________________________________________
ஏவமேதத்³யதா²த்த² த்வமாத்மாநம் பரமேஸ்²வர |
த்³ரஷ்டுமிச்சா²மி தே ரூபமைஸ்²வரம் புருஷோத்தம || 11- 3||
பரமேசுவரா, புருஷோத்தமா, நின்னைப்பற்றி நீ எனக்குச் சொல்லியபடியே நின் ஈசுவர ரூபத்தைக் காண விரும்புகிறேன்.
________________________________________
மந்யஸே யதி³ தச்ச²க்யம் மயா த்³ரஷ்டுமிதி ப்ரபோ⁴ |
யோகே³ஸ்²வர ததோ மே த்வம் த³ர்ஸ²யாத்மாநமவ்யயம் || 11- 4||
இறைவனே, யோகேசுவரா, அதை நான் காணுதல் சாத்தியமென்று நீ கருதுவாயெனில், எனக்கு நின் அழிவற்ற ஆத்மாவைக் காட்டுக.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
பஸ்²ய மே பார்த² ரூபாணி ஸ²தஸோ²ऽத² ஸஹஸ்ரஸ²: |
நாநாவிதா⁴நி தி³வ்யாநி நாநாவர்ணாக்ருதீநி ச || 11- 5||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்:  பல நூறாகவும், பல்லாயிரமாகவும்,
வகை பல, நிறம் பல, அளவு பலவாகும்  என திவ்ய ரூபங்களைப் பார்! பார்த்தா.
________________________________________
பஸ்²யாதி³த்யாந்வஸூந்ருத்³ராநஸ்²விநௌ மருதஸ்ததா² |
ப³ஹூந்யத்³ருஷ்டபூர்வாணி பஸ்²யாஸ்²சர்யாணி பா⁴ரத || 11- 6||
ஆதித்யர்களைப் பார்; வசுக்களைப் பார்; அசுவினி தேவரைப் பார்; மருத்துக்களைப் பார்; பாரதா, இதற்கு முன் கண்டிராத பல ஆச்சரியங்களைப் பார்.
________________________________________
இஹைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் பஸ்²யாத்³ய ஸசராசரம் |
மம தே³ஹே கு³டா³கேஸ² யச்சாந்யத்³ த்³ரஷ்டுமிச்ச²ஸி || 11- 7||
அர்ஜுனா, இன்று, இங்கே என்னுடலில் சராசரமான உலகம் முழுவதும் ஒருங்கு நிற்பதைப் பார்; இன்னும் வேறு நீ எதைக்காண விரும்பினும், அதை இங்குக் காண்.
________________________________________
ந து மாம் ஸ²க்யஸே த்³ரஷ்டுமநேநைவ ஸ்வசக்ஷுஷா |
தி³வ்யம் த³தா³மி தே சக்ஷு: பஸ்²ய மே யோக³மைஸ்²வரம் || 11- 8||
உன்னுடைய இயற்கையான இக்கண்களால் என்னைப் பார்க்க முடியாது. உனக்கு ஞானக் கண் கொடுக்கிறேன். என்னுடைய ஈசுவர யோகத்தைப் பார்.
________________________________________
ஸஞ்ஜய உவாச
ஏவமுக்த்வா ததோ ராஜந்மஹாயோகே³ஸ்²வரோ ஹரி: |
த³ர்ஸ²யாமாஸ பார்தா²ய பரமம் ரூபமைஸ்²வரம் || 11- 9||
சஞ்சயன் சொல்லுகிறான்: அரசனே, இவ்வாறுரைத்துவிட்டு, அப்பால் பெரிய யோகத்தலைவனாகிய ஹரி, பார்த்தனுக்கு மிக உயர்ந்த தன் கடவுள் வடிவைக் காட்டினான்.
________________________________________
அநேகவக்த்ரநயநமநேகாத்³பு⁴தத³ர்ஸ²நம் |
அநேகதி³வ்யாப⁴ரணம் தி³வ்யாநேகோத்³யதாயுத⁴ம் || 11- 10||
(அவ்வடிவம்) பல வாய்களும் பல விழிகளுமுடையது; பல அற்புதக் காட்சிகளுடையது; பல திவ்யாபரணங்கள் பூண்டது; பல தெய்வீக ஆயுதங்கள் ஏந்தியது.
________________________________________
தி³வ்யமால்யாம்ப³ரத⁴ரம் தி³வ்யக³ந்தா⁴நுலேபநம் |
ஸர்வாஸ்²சர்யமயம் தே³வமநந்தம் விஸ்²வதோமுக²ம் || 11- 11||
திவ்ய மாலைகளும் ஆடைகளும் புனைந்தது; திவ்ய கந்தங்கள் பூசியது; எல்லா வியப்புக்களும் சான்றது; எல்லையற்றது; எங்கும் முகங்களுடைய தேவரூபம்.
________________________________________
தி³வி ஸூர்யஸஹஸ்ரஸ்ய ப⁴வேத்³யுக³பது³த்தி²தா |
யதி³ பா⁴: ஸத்³ருஸீ² ஸா ஸ்யாத்³பா⁴ஸஸ்தஸ்ய மஹாத்மந: || 11- 12||
வானத்தில் ஒருங்கே ஆயிரம் இரவிகள் எழுவாராயின் அங்கு தோன்றும் ஒளியை அந்த மகாத்மாவின் ஒளிக்கு நிகராகக் கூறலாம்.
________________________________________
தத்ரைகஸ்த²ம் ஜக³த்க்ருத்ஸ்நம் ப்ரவிப⁴க்தமநேகதா⁴ |
அபஸ்²யத்³தே³வதே³வஸ்ய ஸ²ரீரே பாண்ட³வஸ்ததா³ || 11- 13||
அங்கு பல பகுதிப்பட்டதாய், வையக முழுவதும், அந்தத் தேவ தேவனுடைய சரீரத்தில் ஒருங்குற்று நிற்பதை அப்போது பாண்டவன் கண்டான்.
________________________________________
தத: ஸ விஸ்மயாவிஷ்டோ ஹ்ருஷ்டரோமா த⁴நஞ்ஜய: |
ப்ரணம்ய ஸி²ரஸா தே³வம் க்ருதாஞ்ஜலிரபா⁴ஷத || 11- 14||
அப்போது தனஞ்ஜயன் பெரு வியப்பெய்தி, மயிர் சிலிர்த்து, அக்கடவுளை முடியால் வணங்கிக் கைகளைக் கூப்பிக் கொண்டு சொல்லுகிறான்.
________________________________________
அர்ஜுந உவாச
பஸ்²யாமி தே³வாம்ஸ்தவ தே³வ தே³ஹே ஸர்வாம்ஸ்ததா² பூ⁴தவிஸே²ஷஸங்கா⁴ந் |
ப்³ரஹ்மாணமீஸ²ம் கமலாஸநஸ்த² ம்ருஷீம்ஸ்²ச ஸர்வாநுரகா³ம்ஸ்²ச தி³வ்யாந் || 11- 15||
அர்ஜுனன் சொல்லுகிறான்: தேவனே, நின் உடலில் எல்லாத் தேவர்களையும் காண்கிறேன், பூத வகைகளின் தொகுதிகளைக் காண்கிறேன். தாமரை மலரில் வீற்றிருக்கும் ஈசனாகிய பிரமனையும், எல்லா ரிஷிகளையும் தேவ சர்ப்பங்களையும் இங்குக் காண்கிறேன்.
________________________________________
அநேகபா³ஹூத³ரவக்த்ரநேத்ரம் பஸ்²யாமி த்வாம் ஸர்வதோऽநந்தரூபம் |
நாந்தம் ந மத்⁴யம் ந புநஸ்தவாதி³ம் பஸ்²யாமி விஸ்²வேஸ்²வர விஸ்²வரூப || 11- 16||
பல தோளும், பல வயிறும், பல வாயும், பல விழிகளுமுடைய எல்லையற்ற வடிவிலே நினை எங்கணும் காண்கிறேன். எல்லாவற்றுக்கும் ஈசனே, எல்லாந் தன் வடிவாகக் கொண்டவனே, உனக்கு முடிவேனும், இடையேனும் காண்கிலேன்.
________________________________________
கிரீடிநம் க³தி³நம் சக்ரிணம் ச தேஜோராஸி²ம் ஸர்வதோ தீ³ப்திமந்தம் |
பஸ்²யாமி த்வாம் து³ர்நிரீக்ஷ்யம் ஸமந்தா த்³தீ³ப்தாநலார்கத்³யுதிமப்ரமேயம் || 11- 17||
மகுடமும், தண்டும், வலயமும் தரித்தாய், ஒளித் திரளாகி யாங்கணும் ஒளிர்வாய், தழல்படு தீயும் ஞாயிறும் போல அளவிடற்கரியதாக நினைக் காண்கிறேன்.
________________________________________
த்வமக்ஷரம் பரமம் வேதி³தவ்யம் த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
த்வமவ்யய: ஸா²ஸ்²வதத⁴ர்மகோ³ப்தா ஸநாதநஸ்த்வம் புருஷோ மதோ மே || 11- 18||
அழிவிலாய், அறிதற்குரியனவற்றில் மிகவுஞ் சிறந்தது; வையத்தின் உயர் தனி உறையுளாவாய்; கேடிலாய்; என்று மியல் அறத்தினைக் காப்பாய்; ‘சநாதன புருஷன்’ நீயெனக் காண்கிறேன்.
________________________________________
அநாதி³மத்⁴யாந்தமநந்தவீர்ய மநந்தபா³ஹும் ஸ²ஸி²ஸூர்யநேத்ரம் |
பஸ்²யாமி த்வாம் தீ³ப்தஹுதாஸ²வக்த்ரம் ஸ்வதேஜஸா விஸ்²வமித³ம் தபந்தம் || 11- 19||
ஆதியும் நடுவும் அந்தமுமில்லாய், வரம்பிலா விறலினை; கணக்கிலாத் தோளினை; ஞாயிறுந் திங்களும் நயனமாக் கொண்டனை; எரியுங்கனல் போலியலு முகத்தினை; ஒளியால் முழுமையுலகையும் கொளுத்துவாய்; இங்ஙனமுன்னைக் காண்கிறேன்.
________________________________________
த்³யாவாப்ருதி²வ்யோரித³மந்தரம் ஹி வ்யாப்தம் த்வயைகேந தி³ஸ²ஸ்²ச ஸர்வா: |
த்³ருஷ்ட்வாத்³பு⁴தம் ரூபமுக்³ரம் தவேத³ம் லோகத்ரயம் ப்ரவ்யதி²தம் மஹாத்மந் || 11- 20||
வானத்துக்கும் பூமிக்கும் நடுவேயுள்ள இடைவெளியும் எல்லாத் திசைகளும் நின்னால் நிரப்புற்றிருக்கின்றன. உன்னுடைய அற்புதமும் உக்கிரமுமான இவ்வடிவத்தைக் கண்டு மூன்று உலகங்களும் சோர்வெய்துகின்றன.
________________________________________
அமீ ஹி த்வாம் ஸுரஸங்கா⁴ விஸ²ந்தி கேசித்³பீ⁴தா: ப்ராஞ்ஜலயோ க்³ருணந்தி |
ஸ்வஸ்தீத்யுக்த்வா மஹர்ஷிஸித்³த⁴ஸங்கா⁴: ஸ்துவந்தி த்வாம் ஸ்துதிபி⁴: புஷ்கலாபி⁴: || 11- 21||
இந்த வானவர் கூட்டமெல்லாம் நின்னுள்ளே புகுகின்றது. சிலர் அச்சமெய்தி நின்னைக் கைகூப்பிப் புகழ்கின்றனர். மகரிஷிகளும் சித்தர்களுமாகிய கூட்டத்தார் நின்னை வண்மையுடைய புகழுரைகள் சொல்லிப் புகழ்கின்றார்.
________________________________________
ருத்³ராதி³த்யா வஸவோ யே ச ஸாத்⁴யா விஸ்²வேऽஸ்²விநௌ மருதஸ்²சோஷ்மபாஸ்²ச |
க³ந்த⁴ர்வயக்ஷாஸுரஸித்³த⁴ஸங்கா⁴ வீக்ஷந்தே த்வாம் விஸ்மிதாஸ்²சைவ ஸர்வே || 11- 22||

ஸர்வே ஏவ விஸ்மிதா: ச = எல்லோரும் வியப்புடன்
த்வாம் வீக்ஷந்தே = உன்னைப் பார்க்கிறார்கள்
ருத்திரர், ஆதித்யர், வசுக்கள், சாத்யர், விசுவேதேவர், அசுவினி தேவர், மருத்துக்கள், உஷ்மபர், கந்தர்வர், யக்ஷர், அசுரர், சித்தர் இக்கூட்டத்தார்களெல்லாரும் நின்னை வியப்புடன் நோக்குகின்றனர்.
________________________________________

ரூபம் மஹத்தே ப³ஹுவக்த்ரநேத்ரம்
மஹாபா³ஹோ ப³ஹுபா³ஹூருபாத³ம் |
ப³ஹூத³ரம் ப³ஹுத³ம்ஷ்ட்ராகராலம்
த்³ருஷ்ட்வா லோகா: ப்ரவ்யதி²தாஸ்ததா²ஹம் || 11- 23||
பெருந்தோளாய், பல வாய்களும், விழிகளும், பல கைகளும், பல கால்களும், பல வயிறுகளும், பல பயங்கரமான பற்களுமுடைய நின் பெருவடிவைக் கண்டு, உலகங்கள் நடுங்குகின்றன, யானும் அங்ஙனமே.
________________________________________
நப⁴:ஸ்ப்ருஸ²ம் தீ³ப்தமநேகவர்ணம்
வ்யாத்தாநநம் தீ³ப்தவிஸா²லநேத்ரம் |
த்³ருஷ்ட்வா ஹி த்வாம் ப்ரவ்யதி²தாந்தராத்மா
த்⁴ருதிம் ந விந்தா³மி ஸ²மம் ச விஷ்ணோ || 11- 24||
வானளாவி,  பல வர்ணங்களுடன் பிரகாசிக்கும், திறந்த வாய்களும் கனல்கின்ற விழிகளுமுடையது, இளைய நின் வடிவத்தைக் கண்டு விஷ்ணுவே, எனக்கு நிலைகொள்ளவில்லை, யான் அமைதி இழந்துவிட்டேன் உடல் பதறுகிறது..
________________________________________
த³ம்ஷ்ட்ராகராலாநி ச தே முகா²நி
த்³ருஷ்ட்வைவ காலாநலஸந்நிபா⁴நி |
தி³ஸோ² ந ஜாநே ந லபே⁴ ச ஸ²ர்ம
ப்ரஸீத³ தே³வேஸ² ஜக³ந்நிவாஸ || 11- 25||
அச்சம்தரும் பற்களை யுடைத்தாய், ஊழித் தீ போன்ற நின் முகங்களைக் கண்ட அளவிலே எனக்குத் திசைகள் தெரியவில்லை; சாந்தி தோன்றவில்லை. தேவர்களின் தலைவனே; வையகத்துக்கு உறைவிடம் ஆவாய்; அருள் செய்க.
________________________________________
அமீ ச த்வாம் த்⁴ருதராஷ்ட்ரஸ்ய புத்ரா:
ஸர்வே ஸஹைவாவநிபாலஸங்கை⁴: |
பீ⁴ஷ்மோ த்³ரோண: ஸூதபுத்ரஸ்ததா²ஸௌ
ஸஹாஸ்மதீ³யைரபி யோத⁴முக்²யை: || 11- 26||
இந்தத் திருதராஷ்டிரனின் மக்களெல்லாரும் மற்ற அரசக் கூட்டத்தார்களுடன் நின்னுள்ளே (புகுகின்றனர்). பீஷ்மனும், துரோணனும், சூதன் மகனாகிய இந்தக் கர்ணனும், நம்முடைய பக்கத்து முக்கிய வீரர்களும்
________________________________________
வக்த்ராணி தே த்வரமாணா விஸ²ந்தி
த³ம்ஷ்ட்ராகராலாநி ப⁴யாநகாநி |
கேசித்³விலக்³நா த³ஸ²நாந்தரேஷு
ஸந்த்³ருஸ்²யந்தே சூர்ணிதைருத்தமாங்கை³: || 11- 27||
கொடிய பற்களுடைய பயங்கரமான நின் வாய்களில் விரைவுற்று வீழ்கின்றனர். சிலர் நின் பல்லிடைகளில் அகப்பட்டுப் பொடிபட்ட தலையினராகக் காணப்படுகின்றனர்.
________________________________________
யதா² நதீ³நாம் ப³ஹவோऽம்பு³வேகா³:
ஸமுத்³ரமேவாபி⁴முகா² த்³ரவந்தி |
ததா² தவாமீ நரலோகவீரா
விஸ²ந்தி வக்த்ராண்யபி⁴விஜ்வலந்தி || 11- 28||
பல ஆறுகளின் வெள்ளங்கள் கடலையே நோக்கி வந்து வீழ்வது போல், இந்த நரலோக வீரர் நின் சுடர்கின்ற வாய்களில் வந்து வீழ்கின்றனர்.
________________________________________
யதா² ப்ரதீ³ப்தம் ஜ்வலநம் பதங்கா³
விஸ²ந்தி நாஸா²ய ஸம்ருத்³த⁴வேகா³: |
ததை²வ நாஸா²ய விஸ²ந்தி லோகா
ஸ்தவாபி வக்த்ராணி ஸம்ருத்³த⁴வேகா³: || 11- 29||
விளக்குப் பூச்சிகள் மிகவும் விரைவுடனெய்தி எரிகின்ற விளக்கில் வீழ்ந்து நாசமுறுதல் போலே, உலகங்கள் மிகவும் விரைவுடன் நின் வாய்களில் வந்து விழுந்து நாசமடைகின்றன.
________________________________________
லேலிஹ்யஸே க்³ரஸமாந: ஸமந்தால்லோகாந்ஸமக்³ராந்வத³நைர்ஜ்வலத்³பி⁴: |
தேஜோபி⁴ராபூர்ய ஜக³த்ஸமக்³ரம் பா⁴ஸஸ்தவோக்³ரா: ப்ரதபந்தி விஷ்ணோ || 11- 30||
கனல்கின்ற நின் வாய்களால் எப்புறத்தும் எல்லா உலகங்களையும் நீ தீண்டுகிறாய். விஷ்ணு! நின் உக்கிரமான சுடர்கள் கதிர்களால் வைய முழுவதையும் நிரப்பிச் சுடுகின்றன.
________________________________________
ஆக்²யாஹி மே கோ ப⁴வாநுக்³ரரூபோ
நமோऽஸ்து தே தே³வவர ப்ரஸீத³ |
விஜ்ஞாதுமிச்சா²மி ப⁴வந்தமாத்³யம்
ந ஹி ப்ரஜாநாமி தவ ப்ரவ்ருத்திம் || 11- 31||
உக்கிர ரூபந் தரித்த நீ யார்? எனக்குரைத்திடுக. தேவர்களில் சிறந்தாய், நின்னை வணங்குகிறேன். அருள்புரி. ஆதியாகிய உன்னை அறிய விரும்புகிறேன். இங்கு உனது செயலை அறிகிலேன்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
காலோऽஸ்மி லோகக்ஷயக்ருத்ப்ரவ்ருத்³தோ⁴
லோகாந்ஸமாஹர்துமிஹ ப்ரவ்ருத்த: |
ருதேऽபி த்வாம் ந ப⁴விஷ்யந்தி ஸர்வே
யேऽவஸ்தி²தா: ப்ரத்யநீகேஷு யோதா⁴: || 11- 32||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: உலகத்தை அழிக்கத் தலைப்பட்ட காலமே நான் மனிதர்களை இங்குக் கொல்லத் தொடங்கியுள்ளேன். இங்கிரு திறத்துப் படைகளிலே நிற்கும் போராட்கள் அனைவரினும் உன்னைத் தவிர வேறு யாரும் மிஞ்சமாட்டார்கள்
________________________________________
தஸ்மாத்த்வமுத்திஷ்ட² யஸோ² லப⁴ஸ்வ
ஜித்வா ஸ²த்ரூந் பு⁴ங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்³த⁴ம் |
மயைவைதே நிஹதா: பூர்வமேவ
நிமித்தமாத்ரம் ப⁴வ ஸவ்யஸாசிந் || 11- 33||
ஆதலால் நீ எழுந்து நில்; புகழெய்து; பகைவரை வென்று செழிய ராஜ்யத்தை ஆள், நான் இவர்களை ஏற்கெனவே கொன்றாய்விட்டது. இடக்கை வீரா, நீ வெளிக் காரணமாக மட்டுமே நின்று கர்மா செய்.
________________________________________
த்³ரோணம் ச பீ⁴ஷ்மம் ச ஜயத்³ரத²ம் ச
கர்ணம் ததா²ந்யாநபி யோத⁴வீராந் |
மயா ஹதாம்ஸ்த்வம் ஜஹி மா வ்யதி²ஷ்டா²
யுத்⁴யஸ்வ ஜேதாஸி ரணே ஸபத்நாந் || 11- 34||
துரோணனையும், பீஷ்மனையும், ஜயத்ரதனையும், கர்ணனையும் மற்ற யுத்த வீரர்களையும் நான் கொன்றாய்விட்டது. (வெளிப்படையாக) நீ கொல். அஞ்சாதே; போர் செய்; செருக்களத்தில் நின் பகைவரை வெல்வாய்
________________________________________
ஸஞ்ஜய உவாச
ஏதச்ச்²ருத்வா வசநம் கேஸ²வஸ்ய
க்ருதாஞ்ஜலிர்வேபமாந: கிரீடீ |
நமஸ்க்ருத்வா பூ⁴ய ஏவாஹ க்ருஷ்ணம்
ஸக³த்³க³த³ம் பீ⁴தபீ⁴த: ப்ரணம்ய || 11- 35||
சஞ்சயன் சொல்லுகிறான்: கேசவன் சொல்லிய இவ்வார்த்தையைக் கேட்டுப் பார்த்தன் மெய்ந் நடுக்கத்துடன் அஞ்சலி புரிந்தான். மீண்டும் கண்ணனை நமஸ்காரம் பண்ணி, அச்சத்துடன் வாய் குழறி வணங்கிச் சொல்லுகிறான்.
________________________________________
அர்ஜுந உவாச
ஸ்தா²நே ஹ்ருஷீகேஸ² தவ ப்ரகீர்த்யா
ஜக³த்ப்ரஹ்ருஷ்யத்யநுரஜ்யதே ச |
ரக்ஷாம்ஸி பீ⁴தாநி தி³ஸோ² த்³ரவந்தி
ஸர்வே நமஸ்யந்தி ச ஸித்³த⁴ஸங்கா⁴: || 11- 36||
அர்ஜுனன் சொல்லுகிறான்: இருஷீகேசா, உன் பெருங்கீர்த்தியில் உலகங்களிப்பதும், இன்புறுவதும் பொருந்தும், ராட்சதர் அச்சமுற்றுத் திசைகளில் மறைகிறார்கள், சித்தக் குழாத்தினர் அனைவரும் நின்னை வணங்குகிறார்கள்.
________________________________________
கஸ்மாச்ச தே ந நமேரந்மஹாத்மந்
க³ரீயஸே ப்³ரஹ்மணோऽப்யாதி³கர்த்ரே |
அநந்த தே³வேஸ² ஜக³ந்நிவாஸ
த்வமக்ஷரம் ஸத³ஸத்தத்பரம் யத் || 11- 37||
மகாத்மாவே, நின்னை எங்ஙனம் வணங்காதிருப்பார்? நீ ஆதி கர்த்தா. பிரம்மனிலும் சிறந்தாய், அநந்தா, தேவேசா, வையத்தின் உறைவிடமே, நீ அழிவற்ற பொருள், நீ சத்; நீ அசத்; நீ அவற்றைக் கடந்த பிரம்மம்.
________________________________________
த்வமாதி³தே³வ: புருஷ: புராண:
த்வமஸ்ய விஸ்²வஸ்ய பரம் நிதா⁴நம் |
வேத்தாஸி வேத்³யம் ச பரம் ச தா⁴ம
த்வயா ததம் விஸ்²வமநந்தரூப || 11- 38||
நீ ஆதிதேவன், புருஷோத்தமன், நீ இந்த அகிலத்துக்கெல்லாம் மேலான  இருப்பிடமாவீர்.  அறிபவனும் நீர்., நீரேஅறிபடு பொருள், நீ பரமபதம்; அநந்த ரூபா, நீ இவ்வுலகினுட் பரந்து கிடக்கிறாய்
________________________________________
வாயுர்யமோऽக்³நிர்வருண: ஸ²ஸா²ங்க:
ப்ரஜாபதிஸ்த்வம் ப்ரபிதாமஹஸ்²ச |
நமோ நமஸ்தேऽஸ்து ஸஹஸ்ரக்ருத்வ:
புநஸ்²ச பூ⁴யோऽபி நமோ நமஸ்தே || 11- 39||
நீ வாயு, யமன், அக்கினி, வருணன், சந்திரன், முப்பாட்டானாகிய பிரம்மன் நீ, உன்னை ஆயிரமுறை கும்பிடுகிறேன். மீட்டுமீட்டும் உனக்கு “நமோ நம!”
________________________________________
நம: புரஸ்தாத³த² ப்ருஷ்ட²தஸ்தே
நமோऽஸ்து தே ஸர்வத ஏவ ஸர்வ |
அநந்தவீர்யாமிதவிக்ரமஸ்த்வம்
ஸர்வம் ஸமாப்நோஷி ததோऽஸி ஸர்வ: || 11- 40||
உன்னை முன் புறத்தே நமஸ்கரிக்கிறேன்; உன்னைப் பின்புறத்தே நமஸ்கரிக்கிறேன் ; எல்லாமாவாய், உன்னை எப்புறத்துங் நமஸ்கரிக்கிறேன். நீ எல்லையற்ற வீரியமுடையாய், அளவற்ற வலிமையுடையாய், சர்வத்திலும் நிலைத்திருக்கிறாய்; ஆதலால் நீ சர்வன்.
________________________________________
ஸகே²தி மத்வா ப்ரஸப⁴ம் யது³க்தம்
ஹே க்ருஷ்ண ஹே யாத³வ ஹே ஸகே²தி |
அஜாநதா மஹிமாநம் தவேத³ம்
மயா ப்ரமாதா³த்ப்ரணயேந வாபி || 11- 41||
இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ யாதவா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லி யிருப்பதையும்,
________________________________________
யச்சாவஹாஸார்த²மஸத்க்ருதோऽஸி
விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு |
ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம் || 11- 42||
விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன். அளவற்றோய்!
________________________________________
பிதாஸி லோகஸ்ய சராசரஸ்ய
த்வமஸ்ய பூஜ்யஸ்²ச கு³ருர்க³ரீயாந் |
ந த்வத்ஸமோऽஸ்த்யப்⁴யதி⁴க: குதோऽந்யோ
லோகத்ரயேऽப்யப்ரதிமப்ரபா⁴வ || 11- 43||
சராசரமாகிய இவ்வுலகத்துக்கு நீ தந்தையாவாய். இவ்வுலகத்தால் தொழத்தக்கனை; மிகவும் சிறந்த குரு நீ. உனக்கு நிகர் யாருமில்லை. எனில் உனக்கு மேல் வேறுயாவர்? மூன்று உலகங்களிலும் ஒப்பற்ற பெருமை உடையவனே!
________________________________________
தஸ்மாத்ப்ரணம்ய ப்ரணிதா⁴ய காயம்
ப்ரஸாத³யே த்வாமஹமீஸ²மீட்³யம் |
பிதேவ புத்ரஸ்ய ஸகே²வ ஸக்²யு:
ப்ரிய: ப்ரியாயார்ஹஸி தே³வ ஸோடு⁴ம் || 11- 44||
ஆதலால், உடல் குனிய வணங்கி, நின்பால் அருள் கேட்கிறேன். ஈசா வேண்டுதற்குரியாய், மகனைத் தந்தை போலும், தோழனைத் தோழன் போலும், அன்பனையன்பன் போலும் நீ என்னைப் பொறுத்தல் வேண்டும்.
________________________________________
அத்³ருஷ்டபூர்வம் ஹ்ருஷிதோऽஸ்மி த்³ருஷ்ட்வா
ப⁴யேந ச ப்ரவ்யதி²தம் மநோ மே |
ததே³வ மே த³ர்ஸ²ய தே³வ ரூபம்
ப்ரஸீத³ தே³வேஸ² ஜக³ந்நிவாஸ || 11- 45||
இதற்கு முன் காணாததை இன்று கண்டு மகிழ்சியுறுகிறேன்; எனினும் என் மனம் அச்சத்தால் சோர்கிறது. தேவா, எனக்கு நின் முன்னை வடிவத்தைக் காட்டுக. தேவேசா, ஜகத்தின் நிலையமே எனக்கருள் செய்க.
________________________________________
முன்போலவே, கிரீடமும் தண்டும் கையில் சக்கரமுமாக நின்னைக் காண விரும்புகிறேன். அகில மூர்த்தியே. ஆயிரத் தோளாய், முன்னை நாற்றோள் வடிவினை எய்துக.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
மயா ப்ரஸந்நேந தவார்ஜுநேத³ம் ரூபம் பரம் த³ர்ஸி²தமாத்மயோகா³த் |
தேஜோமயம் விஸ்²வமநந்தமாத்³யம் யந்மே த்வத³ந்யேந ந த்³ருஷ்டபூர்வம் || 11- 47||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அர்ஜுனா, யான் அருள்கொண்டு ஆத்ம யோகத்தால் எனது பரவடிவை நினக்குக் காண்பித்தேன். ஒளிமயமாய் அனைத்துமாய், எல்லையற்றதாய், ஆதியாகிய இவ் வடிவத்தை இதற்கு முன் உன்னைத் தவிர வேறு யாரும் பார்த்ததே கிடையாது.
________________________________________
ந வேத³யஜ்ஞாத்⁴யயநைர்ந தா³நைர்ந ச க்ரியாபி⁴ர்ந தபோபி⁴ருக்³ரை: |
ஏவம்ரூப: ஸ²க்ய அஹம் ந்ருலோகே த்³ரஷ்டும் த்வத³ந்யேந குருப்ரவீர || 11- 48||
வேதங்களாலும், வேள்வியாலும், கல்விகளாலும், தானங்களாலும், கிரியைகளாலேனும், மனித உலகத்தில் என்னை இவ்வடிவத்தில் உன்னையன்றி வேறு யாராலும் பார்க்க முடியாது. குருகுலத்தில் சிறந்த வீரா!
________________________________________
மா தே வ்யதா² மா ச விமூட⁴பா⁴வோ த்³ருஷ்ட்வா ரூபம் கோ⁴ரமீத்³ருங்மமேத³ம் |
வ்யபேதபீ⁴: ப்ரீதமநா: புநஸ்த்வம் ததே³வ மே ரூபமித³ம் ப்ரபஸ்²ய || 11- 49||
இப்படிப்பட்ட என் கோர வடிவத்தைக் கண்டு கலங்காதே; மயங்காதே, அச்சம் நீங்கி இன்புற்ற மனத்துடன் எனது முன்னை வடிவத்தை நீ இதோ பார்!
________________________________________
ஸஞ்ஜய உவாச
இத்யர்ஜுநம் வாஸுதே³வஸ்ததோ²க்த்வா ஸ்வகம் ரூபம் த³ர்ஸ²யாமாஸ பூ⁴ய: |
ஆஸ்²வாஸயாமாஸ ச பீ⁴தமேநம் பூ⁴த்வா புந: ஸௌம்யவபுர்மஹாத்மா || 11- 50||
சஞ்சயன் சொல்லுகிறான்: இங்ஙனம் வாசுதேவன் அர்ஜுனனிடங் கூறி, மீட்டுத் தன் பழைய வடிவத்தைக் காட்டினான். அந்த மகாத்மா மறுபடி தன் இனிய வடிவமெய்தி அச்சமுற்றிருந்த பார்த்தனை ஆறுதல் கொள்ளச் செய்தான்.
________________________________________
அர்ஜுந உவாச
த்³ருஷ்ட்வேத³ம் மாநுஷம் ரூபம் தவ ஸௌம்யம் ஜநார்த³ந |
இதா³நீமஸ்மி ஸம்வ்ருத்த: ஸசேதா: ப்ரக்ருதிம் க³த: || 11- 51||
அர்ஜுனன் சொல்லுகிறான்: ஜனார்த்தனா, நினது தண்மை பொருந்திய இம்மானிட வடிவத்தைக் கண்டு இப்போது யான் அமைதியுற்றேன். என் உணர்வு மீண்டது; இயற்கை நிலையெய்தினேன்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ஸுது³ர்த³ர்ஸ²மித³ம் ரூபம் த்³ருஷ்டவாநஸி யந்மம |
தே³வா அப்யஸ்ய ரூபஸ்ய நித்யம் த³ர்ஸ²நகாங்க்ஷிண: || 11- 52||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: காண்பதற்கரிய என் வடிவத்தை இங்குக் கண்டனை, தேவர்கள் கூட இவ்வடிவத்தைக் காண எப்போதும் விரும்பி நிற்கிறார்கள்.
________________________________________
நாஹம் வேதை³ர்ந தபஸா ந தா³நேந ந சேஜ்யயா |
ஸ²க்ய ஏவம்விதோ⁴ த்³ரஷ்டும் த்³ருஷ்டவாநஸி மாம் யதா² || 11- 53||
என்னை நீ கண்டபடி, இவ்விதமாக வேதங்களாலும் தவத்தாலும், தானத்தாலும், வேள்வியாலும் என்னைக் காணுதல் இயலாது.
________________________________________
ப⁴க்த்யா த்வநந்யயா ஸ²க்ய அஹமேவம்விதோ⁴ऽர்ஜுந |
ஜ்ஞாதும் த்³ரஷ்டும் ச தத்த்வேந ப்ரவேஷ்டும் ச பரந்தப || 11- 54||
பிறிதிடஞ் செல்லாத பக்தியால் மாத்திரமே என்னை இவ்விதமாக அறிதலும், உள்ளபடி காணுதலும் என்னுட் புகுதலும் இயலும்.
________________________________________
மத்கர்மக்ருந்மத்பரமோ மத்³ப⁴க்த: ஸங்க³வர்ஜித: |
நிர்வைர: ஸர்வபூ⁴தேஷு ய: ஸ மாமேதி பாண்ட³வ || 11- 55||
அர்ஜுன, எவன் தான் செய்யும் எல்லாச் செயல்களையும் எனக்கு ஆராதனமாக (ஏன் பிரீதிக்காக) செய்கிறானோ, எவன் என்னை அடைவதே தனக்கு உயர்ந்த பயனாக எண்ணியிருக்கிறானோ, எவன் என் ஒருவனிடமே பக்தியைச் செய்கிறானோ, எவன் மற்ற எல்லாவற்றிலும் பற்றுதலில்லாமல், எல்லா உயிர்களிடத்தும் பகைமையற்றவனாய், நன்மையைக்கோறுகிறானோ, அவனே என்னை அடைகிறான்.________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘விஸ்வரூப தர்சன யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினொன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பன்னிரண்டாவது அத்தியாயம்
பக்தி யோகம்
ஞான யோக பக்தி யோகங்களுள், ஞான யோகம் தாமதித்தே பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது கஷ்டமானதென்றும், பக்தியோகமோ கடுகப் பலனளிக்குமென்றும், அதில் மனதை நிறுத்துவது சுலபமானதென்றும் கூறப்படுகிறது. பிறகு பக்தி யோகத்தைப் பெறுவதற்குரிய உபாயங்கள் கூறப்படுகின்றன. பக்தர்கள் பிறரிடத்தில் சிநேக பாவத்துடனும் அகங்கார மற்றும், இன்ப துன்பங்களைச் சமமாய் எண்ணியும், கிடைத்ததைக் கொண்டு திருப்தியுடனும் இருக்க வேண்டும்.

தன்னைப் பிறர் இகழ்ந்து பேசினாலும் புகழ்ந்து பேசினாலும் மனதில் மாறுதலடையக் கூடாது. இவ்விதமான பக்தர்களிடத்தில்தான் கடவுளுக்கு அதிக பிரீதி.
________________________________________
அர்ஜுந உவாச
ஏவம் ஸததயுக்தா யே ப⁴க்தாஸ்த்வாம் பர்யுபாஸதே |
யே சாப்யக்ஷரமவ்யக்தம் தேஷாம் கே யோக³வித்தமா: || 12- 1||
அர்ஜுனன் சொல்லுகிறான்: இங்ஙனம் எப்போதும் யோகத்தமர்ந்து நின்னை வழிபடும் தொண்டர்களா அல்லது புலங்களை அடக்கி ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெற்று பிறகு உம்மை அடைபவடர்கள் சிறந்தவர்களா ? இவ்விரு திறத்தாரில் யோக ஞானத்திலே மேம்பட்டார் யாவர்?
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
மய்யாவேஸ்²ய மநோ யே மாம் நித்யயுக்தா உபாஸதே |
ஸ்²ரத்³த⁴யா பரயோபேதாஸ்தே மே யுக்ததமா மதா: || 12- 2||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: என்னிடத்தே மனத்தைச் செலுத்தி நித்திய யோகிகளாய் உயர்ந்த நம்பிக்கையுடன் என்னை வழிபடுவோர் யாவர், அவர்களே சிறந்தோரென நான் கருதுகிறேன்.
________________________________________
யே த்வக்ஷரமநிர்தே³ஸ்²யமவ்யக்தம் பர்யுபாஸதே |
ஸர்வத்ரக³மசிந்த்யம் ச கூடஸ்த²மசலம் த்⁴ருவம் || 12- 3||
இனி, அழிவற்றதும், குறிப்பற்றதும், அவ்யக்தமும் (தெளிவற்றதும்), எங்கும் நிறைந்ததும், கருதொணாததும், நிலையற்றதும், அசைவற்றதும், உறுதிகொண்டதுமாகிய பொருளை யாவர் வழிபடுகின்றனரோ
________________________________________
ஸந்நியம்யேந்த்³ரியக்³ராமம் ஸர்வத்ர ஸமபு³த்³த⁴ய: |
தே ப்ராப்நுவந்தி மாமேவ ஸர்வபூ⁴தஹிதே ரதா: || 12- 4||
இந்திரியக் குழாத்தை நன்கு கட்டுப்படுத்தி எங்கும் சமபுத்தியுடையோராய் எல்லா உயிர்களுக்கும் நன்மை விரும்புவோராகிய அவர்களும் என்னையே அடைகிறார்கள்
________________________________________
க்லேஸோ²ऽதி⁴கதரஸ்தேஷாமவ்யக்தாஸக்தசேதஸாம் |
அவ்யக்தா ஹி க³திர்து³:க²ம் தே³ஹவத்³பி⁴ரவாப்யதே || 12- 5||
வடிவமில்லாத வஸ்துவை உபாஸிக்கிறவர்களுக்கு அதிக சிரமம் உண்டு. தேகாபிமானமுள்ளவர்களுக்கு, வடிவமில்லாத வஸ்துவைப்பற்றிய எண்ணமானது, மிகவும் சிரமத்துடன் உண்டாகிறது,
________________________________________
யே து ஸர்வாணி கர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பரா: |
அநந்யேநைவ யோகே³ந மாம் த்⁴யாயந்த உபாஸதே || 12- 6||
எல்லாத் கர்மாகளையும் எனக்கெனத் துறந்து, என்னைப் குறிக்கோளாகக் கொண்டு, மற்றொன்றை நினைக்காத யோகத்தால் என்னை நினைத்து எவர் வழிபடுவோரோ,
________________________________________
தேஷாமஹம் ஸமுத்³த⁴ர்தா ம்ருத்யுஸம்ஸாரஸாக³ராத் |
ப⁴வாமி நசிராத்பார்த² மய்யாவேஸி²தசேதஸாம் || 12- 7||
என்பால் அறிவைப் புகுத்திய அன்னோரை நான் மரணசம்சாரக் கடலினின்றும் விரைவில் தூக்கிவிடுவேன்
________________________________________
மய்யேவ மந ஆத⁴த்ஸ்வ மயி பு³த்³தி⁴ம் நிவேஸ²ய |
நிவஸிஷ்யஸி மய்யேவ அத ஊர்த்⁴வம் ந ஸம்ஸ²ய: || 12- 8||
மனதை என்பால் நிறுத்து; மதியை என்னுட் புகுத்து, இனி நீ என்னுள்ளே உறைவாய்; ஐயமில்லை.
________________________________________
அத² சித்தம் ஸமாதா⁴தும் ந ஸ²க்நோஷி மயி ஸ்தி²ரம் |
அப்⁴யாஸயோகே³ந ததோ மாமிச்சா²ப்தும் த⁴நஞ்ஜய || 12- 9||
என்னிடம் ஸ்திரமாக நின் சித்தத்தைச் செலுத்த நின்னால் முடியாதென்றால், பழகிப் பழகி என்னையடைய விரும்பு.
________________________________________
அப்⁴யாஸேऽப்யஸமர்தோ²ऽஸி மத்கர்மபரமோ ப⁴வ |
மத³ர்த²மபி கர்மாணி குர்வந்ஸித்³தி⁴மவாப்ஸ்யஸி ||12- 10||
பழகுவதிலும் நீ திறமையற்றவனாயின் என் பொருட்டுத் கர்மா செய்வதை மேலாகக் கொண்டிரு. என் பொருட்டுத் கர்மாகள் செய்து கொண்டிருப்பதனாலும் சித்தி பெறுவாய்.
________________________________________
அதை²தத³ப்யஸ²க்தோऽஸி கர்தும் மத்³யோக³மாஸ்²ரித: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் தத: குரு யதாத்மவாந் || 12- 11||
இதுவும் நின்னால் செய்யக்கூடவில்லை யென்றால், என்னுடன் லயித்திருப்பதை வழியாகக் கொண்டு, தன்னைத்தான் கட்டுப்படுத்தி எல்லாச் செயல்களின் பயன்களையும் துறந்துவிடு.
________________________________________
ஸ்²ரேயோ ஹி ஜ்ஞாநமப்⁴யாஸாஜ்ஜ்ஞாநாத்³த்⁴யாநம் விஸி²ஷ்யதே |
த்⁴யாநாத்கர்மப²லத்யாக³ஸ்த்யாகா³ச்சா²ந்திரநந்தரம் || 12- 12||
பழக்கத்தைக் காட்டிலும் ஞானம் சிறந்தது. ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தை காட்டிலும் கர்ம பலங்களைத் துறந்துவிடுதல் மேம்பட்டது. அத்துறவைக் காட்டிலும் சாந்தி உயர்ந்தது.
________________________________________
அத்³வேஷ்டா ஸர்வபூ⁴தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ || 12- 13||
எவ்வுயிரையும் பகைத்தலின்றி, அவற்றிடம் நட்பும் கருணையும் உடையவனாய், யானென்பதும் எனதென்பதும் நீங்கி இன்பத்தையும் துன்பத்தையும் நிகராகக் கொண்டு பொறுமையுடையவனாய்,
________________________________________
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ³ யதாத்மா த்³ருட⁴நிஸ்²சய: |
மய்யர்பிதமநோபு³த்³தி⁴ர்யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 14||
எப்போதும் மகிழ்ச்சி யுடையவனாய், ஸர்வேஸ்வரனே மேற்பட்டவன் எங்கிற நிச்சயமுடையவனாய், என்னிடத்தே மனத்தையும் மதியையும் அர்பணஞ் செய்து என் தொண்டனாகிய யோகி எனக் கினியவன்.
________________________________________
யஸ்மாந்நோத்³விஜதே லோகோ லோகாந்நோத்³விஜதே ச ய: |
ஹர்ஷாமர்ஷப⁴யோத்³வேகை³ர்முக்தோ ய: ஸ ச மே ப்ரிய: || 12- 15||
எவனை உலகத்தோர் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, ம்கிழ்ச்சியாலும் அச்சத்தாலும், சினத்தாலும் விளையும் கொதிப்புகளினின்றும் எவன் விடுபட்டானோ அவனே எனக்கினியவன்
________________________________________
அநபேக்ஷ: ஸு²சிர்த³க்ஷ உதா³ஸீநோ க³தவ்யத²: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ யோ மத்³ப⁴க்த: ஸ மே ப்ரிய: || 12- 16||
எதனையும் எதிர்பார்த்தலின்றித் தூயோனாய், திறமுடையோனாய் பற்றுதலற்றவனாய், கவலை நீங்கியவனாய், எல்லா ஆடம்பரங்களையுந் துறந்து என்னிடம் பக்தி செய்வோனே எனக் கினியவன்
________________________________________
யோ ந ஹ்ருஷ்யதி ந த்³வேஷ்டி ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸு²பா⁴ஸு²ப⁴பரித்யாகீ³ ப⁴க்திமாந்ய: ஸ மே ப்ரிய: || 12- 17||
மகிழ்தலும், பகைத்தலும், துயர்படுதலும், அவாவுறுதலும் இன்றி நன்மையையுந் தீமையையுந் துறந்த தொண்டனே எனக் கினியவன்.
________________________________________
ஸம: ஸ²த்ரௌ ச மித்ரே ச ததா² மாநாபமாநயோ: |
ஸீ²தோஷ்ணஸுக²து³:கே²ஷு ஸம: ஸங்க³விவர்ஜித: || 12- 18||
பகைவனிடத்தும், நண்பனிடத்தும், மானத்திலும், அவமானத்திலும், குளிரிலும், வெப்பத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும் சமப்பட்டான்; பற்றுவிட்டான்.
________________________________________
துல்யநிந்தா³ஸ்துதிர்மௌநீ ஸந்துஷ்டோ யேந கேநசித் |
அநிகேத: ஸ்தி²ரமதிர்ப⁴க்திமாந்மே ப்ரியோ நர: || 12- 19||
புகழையும் இகழையும் நிகராகக் கொண்ட மௌனி, எது கிடைத்தாலும் அதில் மகிழ்ச்சியுறுவான். தனக்கெண்று ஒரு இருப்பிடமில்லாதவனும், ஸ்திர புத்தியுடையான், இத்தகைய பக்தன் எனக் கினியவன்
________________________________________
யே து த⁴ர்ம்யாம்ருதமித³ம் யதோ²க்தம் பர்யுபாஸதே |
ஸ்²ரத்³த³தா⁴நா மத்பரமா ப⁴க்தாஸ்தேऽதீவ மே ப்ரியா: || 12- 20||
இந்தத் தர்மரூபமான அமிர்தத்தை யான் சொல்லியபடி வழிபடுவோர், நம்பிக்கையுடையோர், என்னை முதலாகக் கொண்டோர், அத்தகைய பக்தர் எனக்கு மிகவுமினியர்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘பக்தி யோகம்’ எனப் பெயர் படைத்த
பன்னிரெண்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பதிமூன்றாவது அத்தியாயம்
க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்
இதில் தேகம், ஆத்மா இவைகளுடைய சொரூபமும் இவைகள் ஒன்றோடொன்று சேர்வதற்குக் காரணமும் கூறப்படுகின்றன. தேகம் என்பது பிரகிருதியின் விகாரமாகும். அது ஐந்து பூதங்களும் பதினோரு புலன்களும் அடங்கியது.
இத்தேகத்தின் சேர்க்கையால்தான் ஆத்மாவுக்கு அற்ப விஷயங்களில் விருப்பமும், இன்பம், துன்பம், கோபம், தாபம் முதலியவைகளும் உண்டாகின்றன. கைவல்ய நிலை பெற்ற ஆத்மாவிற்கு இவை ஒன்றுமில்லை. அத்தகைய நிலையைப் பெறவேண்டுமானால் கர்வம், டம்பம் இவைகளை விடவேண்டும்.
ஆசாரியனைப் பணிந்து அவனருளால் தூய்மை பெற்றுப் புலன்களை அடக்க வேண்டும். வேறு பலனைக் கோராமல் கடவுளைத் தியானிக்க வேண்டும். ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும்.
அறிவற்ற தேகமானது ஆத்ம சம்பந்தத்தால் பற்பல காரியங்களைச் செய்கிறது. இவ்வித ஆத்ம சொரூபத்தைக் கர்ம யோகத்தினாலும், ஞானயோகத்தினாலும் பெறலாம். தாவர, ஜங்கமங்களெல்லாம் ஆத்ம பிரகிருதியின் சேர்க்கையால் உண்டாகின்றன.
________________________________________
அர்ஜுந உவாச
ப்ரக்ருதிம் புருஷம் சைவ க்ஷேத்ரம் க்ஷேத்ரஜ்ஞமேவ ச |
ஏதத்³வேதி³துமிச்சா²மி ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ச கேஸ²வ ||
அர்ஜுனன் சொல்லுகின்றான், கேசவா பிரகிருதி, புருஷன், க்ஷேத்திரம், க்ஷேத்திரக்ஞன்
ஞானம், ஞேயம் என்னும் இவற்றை அறிய விரும்புகிறேன்
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
இத³ம் ஸ²ரீரம் கௌந்தேய க்ஷேத்ரமித்யபி⁴தீ⁴யதே |
ஏதத்³யோ வேத்தி தம் ப்ராஹு: க்ஷேத்ரஜ்ஞ இதி தத்³வித³: || 13- 1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: குந்தி மகனே, இந்த உடம்பு க்ஷேத்திரம் என்று சொல்லப்படுகிறது. இதனை அறிந்து நிற்போனை க்ஷேத்திரக்ஞ னென்று பிரம்ம ஞானிகள் சொல்லுகிறார்கள்.
________________________________________
க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்³தி⁴ ஸர்வக்ஷேத்ரேஷு பா⁴ரத |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோர்ஜ்ஞாநம் யத்தஜ்ஜ்ஞாநம் மதம் மம || 13- 2||
பாரதா, எல்லா க்ஷேத்திரங்களிலும் க்ஷேத்திரக்ஞன் நானே என்றுணர். க்ஷேத்திரமும், க்ஷேத்திரக்ஞனும் எவை என்றறியுஞ் ஞானமே உண்மையான ஞானமென்பது என் கொள்கை.
________________________________________
தத்க்ஷேத்ரம் யச்ச யாத்³ருக்ச யத்³விகாரி யதஸ்²ச யத் |
ஸ ச யோ யத்ப்ரபா⁴வஸ்²ச தத்ஸமாஸேந மே ஸ்²ருணு || 13- 3||
அந்த க்ஷேத்திரமென்பது யாது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? க்ஷேத்திரக்ஞன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாகச் சொல்லுகிறேன், கேள்.
________________________________________
ருஷிபி⁴ர்ப³ஹுதா⁴ கீ³தம் ச²ந்தோ³பி⁴ர்விவிதை⁴: ப்ருத²க் |
ப்³ரஹ்மஸூத்ரபதை³ஸ்²சைவ ஹேதுமத்³பி⁴ர்விநிஸ்²சிதை: || 13- 4||
அது (க்ஷேத்திரம்) ரிஷிகளால் பலவகைகளிலே பல்வேறு சந்தங்களில் பாடப்பட்டது. யுக்திகள் நிறைந்தனவும், நல்ல நிச்சயமுடையனவுமாகிய பிரம்ம சூத்திர பதங்களில் விவரிக்கப்பட்டது.
________________________________________
மஹாபூ⁴தாந்யஹங்காரோ பு³த்³தி⁴ரவ்யக்தமேவ ச |
இந்த்³ரியாணி த³ஸை²கம் ச பஞ்ச சேந்த்³ரியகோ³சரா: || 13- 5||
ஐந்து பூதங்கள், நான் என்ற அகங்காரம், புத்தி, அவ்யக்தம், பதினோரு இந்திரியங்கள், (கர்மேந்திரிய ஞானேந்திரியங்கள் பத்து + மனம்) இந்திரிய நிலங்கள் ஐந்து,
________________________________________
இச்சா² த்³வேஷ: ஸுக²ம் து³:க²ம் ஸங்கா⁴தஸ்²சேதநா த்⁴ருதி: |
ஏதத்க்ஷேத்ரம் ஸமாஸேந ஸவிகாரமுதா³ஹ்ருதம் || 13- 6||
வேட்கை, பகைமை, இன்பம், துன்பம், உடம்பு, உணர்வு, உள்ளத்துறுதி இவையே க்ஷேத்திரமும் அதன் வேறுபாடுகளுமாம் என உனக்குச் சுருக்கிக் காட்டினேன்.
________________________________________
அமாநித்வமத³ம்பி⁴த்வமஹிம்ஸா க்ஷாந்திரார்ஜவம் |
ஆசார்யோபாஸநம் ஸௌ²சம் ஸ்தை²ர்யமாத்மவிநிக்³ரஹ: || 13- 7||
கர்வமின்மை, டம்பமின்மை, ஹிம்சை செய்யாமை, பொறுமை, நேர்மை, ஆசாரியனை வழிபடுதல், தூய்மை, ஸ்திரத்தன்மை, தன்னைக் கட்டுதல்.
________________________________________
இந்த்³ரியார்தே²ஷு வைராக்³யமநஹங்கார ஏவ ச |
ஜந்மம்ருத்யுஜராவ்யாதி⁴து³:க²தோ³ஷாநுத³ர்ஸ²நம் || 13- 8||
இந்திரிய விஷயங்களில் விருப்பமின்மை, அகங்காரம் இல்லாமை, பிறப்பு, இறப்பு, நரை, நோய், துக்கம், தோஷம் இவைகளில் தீமையைக்காணுதல்.
________________________________________
அஸக்திரநபி⁴ஷ்வங்க³: புத்ரதா³ரக்³ருஹாதி³ஷு |
நித்யம் ச ஸமசித்தத்வமிஷ்டாநிஷ்டோபபத்திஷு || 13- 9||
பற்றின்மை, மகனையும் மனைவியையும், வீட்டையும் தன்னுடைமையெனக் கருதாமை, விரும்பியனவும் விரும்பாதனவும் எய்துமிடத்தே சமசித்தமுடைமை
________________________________________
மயி சாநந்யயோகே³ந ப⁴க்திரவ்யபி⁴சாரிணீ |
விவிக்ததே³ஸ²ஸேவித்வமரதிர்ஜநஸம்ஸதி³ || 13- 10||
மற்றொன்றில் செல்லாமல் என்னிடமே செலுத்திய மனத்தால் வைக்கப்படும் பக்திசெலுத்தப்படும் பக்தி, தனிமையிலிருத்தல், ஜனக் கூட்டத்தில் விருப்பமின்மை
________________________________________
அத்⁴யாத்மஜ்ஞாநநித்யத்வம் தத்த்வஜ்ஞாநார்த²த³ர்ஸ²நம் |
ஏதஜ்ஜ்ஞாநமிதி ப்ரோக்தமஜ்ஞாநம் யத³தோऽந்யதா² || 13- 11||
ஆத்ம ஞானத்தில் எப்போதும் நழுவாமை, தத்துவ ஞானத்தில் பொருளுணர்வு – இவை ஞான மெனப்படும். இவற்றினிறும் வேறுபட்டது அஞ்ஞானம்.
________________________________________
ஜ்ஞேயம் யத்தத்ப்ரவக்ஷ்யாமி யஜ்ஜ்ஞாத்வாம்ருதமஸ்²நுதே |
அநாதி³ மத்பரம் ப்³ரஹ்ம ந ஸத்தந்நாஸது³ச்யதே || 13- 12||
ஞேயம் எதுவென்பதைச் சொல்கிறேன். அதை அறிந்தால் நீ மரணமின்றி இருப்பாய். அநாதியாகிய பரப்பிரம்மம், அதை “சத்” என்பதுமில்லை, “அசத்” என்பதுமில்லை.
________________________________________
ஸர்வத: பாணிபாத³ம் தத்ஸர்வதோऽக்ஷிஸி²ரோமுக²ம் |
ஸர்வத: ஸ்²ருதிமல்லோகே ஸர்வமாவ்ருத்ய திஷ்ட²தி || 13- 13||
அது எங்கும் கைகால்களுடையது. எங்கும் கண்ணும் தலையும் வாயுமுடையது; எங்கும் செவியுடையது; உலகத்தில் எதனையும் சூழ்ந்துநிற்பது.
________________________________________
ஸர்வேந்த்³ரியகு³ணாபா⁴ஸம் ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதம் |
அஸக்தம் ஸர்வப்⁴ருச்சைவ நிர்கு³ணம் கு³ணபோ⁴க்த்ரு ச || 13- 14||
இந்திரியங்களில்லாமலே இந்திரியங்களின் தொழில்களால் விளங்கக்கூடியது; எதையும்சார்ந்து நிற்காமல் எல்லாவற்றையும் தாங்கக்கூடியது;குணங்களில்லாமலேயே குணங்களை அனுபவிப்பது.
________________________________________
ப³ஹிரந்தஸ்²ச பூ⁴தாநாமசரம் சரமேவ ச |
ஸூக்ஷ்மத்வாத்தத³விஜ்ஞேயம் தூ³ரஸ்த²ம் சாந்திகே ச தத் || 13- 15||
பூதங்களுக்கு உள்ளும் புறமும் உள்ளதுஸ்தாவரமாகவும், ஜங்கமமாகவும் உள்ளது; ண்மை; அது ஸூஷ்மமாக உள்ளதால் அறிய முடியாதது; தூரமானது; அருகிலிருப்பது.
________________________________________
அவிப⁴க்தம் ச பூ⁴தேஷு விப⁴க்தமிவ ச ஸ்தி²தம் |
பூ⁴தப⁴ர்த்ரு ச தஜ்ஜ்ஞேயம் க்³ரஸிஷ்ணு ப்ரப⁴விஷ்ணு ச || 13- 16||
அறிய வேண்டியதான அந்த ப்ரஹ்மம் பூதங்களில் பிரிவு படாமலிருக்கிறது; அதுவே பிரிவுபட்டதுபோலு நிற்பது. அதுவே பூதங்களைத் தாங்குவது என்றறி; பூதங்களைத் தாங்குகிறது; பூதங்களை விழுங்குகிறது. மறுபடியும் தோற்றுவிக்கிறது.
________________________________________
ஜ்யோதிஷாமபி தஜ்ஜ்யோதிஸ்தமஸ: பரமுச்யதே |
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் ஜ்ஞாநக³ம்யம் ஹ்ருதி³ ஸர்வஸ்ய விஷ்டி²தம் || 13- 17||
ஒளிகளுக்கெல்லாம் அஃதொளி; அது இருளைக்கடந்தது. அதுவே ஞானம்; அறியத்தக்கதும் அதுவே; ஞானத்தால் அடைவதும் அதுவே; எல்லாவற்றின் இருதயத்திலும் விசேஷமாக இருக்கிறது.
________________________________________
இதி க்ஷேத்ரம் ததா² ஜ்ஞாநம் ஜ்ஞேயம் சோக்தம் ஸமாஸத: |
மத்³ப⁴க்த ஏதத்³விஜ்ஞாய மத்³பா⁴வாயோபபத்³யதே || 13- 18||
இங்ஙனம் க்ஷேத்திரம், ஞானம் (ஆறிவு), ஞேயன்(ஆறியத்தக்கது) என்பனவற்றைச் சுருக்கமாகச் சொன்னேன். என் பக்தன் இதையறிந்து எனது தன்மையை அடைகிறான்.
________________________________________
ப்ரக்ருதிம் புருஷம் சைவ வித்³த்⁴யநாதீ³ உபா⁴வபி |
விகாராந்ஸ்²ச கு³ணாந்ஸ்²சைவ வித்³தி⁴ ப்ரக்ருதிஸம்ப⁴வாந் || 13- 19||
பிரகிருதி, புருஷன்(ஆத்மா) ,இவ்விரண்டும் அநாதி என்றுணர். வேறுபாடுகளும் குணங்களும் பிரகிருதியிலேயே பிறப்பன என்றுணர்.
________________________________________
கார்யகரணகர்த்ருத்வே ஹேது: ப்ரக்ருதிருச்யதே |
புருஷ: ஸுக²து³:கா²நாம் போ⁴க்த்ருத்வே ஹேதுருச்யதே || 13- 20||
சரீரமாகிய காரியத்தையும், இந்திரியங்களாகிய ஸாதனங்களையும் செயல்படச் செய்வதில் பிரகிருதியே காரணமாகும். சுக துக்கங்களைஅனுபவிக்கும் விஷயத்தில், புருஷனே (ஆத்மாவே) காரணமாவான்..
________________________________________
புருஷ: ப்ரக்ருதிஸ்தோ² ஹி பு⁴ங்‌க்தே ப்ரக்ருதிஜாந்கு³ணாந் |
காரணம் கு³ணஸங்கோ³ऽஸ்ய ஸத³ஸத்³யோநிஜந்மஸு || 13- 21||
புருஷன் பிரகிருதியில் நின்றுகொண்டு, பிரகிருதியினிடம் பிறக்கும் குணங்களைத் துய்க்கிறான். குணங்களினிடம் இவனுக்குள்ள பற்றுதலே இவன் நல்லனவும் தீயனவுமாகிய ஜென்மங்களில் பிறப்பதற்குக் காரணமாகிறது.
________________________________________
உபத்³ரஷ்டாநுமந்தா ச ப⁴ர்தா போ⁴க்தா மஹேஸ்²வர: |
பரமாத்மேதி சாப்யுக்தோ தே³ஹேऽஸ்மிந்புருஷ: பர: || 13- 22||
இந்த தேகத்திலுள்ள உயந்த புருஷனை, ‘அருகிலிருந்து பார்ப்பவன்’,’சம்மதியளிப்பவன்’ ‘தாங்குபவன்’ ‘ஆள்பவன்’, ‘பரமாத்மா’ என்று பலவிதமாகச் சொல்லுகிறார்கள்.
________________________________________
ய ஏவம் வேத்தி புருஷம் ப்ரக்ருதிம் ச கு³ணை: ஸஹ |
ஸர்வதா² வர்தமாநோऽபி ந ஸ பூ⁴யோऽபி⁴ஜாயதே || 13- 23||
இங்ஙனம் புருஷனையும், பிரகிருதியையும், அதன் குணங்களையு மறிந்தோன் எல்லா நெறிகளிலும் இயங்குவானெனினும், அவனுக்கு மறு பிறப்பில்லை.
________________________________________
த்⁴யாநேநாத்மநி பஸ்²யந்தி கேசிதா³த்மாநமாத்மநா |
அந்யே ஸாங்க்²யேந யோகே³ந கர்மயோகே³ந சாபரே || 13- 24||
சிலர் தியானத்தால் திருந்திய அந்த காரணத்தால், ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை அறிகிறார்கள்; பிறர் சாங்கிய யோகத்தால் அறிகிறார்கள்; பிறர் கர்ம யோகத்தால் அறிகிறார்கள்.
________________________________________
அந்யே த்வேவமஜாநந்த: ஸ்²ருத்வாந்யேப்⁴ய உபாஸதே |
தேऽபி சாதிதரந்த்யேவ ம்ருத்யும் ஸ்²ருதிபராயணா: || 13- 25||
மற்றும் சிலர், இப்படி செய்யத்தெரியாமல், பிறரிடம் கேட்டு அதன்படி உபாசனை செய்கிறார்கள். அப்படிக்கேட்பதையே உயர்ந்ததாகக் கொண்டவர்களும், ஜனன மரணமாகிய ஸம்ஸாரத்தைத் தாண்டுகிறார்கள்.
________________________________________
யாவத்ஸஞ்ஜாயதே கிஞ்சித்ஸத்த்வம் ஸ்தா²வரஜங்க³மம் |
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞஸம்யோகா³த்தத்³வித்³தி⁴ ப⁴ரதர்ஷப⁴ || 13- 26||
பரதக்காளையே, ஸ்தாவரமாயினும், ஜங்கமமாயினும் ஓருயிர் பிறக்குமாயின் அது க்ஷேத்திரமும் க்ஷேத்திரக்ஞனும் சேர்ந்தமையால் பிறந்ததென்றறி.
________________________________________
ஸமம் ஸர்வேஷு பூ⁴தேஷு திஷ்ட²ந்தம் பரமேஸ்²வரம் |
விநஸ்²யத்ஸ்வவிநஸ்²யந்தம் ய: பஸ்²யதி ஸ பஸ்²யதி || 13- 27||
எல்லா உடல்களிலும் உள்ள ஜீவாத்மாக்கள்  சமமானவை. சரீரம் அழியும் போதும் ஜீவன் அழிவதில்லை.  பல அவயவக் கூட்டங்களாலான உடலுக்கு ஜீவனே எஜமானன், பரமேஸ்வரன்.  இவைகளை எல்லாம் எவன் அறிகிறானோ அவனே ஜீவாத்மாவைஉள்ளபடி அறிந்தவன்.
________________________________________
ஸமம் பஸ்²யந்ஹி ஸர்வத்ர ஸமவஸ்தி²தமீஸ்²வரம் |
ந ஹிநஸ்த்யாத்மநாத்மாநம் ததோ யாதி பராம் க³திம் || 13- 28||
எங்கும் சமமாக ஈசன் நிற்பது காண்பவன், தன்னை சம்ஸார பந்தத்திலிருந்து விடுவித்து மேலான கதியை அடைகிறான். 
________________________________________
ப்ரக்ருத்யைவ ச கர்மாணி க்ரியமாணாநி ஸர்வஸ²: |
ய: பஸ்²யதி ததா²த்மாநமகர்தாரம் ஸ பஸ்²யதி || 13- 29||
எவன், எல்லாக் கர்மாக்களையும் செய்வது ப்ரகிருதியே என்றும், ஆத்மாவென்பது கர்த்தா அல்ல என்றும் காண்கிறானோ அவனே அறிவாளி.
________________________________________
யதா³ பூ⁴தப்ருத²க்³பா⁴வமேகஸ்த²மநுபஸ்²யதி |
தத ஏவ ச விஸ்தாரம் ப்³ரஹ்ம ஸம்பத்³யதே ததா³ || 13- 30||
இளமை, மூப்பு-சரீரத்துக்கே உள்ளது; ஜீவனுக்கு இவ்வித மாறுதல் ஒன்றும் இல்லை; மக்களைப் பெற்று சம்சாரப் பெருக்கு உண்டாவது உடலினாலேயே என்பதை அறிகிறவன், பரிசுத்த ஆத்மாவை அடைகிறான்.
________________________________________
அநாதி³த்வாந்நிர்கு³ணத்வாத்பரமாத்மாயமவ்யய: |
ஸ²ரீரஸ்தோ²ऽபி கௌந்தேய ந கரோதி ந லிப்யதே || 13- 31||
 இந்தப் பரமாத்மா  அநாதியாகவும் குணங்களற்றதாகவும் இருப்பதால் அழிவில்லாதது. இது சரீரத்திலிருந்தாலும் எதையும் செய்வதுமில்லை. எதிலும் பற்றுக்கொள்வதுமில்லை..
________________________________________
யதா² ஸர்வக³தம் ஸௌக்ஷ்ம்யாதா³காஸ²ம் நோபலிப்யதே |
ஸர்வத்ராவஸ்தி²தோ தே³ஹே ததா²த்மா நோபலிப்யதே || 13- 32||
எங்குமிருந்தாலும் ஆகாசம் தன் நுண்மையால் பற்றற்று நிற்பதுபோல், உடம்பில் ஆத்மா எங்கணுமிருந்தாலும் பற்றுறுவதிலன்.
________________________________________
யதா² ப்ரகாஸ²யத்யேக: க்ருத்ஸ்நம் லோகமிமம் ரவி: |
க்ஷேத்ரம் க்ஷேத்ரீ ததா² க்ருத்ஸ்நம் ப்ரகாஸ²யதி பா⁴ரத || 13- 33||
சூரியன் ஒருவனாய், இவ்வுலக முழுவதையும் எங்ஙனம் ஒளியுறச்செய்கிறானோ, அதுபோல் க்ஷேத்திரஜ்ஞனான ஆத்மா, தேகத்தை ஒளியுறச் செய்கிறான்.
________________________________________
க்ஷேத்ரக்ஷேத்ரஜ்ஞயோரேவமந்தரம் ஜ்ஞாநசக்ஷுஷா |
பூ⁴தப்ரக்ருதிமோக்ஷம் ச யே விது³ர்யாந்தி தே பரம் || 13- 34||
ஞானக் கண்ணால் இவ்வாறு க்ஷேத்திரத்துக்கும் (உடலுக்கும்) க்ஷேத்திரக்ஞனுக்கும் (ஆத்மாவுக்கும்) உள்ள வேற்றுமையை அறிவோர் பூதப் பிரக்ருதியினின்றும் விடுதலை பெற்று பரம்பொருளை அடைகின்றனர்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘க்ஷேத்ர – க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
பதிமூன்றாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பதினான்காவது அத்தியாயம்
குணத்ரய விபாக யோகம்
தேக சம்பந்தமே ஆத்மாவின் சுக துக்கங்களுக்கும் கோபதாபம் முதலிய குணங்களுக்கும் காரணமென்று முற்கூறிய விஷயம் இதில் விவரிக்கப்படுகிறது. உலகத்தை படைக்க எண்ணங்கொண்ட கடவுள் முதலில் பிரகிருதியையும், ஜீவனையும் சேர்க்கிறார்.
பிறகு பிரகிருதி ஆத்மாவின் மும்மைக் காமத்துக்கேற்ப தேவ மனுஷ்ய பசு பக்ஷி ரூபங்களைப் பெற்று சத்வ, ரஜஸ், தமோ குணங்களால் ஆத்மாவைப் பிணிக்கிறது. அவற்றுள் சத்வம் மனிதனுக்கு ஞானவொளியையும் நன்மார்க்கத்தில் விருப்பத்தையும் அளிக்கிறது.

ரஜஸ் அவா, பற்றுதல் முதலிய குணங்களையளித்து கர்மங்களில் தூண்டுகிறது; தமஸ் மயக்கம், சோம்பல், உறக்கம் முதலியவற்றையளிக்கிறது. இம்மூன்று குணங்களுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயங்களில் தலையெடுத்து நிற்கும். அப்போது மனிதனுக்கு அதற்கேற்ற குணங்கள் உதிக்கின்றன. முற்கூறிய கடவுளைடத் தியானிப்போன் இம்மூன்று குணங்களையும் வென்று சித்தி பெறுவான்
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
பரம் பூ⁴ய: ப்ரவக்ஷ்யாமி ஜ்ஞாநாநாம் ஜ்ஞாநமுத்தமம் |
யஜ்ஜ்ஞாத்வா முநய: ஸர்வே பராம் ஸித்³தி⁴மிதோ க³தா: || 14- 1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஞானங்களனைத்திலும் மேலான பரம ஞானத்தை உனக்கு மீட்டுமுரைக்கிறேன். அதை யறிந்து முனிவரெல்லாரும் இவ்வுலகத்திலேயே ஒருவகை ஞானத்தைப்பெற்று உயர்ந்த ஸத்கதியை அடைந்தனர். ஞானத்தில் உத்தமமான அத்தகைய மற்றொரு ஞானத்தைப்பற்றி உனக்குச் சொல்லுகிறேன்.
________________________________________
இத³ம் ஜ்ஞாநமுபாஸ்²ரித்ய மம ஸாத⁴ர்ம்யமாக³தா: |
ஸர்கே³ऽபி நோபஜாயந்தே ப்ரலயே ந வ்யத²ந்தி ச || 14- 2||
இந்த ஞானத்தை அடைந்து அதனால் என்னியல்பு பெற்றோர், படைப்புக் காலத்தில் பிறவார். ஊழியிலும் சாகமாட்டார்.
________________________________________
மம யோநிர்மஹத்³ப்³ரஹ்ம தஸ்மிந்க³ர்ப⁴ம் த³தா⁴ம்யஹம் |
ஸம்ப⁴வ: ஸர்வபூ⁴தாநாம் ததோ ப⁴வதி பா⁴ரத || 14- 3||
பெரிய பரப்பிரம்மமே எனக்காதாரம்; அதில் நான்  கர்ப்ப தாரணம் போன்ற விதையை விதைக்கிறேன். பாரதா, எல்லா உயிர்களும் அதிலேதான் பிறக்கின்றன.
________________________________________
ஸர்வயோநிஷு கௌந்தேய மூர்தய: ஸம்ப⁴வந்தி யா: |
தாஸாம் ப்³ரஹ்ம மஹத்³யோநிரஹம் பீ³ஜப்ரத³: பிதா || 14- 4||
எல்லாக் கருக்களிலும் பிறக்கும் வடிவங்களனைத்திற்கும் பிரக்ருதியே தாய்.  நான் விதை தரும் பிதா.
________________________________________
ஸத்த்வம் ரஜஸ்தம இதி கு³ணா: ப்ரக்ருதிஸம்ப⁴வா: |
நிப³த்⁴நந்தி மஹாபா³ஹோ தே³ஹே தே³ஹிநமவ்யயம் || 14- 5||
சத்வம், ரஜஸ், தமஸ் இந்த குணங்கள் பிரகிருதியில் எழுவன. பெருந்தோளாய், இவை உடம்பில் அழிவற்ற ஆத்மாவைத் தேகத்தில் கெட்டியாக  பிணைத்துவிடுகின்றன.
________________________________________
தத்ர ஸத்த்வம் நிர்மலத்வாத்ப்ரகாஸ²கமநாமயம் |
ஸுக²ஸங்கே³ந ப³த்⁴நாதி ஜ்ஞாநஸங்கே³ந சாநக⁴ || 14- 6||
அவற்றுள்ளே சத்வம், நிர்மலத்தன்மையால் ஒளிகொண்டது; நோவற்றது, பாவமற்றோய் அது இன்பச் சேர்க்கையாலும் ஞானச் சேர்க்கையாலும் ஆத்மாவைக் கட்டிப் பிணைக்கிறது.
________________________________________
ரஜோ ராகா³த்மகம் வித்³தி⁴ த்ருஷ்ணாஸங்க³ஸமுத்³ப⁴வம் |
தந்நிப³த்⁴நாதி கௌந்தேய கர்மஸங்கே³ந தே³ஹிநம் || 14- 7||
ரஜோகுணம்  ஆசையினாலும், பற்றுதலாலும் ஏற்படும். அது கர்மங்களில் பற்றுதலை உண்டாக்குவதன் மூலம் ஆத்மாவைப்பிணைக்கிறது
________________________________________
தமஸ்த்வஜ்ஞாநஜம் வித்³தி⁴ மோஹநம் ஸர்வதே³ஹிநாம் |
ப்ரமாதா³லஸ்யநித்³ராபி⁴ஸ்தந்நிப³த்⁴நாதி பா⁴ரத || 14- 8||
தமோகுணம் அஞ்ஞானத்தில் பிறப்பதென்றுணர். இதுவே எல்லா ஜீவர்களையும் மயங்கச்செய்வது. அஜாக்ரதையாலும், சோம்பலாலும் உறக்கத்தாலும் அது ஆத்மாவைக் கட்டுப்படுத்துகிறது. பாரதா!
________________________________________
ஸத்த்வம் ஸுகே² ஸஞ்ஜயதி ரஜ: கர்மணி பா⁴ரத |
ஜ்ஞாநமாவ்ருத்ய து தம: ப்ரமாதே³ ஸஞ்ஜயத்யுத || 14- 9||
சத்வம் சுகத்தில் சேர்க்கிறது. பாரதா, ரஜோகுணம் கர்மத்தில் சேர்க்கிறது. தமோ குணம் ஞானத்தைச் மறைத்து (ஜீவனை) அஜாக்ரதையில் சேர்க்கிறது.
________________________________________
ரஜஸ்தமஸ்²சாபி⁴பூ⁴ய ஸத்த்வம் ப⁴வதி பா⁴ரத |
ரஜ: ஸத்த்வம் தமஸ்²சைவ தம: ஸத்த்வம் ரஜஸ்ததா² || 14- 10||
பாரதா (சில வேளை) ரஜோ குணத்தையும் தமோ குணத்தையும் அடக்கி சத்வம் இயல்கிறது. (சிலவேளை) சத்வத்தையும் தமோ குணத்தையும் அடக்கி ரஜோ குணம் நிற்கிறது; அங்ஙனமே சத்வத்தையும் ரஜோ குணத்தையும் அடக்கித் தமஸ் மிஞ்சுகிறது.
________________________________________
ஸர்வத்³வாரேஷு தே³ஹேऽஸ்மிந்ப்ரகாஸ² உபஜாயதே |
ஜ்ஞாநம் யதா³ ததா³ வித்³யாத்³விவ்ருத்³த⁴ம் ஸத்த்வமித்யுத || 14- 11||
இந்த உடம்பில் எல்லா வாயில்களிலும் ஞான ஒளி பிறக்குமாயின் அப்போது சத்வ குணம் வளர்ச்சிபெற்ற தென்றறியக் கடவாய்.
________________________________________
லோப⁴: ப்ரவ்ருத்திராரம்ப⁴: கர்மணாமஸ²ம: ஸ்ப்ருஹா |
ரஜஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ ப⁴ரதர்ஷப⁴ || 14- 12||
பேராசை,ஏதாவது ஒரு செயல், கர்மங்களத்தொடங்குதல், புலனடக்கமின்மை, நுகர்ச்சிப்பொருள்களில் ஆசை, இவையெல்லாம் ரஜோ குணம் மிகைப்படுவதிலிருந்து தோன்றுகின்றன. பாரதா, காளையே!
________________________________________
அப்ரகாஸோ²ऽப்ரவ்ருத்திஸ்²ச ப்ரமாதோ³ மோஹ ஏவ ச |
தமஸ்யேதாநி ஜாயந்தே விவ்ருத்³தே⁴ குருநந்த³ந || 14- 13||
ஞ்சானமின்மை, அசையாமை, அஜாக்ரதை, மயக்கம் இவை தமோ குணம் ஓங்குமிடத்தே பிறப்பன. குருகுலச்செல்வமே!
________________________________________
யதா³ ஸத்த்வே ப்ரவ்ருத்³தே⁴ து ப்ரலயம் யாதி தே³ஹப்⁴ருத் |
ததோ³த்தமவிதா³ம் லோகாநமலாந்ப்ரதிபத்³யதே || 14- 14||
சத்வம் ஓங்கி நிற்கையிலே சரீரி இறப்பானாயின், மாசற்றவனாகிய உத்தம ஞானிகளின் உலகங்களை அடைகிறான்.
________________________________________
ரஜஸி ப்ரலயம் க³த்வா கர்மஸங்கி³ஷு ஜாயதே |
ததா² ப்ரலீநஸ்தமஸி மூட⁴யோநிஷு ஜாயதே || 14- 15||
ரஜோ குணத்தில் இறப்போன் கர்மப் பற்றுடையோரிடையே பிறக்கிறான். அவ்வாறே, தமஸில் இறப்போன் மூட கர்ப்பங்களில் தோன்றுகிறான்.
________________________________________
கர்மண: ஸுக்ருதஸ்யாஹு: ஸாத்த்விகம் நிர்மலம் ப²லம் |
ரஜஸஸ்து ப²லம் து³:க²மஜ்ஞாநம் தமஸ: ப²லம் || 14- 16||
சத்வ இயல்புடைய நிர்மலத் தன்மையே நற்செய்கையின் பயனென்பர். ரஜோ குணத்தின் பயன் துன்பம். தமோ குணத்தின் பயன் அறிவின்மை.
________________________________________
ஸத்த்வாத்ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோப⁴ ஏவ ச |
ப்ரமாத³மோஹௌ தமஸோ ப⁴வதோऽஜ்ஞாநமேவ ச || 14- 17||
சத்வத்திலிருந்து ஞானம் பிறக்கிறது; ரஜோ குணத்தினின்றும் அவாவும், தமோ குணத்திலிருந்து தவறுதலும், மயக்கமும், அஞ்ஞானமும் தோன்றுகின்றன.
________________________________________
ஊர்த்⁴வம் க³ச்ச²ந்தி ஸத்த்வஸ்தா² மத்⁴யே திஷ்ட²ந்தி ராஜஸா: |
ஜக⁴ந்யகு³ணவ்ருத்திஸ்தா² அதோ⁴ க³ச்ச²ந்தி தாமஸா: || 14- 18||
சத்வ குணத்தில் நிற்போர் மேலேறுகிறார்கள். ரஜோ குணமுடையோர் இடையே நிற்கின்றார்கள். தாமஸர் மிகவும் இழிய குணங்களும் செயல்களுமுடையோராய்க் கீழே செல்வர்.
________________________________________
நாந்யம் கு³ணேப்⁴ய: கர்தாரம் யதா³ த்³ரஷ்டாநுபஸ்²யதி |
கு³ணேப்⁴யஸ்²ச பரம் வேத்தி மத்³பா⁴வம் ஸோऽதி⁴க³ச்ச²தி || 14- 19||
குணங்களைத் தவிர வேறு கர்த்தா இல்லையென்பதைக் கண்டு குணங்களைக்காட்டிலும் தான் வேறு என்று  ஜீவன் அறிவானாயின் என் நிலையை அடைகிறான்.
________________________________________
கு³ணாநேதாநதீத்ய த்ரீந்தே³ஹீ தே³ஹஸமுத்³ப⁴வாந் |
ஜந்மம்ருத்யுஜராது³:கை²ர்விமுக்தோऽம்ருதமஸ்²நுதே || 14- 20||
உடம்பிலே பிறக்கும் இந்த மூன்று குணங்களையும் கடந்து பிறப்பு, சாவு, மூப்பு, வருத்தம் என்பனவற்றினின்றும் விடுபட்டு அமிர்த நிலையடைகிறான்.
________________________________________
அர்ஜுந உவாச
கைர்லிங்கை³ஸ்த்ரீந்கு³ணாநேதாநதீதோ ப⁴வதி ப்ரபோ⁴ |
கிமாசார: கத²ம் சைதாம்ஸ்த்ரீந்கு³ணாநதிவர்ததே || 14- 21||
அர்ஜுனன் சொல்லுகிறான்: இறைவனே, மூன்று குணங்களையும் கடந்தோன், என்ன அடையாளங்களுடையவன்? எங்ஙனம் ஒழுகுவான்? இந்த மூன்று குணங்களையும் அவன் எங்ஙனம் கடக்கிறான்?
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ப்ரகாஸ²ம் ச ப்ரவ்ருத்திம் ச மோஹமேவ ச பாண்ட³வ |
ந த்³வேஷ்டி ஸம்ப்ரவ்ருத்தாநி ந நிவ்ருத்தாநி காங்க்ஷதி || 14- 22||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஒளி (மனத்தெளிவு), கர்மா, (மதி)மயக்கம் – இவை தோன்றும்போது இவற்றைப் பகைத்திடான்; நீங்கியபோது இவற்றை விரும்பான்.
________________________________________
உதா³ஸீநவதா³ஸீநோ கு³ணைர்யோ ந விசால்யதே |
கு³ணா வர்தந்த இத்யேவ யோऽவதிஷ்ட²தி நேங்க³தே || 14- 23||
புறக்கணித்தான் போலே இருப்பான். குணங்களால் சலிப்படையான். “குணங்கள் சுழல்கின்றன” என்றெண்ணி அசைவற்று நிற்பான்.
________________________________________
ஸமது³:க²ஸுக²: ஸ்வஸ்த²: ஸமலோஷ்டாஸ்²மகாஞ்சந: |
துல்யப்ரியாப்ரியோ தீ⁴ரஸ்துல்யநிந்தா³த்மஸம்ஸ்துதி: || 14- 24||
துன்பத்தையும் இன்பத்தையும் சமமாகக் கொண்டோன் தன்னிலையில் நிற்பான்; ஓட்டையும், கல்லையும், பொன்னையும், சமமாகக் காண்பான்; இனியவரிடத்தும், இன்னாதாரிடத்தும் சமமாக நடக்குந் தீரன்; இகழ்ச்சியையும் புகழ்ச்சியையும் சமமாகக் கணிப்பான்.
________________________________________
மாநாபமாநயோஸ்துல்யஸ்துல்யோ மித்ராரிபக்ஷயோ: |
ஸர்வாரம்ப⁴பரித்யாகீ³ கு³ணாதீத: ஸ உச்யதே || 14- 25||
மானத்தையும் அவமானத்தையும் நிகராகக் கருதுவான். நண்பரிடத்தும் பகைவனிடத்தும் நடுநிலைமை பூண்டான்; எத்தகைய மயற்சிகளையும் மேற்கொள்ளாதவன், அவனே குணங்களைக் கடந்தவனென்று சொல்லப்படுகிறான்.
________________________________________
மாம் ச யோऽவ்யபி⁴சாரேண ப⁴க்தியோகே³ந ஸேவதே |
ஸ கு³ணாந்ஸமதீத்யைதாந்ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 14- 26||
சலனமில்லாத பக்தியோகத்தால் என்னை வழிபடுவோனும் குணங்களைக் கடந்து பிரம்மத்தன்மையை பெறத்தகுவான்.
________________________________________
ப்³ரஹ்மணோ ஹி ப்ரதிஷ்டா²ஹமம்ருதஸ்யாவ்யயஸ்ய ச |
ஸா²ஸ்²வதஸ்ய ச த⁴ர்மஸ்ய ஸுக²ஸ்யைகாந்திகஸ்ய ச || 14- 27||
அழிவில்லாததும், மாறுதலிலிலாததும், சாசுவதமானதுமான தர்மத்திற்கும், நிலையான சுகத்திற்கும் ப்ரஹ்மத்திற்கும் என்றும் நானே இருப்பிடம்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘குணத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
கீதை – பதினைந்தாவது அத்தியாயம்
புருஷோத்தம யோகம்
பிரகிருதி, ஆத்மா -இவ்விரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் கடவுள் எவ்விதத்திலும் இவைகளைவிட மேலானவர். ஆகையால் புருஷோத்தமனென்று பெயர் பெற்றிருக்கிறார்.
அரசம் வித்து, முளையாகவும் கன்றாகவும் பிறகு பெரிய மரமாகவும் மாறி வானளாவி யிருப்பது போல் பிரகிருதியும் ஆத்மாவுடன் சேர்ந்து மகத்து, அகங்காரம், இந்திரியங்கள், ஐந்து பூதங்கள் என்பனவாக மாறிப் பிறகு தேவ மனுஷ்ய யக்ஷ ராக்ஷஸாதி ரூபங்களுடன் எங்கும் பரவியிருக்கின்றது.

இந்த பிரகிருதியாகிய மரத்தைப் பற்றில்லாமை என்ற கோடரியால் முதலில் வெட்டி முறிக்கவேண்டும். பிறகு அயர்வு நீங்கும் பொருட்டுக் கடவுளைச் சரணம் புகுந்து யோகத்திலிறங்க வேண்டும். சம்சாரி, முக்தன் என்று ஆத்மாக்கள் இரண்டு வகைப்பட்டவர்கள். கடவுளோ இவ்விரண்டுவித ஆத்மாக்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டவர். அவரே உலகத்தில் மறைந்து நின்று உலகத்தைத் தாங்கி நிற்பவர்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
ஊர்த்⁴வமூலமத⁴:ஸா²க²மஸ்²வத்த²ம் ப்ராஹுரவ்யயம் |
ச²ந்தா³ம்ஸி யஸ்ய பர்ணாநி யஸ்தம் வேத³ ஸ வேத³வித் || 15- 1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஸம்ஸாரமென்ற அசுவத்த விருக்ஷமானது மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். இதன் இலைகளே வேதங்கள்; அதை அறிவோனே வேத மறிவோன்.
________________________________________
அத⁴ஸ்²சோர்த்⁴வம் ப்ரஸ்ருதாஸ்தஸ்ய ஸா²கா² கு³ணப்ரவ்ருத்³தா⁴ விஷயப்ரவாலா: |
அத⁴ஸ்²ச மூலாந்யநுஸந்ததாநி கர்மாநுப³ந்தீ⁴நி மநுஷ்யலோகே || 15- 2||
அதன் கிளைகள், ஸத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் மேலும் கீழும் பரவியுள்ளன.சப்த,ஸ்பர்ச,ரூப ரஸ, கந்தம் எனும் புலங்களின் விஷயங்களை தளிர்களாகக் கொண்டவை. கர்மங்களையொட்டி அந்த மரத்தின் வேர்கள் கீழே மனுஷ்ய லோகத்திலும் பரவியுள்ளன.
________________________________________
ந ரூபமஸ்யேஹ ததோ²பலப்⁴யதே நாந்தோ ந சாதி³ர்ந ச ஸம்ப்ரதிஷ்டா² |
அஸ்²வத்த²மேநம் ஸுவிரூட⁴மூல மஸங்க³ஸ²ஸ்த்ரேண த்³ருடே⁴ந சி²த்த்வா || 15- 3||
ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை; முடிவும், ஆதியும், அந்தமும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மையென்னும் வலிய வாளால் வெட்டி யெறிந்துவிட்டு,
________________________________________
தத: பத³ம் தத்பரிமார்கி³தவ்யம் யஸ்மிந்க³தா ந நிவர்தந்தி பூ⁴ய: |
தமேவ சாத்³யம் புருஷம் ப்ரபத்³யே யத: ப்ரவ்ருத்தி: ப்ரஸ்ருதா புராணீ || 15- 4||
அப்பால் ஒருவன் எந்த ஸ்தானத்தை அடைந்தவர்கள் மறுபடியும் திரும்புவதில்லையோ அதைத் தேட வேண்டும். இந்த பழைய சம்சார விருக்ஷம் எவனிடமிருந்து உண்டாயிற்றோ அந்த ஆதி புருஷனை சரணமடைய வேண்டும்.
________________________________________
நிர்மாநமோஹா ஜிதஸங்க³தோ³ஷா அத்⁴யாத்மநித்யா விநிவ்ருத்தகாமா: |
த்³வந்த்³வைர்விமுக்தா: ஸுக²து³:க²ஸம்ஜ்ஞைர்க³ச்ச²ந்த்யமூடா⁴: பத³மவ்யயம் தத் || 15- 5||
செருக்கும் மயக்கமு மற்றோர், பற்றுதலென்னும் குற்றங்களை யெல்லாம் வென்றோர், ஆத்ம ஞானத்தில் நிலைத்து நிற்போர், ஆசைகளை விட்டு, சுக துக்கங்களையும் விட்டு ஆத்மாவின் ஸ்வபாவத்தை அறிந்தவர்கள், அழிவில்லாத அந்த ஸ்தானத்தை அடைகிறார்கள்.
________________________________________
ந தத்³பா⁴ஸயதே ஸூர்யோ ந ஸ²ஸா²ங்கோ ந பாவக: |
யத்³க³த்வா ந நிவர்தந்தே தத்³தா⁴ம பரமம் மம || 15- 6||
அதனைச் சூரியனும், சந்திரனும், தீயும் பிரகாசிக்கச் செய்வதில்லை. எதனை யெய்தினோர் மீள்வதில்லையோ, அதுவே என் பரமபதம்.
________________________________________
மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: |
மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||
எனது ஸனாதனமான அம்சமே ஜீவலோகத்தில் என்றுமுள்ள ஜீவனாகி, இயற்கை யிலுள்ளனவாகிய மனதுட்பட்ட ஆறு இந்திரியங்களையும் கவர்கிறது.
________________________________________
ஸ²ரீரம் யத³வாப்நோதி யச்சாப்யுத்க்ராமதீஸ்²வர: |
க்³ருஹித்வைதாநி ஸம்யாதி வாயுர்க³ந்தா⁴நிவாஸ²யாத் || 15- 8||
புஷ்ப வாசனையை காற்று எப்படி எடுத்துச் செல்கிறதோ, அப்படி புலங்களின் தலைவனான ஜீவனும் ஒரு சரீரத்தைத் தான் அடையும் போடும், அதை விட்டுச்செல்லும் போதும் இந்தப்புலங்களையும் எடுத்துச் செல்கிறான்.
________________________________________
ஸ்²ரோத்ரம் சக்ஷு: ஸ்பர்ஸ²நம் ச ரஸநம் க்⁴ராணமேவ ச |
அதி⁴ஷ்டா²ய மநஸ்²சாயம் விஷயாநுபஸேவதே || 15- 9||
கேட்டல், காண்டல், தீண்டுதல், சுவை, மோப்பு, மனம் இவற்றில் நிலைகொண்டு ஜீவன் விஷயங்களைத் தொடர்ந்து அனுபவிக்கிறான்.
________________________________________
உத்க்ராமந்தம் ஸ்தி²தம் வாபி பு⁴ஞ்ஜாநம் வா கு³ணாந்விதம் |
விமூடா⁴ நாநுபஸ்²யந்தி பஸ்²யந்தி ஜ்ஞாநசக்ஷுஷ: || 15- 10||
அவன் புறப்படுகையிலும், நிற்கையிலும், உண்ணுகையிலும், குணங்களைச் சார்ந்திருக்கையிலும், அவனை மூடர் காண்பதில்லை. ஞான விழியுடையோர் காண்கின்றனர்.
________________________________________
யதந்தோ யோகி³நஸ்²சைநம் பஸ்²யந்த்யாத்மந்யவஸ்தி²தம் |
யதந்தோऽப்யக்ருதாத்மாநோ நைநம் பஸ்²யந்த்யசேதஸ: || 15- 11||
முயற்சியுடைய யோகிகள் இவனைத் தம்முள்ளேயே காண்கின்றனர். அவிவேவிகள் எவ்வளவு முயற்சி செய்யினும் இந்த ஆத்மாவைக் காண்கிலர்.
________________________________________
யதா³தி³த்யக³தம் தேஜோ ஜக³த்³பா⁴ஸயதேऽகி²லம் |
யச்சந்த்³ரமஸி யச்சாக்³நௌ தத்தேஜோ வித்³தி⁴ மாமகம் || 15- 12||
சூரியனிடமிருந்து உலக முழுமைக்கும் சுடர் கொளுத்தும் ஒளியும் சந்திரனிடத்துள்ளதும் தீயிலுள்ளதும், அவ்வொளியெல்லாம் என்னுடைய தேஜஸே யென்றுணர்.
________________________________________
கா³மாவிஸ்²ய ச பூ⁴தாநி தா⁴ரயாம்யஹமோஜஸா |
புஷ்ணாமி சௌஷதீ⁴: ஸர்வா: ஸோமோ பூ⁴த்வா ரஸாத்மக: || 15- 13||
நான் பூமியுட் புகுந்து உயிர்களை வீரியத்தால் தாங்குகிறேன்.ரசமயனான சந்திரனாகிப் பூண்டுகளை யெல்லாம் வளர்க்கிறேன்.
________________________________________
அஹம் வைஸ்²வாநரோ பூ⁴த்வா ப்ராணிநாம் தே³ஹமாஸ்²ரித: |
ப்ராணாபாநஸமாயுக்த: பசாம்யந்நம் சதுர்வித⁴ம் || 15- 14||
நான் வைசுவாநரனென்ற  ஜாடராக்னியாக இருந்து, உயிர்களின் உடல்களில் உள்ளேன்.  பிராணன் அபானன் என்ற வாயுக்களுடன் கூடி நால்வகைப்பட்ட அன்னத்தை ஜீரணமாக்குகிறேன்.
ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி³ ஸந்நிவிஷ்டோ மத்த: ஸ்ம்ருதிர்ஜ்ஞாநமபோஹநம் ச |
வேதை³ஸ்²ச ஸர்வைரஹமேவ வேத்³யோ வேதா³ந்தக்ருத்³வேத³விதே³வ சாஹம் || 15- 15||
எல்லோருடைய அகத்திலும் நான் புகுந்திருக்கிறேன். நினைவும், ஞானமும், இவற்றின் நீக்கமும் என்னிடமிருந்து பிறக்கின்றன. எல்லாத் தேசங்களிலும் அறியப்படும் பொருள் யான்; வேதாந்தத்தை ஆக்கியோன் யான்; வேத முணர்ந்தோன் யானே.
________________________________________
த்³வாவிமௌ புருஷௌ லோகே க்ஷரஸ்²சாக்ஷர ஏவ ச |
க்ஷர: ஸர்வாணி பூ⁴தாநி கூடஸ்தோ²ऽக்ஷர உச்யதே || 15- 16||
உலகத்தில் இரண்டு வகைப் புருஷருளர்; அக்ஷர புருஷன், க்ஷர புருஷன் என. க்ஷர புருஷன் என்பது எல்லா உயிர்களையுங் குறிக்கும்.  ஒரு தான்யராசி போலிருப்பது அக்ஷர புருஷன்.
________________________________________
உத்தம: புருஷஸ்த்வந்ய: பரமாத்மேத்யுதா³ஹ்ருத: |
யோ லோகத்ரயமாவிஸ்²ய பி³ப⁴ர்த்யவ்யய ஈஸ்²வர: || 15- 17||
இவரில் வேறுபட்டோன் உத்தம புருஷன். அவனே பரமாத்மா எனப்படுவோன். அவன் மூன்று உலகுகளினுட் புகுந்து அவற்றைத் தாங்குகிறான்; அழிவற்றவன் ஈசுவரன்.
________________________________________
யஸ்மாத்க்ஷரமதீதோऽஹமக்ஷராத³பி சோத்தம: |
அதோऽஸ்மி லோகே வேதே³ ச ப்ரதி²த: புருஷோத்தம: || 15- 18||
நான் அழிவு கடந்தோனாதலாலும், அக்ஷர புருஷனைக் காட்டிலும் சிறந்தோனாதலாலும், உலகத்தாராலும் வேதங்களாலும் புருஷோத்தம னென்று கூறப்படுகிறேன்.
________________________________________
யோ மாமேவமஸம்மூடோ⁴ ஜாநாதி புருஷோத்தமம் |
ஸ ஸர்வவித்³ப⁴ஜதி மாம் ஸர்வபா⁴வேந பா⁴ரத || 15- 19||
மடமை தீர்ந்தவனாய், எவன் யானே புருஷோத்தமனென்பத அறிவானோ, அவனே எல்லா மறிந்தோன். அவன் என்னை எல்லாத் தன்மையாலும் வழிபடுகிறான்.
________________________________________
இதி கு³ஹ்யதமம் ஸா²ஸ்த்ரமித³முக்தம் மயாநக⁴ |
ஏதத்³பு³த்³த்⁴வா பு³த்³தி⁴மாந்ஸ்யாத்க்ருதக்ருத்யஸ்²ச பா⁴ரத || 15- 20||
குற்றமற்றோய், இங்ஙனம் மிகவும் ரகசியமான இந்தச் சாஸ்திரத்தை உனக்கு உரைத்தேன். பாரதா, இதை யுணர்ந்தோன் புத்திமானாவான். அவனே செய்யவேண்டியதை செய்த ‘க்ருதக்ருத்யன்’ ஆவான்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘புருஷோத்தம யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினைந்தாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பதினாறாவது அத்தியாயம்
தெய்வாசுர சம்பத் விபாக யோகம்
முற்கூறிய தத்துவங்களைத் தெய்வத் தன்மை வாய்ந்தவர்களே உணர்வார்கள். அசுரத் தன்மை வாய்ந்தவர்கள் அறியார்கள். தெய்வத் தன்மையுடையோர் மனது தெளிவுற்றிருக்கும். அவர் பிறருக்குத் தீங்கு செய்யார், கோபமறியார்; பொறுமை இரக்கம் பெற்றிருப்பார்.
அசுரத் தன்மையுடையோரோ டம்பமும், கொழுப்பும், கர்வமும், கோபமும், அயர்வும் பொருந்தியிருப்பார். தெய்வத் தன்மையுடையோர் சம்சார பந்தத்தினின்றும் விடுபடுவார். மற்றவரோ பின்னும் அதில் கட்டுப்படுவார்.
மேலும் அசுரத் தன்மையுடையோர் வையகம் பொய்யென்றும் ஈசுவரனற்றதென்றும் உரைப்பார்கள். தாங்களே இறைவனென்றும், தாங்களே வல்லவர்களென்றும், தாங்களே செல்வம் படைத்தவர்களென்றும் தங்களுக்கு நிகர் எவருமில்லை யென்றும் எண்ணிக் கொண்டு கெட்ட காரியங்களைச் செய்து நரகத்தில் விழுவார்கள். அவர்களுக்கு சாஸ்திரத்தில் நம்பிக்கை கிடையாது, தெய்வத் தன்மை வாய்ந்தவர்களுக்கு சாஸ்திரமே பிரமாணமாகும்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
அப⁴யம் ஸத்த்வஸம்ஸு²த்³தி⁴ர்ஜ்ஞாநயோக³வ்யவஸ்தி²தி: |
தா³நம் த³மஸ்²ச யஜ்ஞஸ்²ச ஸ்வாத்⁴யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: அஞ்சாமை, உள்ளத் தூய்மை, ஞான யோகத்தில் உறுதி, ஈகை, தன்னடக்கம், வேள்வி, கற்றல், தவம், நேர்மை.
________________________________________
அஹிம்ஸா ஸத்யமக்ரோத⁴ஸ்த்யாக³: ஸா²ந்திரபைஸு²நம் |
த³யா பூ⁴தேஷ்வலோலுப்த்வம் மார்த³வம் ஹ்ரீரசாபலம் || 16- 2||
கொல்லாமை, வாய்மை, சினவாமை, துறவு, ஆறுதல், வண்மை, ஜீவதயை, அவாவின்மை, மென்மை, வெட்கம், சலனமில்லாமை,
________________________________________
தேஜ: க்ஷமா த்⁴ருதி: ஸௌ²சமத்³ரோஹோ நாதிமாநிதா |
ப⁴வந்தி ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதஸ்ய பா⁴ரத || 16- 3||
ஒளி, பொறுமை, உறுதி, சுத்தம், துரோகமின்மை , தற்பெருமையில்லாமை– இவை தெய்வ சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பாரதா!
________________________________________
த³ம்போ⁴ த³ர்போऽபி⁴மாநஸ்²ச க்ரோத⁴: பாருஷ்யமேவ ச |
அஜ்ஞாநம் சாபி⁴ஜாதஸ்ய பார்த² ஸம்பத³மாஸுரீம் || 16- 4||
டம்பம், இறுமாப்பு, கர்வம், சினம், கடுமை, அஞ்ஞானம் இவை அசுர சம்பத்தை எய்தியவனிடம் காணப்படுகின்றன; பார்த்தா!
________________________________________
தை³வீ ஸம்பத்³விமோக்ஷாய நிப³ந்தா⁴யாஸுரீ மதா |
மா ஸு²ச: ஸம்பத³ம் தை³வீமபி⁴ஜாதோऽஸி பாண்ட³வ || 16- 5||
தேவ சம்பத்தால் மோக்ஷமடையலாம், அசுர சம்பத்தால் பந்தமேற்படும்; பாண்டவா, தேவ சம்பத்துடன் பிறந்திருக்கிறாய்; துயரப்படாதே
________________________________________
த்³வௌ பூ⁴தஸர்கௌ³ லோகேऽஸ்மிந்தை³வ ஆஸுர ஏவ ச |
தை³வோ விஸ்தரஸ²: ப்ரோக்த ஆஸுரம் பார்த² மே ஸ்²ருணு || 16- 6||
இவ்வுலகத்தில் உயிர்ப்படைப்பு இரண்டு வகைப்படும். தேவ இயல் கொண்டது. அசுர இயல் கொண்டது. தேவ இயல் கொண்டதை விரித்துச் சொன்னேன் பார்த்தா, அசுர இயல் கொண்டதைச் சொல்லுகிறேன், கேள்.
________________________________________
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச ஜநா ந விது³ராஸுரா: |
ந ஸௌ²சம் நாபி சாசாரோ ந ஸத்யம் தேஷு வித்³யதே || 16- 7||
அசுரத் தன்மை கொண்டோர் செய்யவேண்டியது எது, விலக்கவேண்டியது எது என்று அறியார். தூய்மையேனும், ஒழுக்கமேனும் வாய்மையேனும் அவர்களிடம் காணப்படுவதில்லை.
________________________________________
அஸத்யமப்ரதிஷ்ட²ம் தே ஜக³தா³ஹுரநீஸ்²வரம் |
அபரஸ்பரஸம்பூ⁴தம் கிமந்யத்காமஹைதுகம் || 16- 8||
அவர்கள் இவ்வுலகம் உண்மையற்றதென்றும் நிலையற்றதென்றும் கடவுளற்றதென்றும், சொல்லுகிறார்கள். இது தர்மம் தொடர்பின்றி பிறந்ததென்றும், வெறுமே காமத்தை ஏதுவாக உடையது என்றும் சொல்லுகிறார்கள்.
________________________________________
ஏதாம் த்³ருஷ்டிமவஷ்டப்⁴ய நஷ்டாத்மாநோऽல்பபு³த்³த⁴ய: |
ப்ரப⁴வந்த்யுக்³ரகர்மாண: க்ஷயாய ஜக³தோऽஹிதா: || 16- 9||
இந்தக் காட்சியில் நிலைபெற்று அற்ப புத்தியுடைய அந்த நஷ்டாத்மாக்கள் உலகத்துக்குத் தீங்கு சூழ்வோராய் அதன் நாசத்துக்காகக் கொடிய கர்மா செய்கின்றனர்.
________________________________________
காமமாஸ்²ரித்ய து³ஷ்பூரம் த³ம்ப⁴மாநமதா³ந்விதா: |
மோஹாத்³க்³ருஹீத்வாஸத்³க்³ராஹாந்ப்ரவர்தந்தேऽஸு²சிவ்ரதா: || 16- 10||
நிரம்பவொண்ணாத ஆசையைச் சார்ந்து, டம்பமும், கர்வமும், மதமும், பொருந்தியவராய், மயக்கத்தால், அநியாய வரும்படியைக்கொண்டு அசுத்தமான காரியங்களை புரிகிறார்கள்.
________________________________________
சிந்தாமபரிமேயாம் ச ப்ரலயாந்தாமுபாஸ்²ரிதா: |
காமோபபோ⁴க³பரமா ஏதாவதி³தி நிஸ்²சிதா: || 16- 11||
பிரளயமட்டுந் தீராத எண்ணற்ற சம்பாதிக்க வேண்டுமன்ற கவலைகளிற் பொருந்தி, இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதே, ‘உண்மை வாழ்க்கை’ என்ற நிச்சய முடையோராய்,
________________________________________
ஆஸா²பாஸ²ஸ²தைர்ப³த்³தா⁴: காமக்ரோத⁴பராயணா: |
ஈஹந்தே காமபோ⁴கா³ர்த²மந்யாயேநார்த²ஸஞ்சயாந் || 16- 12||
நூற்றுக்கணக்கான ஆசைக் கயிறுகளால் கட்டுண்டு காமத்துக்கும் சினத்துக்கும் ஆட்பட்டோராய்க் காம போகத்துக்காக அநியாயஞ்செய்து பொருட்  சேர்க்க விரும்புகிறார்கள்.
________________________________________
இத³மத்³ய மயா லப்³த⁴மிமம் ப்ராப்ஸ்யே மநோரத²ம் |
இத³மஸ்தீத³மபி மே ப⁴விஷ்யதி புநர்த⁴நம் || 16- 13||
“இன்று இன்ன லாபமடைந்தேன்; இன்ன மனோரதத்தை இனி எய்துவேன்; இன்னதையுடையேன்; இன்ன பொருளை இனிப் பெறுவேன்;”
________________________________________
அஸௌ மயா ஹத: ஸ²த்ருர்ஹநிஷ்யே சாபராநபி |
ஈஸ்²வரோऽஹமஹம் போ⁴கீ³ ஸித்³தோ⁴ऽஹம் ப³லவாந்ஸுகீ² || 16- 14||
“இன்ன பகைவரைக் கொன்று விட்டேன்; இனி மற்றவர்களைக் கொல்வேன்; நான் ஆள்வோன்; நான் போகி; நான் சித்தன்; நான் பலவான்; நான் சுக புருஷன்.”
________________________________________
ஆட்⁴யோऽபி⁴ஜநவாநஸ்மி கோऽந்யோऽஸ்தி ஸத்³ருஸோ² மயா |
யக்ஷ்யே தா³ஸ்யாமி மோதி³ஷ்ய இத்யஜ்ஞாநவிமோஹிதா: || 16- 15||
“நான் செல்வன்; இனப்பெருக்க முடையோன்; எனக்கு நிகர் யாவருளர்? வேள்வி செய்வேன்; தானம் கொடுப்பேன்; களிப்பேன்” என்ற அஞ்ஞானங்களால் மயங்கினோர்,
________________________________________
அநேகசித்தவிப்⁴ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா: |
ப்ரஸக்தா: காமபோ⁴கே³ஷு பதந்தி நரகேऽஸு²சௌ || 16- 16||
பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.
________________________________________
ஆத்மஸம்பா⁴விதா: ஸ்தப்³தா⁴ த⁴நமாநமதா³ந்விதா: |
யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே த³ம்பே⁴நாவிதி⁴பூர்வகம் || 16- 17||
இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.
________________________________________
அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: |
மாமாத்மபரதே³ஹேஷு ப்ரத்³விஷந்தோऽப்⁴யஸூயகா: || 16- 18||
அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய தன் உடலிலும், மற்றவர்கள் உடம்புகளிலும்  உள்ள என்னைப் பொறாமையால் பகைக்கிறார்கள்.
________________________________________
தாநஹம் த்³விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராத⁴மாந் |
க்ஷிபாம்யஜஸ்ரமஸு²பா⁴நாஸுரீஷ்வேவ யோநிஷு || 16- 19||
இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.
________________________________________
ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா⁴ ஜந்மநி ஜந்மநி |
மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத⁴மாம் க³திம் || 16- 20||
பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!
________________________________________

________________________________________
த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |
காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||
நரகம் இம் மூன்று வாயில்களுடையது :(அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.
________________________________________
ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்³வாரைஸ்த்ரிபி⁴ர்நர: |
ஆசரத்யாத்மந: ஸ்²ரேயஸ்ததோ யாதி பராம் க³திம் || 16- 22||
இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.
________________________________________
ய: ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: |
ந ஸ ஸித்³தி⁴மவாப்நோதி ந ஸுக²ம் ந பராம் க³திம் || 16- 23||
சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் கர்மா புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.
________________________________________
தஸ்மாச்சா²ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி²தௌ |
ஜ்ஞாத்வா ஸா²ஸ்த்ரவிதா⁴நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி || 16- 24||
ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட கர்மாவைச் செய்யக் கடவாய்.
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘தெய்வாசுர சம்பத் விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினாறாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பதினேழாவது அத்தியாயம்
சிரத்தாத்ரய விபாக யோகம்
அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார்.

அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.
________________________________________
அர்ஜுந உவாச
யே ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
தேஷாம் நிஷ்டா² து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: || 17- 1||
அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி(ஸத்வம்) நிலையா? கிளர்ச்சி (றஜஸ்)நிலையா? அல்லது இருள்(தாமஸீ) நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
த்ரிவிதா⁴ ப⁴வதி ஸ்²ரத்³தா⁴ தே³ஹிநாம் ஸா ஸ்வபா⁴வஜா |
ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்²ருணு || 17- 2||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்
________________________________________
ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ப⁴வதி பா⁴ரத |
ஸ்²ரத்³தா⁴மயோऽயம் புருஷோ யோ யச்ச்²ரத்³த⁴: ஸ ஏவ ஸ: || 17- 3||
பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.
________________________________________
யஜந்தே ஸாத்த்விகா தே³வாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: |
ப்ரேதாந்பூ⁴தக³ணாம்ஸ்²சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: || 17- 4||
ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.
________________________________________
அஸா²ஸ்த்ரவிஹிதம் கோ⁴ரம் தப்யந்தே யே தபோ ஜநா: |
த³ம்பா⁴ஹங்காரஸம்யுக்தா: காமராக³ப³லாந்விதா: || 17- 5||
(சிலர்-அஸுரத்தனம் கொண்டவர்கள்)சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.
________________________________________
கர்ஷயந்த: ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமமசேதஸ: |
மாம் சைவாந்த:ஸ²ரீரஸ்த²ம் தாந்வித்³த்⁴யாஸுரநிஸ்²சயாந் || 17- 6||
இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுரத்தனம் முடையோரென்றுணர்.
________________________________________
ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ⁴ ப⁴வதி ப்ரிய: |
யஜ்ஞஸ்தபஸ்ததா² தா³நம் தேஷாம் பே⁴த³மிமம் ஸ்²ருணு || 17- 7||
ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.
________________________________________
ஆயு:ஸத்த்வப³லாரோக்³யஸுக²ப்ரீதிவிவர்த⁴நா: |
ரஸ்யா: ஸ்நிக்³தா⁴: ஸ்தி²ரா ஹ்ருத்³யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: || 17- 8||
உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.
________________________________________
கட்‌வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதா³ஹிந: |
ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து³:க²ஸோ²காமயப்ரதா³: || 17- 9||
கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.
________________________________________
யாதயாமம் க³தரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் |
உச்சி²ஷ்டமபி சாமேத்⁴யம் போ⁴ஜநம் தாமஸப்ரியம் || 17- 10||
பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.
________________________________________
அப²லாகாங்க்ஷிபி⁴ர்யஜ்ஞோ விதி⁴த்³ருஷ்டோ ய இஜ்யதே |
யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதா⁴ய ஸ ஸாத்த்விக: || 17- 11||
பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.
________________________________________
அபி⁴ஸந்தா⁴ய து ப²லம் த³ம்பா⁴ர்த²மபி சைவ யத் |
இஜ்யதே ப⁴ரதஸ்²ரேஷ்ட² தம் யஜ்ஞம் வித்³தி⁴ ராஜஸம் || 17- 12||
பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!
________________________________________
விதி⁴ஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமத³க்ஷிணம் |
ஸ்²ரத்³தா⁴விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே || 17- 13||
விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.
________________________________________
தே³வத்³விஜகு³ருப்ராஜ்ஞபூஜநம் ஸௌ²சமார்ஜவம் |
ப்³ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸா²ரீரம் தப உச்யதே || 17- 14||
தேவர், அந்தணர், ஆச்சாரியர்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.
________________________________________
அநுத்³வேக³கரம் வாக்யம் ஸத்யம் ப்ரியஹிதம் ச யத் |
ஸ்வாத்⁴யாயாப்⁴யஸநம் சைவ வாங்மயம் தப உச்யதே || 17- 15||
சினத்தை விளைவிக்காததும் உண்மை யுடையது, இனியது, நலங் கருதியதுமாகிய சொல்லல், வேதம் ஓதுதல் – இவை வாக்கினால் செய்யப்படும் தவமெனப்படும்.
________________________________________
மந: ப்ரஸாத³: ஸௌம்யத்வம் மௌநமாத்மவிநிக்³ரஹ: |
பா⁴வஸம்ஸு²த்³தி⁴ரித்யேதத்தபோ மாநஸமுச்யதே || 17- 16||
மன அமைதி, மகிழ்ச்சி, மௌனம், தன்னைக் கட்டுதல், எண்ணத் தூய்மை – இவை மனத்தால் செய்யப்படும் தவமெனப்படும்.
________________________________________
ஸ்²ரத்³த⁴யா பரயா தப்தம் தபஸ்தத்த்ரிவித⁴ம் நரை: |
அப²லாகாங்க்ஷிபி⁴ர்யுக்தை: ஸாத்த்விகம் பரிசக்ஷதே || 17- 17||
பயனை விரும்பாத யோகிகளால் மேற்கூறிய மூன்று வகைகளிலும் உயர்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தவம் சாத்வீகமெனப்படும்.
________________________________________
ஸத்காரமாநபூஜார்த²ம் தபோ த³ம்பே⁴ந சைவ யத் |
க்ரியதே ததி³ஹ ப்ரோக்தம் ராஜஸம் சலமத்⁴ருவம் || 17- 18||
மதிப்பையும் பெருமையையும் பூஜையையும் நாடிச் செய்வதும், ஆடம்பரத்துக்காக செய்வதுமாகிய தவம் ராஜசமெனப்படும்; அஃது நிலையற்றது; உறுதியற்றது.
________________________________________
மூட⁴க்³ராஹேணாத்மநோ யத்பீட³யா க்ரியதே தப: |
பரஸ்யோத்ஸாத³நார்த²ம் வா தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 19||
மூடக் கொள்கையுடன் தன்னைத் தான் துன்பப்படுத்திக் கொண்டு செய்வதும், பிறரைக் கெடுக்குமாறு செய்வதுமாகிய தவம் தாமசமெனப்படும்.
________________________________________
தா³தவ்யமிதி யத்³தா³நம் தீ³யதேऽநுபகாரிணே |
தே³ஸே² காலே ச பாத்ரே ச தத்³தா³நம் ஸாத்த்விகம் ஸ்ம்ருதம் || 17- 20||
கொடுத்தல் கடமையென்று கருதிக் கைம்மாறு வேண்டாமல், தகுந்த இடத்தையும் காலத்தையும் பாத்திரத்தையும் நோக்கிச் செய்யப்படும் தானத்தையே சாத்வீகமென்பர்.
________________________________________
யத்து ப்ரத்யுபகாரார்த²ம் ப²லமுத்³தி³ஸ்²ய வா புந: |
தீ³யதே ச பரிக்லிஷ்டம் தத்³தா³நம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 17- 21||
கைம்மாறு வேண்டியும், பயனைக் கருதியும், மன வருத்தத்துடன் கொடுக்கப்படும் தானத்தை ராஜசமென்பர்.
________________________________________
அதே³ஸ²காலே யத்³தா³நமபாத்ரேப்⁴யஸ்²ச தீ³யதே |
அஸத்க்ருதமவஜ்ஞாதம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 17- 22||
தகாத இடத்தில், தகாத காலத்தில், தகாதர்க்குச் செய்யப்படுவதும், மதிப்பின்றி இகழ்ச்சியுடன் செய்யப்படுவதுமாகிய தானம் தாமசமெனப்படும்.
________________________________________
ஓம்தத்ஸதி³தி நிர்தே³ஸோ² ப்³ரஹ்மணஸ்த்ரிவித⁴: ஸ்ம்ருத: |
ப்³ராஹ்மணாஸ்தேந வேதா³ஸ்²ச யஜ்ஞாஸ்²ச விஹிதா: புரா || 17- 23||
“ஓம் தத் ஸத்” என்ற மூன்று பெயர்கள் பிரம்மத்தைக் குறிப்பதென்பர். அதனால் முன்பு பிரமாணங்களும், வேதங்களும், வேள்விகளும் என்னால் வகுக்கப்பட்டன.
________________________________________
தஸ்மாதோ³மித்யுதா³ஹ்ருத்ய யஜ்ஞதா³நதப:க்ரியா: |
ப்ரவர்தந்தே விதா⁴நோக்தா: ஸததம் ப்³ரஹ்மவாதி³நாம் || 17- 24||
ஆதலால், பிரம்மவாதிகள் விதிப்படி புரியும் வேள்வி, தவம், தானம் என்ற கிரியைகள் எப்போதும் ‘ஓம்’ என்று தொடங்கிச் செய்யப்படுகின்றன.
________________________________________
ததி³த்யநபி⁴ஸந்தா⁴ய ப²லம் யஜ்ஞதப:க்ரியா: |
தா³நக்ரியாஸ்²ச விவிதா⁴: க்ரியந்தே மோக்ஷகாங்க்ஷிபி⁴: || 17- 25||
‘தத்’ என்ற சொல்லை உச்சரித்து பயனைக் கருதாமல், பல வகைப்பட்ட வேள்வியும் தவமும் தானமுமாகிய கிரியைகள் மோக்ஷத்தை விரும்புவோரால் செய்யப்படுகின்றன.
________________________________________
ஸத்³பா⁴வே ஸாது⁴பா⁴வே ச ஸதி³த்யேதத்ப்ரயுஜ்யதே |
ப்ரஸ²ஸ்தே கர்மணி ததா² ஸச்ச²ப்³த³: பார்த² யுஜ்யதே || 17- 26||
‘ஸத்’ என்ற சொல் உண்மை யென்ற பொருளிலும், நன்மையென்ற பொருளிலும் வழங்கப்படுகிறது. பார்த்தா, புகழ்தற்குரிய செய்கையைக் குறிப்பதற்கும் ‘ஸத்’ என்ற சொல் வழங்குகிறது.
________________________________________
யஜ்ஞே தபஸி தா³நே ச ஸ்தி²தி: ஸதி³தி சோச்யதே |
கர்ம சைவ தத³ர்தீ²யம் ஸதி³த்யேவாபி⁴தீ⁴யதே || 17- 27||
வேள்வி, தவம், தானம் இவற்றில் உறுதி நிலையும் ‘ஸத்’ எனப்படுகிறது. பிரம்மத்தின் பொருட்டாகச் செய்யும் கர்மமும் ‘ஸத்’ என்றே சொல்லப்படும்.
________________________________________
அஸ்²ரத்³த⁴யா ஹுதம் த³த்தம் தபஸ்தப்தம் க்ருதம் ச யத் |
அஸதி³த்யுச்யதே பார்த² ந ச தத்ப்ரேத்ய நோ இஹ || 17- 28||
அசிரத்தையுடன் செய்யும் வேள்வியும் தானமும், தவமும், கர்மமும், ‘அஸத்’ எனப்படும். பார்த்தா, அவை மறுமையிலும் பயன்படா; இம்மையிலும் பயன்படா;
________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘சிரத்தாத்ரய விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினேழாம் அத்தியாயம் நிறைவுற்றது.
கீதை – பதினெட்டாவது அத்தியாயம்
மோஷ சந்நியாச யோகம்
சந்நியாசமென்றாலும் தியாகமென்றாலும் ஒன்றே. ஆனால் காம்யகர்மத்தை அடியோடு விட்டுவிடுவது சந்நியாசமென்றும் நித்திய நைமித்திக கர்மங்களில் பற்றுதலையும் பலனையும் துறப்பது தியாகமென்றும் அறிய வேண்டும்.
எல்லாக் கர்மங்களையும் அடியோடு விட்டுவிட வேண்டுமென்று சிலர் கூறுவார்கள். அது கீதையின் கருத்தன்று. நித்திய, நைமித்திக கர்மங்களைச் செய்தே தீரவேண்டும்; செய்யாவிடில் பாபம் நேரிடும். மனிதன் செய்யும் ஒவ்வொரு காரியத்துக்கும் ஈசுவரன் முக்கிய காரணமாவான்.
அப்படியிருக்கத் தானே அவற்றைச் செய்துவிடுவதாக நினைப்பவன் மூடன். ஞானம், கர்மம், உறுதி, இன்பம் என்றிவை ஒவ்வொன்றும் சாத்விகம், ராஜசம், தமசம் என்று மூவகைப்பட்டிருக்கும். கடவுளைத் தமக்குரிய கர்மங்களால் ஆராதித்தால் சித்தி பெறலாம். இவ்விதம் கண்ணனுடைய உபதேசத்தைக் கேட்டு அர்ஜுனன் மயக்கமற்று நல்லறிவு பெற்றுப் போர் புரியத் தொடங்கினான் என்று சஞ்ஜயன் திருதராஷ்டிரனுக்குக் கூறினான்.
________________________________________
அர்ஜுந உவாச
ஸந்ந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் |
த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஸ² ப்ருத²க்கேஸி²நிஷூத³ந || 18- 1 ||
அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் தனித்தனியாகக் கேட்க விரும்புகிறேன்.
________________________________________
ஸ்ரீப⁴க³வாநுவாச
காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது³: |
ஸர்வகர்மப²லத்யாக³ம் ப்ராஹுஸ்த்யாக³ம் விசக்ஷணா: || 18- 2 ||
ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விரும்பும் பொருளைப் பெறுவதற்க்காகச் செய்யப்படும் காம்ய கர்மங்களைத் துறப்பது சந்நியாசமென்று பண்டிதர்கள் தெரிவித்துள்ளனர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.
________________________________________
த்யாஜ்யம் தோ³ஷவதி³த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: |
யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே || 18- 3||
சில அறிஞர், கர்மனள் அனத்தும் குற்றமுடையவை;  ஆகயால் அவகளை விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.
________________________________________
நிஸ்²சயம் ஸ்²ருணு மே தத்ர த்யாகே³ ப⁴ரதஸத்தம |
த்யாகோ³ ஹி புருஷவ்யாக்⁴ர த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: || 18- 4||
பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.
________________________________________
யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
யஜ்ஞோ தா³நம் தபஸ்²சைவ பாவநாநி மநீஷிணாம் || 18- 5||                                                                   வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
________________________________________
ஏதாந்யபி து கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா ப²லாநி ச |
கர்தவ்யாநீதி மே பார்த² நிஸ்²சிதம் மதமுத்தமம் || 18- 6||
ஆகையால் பார்த்தா, இந்த வேள்வி, தானம், தவம் என்ற செயல்களும் , அப்படியே மேலும் செய்ய வேண்டிய கடமைகளும்,பற்றையும் பலங்களையும் தியாகம் செய்து கட்டாயமாக செய்யப்பட வேண்டியவை என்பது என் திடமான எண்ணம்,
________________________________________
நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்³யதே |
மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ: பரிகீர்தித: || 18- 7||
ஆனால் விதிக்கப்பட்ட கர்மங்களை செய்யாமல் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.
________________________________________
து³:க²மித்யேவ யத்கர்ம காயக்லேஸ²ப⁴யாத்த்யஜேத் |
ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக³ம் நைவ த்யாக³ப²லம் லபே⁴த் || 18- 8||
உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்யவேண்டிய கருமத்தை துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.
________________________________________
கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந |
ஸங்க³ம் த்யக்த்வா ப²லம் சைவ ஸ த்யாக³: ஸாத்த்விகோ மத: || 18- 9||
நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.
________________________________________
ந த்³வேஷ்ட்யகுஸ²லம் கர்ம குஸ²லே நாநுஷஜ்ஜதே |
த்யாகீ³ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா⁴வீ சி²ந்நஸம்ஸ²ய: || 18- 10||
சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் பற்று கொள்வதில்லை.
________________________________________
ந ஹி தே³ஹப்⁴ருதா ஸ²க்யம் த்யக்தும் கர்மாண்யஸே²ஷத: |
யஸ்து கர்மப²லத்யாகீ³ ஸ த்யாகீ³த்யபி⁴தீ⁴யதே || 18- 11||
(மேலும்) உடல் பெற்ற எவனாலும் கர்மங்களை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, (அதாவது, பயன்களை கிருஷ்ணார்ப்பணமாக செய்வது) அவனே தியாகி யெனப்படுவான்.
________________________________________
அநிஷ்டமிஷ்டம் மிஸ்²ரம் ச த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் |
ப⁴வத்யத்யாகி³நாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் || 18- 12||
கர்மத்தின் பயனைத் துறக்காத மனிதர்களுக்கு, கர்மத்தினுடைய நல்லதும், தீயதும், மேலும் இரண்டும் கலந்ததுமான மூன்று விதமான பயன் இறந்தபின் கட்டாயம் கிடைக்கிறது. ஆனால், கர்ம பலனைத்துறந்தவர்களுக்கு பயன் ஒருபோதும் ஏற்படாது.________________________________________
பஞ்சைதாநி மஹாபா³ஹோ காரணாநி நிபோ³த⁴ மே |
ஸாங்க்²யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்³த⁴யே ஸர்வகர்மணாம் || 18- 13||
எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.
________________________________________
அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம்                                                                                   விவிதாஸ்ச ப்ருதக்ஸேஷ்டா தைவன் சவாத்ர பஞ்சமம்              18-14
சரீரம், கர்மத்தை செய்பவன், வெவேறு விதமான கருவிககள், பிராணாபானம் முதலான வாயுக்களின் பல செயல்கள், ஐந்தாவதாக தெய்வம்-இவையே காரணங்களாகும்.
________________________________________
ஸ²ரீரவாங்‌மநோபி⁴ர்யத்கர்ம ப்ராரப⁴தே நர: |
ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: || 18- 15||
மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் காரணமாம்.
________________________________________
தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: |
பஸ்²யத்யக்ருதபு³த்³தி⁴த்வாந்ந ஸ பஸ்²யதி து³ர்மதி: || 18- 16||
இங்ஙனமிருக்கையில், எவனொருவன் தன்னை மட்டுமே கர்மா செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.
________________________________________
யஸ்ய நாஹங்க்ருதோ பா⁴வோ பு³த்³தி⁴ர்யஸ்ய ந லிப்யதே |
ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப³த்⁴யதே || 18- 17||
எவனுடைய எண்ணமானது ‘நான்’ எனும் அகங்காரமற்று இருக்கிறதோ, எவனுடைய புத்தி பற்றில்லமலிருக்கிறதோ , அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், அதன் பலனை அடைய மாட்டான்..
________________________________________
ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴ கர்மசோத³நா |
கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || 18- 18||
அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.
________________________________________
ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை⁴வ கு³ணபே⁴த³த: |
ப்ரோச்யதே கு³ணஸங்க்²யாநே யதா²வச்ச்²ருணு தாந்யபி || 18- 19||
குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.
________________________________________
ஸர்வபூ⁴தேஷு யேநைகம் பா⁴வமவ்யயமீக்ஷதே |
அவிப⁴க்தம் விப⁴க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ஸாத்த்விகம் || 18- 20||
எந்த ஞானத்தினால் மனிதன் தனித்தனியான உயிரினங்கள் அனைத்திலும் ஒன்றேயானதும் அழிவற்றதுமான பரமாத்மாவின் இருப்பைப் பிரிவற்றதாக (எங்கும் சமமாக உள்ளதாக)ப் பார்க்கிறானோ, அந்த ஞானத்தைச் சாத்வீகம் என்று அறிவாயாக. 
________________________________________
ப்ருத²க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா⁴வாந்ப்ருத²க்³விதா⁴ந் |
வேத்தி ஸர்வேஷு பூ⁴தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ராஜஸம் || 18- 21||
எந்த ஞானமானது எல்லா ஜீவராசிகளுக்கும் வெவ்வேறாக இருப்பதைக்கொண்டு, தனித்தனியாக ஆத்மாக்கள் இருப்பதாக அறிகிறதோ அந்த    ஞானம்  ராஜஸம் என்று அறிவாயாக.
________________________________________
யத்து க்ருத்ஸ்நவதே³கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் |
அதத்த்வார்த²வத³ல்பம் ச தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 22||
உண்மைக்கும், யுக்திக்கும் மாறுதலாய் அல்ப செயல்களை யோசனையின்றி செது முடிக்க எண்ணும் ஞானம் தாமசமென்று கூறப்படும்.
________________________________________
நியதம் ஸங்க³ரஹிதமராக³த்³வேஷத: க்ருதம் |
அப²லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே || 18- 23||
எந்தச் செயல் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டுள்ளதோ, ‘நான் செய்கிறேன’' என்ற அபிமானமின்றி, பயனில் விருப்பம் கொள்ளாத மனிதனால்-விருப்பு வெறுப்பு இன்றி செய்யப்படுகிறதோ, அச்செயல் ‘சாத்வீகம்’ என்று கூறப்படுகிறது., .
________________________________________
யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: |
க்ரியதே ப³ஹுலாயாஸம் தத்³ராஜஸமுதா³ஹ்ருதம் || 18- 24||
பலனை விரும்புகிறவனாலோ,அல்லது தானே கர்த்தா என்ற அகங்காரம் கொண்டவனாலோ, வெகு சிரமப்பட்டு செய்யும் கர்மம் ராஜஸ கர்மமாகும்.
________________________________________
அநுப³ந்த⁴ம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் |
மோஹாதா³ரப்⁴யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே || 18- 25||
கர்ம பலனையும், பொருட்செலவையும், பிறருக்குத்தரும் சிரமத்தையும், தன் சக்தியையும் பாராமல், மோகத்தால் மட்டும் செய்யப்படும் கர்மம் தாமஸ கர்மமெனப்படும்.
________________________________________
முக்தஸங்கோ³ऽநஹம்வாதீ³ த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: |
ஸித்³த்⁴யஸித்³த்⁴யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே || 18- 26||
பற்றுதலை நீக்கியவனும், அகங்காரமற்றவனும், தைரியம், உற்சாகம் இவைகளுடன் கூடியவனும், தன் காரியம் நிறைவேறினாலும் நிறைவேறாவிட்டாலும் எவ்வித மாறுதலையும் அடையாத கர்த்தா, ஸாத்விக கர்த்தா எனப்படுவான்.
________________________________________
ராகீ³ கர்மப²லப்ரேப்ஸுர்லுப்³தோ⁴ ஹிம்ஸாத்மகோऽஸு²சி: |
ஹர்ஷஸோ²காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: || 18- 27||
ஆசை கொண்டவனும், கர்ம பலனில் பற்று உள்ளவனும்,பணத்தாசை பிடித்தவனும்,பிறரை இம்ஸிக்கும் சுபாவமுள்ளவனும், அசுத்தமானவனும், ஸந்தோஷம், துக்கம் இவகளுடன் கூடியவனுமானவன் ராஜஸ கர்த்தா எனப்படுவான்..
________________________________________
அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்³த⁴: ஸ²டோ² நைஷ்க்ருதிகோऽலஸ: |
விஷாதீ³ தீ³ர்க⁴ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே || 18- 28||
மன அமைதியில்லாதவன், விவேகமற்றவன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் கர்மா செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.
________________________________________
பு³த்³தே⁴ர்பே⁴த³ம் த்⁴ருதேஸ்²சைவ கு³ணதஸ்த்ரிவித⁴ம் ஸ்²ருணு |
ப்ரோச்யமாநமஸே²ஷேண ப்ருத²க்த்வேந த⁴நஞ்ஜய || 18- 29||
குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.
________________________________________
ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப⁴யாப⁴யே |
ப³ந்த⁴ம் மோக்ஷம் ச யா வேத்தி பு³த்³தி⁴: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 30||
எந்த புத்தியானது, செயலில் ஈடுபடுதல், ஈடு படாமை, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் அறியுமோ அதுவே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.
________________________________________
யயா த⁴ர்மமத⁴ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச |
அயதா²வத்ப்ரஜாநாதி பு³த்³தி⁴: ஸா பார்த² ராஜஸீ || 18- 31||
தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் செய்யத்தக்கது, செய்யத்தகாதது என்பதை உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.
________________________________________
அத⁴ர்மம் த⁴ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா |
ஸர்வார்தா²ந்விபரீதாம்ஸ்²ச பு³த்³தி⁴: ஸா பார்த² தாமஸீ || 18- 32||
பார்த்தா, அஞ்ஞானத்தால் மறைக்கப்பட்டு , அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.
________________________________________
த்⁴ருத்யா யயா தா⁴ரயதே மந:ப்ராணேந்த்³ரியக்ரியா: |
யோகே³நாவ்யபி⁴சாரிண்யா த்⁴ருதி: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 33||
பகவானைத்தவிற வேறு எந்த விஷயத்திலும் சிந்திக்காத எந்த உறுதியினால், மனிதன் தியான யோகத்தின் மூலம் மனம், பிராணன், புலங்கள்- இவற்றினுடைய செயல்களை நிலை நிறுத்துகிறானோ அந்த உறுதி சாத்வீகமாவது, பார்த்தா.
________________________________________
யயா து த⁴ர்மகாமார்தா²ந்த்⁴ருத்யா தா⁴ரயதேऽர்ஜுந |
ப்ரஸங்கே³ந ப²லாகாங்க்ஷீ த்⁴ருதி: ஸா பார்த² ராஜஸீ || 18- 34||
பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜஸ தைரியம் எனப்படும்.
________________________________________
யயா ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் விஷாத³ம் மத³மேவ ச |
ந விமுஞ்சதி து³ர்மேதா⁴ த்⁴ருதி: ஸா பார்த² தாமஸீ || 18- 35||
பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், கர்வத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.
________________________________________
ஸுக²ம் த்விதா³நீம் த்ரிவித⁴ம் ஸ்²ருணு மே ப⁴ரதர்ஷப⁴ |
அப்⁴யாஸாத்³ரமதே யத்ர து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி || 18- 36||
பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எந்த சுகத்தில், சாதகனான மனிதன்,  பஜனை, தியானம்,சேவை முதலிய பயிற்சிகளினால் இன்புறுகிறானோ,துன்பத்தின் முடிவையும் அடைகின்றானோ
________________________________________
யத்தத³க்³ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் |
தத்ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு³த்³தி⁴ப்ரஸாத³ஜம் || 18- 37||
அந்த சுகம் சாதனையின் தொடக்கத்தில், விஷத்தைப்போலத் தோன்றினாலும்,விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பானதாக இருக்கும். ஆகவே பகவான் பற்றிய தெளிவான அறிவினால் ஏற்படக்கூடிய அந்த சுகம் ஸாத்விகம் எனப்படுகிறது.
விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த்³ யத் தத³க்³ரேऽம்ருதோபமம் |
பரிணாமே விஷமிவ தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 18- 38||
விஷயங்க்களும் புலங்களும் சேருவதால்-முதலில் எது அமிர்தம் போலிருந்து பின்னை ந் விஷம் போலாகுமோ அந்த இன்பம் ராஜசமெனப்படும்.
________________________________________
யத³க்³ரே சாநுப³ந்தே⁴ ச ஸுக²ம் மோஹநமாத்மந: |
நித்³ராலஸ்யப்ரமாதோ³த்த²ம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 39||
தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமஸமென்று கருதப்படும்.
________________________________________
ந தத³ஸ்தி ப்ருதி²வ்யாம் வா தி³வி தே³வேஷு வா புந: |
ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே³பி⁴: ஸ்யாத்த்ரிபி⁴ர்கு³ணை: || 18- 40||
இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
ப்³ராஹ்மணக்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச பரந்தப |
கர்மாணி ப்ரவிப⁴க்தாநி ஸ்வபா⁴வப்ரப⁴வைர்கு³ணை: || 18- 41||
பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய கர்மாகள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி பிரிக்கப்பட்டிருக்கின்றன.
________________________________________
ஸ²மோ த³மஸ்தப: ஸௌ²சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச |
ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்³ரஹ்மகர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 42||
 மனவடக்கம்,புலனடக்கம்,துன்பங்களையும் பொருத்துக்கொண்டு ஸ்வதர்மத்தைக்கடைப்பிடித்தல், அகத்தூய்மை, புறத்தூய்மை, பிறர் குற்றம் பொருத்தல்,மனம், ப்லன், உடல்-இவற்றில் நேர்மை; வேதம், சாஸ்த்திரம், கடவுள், பரலோகம்-இவற்றில் நம்பிக்கை, வேத சாஸ்திரங்கள கற்றல், கற்பித்தல்; பரமாத்ம தத்துவத்தை அனுபவம் மூலம் உணர்தல்-இவையே  இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
________________________________________
ஸௌ²ர்யம் தேஜோ த்⁴ருதிர்தா³க்ஷ்யம் யுத்³தே⁴ சாப்யபலாயநம் |
தா³நமீஸ்²வரபா⁴வஸ்²ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 43||
சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
________________________________________
க்ருஷிகௌ³ரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் |
பரிசர்யாத்மகம் கர்ம ஸூ²த்³ரஸ்யாபி ஸ்வபா⁴வஜம் || 18- 44||
உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட கர்மா.
________________________________________
ஸ்வே ஸ்வே கர்மண்யபி⁴ரத: ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே நர: |
ஸ்வகர்மநிரத: ஸித்³தி⁴ம் யதா² விந்த³தி தச்ச்²ருணு || 18- 45||
தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் பகவானை அடையும் சித்தி  பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.
________________________________________
யத: ப்ரவ்ருத்திர்பூ⁴தாநாம் யேந ஸர்வமித³ம் ததம் |
ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மாநவ: || 18- 46||
உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
________________________________________
ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத் |
ஸ்வபா⁴வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் || 18- 47||
பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட கர்மாவைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.
________________________________________
ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ³ஷமபி ந த்யஜேத் |
ஸர்வாரம்பா⁴ ஹி தோ³ஷேண தூ⁴மேநாக்³நிரிவாவ்ருதா: || 18- 48||
குந்தி மகனே, இயல்பான கர்மா குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் கர்மாகளையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
________________________________________
அஸக்தபு³த்³தி⁴: ஸர்வத்ர ஜிதாத்மா விக³தஸ்ப்ருஹ: |
நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி⁴க³ச்ச²தி || 18- 49||
எங்கும் பற்றற்ற புத்தியுடைய, ஆசையற்றவனான, உள்ளத்தை அடக்கிய மனிதன் கர்மத்தளைகளிலிருந்து முற்றும் விடுபட்ட பெருநிலையை அடைகிறான்.
________________________________________
ஸித்³தி⁴ம் ப்ராப்தோ யதா² ப்³ரஹ்ம ததா²ப்நோதி நிபோ³த⁴ மே |
ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா² ஜ்ஞாநஸ்ய யா பரா || 18- 50||
சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறான், மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவா னென்பதைக் கூறுகிறேன், கேள்.
________________________________________
பு³த்³த்⁴யா விஸு²த்³த்⁴யா யுக்தோ த்⁴ருத்யாத்மாநம் நியம்ய ச |
ஸ²ப்³தா³தீ³ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக³த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச || 18- 51||
தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், தெளிந்த அறிவுடன் கூடியவனாய், எளிய சாத்வீக அளவான உணவு அருந்துபவனாய் உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய புலன் நுகர் விஷயங்களைத் துறந்து, ,
________________________________________
விவிக்தஸேவீ லக்⁴வாஸீ² யதவாக்காயமாநஸ: |
த்⁴யாநயோக³பரோ நித்யம் வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: || 18- 52||
தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு திடமான வைரக்யத்தை அடைந்தவனாகவும் ,
________________________________________
அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் |
விமுச்ய நிர்மம: ஸா²ந்தோ ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 18- 53||
அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மத்தில்  கலப்பதற்கு தகுதி பெறுகிறான்.
________________________________________
ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
ஸம: ஸர்வேஷு பூ⁴தேஷு மத்³ப⁴க்திம் லப⁴தே பராம் || 18- 54||
பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
________________________________________
ப⁴க்த்யா மாமபி⁴ஜாநாதி யாவாந்யஸ்²சாஸ்மி தத்த்வத: |
ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸ²தே தத³நந்தரம் || 18- 55||
அவன் பரமாத்மாவான என்னை யார் என்றும், எத்தன்மையானவன் என்றும் உள்ளது உள்ளபடியே ததுவ ரீதியாக அறிகிறான், அக்கணமே என்னிடம் ஐக்கியமாகிறான்.
________________________________________
ஸர்வகர்மாண்யபி ஸதா³ குர்வாணோ மத்³வ்யபாஸ்²ரய: |
மத்ப்ரஸாதா³த³வாப்நோதி ஸா²ஸ்²வதம் பத³மவ்யயம் || 18- 56||
எல்லாத் கர்மாகளையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே புகலாகக்  கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.
________________________________________
சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: |
பு³த்³தி⁴யோக³முபாஸ்²ரித்ய மச்சித்த: ஸததம் ப⁴வ || 18- 57||
அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.
________________________________________
மச்சித்த: ஸர்வது³ர்கா³ணி மத்ப்ரஸாதா³த்தரிஷ்யஸி |
அத² சேத்த்வமஹங்காராந்ந ஸ்²ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி || 18- 58||
என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.
________________________________________
யத³ஹங்காரமாஸ்²ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே |
மித்²யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி || 18- 59||
நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். உன் இயல்பு  உன்னைப் போரில் ஈடுபடுத்தும்.
________________________________________
ஸ்வபா⁴வஜேந கௌந்தேய நிப³த்³த⁴: ஸ்வேந கர்மணா |
கர்தும் நேச்ச²ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோ²ऽபி தத் || 18- 60||
இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், உன் இயல்பான கர்ம வினையினால் வசப்பட்டு அதைச் செய்வாய்.
________________________________________
ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||
அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் உடலாகிய சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
________________________________________
தமேவ ஸ²ரணம் க³ச்ச² ஸர்வபா⁴வேந பா⁴ரத |
தத்ப்ரஸாதா³த்பராம் ஸா²ந்திம் ஸ்தா²நம் ப்ராப்ஸ்யஸி ஸா²ஸ்²வதம் || 18- 62||
அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
________________________________________
இதி தே ஜ்ஞாநமாக்²யாதம் கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மயா |
விம்ருஸ்²யைதத³ஸே²ஷேண யதே²ச்ச²ஸி ததா² குரு || 18- 63||
இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ந்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
________________________________________
ஸர்வகு³ஹ்யதமம் பூ⁴ய: ஸ்²ருணு மே பரமம் வச: |
இஷ்டோऽஸி மே த்³ருட⁴மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் || 18- 64||
மீண்டுமொருமுறை எல்லாவற்றிலும் மேலான ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.
________________________________________
மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே || 18- 65||
உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, இது வே உண்மையென உறுதி கூறுகிறேன், நீ எனக்கினியை.
________________________________________
ஸர்வத⁴ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ |
அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: || 18- 66||
ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய = எல்லா அறங்களையும் விட்டு விட்டு
மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ = என்னையே சரண் புகு
ஸர்வபாபேப்⁴ய: = எல்லாப் பாவங்களினின்றும்
அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி = நான் உன்னை விடுவிக்கிறேன்
மா ஸு²ச: = துயரப்படாதே
எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
________________________________________
இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி || 18- 67||
இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
________________________________________
ய இமம் பரமம் கு³ஹ்யம் மத்³ப⁴க்தேஷ்வபி⁴தா⁴ஸ்யதி |
ப⁴க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸ²ய: || 18- 68||
இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.
________________________________________
ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்²சிந்மே ப்ரியக்ருத்தம: |
ப⁴விதா ந ச மே தஸ்மாத³ந்ய: ப்ரியதரோ பு⁴வி || 18- 69||
மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.
________________________________________
அத்⁴யேஷ்யதே ச ய இமம் த⁴ர்ம்யம் ஸம்வாத³மாவயோ: |
ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: || 18- 70||
நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் கற்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை (கருத்து).
________________________________________
ஸ்²ரத்³தா⁴வாநநஸூயஸ்²ச ஸ்²ருணுயாத³பி யோ நர: |
ஸோऽபி முக்த: ஸு²பா⁴ம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் || 18- 71||
நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும்பாவங்களிலிருந்து விடுதலையடைவான், அப்பால் புண்ணியம் செய்தோர் அடையும்  நல்லுலகங்களெய்துவான்.
________________________________________
கச்சிதே³தச்ச்²ருதம் பார்த² த்வயைகாக்³ரேண சேதஸா |
கச்சித³ஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே த⁴நஞ்ஜய || 18- 72||
பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
________________________________________
அர்ஜுந உவாச
நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்³தா⁴ த்வத்ப்ரஸாதா³ந்மயாச்யுத |
ஸ்தி²தோऽஸ்மி க³தஸந்தே³ஹ: கரிஷ்யே வசநம் தவ || 18- 73||
அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.
________________________________________
ஸஞ்ஜய உவாச
இத்யஹம் வாஸுதே³வஸ்ய பார்த²ஸ்ய ச மஹாத்மந: |
ஸம்வாத³மிமமஸ்²ரௌஷமத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் || 18- 74||
சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.
________________________________________
வ்யாஸப்ரஸாதா³ச்ச்²ருதவாநேதத்³கு³ஹ்யமஹம் பரம் |
யோக³ம் யோகே³ஸ்²வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத²யத: ஸ்வயம் || 18- 75||
யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசர் அருளால் கேட்டேன்.
________________________________________
ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத³மிமமத்³பு⁴தம் |
கேஸ²வார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: || 18- 76||
அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், நினைத்து நினைத்து களிப்பெய்துகிறேன்.
________________________________________
தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்³பு⁴தம் ஹரே: |
விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந: || 18- 77||
அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மேலும் மேலும் களிப்படைகிறேன்.
________________________________________
யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ² த⁴நுர்த⁴ர: |
தத்ர ஸ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம || 18- 78||
அரசே, இங்கு நான் சொல்லவேண்டியதெல்லாம்- எங்கே யோகேஸ்வரனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனும்,அர்ஜுனனும் இருக்கிறார்களோ அவ்விடத்தில் மஹாலக்ஷ்மியும், வெற்றியும் ஐஸ்வர்யமும், நிலைத்த நீதியும் இருக்கும் என்பது என்னுடைய கொள்கை.
(ஸ்ரீமத் பகவத் கீதை ஸ்ம்பூர்ணம்)
________________________________________

________________________________________
ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
உரையாடலில் ‘மோக்ஷ ஸந்நியாச யோகம்’ எனப் பெயர் படைத்த
பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
( பாரதியாரின் உரையை வலையேற்றி கிடைக்கச் செய்த தமிழ் ஹிந்து தளத்திற்கும் நன்றிகள் பல. )
ஸுபமஸ்து:













.



Comments

Selvaraj said…
Thank you for your wonderful service. Your listing of the chapters is wrong. You have skipped the chapter-1 name: Arjuna Vishada yoga. Instead, you have assigned the name of the chapter-2 for chapter-1. In this way, everything has been shifted. Please make this correction.

Thank you.

Popular Posts