ஸ்வர்கம் முதலியன காணாவிட்டாலும் உண்டு
ஸ்வர்கம் முதலியன காணாவிட்டாலும் உண்டு
________________
உதயனாசார்யரும்
Posted by: "VS" yennappan@computer.net sadagopan10510
Tue Aug 2, 2011 9:50 am (PDT)
[Attachment(s) from VS included below]
SrI:
Dear AstikAs:
adiyEn received this scholarly note from Dr.SatakOpa TatachAr of Kaanchipuram . I would like to share with you .
As background, UdhayanAchArya of Mithila was an expert in NyAya Saasteam , which is a critical examination of objects with the canons of logical proof (Tarkam). He is a recognized Taarkikan just as KumArila Bhatta was a well known MeemAmsakan .
Both contributed a great deal to stop the avaidhika Matams to take deep roots in India . Adhi Sankara of the 9th centrury , who came soon after them dealt additional blows to Buddhism so much so that it is more today known outside India and the Vaishika Matams prevailed in India . Swamy Desikan (VedAntAchArya) who incarnated in the 13th century in the Post-Ramanuja period condemned the Para Mathams soundly and defeated the proponents of the four types of Buddhism , Jaininsm and others in His classical Sri Sooktis of Paramata Bhangam , Tattva Mukta Kalaapam , Sanklapa SooryOdhayam and Sata DhUshaNi .
UdayanAchArya wrote a sub-gloss on the work of Vaachaspati known as VyAya-Vaartikaa taatparya tikkaa parishad and followed it up with other works such as Nyaya KusumAnjali , Atma tattva vivEka et al .Swamy Desikan’s profound works relating to Para Mata KaNtanam are covered in our ebook series:
1) Paramata Bhangam : the 33rd ebook in http://www.sundarasimham.org
2) sata dhUshaNi: the the 88th ebook in the above Sundarasimham series .
3) Sanklapa SooryOdhayam : the 79th ebook (Part I ) in Ahobilavalli series, http://www.ahobilavalli.org
Part II , Ebook # 104 in Sri Hayagrivan series , http://www.srihayagrivan.org
4) Tattva Mukta Kalaapam : the 89th ebook in the Sundara simahm series, http://www.sundarasimham.org
On this Adi Pooram day , we pay our tribute to Sri VedanatAchArya not only for the great works in defense of Sri VisishtAdhvaitam but also for blessing us with GodhA Stuti . You can hear the sung version of Godha Stuti in different raagAs at
http://www.thiruppavai.org
Srimathyai GodhAyai nama:
Sri VaDa dhAma mahA SwaminE Nama:
Daasan , Oppilaippan KOil VaradAchAri Sadagopan
பாரதீய தத்வசாஸ்த்ரம் நாஸ்திக தர்சனம் ஆஸ்திக தர்சனம் என இருவகைப்பபடு்ம். இவைகளில் சார்வாகதர்சநம் பௌத்ததர்சனம்,மற்றும் ஜைனதர்சனம் நாஸ்திக தர்சநங்களாகும்,இந்த தார்சனிகர்கள்
வேதத்தை ப்ரமாணமாக ஒப்புக்கொள்ளாதவர்கள், மேலும் இவர்கள் விலக்ஷணமாக ஈச்வரன் என்பதாக ஒருவனை ஸ்வீகரிக்காதவர்கள்.ந்யாயம், வைசேஷிகம், ஸாங்க்யம் , யோகம் ,பூர்வமீமாம்ஸை ,உத்தரமீமாம்ஸை- வேதாந்தம் என ஆஸ்திகதர்சனங்களாகும், இவைகளில் ஸாங்க்யம் மற்றும் பூர்வமீமாம்ஸையிலும் ஈச்வரனை ஒப்புக்கொள்ளவில்லை, ந்யாயதர்சனத்தில் ஆசார்யராக போற்றப்படும் உதயனாசார்யர் என்பவர் குஸுமாஞ்சலி எனும் க்ரந்த்ததில் மிகவும் அழகாக நிரீச்வரவாதிகளை கண்டித்து விலக்ஷணமான ஈச்வரன் உள்ளதாக ஸமர்த்திக்கிறார்,
முதலில் பௌத்தர்கள் ஈச்வரன் காணவில்லை , ஆதலால் அவன் இல்லை, காணப்படாததான ஈச்வரன் உண்டு எனில் காணப்படாததான முயல் கொம்பும் உண்டு என ஸ்வீகரிக்கவேணும் என்கிறார்கள்,இதையே மீமாம்ஸகர்களும் கூறுகிறார்கள்,இங்கு உதயனாசார்யர் கூறும் ஸமாதானம்,காணத்தகுந்த வஸ்துவை காணவில்லையாகில் –யோக்யானுபலப்தி, இல்லை என கூறுவதில் காரணமாகும், குடம் முதலிய வஸ்துக்கள் நமக்கு காணத்தகுந்தவைகளாகும், அவைகள் எங்கு காணவில்லையோ அங்கு அது இல்லை எனலாம், காணமுடியாதவஸ்துவை –அயோக்யமான வஸ்துவை,காணாததால் அது இல்லை என கூறமுடியாது,பொதுவாக
எது காணாததோ அது இல்லை என கூறமுடியாது , ஈச்வரன் என்பவன் காணத்தகுந்தவல்ல ஆதலால் அவனை காணாவிடிலும் இல்லை என கூறமுடியாது, பொதுவாக காணாதது இல்லை என கூறமுற்பட்டால் காணாததான ஸ்வர்கம், மற்றும் புண்யம் , பாபம் முதலியவைகளும் இல்லை என ஸ்வீகரிக்கவரும், இது மீமாம்ஸகனுக்கு ஸம்மதமில்லை, ஆதலால் யோக்யானுபலப்தியானது இல்லை என கூறுவதில் காரணமாகும்,
என்றே மீமாம்ஸகனும் ஒப்புக்கொள்ளவேணும் எனறு கூறும் ஸமயத்தில் சார்வாகன் ஆக்ஷேபிக்கிறான், எது காணவில்லையோ அது இல்லை என்றே கூறவேணும் ஆதலால் யோக்யானுபலப்தியானது,இல்லை என கூறுவதில் காரணமென்பது சரியில்லை என,
உதயனாசார்யரின் கேள்வி, காணாதது இல்லை எனில் லோகத்தில் அனுமான ப்ரமாணம் என்பதே இல்லாமல் போய்விடும், அனுமானம் என்பதான
ப்ரமாணம் கொண்டே மலையில் காண்பதான புகையை கொண்டு காணப்படாததான தீயின் அனுமானம் வருகிறது ஆதலால் காணாததும் உண்டு என ஸ்வீகரிக்கவேணும்
சார்வாகன் கூறுவது லோகத்தில ப்ரத்யக்ஷம் மட்டுமே ப்ரமாணமாகும், ஆதலால் அனுமானம் ப்ரமாணம் இல்லை என கூறுவதில் எங்களுக்கு விரோதம் இல்லை,
உதயனாசார்யரின் கேள்வி காணாதது இல்லையேல் வீட்டிலிருந்து வெளிவந்த சார்வாகன் வீட்டில் உள்ள பெண்டாட்டி பிள்ளைகளை காணாததால் அவர்கள் இல்லை என்பதால் சோகத்தால் அழவேணும்,மேலும் வீட்டை காணாததால் அதுவும் நஷ்டமாகிவிட்டது என்பதால் வீட்டுக்கு திரும்பிவரமுடியாது,காணாவிடிலும் அது உள்ளதால் திரும்பிவருகிறான் எனில் ஆக காணாதகாலத்திலும் வீடு உண்டு எனில் காணாதது இல்லை என கூறமுடியாது, பழையது நஷ்டமாகிவிட்டது தற்சமயம் காண்பது தற்சமயத்தில்தான் உண்டானது எனில் அதின் காரணம் எது என்று கூற
வேணும்.காரணத்தை காணாததால் அதுவும் இல்லை என்றே கூறவேணும்.
மேலும் அனுமானப்ரமாணத்தை ஸ்வீகரிக்காவிட்டால் ப்ரத்யக்ஷப்ரமாணமும் கூறமுடியாது, ப்ரத்யக்ஷப்ரமாணம் என்பது இந்த்ரியங்களாகும், இந்த்ரியங்கள் இந்த்ரியங்களுக்கு புலப்படாததாகும்,
புலப்படாததான இந்த்ரியங்கள் உண்டு என்பதைஅனுமானப்ரமாணம் கொண்டே ஸாதிக்கவேணும். நையாயிகனின் கேள்வி, அனுமானம் யதி ந ப்ரமாணம் சக்ஷுஸ்தவாஸ்தீதி கிமத்ர மாநம், கண்ணை கண்ணால் காணமுடியாது,வஸ்துவை காண்பதால் கண் உண்டு என்பதில் அனுமானமே ப்ரமாணம், கோலகங்களை காண்பதன் முன்பாக அவைகள் இல்லாததால் காண்பதான கோலகங்களே இந்த்ரியம் என்பதும் சரியில்லை.காரணமான கோலகங்களும் கார்யமான ப்ரத்யக்ஷமும் ஒரே ஸமயத்தில் உண்டாகிறது என்றும் கூறமுடியாது, காரணமானது கார்யத்தின் முன்பாக இருக்கவேணும்,
ஆதலால் காணாதது இல்லை எனில் ப்ரத்யக்ஷமும் வராது,ஆக காணாததை
அனுமாந ப்ரமாணம் மூலம் அறிவதால் அனுமான ப்ரமாணம் அவச்யம் ஸ்வீகரிக்கவேணும்,இதையே ஸ்வாமி தேசிகன் பரமதபங்கத்தில்
கண்டது மெய்யெனில் , கண்டதனால் காணாததனுமிக்கின்றார்
என்கிற பாசுரத்தில் ஸாதிக்கிறார்.
இப்படியாக காணாததும் உண்டு என ஸாதிப்பதால் மீமாம்ஸகர்களுக்கு ஸந்தோஷம் உண்டாகும், காரணம் அவர்கள் விரும்பி ஸ்வீகரித்த புண்யம் பாபம் ஸ்வர்கம் முதலியன காணாவிட்டாலும் உண்டு என்று ஸித்திப்பதால், அதே ஸமயத்தில் யோக்யானுபலப்தியே,இல்லை என கூறுவதில் காரணமாகும், ஈச்வரன் யோக்யனல்ல- காணதத்குந்தவனல்ல, ஆதலால் அயோக்யமான வஸ்துவின் அனுபலப்தியால் இல்லை என்பதை ஸாதிக்கமுடியாது , ஆதலால் ஈச்வரன் உண்டு என ஸித்திப்பதால் மீமாம்ஸகனுக்கு பயமும் உண்டாகும், இதையே உதயனாசார்யர் மிகவும் அழகாக ஸாதிக்கிறார்- மீமாம்ஸகஃ தோஷயிதவ்யோ பீஷயிதவ்யஸ்ச மீமாம்ஸகனை ஸந்தோஷமடையச்செய்யவேணும், அதே ஸமயத்தில் பயப்படும்படியாகும் செய்யவேணும்.மீமாம்ஸகன் ஈச்வரனை நிராகரிக்க நாஸ்திகனுடன் கூட்டு சேர்ந்தால் நாஸ்திகன் ஸ்வர்கமும் ஈச்வரனைப்போல் காணாததால் இல்லை என்பான்,அவனை நிரஸிக்க நையாயிகன் கூறுவதை ஒப்புக்கொள்ளவேணும், நையாயிகன் கூறுவதை ஒப்புக்கொண்டால் ஈச்வரனை நிராகரிக்கமுடியாது ஒப்புக்கொள்ளவேணும்.மீமாம்ஸகனின் நிலை மிகவும் வருந்ததக்கவையாகும், எவருடனும் கூட்டு சரியாகாது, இப்படியாகவே பலமதங்களில் பரஸ்பரம் கூட்டு சேரவிடாமல் பல விருத்தமான கொள்கைகள் உள்ளன,
1சார்வாகன் ப்ரத்ய்க்ஷத்தை மட்டும் ப்ரமாணமாக ஸ்வீகரித்தவன்,
2.வைசேஷிகன் மற்றும் பௌத்தன் ப்ரத்யக்ஷம் அனுமானம் என இரண்டு ப்ரமாணத்தை ஸ்வீகரி்த்தார்கள்,
3. ஸாங்க்யன், ப்ரத்யக்ஷம் அனுமானம்,சப்தம் என மூன்று ப்ரமாணத்தை
ஸ்வீகரித்தார்கள், இவர்கள் ஸத்கார்யவாதி- காரணத்தில் முன்பு உள்ளதே கார்யமாக உண்டாகிறது, மூலப்ரக்ருதி மூலகாரணம் என
4..நையாயிகன் ப்ரத்க்ஷம் அனுமானம் உபமானம் , சபதம் என நான்கு ப்ரமாணத்தை ஸ்வீகரித்தான், இவன் அஸத்கார்வாதியாவான்- காரணத்தில் முன்பு இல்லாதது புதியதாக உண்டாகிறது என்றும் பரமாணுக்கள் மூலகாரணமென்றும் ஈச்வரன் ஜகத்தின் நிமித்தகாரணம் மாதரம் என்றும் ஸ்வீகரி்த்தவன்,
,5.மீமாம்ஸகன் நையாயிகன் ஸ்வீகரித்தப்ரமாணத்துடன் மேலும் அனுபலப்தி, அர்த்தாபத்தி என இரண்டு ப்ரமாணத்தையும் சேர்த்து ஆறு ப்ரமாணங்கள் என்கிறார்கள், இதையும் உதயனாசார்யர் கண்டிக்கிறார். மீமாம்ஸகன் சேர்த்த இரண்டும் அனுமானப்ரமாணத்தில் அந்தர்கதம், தனி ப்ரமாணமில்லை என.
6.மாயாவாதிகளும் ஆறு ப்ரமாணத்தை இசைந்தார்கள்.ஸ்வாமி
தேசிகன் இவர்களுக்கு மிக அழகாக ஒரு விசேஷணத்தை இடுகிறார்,
தத்ப்ரலோபந ருசயோ மாயாவாதினஃ, குமாரிலபட்டமதானுயாயிகளை த்ருப்தி
செய்வதாக ஏமாற்ற ஆசையுடயவர்கள் என.
7.ஸம்பவம் ஐதிஹ்யம் என இரண்டையும் சேர்த்து எட்டு ப்ரமாணம் என பௌராணிகர்கள் என கணக்கிட்டு ஸ்வாமி ஸாதிப்பது அத்யதனப்ரமாணபரிக்ரஹோபலம்பப்ரக்ரியேயம்,அநந்தே பூர்வாபரகாலே கஃகிமங்கீகுர்யாத் கிம் வா பஹிஷ்குர்யாத் இதி கோ ஜானாத்யந்யத்ர க்ருத்ஸ்ந ஸாக்ஷாத்காரிணஸ்தஸ்மாதேகஸ்மாத்தேவாத். ,தற்சமயம் உள்ள ப்ரமாணங்களின் கணக்கு இது, முடிவில்லாலததான காலத்தில் பிறகு கூட்டலாம் குறைக்கலாம், எல்லாம் அறிந்த அந்த எம்பெருமானை விட்டு வேறு யாருக்குத்தெரியும் என ஸ்வாமி தேசிகன் ்ழகாக ஸாதித்தார்.
இப்படியாக பரஸ்பரம் விருத்தமான கொள்கைகளை கொண்டவைகளான
மதங்கள் வேதாந்தமதத்தை கண்டிப்பதில் மட்டும் கூட்டு சேர்ந்துக்கொள்கிறதாம்,
தார்கிகஸிஹ்மமான ஸ்வாமி தேசிகன் மிக மிக அழகாக யாரும் கூறாததான ஒரு ந்யாயத்தை கூறுகிறார்,ஸங்கல்பஸூர்யோதய நாடகத்தில்
ச்வா வராஹ கலஹக்ரமாதமீ ஸம்பதந்தி நிகமாந்தரோதகாஃ வேறு வேறு வீதிகளில் உள்ள நாய்கள் பரஸ்பரம் சண்டையிடும், ஆயினும் நாய்கள்
பன்றியை கண்டால் பரஸ்பரம் த்வேஷத்தை மறந்து பன்றியுடன் சண்டையிடுமாம், அதுபோல் பல மதங்களும் பரஸ்பரம் தங்களுக்குள்ள
த்வேஷத்தை மறந்து ஒன்றாக கூடி வேதாந்தத்தை எதிர்கிறதுகள் என்கிறார்,
வனவாசத்தில் தர்மபுத்ரர் கூறுவது வயம் பஞ்சோத்தரம் சதம் என்பதாக, இதையே லோகத்திலும் விமதர்கள் கூடி ஒருவனை எதிர்கும் ஸமயத்தில் வயம் பஞ்சோத்தரசத ந்யாயம் என்பார்கள், ஸ்வாமி விலக்ஷணமாக வேறு ந்யாயத்தை தெரிவிக்கிறார்.இதுபோல் உதயனாசார்யர் கூறியதையும் கூறுகிறார்,
ராஜா-பகவன், குருகுமாரிலமதானுஸாரிணஃ கிமேதே நிரஸநீயா பவச்சிஷ்யேண. மீமாம்ஸையில் இரண்டு விபாகம் உண்டு ப்ராபகரகுருமதம், குமாரிலபட்டமதம், இவைகள் உம்முடய சிஷ்யரால் நிரஸிக்கத்தகுந்ததா என ராஜாவினவுகிறார்,
பதில். குருஃ- மஹாராஜ, அமீ புநராகமாபிரக்ஷண ப்ரவ்ருத்தா வேதாந்தபரித்யாகிநஸ்தோஷயிதவ்யா பீஷயிதவ்யாஸ்ச, வேதரக்ஷணத்தில் ப்ரவ்ருத்தர்களானதால் தோஷயிதவ்யாஃ வேதாந்தத்தை விட்டதால் பீஷயிதவ்யாஃ என, பரமதபங்கத்தில், ந்யாயபரிசுத்தி, ந்யாயஸித்தாஞ்ஜனம், தத்வமுக்தாகலாபம் என பல க்ரந்தங்களில் வாதம் செய்த ஸ்வாமி தேசிகன் ரஸனீயமான காவ்யத்திலும் மதாந்தரங்களை சண்டையிட்டு கண்டிக்கிறார்,ஸ்வாமிக்கு வாதம் செய்தே காலம் சென்றுவிட்டது போல் தோன்றலாம்.ஸ்வாமியின் நாமாவளியில் மதாந்தரநிரஸனத்தினடியாக
நிரஸ்த ஸாங்க்யஃ ப்ரத்யுக்தயோகஃ காணாதபஞ்ஜன என்றே பல திருநாமங்கள் உள்ளன.
ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஹயக்ரீவஸ்தோத்ரத்தில் ஸாதிப்பது த்வாம் சிந்தயன் த்வன்மயதாம் ப்ரபந்நஃ என பகவானை நினைத்து நினைத்து எம்பெருமானின் ஸர்வஞ்ஞன் என்ற தன்மையை அடைந்தவனாய் என்கிறார், அதுபோல் ஸ்வாமியை ஸ்மரித்து ஸ்மரித்து ஸ்வாமியின் தன்மையான ஸர்வஞ்ஞத்வம், வைராக்யம் வராவிடிலும் தாஸனுக்கு பஹுஜனவிரோதிதிவம் என்பதான தன்மை கிடைத்துவிட்டதோ என பயம் உள்ளது. அமீ மீமாம்ஸகாஃ புநராகமரக்ஷணப்ரவ்ருத்தா வேதாந்தபரித்யாகிநஸ்தோஷயிதவ்யா பீஷயிதவ்யாஸ்ச என்கிற கணக்கில் சிலர் ஸ்வாமிக்கு கைங்கர்யம் செய்வதால் ஸந்தோஷிப்பிக்கத்தகுந்தவராயினும் ஸத்யத்தை மறைப்பதால் பயப்படும்படியாகும் செய்யவேணும் என தோன்றியதால் இத்துடன் இரு கடிதங்களை இணைக்கிறேன், கடாக்ஷிக்கவும்,
குமாரிலபட்டமதானுயாயிகளை த்ருப்தி செய்வதாக ஏமாற்ற ஆசையுடயவர்கள் என மாயாவாதிகளை ஸ்வாமி விசேஷித்தார், இவர்கள் யாரை த்ருப்திசெய்வதாக ஏமாற்ற ஆசையுடையவர்கள், தெரியவில்லையே

Comments