நரசிம்ம ஜெயந்தி!

Thanks to:      
SRI:
_____________

Thu May 23, 2013 8:03 pm (PDT) . Posted by:

"Saranya Vs" saranyavs21

SRI:

Dear All

Special thanks to Varagoor Narayanan for sharing this article.

நரசிம்மர் பாரதம் முழுதும் வணங்கப்பட்டாலும், தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடக மாநிலங்களில் தான், அவருக்குத் தனிக்கோவிலும், சிறப்பு வழிபாடும் அதிகம். வைகாசி மாதம் வளர்பிறை சதுர்தசியன்று சூரியன் மறையும் நொடியில் (பகலுமின்றி, இரவுமின்றி)
மாலை சந்திப்பொழுதில் நரசிம்மரை வழிபடுவதே
நரசிம்ம ஜயந்தியாகும். இவ்விரதத்தை அனுஷ்டித்ததாலேயே, கயவனாக இருந்த சுவேதன், மறுபிறவியில், பிரகலாதனாகப் பிறந்து, பெருமாள் அருள் பெற்றதாக, விஷ்ணுவே கூறியிருப்பதால், அவர் நரசிம்மராக உருவெடுத்தது பிரகலாதனுக்காக மட்டுமல்ல,
ஒரு முறை தான் அல்ல என்பதும் தெரிகிறது.

பிரதோஷ வேளை (சூரியன் மறைவுக்கு முன் 1.30 மணியும், பின் 1.30 மணியும்) ஆக மொத்தம் (மாலை 4.30 முதல் 7 .30 வரை 3 மணி) நேரம் சிறப்பு. அதுவும்,
சதுர்தசி நாளில் சிறப்பு. சித்திரை மாத வளர்பிறை அக்ஷய திருதியை வழிபாடும் சிறப்பு.

நரசிம்மர் விஷ்ணுவே என்பதால், பொதுவாக, விஷ்ணு வழிபாட்டில் பயன்படுத்தும், மலர்கள், வஸ்திரம், நைவேத்யம் ஆகியவற்றை உபயோகிக்கலாம். எனினும் செவ்வரளி போன்ற
சிகப்பு வண்ண மலர்களும், சர்க்கரைப் பொங்கல், பானகம் போன்ற இனிப்புகளும் சிறப்பு. ஹோமத்திற்கு தேன் கலந்த மல்லிகை மலர்கள்
உகந்தது. குளுமைப் பொருளான சந்தனத்திலும் செஞ்சந்தனமும், சந்தனாதி தைலக்காப்பும் சிறப்பு. அவரவருக்கு ஏற்றபடி 1,3,6,8,10,19,32,62 அக்ஷர நரசிம்ம மந்திரத்தை ஜபிக்கலாம்; துதிகளைக் கூறிடலாம்.

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி: முற்பிறவிகளில் பித்ருக்களைப் பூஜை
செய்யாமல் இருந்திருப்பது, தெய்வத்தையும் திருக்கோயில்களையும் நிந்திப்பது, ஒற்றுமையாக இருந்த குடும்பத்தை கோள்
சொல்லிப் பிரிப்பது, வாயில்லா ஜீவன்டளைத் துன்புறுத்துவது போன்ற பாவங்களினால்தான் இத்தகைய துன்பங்கள் மறுபிறவிகளில் ஏற்படுவதாக பாரதத் திருநாட்டை ஆண்ட போஜன் என்ற மன்னன், தனது நீதிநூலில் கூறியுள்ளார்.

தினமும் காலையில் நீராடியபின்பு, கீழ்கண்ட
ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி என்ற ஸ்லோகத்தை 48 தடவை சொல்லி, ஸ்ரீ லட்சுமி நரசிம்மரின் படத்தை வைத்து பூஜித்து வரவும்.
இந்த அதி அற்புத, மகத்தான சக்திவாய்ந்த ஸ்லோகம் உலகப் பிரசக்தி பெற்ற ஸ்ரீமத் அகோபில மடத்தின் 44 வது பட்டம் அழகிய சிங்கரும் திருவரங்கத்தின் கோபுரத்தை நிர்மாணித்தவருமான ஸ்ரீ முக்கூர் ஸ்வாமிகள் அருளிய சக்தி மிகுந்த ஸ்லோகமாகும் இது, உங்கள் துன்பத்தையும்
துயரத்தையும் போக்குவதற்கு இதைவிட சிறந்த பரிகாரம் கிடையாது.

இந்த ஸ்லோக்ததை சொல்லி ஸ்ரீ லட்சுமி
நரசிம்மரைப் பூஜித்து பிறகு, காய்ச்சிய பசும்பால் அல்லது வெல்லப் பானகம் நைவேத்தியம் செய்து நீங்களும், உங்கள் குடும்பத்திலுள்ள மற்றவர்களும் அதைப் பிரசாதமாகச் சாப்பிட்டு வரவும். கைமேல் பலனளிக்கும் மகத்தான வீர்யம் வாய்ந்த புண்ணிய ஸ்லோகம் இது.

ஸ்ரீ நரசிம்ம
ப்ரபத்தி

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா
ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

தமிழாக்கம்

1. நரசிம்மனே தாய்; நரசிம்மனே தந்தை
2. சகோதரனும்
நரசிம்மனே; தோழனும் நரசிம்மனே
3. அறிவும் நரசிம்மனே; செல்வமும் நரசிம்மனே
4. எஜமானனும்
நரசிம்மனே; எல்லாமும் நரசிம்மனே
5. இந்த லோகம் முழுவதிலும் நரசிம்மனே; பரலோகத்திலும் நரசிம்மனே
6. எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல்லாம் நரசிம்மனே
7. நரசிம்மனைக் காட்டிலும் உயர்ந்தவர் ஒருவரும் இல்லை.
8. அதனால் நரசிம்மனே! உம்மை சரணடைகிறேன்

Comments

Popular Posts