"*மாதவன்* என்றென்று ஓதவல்லீரேல்


"*மாதவன்* என்றென்று ஓதவல்லீரேல்
_____________________________________________
ஸ்ரீமான் ஜோசெப் ராமாநுஜ தாஸர் ஸ்வாமிக்குத் 
தீவினையேதும் சாராதபடி, ஸ்ரீவைஷ்ணவ ஸமூஹத்தில் 
செய்யும் ப்ரார்த்தனையில் அடியேனும் அந்வயித்துச் 
செய்யும் விண்ணப்பங்கள் இவ்வாறு ~ 

"ஆழியெழச் சங்கும் வில்லுமெழ---" *(திருவாய்மொழி 7-4),* 
சீடர்கள் இப்பதிகம் சேவித்து, பின்பழகிய-பெருமாள்-ஜீயர்க்குத் திருமேனி 
"பண்டுபோலே பாங்காயிற்று" *[ஆறாயிரப்படி குரு-பரம்பரா-ப்ரபாவம், 
*நஞ்சீயர்-நம்பிள்ளை 
வைபவங்கள்]. 

"*மாதவன்* என்றென்று ஓதவல்லீரேல், 
தீதொன்றும் அடையா, ஏதம் சாராவே." [திருவாய்.10:5:7] 

<கண்ணன் கழலிணை> எனத் தொடங்கும் இப்பதிகம் திருமந்த்ர-ஸாரம் என்று ஆழ்வான் 
நிர்வாஹம். 

*திருமந்த்ரம்* எப்பொருளாயும் பயன்படும் என்று 
ந்ருஸிம்ஹ புராணத்தில் காண்கிறது. 
नमो नारायणायेति मन्त्र: सर्वार्थ-साधक: | 
<நாடு நகரமும் நன்கறிய நமோ நாராயணாய என்று 
பாடும் மனமுடைப் பத்தருள்ளீர் வந்து பல்லாண்டு கூறுமினே !> 

"மங்கிய வல்வினை நோய்காள் ! 
உமக்கும் ஓர் வல்வினை கண்டீர், 
இங்குப் புகேன்மின், புகேன்மின், 
எளிதன்று கண்டீர், புகேன்மின் ! 
சிங்கப் பிரான் அவன் எம்மான் சேரும் 
திருக்கோயில் கண்டீர், 
பங்கப்படாது உய்யப்போமின் 
பண்டன்று பட்டினங்காப்பே ! 

"உறகல், உறகல், உறகல், 
ஒண்சுடர் ஆழியே, சங்கே, 
அறவெறி நாந்தக-வாளே, 
அழகிய சார்ங்கமே, தண்டே, 
இறவுபடாமல் இருந்த 
எண்மர் உலோக-பாலீர்காள், 
பறவை அரையா உறகல், 
பள்ளியறை குறிக்கொண்மின் ! 

"அரவத்து அமளியினோடும் 
அழகிய பாற்கடலோடும் 
அரவிந்தப் பாவையும் தானும் 
அகம்படி வந்து புகுந்து 
பரவைத் திரை பல மோதப் 
பள்ளிகொள்கின்ற பிரானைப் 
பரவுகின்றான் விட்டுசித்தன் 
பட்டினம் காவல்பொருட்டே !" [பெரியாழ்வார் 5:2] 

த்ரௌபதி தேவியின் சரணாகதிப் பாசுரம். 
(இதற்கு ஸ்வாமி பெரியவாச்சான் பிள்ளை 
தனி வ்யாக்யான ரஹஸ்யமே அருளியுள்ளார்.) 

शङ्ख-चक्र-गदा-पाणे, द्वारका-निलय-अच्युत 
गोविन्द, पुण्डरीकाक्ष, रक्ष मां शरणागताम् ! 

இறைவனின் ஐம்படைகளை விளித்து, 
எம்பெருமானின் மந்த்ர-ரூபமான 
திருநாமங்களை ஜபித்தல் ~ 

वनमाली गदी शार्ङ्गी शङ्खी चक्री च नन्दकी 
श्रीमान् नारायणो विष्णु: वासुदेवो अभिरक्षतु || 

கேரள-கவி மஹான் ஸ்ரீ நாராயண பட்டத்திரி 
செய்த பிரார்த்தனையை ஜபமாக அநுட்டித்து 
ஒரு மாது புற்றுநோயிலிருந்து விடுபட்டதாக 
ஒரு பத்திரிகையில் படித்தேன் ~ 

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे 
त्वं इत्थं उत्थापित-पद्मयोनि: 
अनन्तभूमा मम रोगराशिं 
निरुन्धि वातालय-वास विष्णो || 
[ஸ்ரீமந்நாராயணீயம் 9:13] 

[எங்கும் நீக்கமற வியாபித்து நின்று, 
படைப்பாளியான பிரமனையே படைத்து 
விளங்கும் பரமாத்மாவே, அடியேனுடைய 
நோய்ச் சேர்க்கையினைக் களைந்தருள வேணும்.] 

க்ரமமாக மந்த்ரோபதேசம் ஆகாதிருந்தாலும், 
*"நாராயண" *எனும் பெயர்ச்சொல் மட்டும் இட்டு 
நாம-ஜபம் செய்வது ஒன்றே போதுமானது. 
संकीर्त्य नारायण-शब्द-मात्रं विमुक्त-दुःखा: सुखिनो भवन्ति | 
--(ஸ்ரீமகாபாரதம், ஸ்ரீஸஹஸ்ரநாம பூர்வாங்கம்) 

ஆக, மாதவன், நாராயணன், கோவிந்தன், ஆன 
மந்த்ரத் திருநாமங்களை மட்டுமே ஜபித்திருந்தால் 
போதுமானது. 

<ஹரே* ராம* ஹரே *க்ருஷ்ண* ஹரே* ரங்க* ஹரே ஹரே !> 

அடியேன் ராமாநுஜதாஸன் 
திருமஞ்சனம் சுந்தர ராஜன்

Comments

Popular Posts