குணசீலம் பெருமாள்
குணசீலம் ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடாஜலபதி- காயத்ரி
உங்கள் கருத்துகள்
நண்பருக்கு அனுப்ப
பிரதி எடுக்க
குருவிற்காக இறைவனைப் பிரிந்து குருவுடன் செல்வதா அல்லது தனக்காக எழுந்தருளிய இறைவனுக்காக தன்னுடைய குருவை விட்டுப்பிரிவதா என்று குழம்பித் தவித்தார்.திருப்பதி வெங்கடாஜலபதியின் தரிசனம் காணக் கிடைப்பதென்பது பெரும்பாடு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இறைவனை தரிசித்த பின் திரும்ப மனமின்றி செல்லும் பக்தர்கள் பலருண்டு. தரிசனத்துக்காக மறுமுறை வருவோம் என்று தங்களைத் தாங்களே தேற்றிக் கொள்ளும் பக்தர்களும் உண்டு. ஆனால் நம்முடைய பண்டைய தமிழகத்தில் திருமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானை தம்முடைய ஆஸ்ரமத்துக்கு தம்முடன் வருமாறு வேண்டிய முனிவர்கள் இருந்தார்கள். என்ன நம்ப முடியவில்லையா? ஆச்சர்யமாகயிருக்கிறதா? திருச்சியிலிருந்து 16 கி.மீ. தொலைவில், சேலம்-திருச்சி பாதையில் அமைந்துள்ளது குணசீலம். இங்கு தான் அம்முனிவர் தவம் புரிந்தார். அவருடைய தவத்தின் வலிமை சாட்சாத் அந்த வெங்கடாஜலபதியையே, காவேரிக்கரையோரம் அமைந்திருந்த அவருடைய ஆஸ்ரமத்துக்கே கொணர்ந்தது. அதனால் அவ்விடத்தின் பெயர் அம்முனிவரின் பெயராலேயே வழங்கப்பட்டது.முனிவர் ஸ்ரீதல்ப்யாவின் சீடர் குணசீலர். குணசீலர் தன்னுடைய குருவிற்கு செய்த உண்மையான சேவையின் பலனாக அவருடைய குரு தான் அறிந்த அனைத்து விதமான ஞானம் மற்றும் சக்திகளை அவருக்கு போதித்தார்.ஒருமுறை குணசீலர் ஏழுமலையானை தரிசிப்பதற்கு சென்றார். இறைவனுடைய தரிசனமும் பெற்றார். இறைவனை தரிசித்தப்பின் அவரைப் பிரிந்து ஒரு கணமும் இருக்கலாகாது என்பதை உணர்ந்தார். அதனால் இறைவனை தன்னுடன் ஆஸ்ரமத்துக்கு வருமாறு வேண்டினார். பக்தர்களின் உண்மையான அன்பை மெச்சும் இறைவனும் தான் கடனாளியாக இருப்பதால் திருப்பதியைவிட்டு வர இயலாதென குணசீலருக்கு தன்னுடைய நிலையை உணர்த்தினார்.காவேரி நதிக்கரையில் அமைந்துள்ள அவருடைய ஆசிரமத்துக்கு சென்று தவம் புரியுமாறு பணித்தார். குணசீலரும் இறைவன் பணித்தது போல தவம் புரிந்தார். பல வருடங்களுக்குப்பிறகு சத்திய யுகத்தில், புரட்டாசி மாதம் ஸ்ராவண நட்சத்திரம் தவழ்ந்த ஓர் சனிக்கிழமை அன்று வெங்காடசலபதி சுயம்புவாக குணசீலரின் ஆஸ்ரமத்தில் தோன்றினார். பெருமகிழ்ச்சியடைந்த முனிவரும் இறைவனுக்கு தொண்டு செய்து வந்தார். இந்த நேரத்தில் குணசீலரின் குரு பத்ரிநாத் சென்று தவம் மேற்கொள்ள எண்ணினார். அவருடைய சீடரைப் பிரிந்து செல்ல மனமற்றவராய் இருந்தார். குருவின் விருப்பம் மற்றும் மனக்குழப்பம் பற்றியும் அறிந்தார்குணசீலர். குருவிற்காக இறைவனைப் பிரிந்து குருவுடன் செல்வதா அல்லது தனக்காக எழுந்தருளிய இறைவனுக்காக தன்னுடைய குருவை விட்டுப்பிரிவதா என்று குழம்பித் தவித்தார். முடிவில் இறைவனிடமே தன்னுடைய மனக்குழப்பம் நீக்கி நல்வழி காட்டுமாறு வேண்டினார். இறைவன் குருவுடன் சென்று அவருக்குப்பணிவிடை செய்ய அனுமதியளித்தார். இறைவனே தன்னுடைய மனக்குழப்பத்தை தீர்த்துவைத்ததால், இத்தலத்திற்கு வந்து தங்களுடைய மனநிலை மற்றும் மனக்குழப்பம் நீங்க வேண்டுவோருக்கு தெளிவு அளிக்குமாறு இறைவனை வேண்டினார். இறைவனும் அவ்வாறே செய்வதாக அருள் புரிந்தார். இதன் காரணமாகவே மனநிலை பாதிப்படைந்தவர்கள் இக்கோவிலில் வந்து இறைவனை வழிபடுதல் மூலம் குணமடைவர் என்று நம்புகின்றனர். குருவுடன் செல்லுமுன் குணசீலர் தன்னுடைய சீடனை இறைவனுக்கு பூஜை மற்றும் சேவைகள் செய்வதற்காக பணித்துவிட்டுச் சென்றார். ஆனால் துரதிஷ்டவசமாக காட்டு விலங்குகள் மற்றும் இயற்கை சீற்றங்களைக்கண்டு பயந்த அச்சீடன் அவ்விடத்தை விட்டுச் சென்றுவிட்டான். சரியான பராமரிப்பின்மை காரணமாக விக்கிரகத்தைச் சுற்றிலும் எறும்புப் புற்று ஏற்பட்டு பாம்புகள் அங்கு வாசம் செய்தன. அப்பொழுது சோழ மன்னர் ஞானவர்மன் உறையூரை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தார். குணசீலரின் ஆஸ்ரமத்துக்கருகில் ஒரு மாட்டுப்பண்ணை அமைத்திருந்தார். திடீரென்று பால் காணாமல் போவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் மன்னரிடம் தெரிவித்தனர். அப்பொழுது மன்னர் முன் பிராமணர் ஒருவர் தோன்றி, எறும்புப் புற்றைப் பால் கொண்டு கரைத்தால் இறைவனின் தரிசனம் பெற முடியுமென்று சொல்லி மறைந்தார். அவ்வாறே செய்த மன்னனும் இறைவனின் விக்கிரகத்தைக்கண்டு பரவசமடைந்தார். அங்கு ஒருகோவிலை எழுப்பினார்.
குணசீலத்தில் எழுந்தருளியுள்ள இறைவனை ஸ்ரீ ப்ரஸன்ன வெங்கடேச பெருமாள் என்று வழங்குகின்றனர். இங்குள்ள பெருமாளை தரிசிப்பது திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிப்பதற்கு சமமாக கருதப்படுகிறது. இதன் காரணமாக குணசீலம் தென்னகத்து திருப்பதி என்றும் வழங்கப்படுகிறது.

Comments